கடந்த இரண்டு மாதங்களாக அம்மாவிற்கு உடல் நலம் சரி இல்லை. விளைவு, உரவினர்களின் வரத்து அதிகமாகி இருக்கிறது. அப்படித்தான்
சென்ற புதன் கிழமை அத்தை தன் மகளுடன் வீட்டிற்கு வந்திருந்தாள். அத்தையென்றால் அப்பாவின் உடன்பிறவா சகோதரி. நீண்ட வருடங்கள் கழித்து வந்திருக்கிறார்கள்.
நானும் அத்தைப் பெண்ணும் சுமார் பதினொன்றாண்டுகளுக்குமுன் பார்த்திருப்போம்.