நேற்று
முந்தினம் மத்தியம் வங்கிக்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். நான் சாப்பிட்டு முடித்துவிட்டு
வெளியேவந்தேன். கேஷியரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கையில் அமர்ந்தேன்.
”பணம் எடுக்கனும்னு வந்தேன்.” என்ற அந்த பெரியவரிடம்
”இன்னும் தேதி இருக்கு இல்லயா? இதுக்குள்ள எப்பிடி பென்ஷன்
போடுவாங்க?” என்று கேஷியர் வினவ,
”அது தெரியும். . . சரி அப்பிடியே பேன்கு பக்கம் வரலாம்னு
வந்தேன்.” என்றார் அந்த பெரியவர்.
”அக்கௌண்ட் ல கொஞ்சம் பேலன்ஸ் இருக்கனும் இல்லையா? இல்லாட்டி
சார்ஜஸ் (charges) பிடிச்சிடுவாங்களே!” என்று சொன்ன கேஷியரிடம் இருந்து விடைபெற்றுவிட்டு என்னிடம் வந்தார்.
”பேரா… பேரா.”
”உட்காருங்க தாத்தா.” என்று சொல்லி அந்த சிரிய நாற்காலியை
நோக்கி சமிக்ஞை செய்தேன். அமர்ந்தார்.
நான் பேசுவதற்குமுன்பே
அனைத்தையும் உளர ஆரம்பித்தார்.
அவர் ஏன் என்னை “பேரா” என்று
அழைத்தார் என்று குழப்பமாக இருக்கும் அல்லவா? சொல்கிறேன்.
அடிப்படையில்
அவர் உரவுக்காரர். அம்மாவிற்கு சித்தப்பா முறை. எங்கள் வீட்டின் பின்னால்தான்
சிலநாட்களுக்குமுன்பு இருந்தார்கள். ஆனால் என்னைப்பார்த்ததில்லை.
நான் மட்டும் குறலைக்கேட்டு இருக்கிறேன். வங்கியில்
மட்டும் என்னை யாரெண்ரு தெரியாதபோதே அடிக்கடி பார்த்திருக்கிறார். இவர் மட்டுமல்ல. சொந்த ஊரில் பணியமர்த்தப்பட்டதால் நிறையப்பேர்
தெரிந்தவர்களாகவே இருப்பர். ஆனால் எனக்கு யாரென்று தெரியாது.
விடுதியில் வளர்ந்ததால் நான் இன்னாரின் மகன் என்று நிறைய பேருக்கு தெரியாது.
அப்பாவுடன் போகும்போதும்வரும்போதும் பார்த்துவிட்டு “ஸார் யாரு? இவர நான் பேன்க்குல பாத்து இருக்கனே!”
என்பார்கள். “நம்ம பையன் தான். சின்னவரு.” என்பார் அப்பா. அதற்காகவே
பெரும்பாலும் வங்கியில் கோபம் வரும்படி யாரேனும் நடந்துகொண்டால்கூட அவர்கள்மீது காட்டிக்கொள்வது
கிடையாது.
அப்படித்தான்
இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கிக்கு வந்த ஒருவரின் செயல் பிடிக்கவில்லை. கோபத்தை அடக்கிக்கொண்டேன்.
அன்று மாலையே அப்பா ஒருவரை வேலை விஷையமாக அழைத்திருந்தார். இருவரும் இருசக்கரவாகனத்தில் காத்திருந்தோம். வந்து சேர்ந்தவர்,
“என்ன அண்ணா? ஸார கூட்டிட்டு சுத்திக்கிட்டிருக்கீங்க?”
என்று சொல்லிக்கொண்டே அவரது இரு சக்கர வாகனத்தை நிருத்தினார்.
”பேன்குல இன்னைக்கு காலைலதான் ஸார பாத்தேன்.”
”இவரு நம்ம பையன் தான்.” என்றார் அப்பா.
”அப்படியா அண்ணா?” என்றவர் ஒரு ஒருமணி நேரம் பேசிவிட்டு
என்னிடமும் “கெளம்புரேன் ஸார்.” என்று சொல்லிவிட்டுக்
கிளம்பினார். அப்பாவை அண்ணா என்கிறார். என்னை ஸார் என்கிறார். எனக்குதான் ஒன்றும் புரியவில்லை.
நல்லவேலை அன்று காலை அவர் செய்த வேலைக்கு நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல்
இருந்தது நல்லதாய்ப்போயிற்று. அந்த விஷையத்தில் என் பொருமை எனக்கு
எப்போதுமே பலம்தான்.
சரி தாத்தா
விஷையத்துக்கு வருவோம். இவருக்கும் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. ஒருமுறை
இந்த தாத்தா மாலை நான்கு மணிக்குமேல் வங்கிக்கு வந்தார். ”இப்போ
எதுவும் செய்ய முடியாது ஸார். நேரம் ஆகிடிச்சு. ந்ஆளைக்கு வரீங்களா?” என்று சொல்லிவிட்டேன். சரி என்று சொல்லி திரும்பிய தாத்தாவின் பின்னால் என் அப்பா நின்று கொண்டிருந்தார்.
”என்ன மாமா இங்க? ” என்று கேட்க, அவர் “பணம் எடுக்கலாம்னு வந்தேன். ஸாரு லேட் ஆகிடிச்சு அப்பிடினு சொல்ராரு.”
”ஆமாம் மாமா
மணி நாலேகால் ஆகிடிச்சே. எல்லாத்தையும் க்லோஸ் பண்ணி இருப்பாங்களே. நாளைக்குதான்
வரனும்” என்றார் அப்பா.
”இனிமேல் கொஞ்சம் சீக்கரமா வாங்க ஸார்.” என்றேன் நான்.
”சரிங்க ஸார்.” என்று சொல்லி கிளம்பினார். சில நிமிடங்களில் நானும் அப்பாவுடன் கிளம்பினேன்.
”என்ன டா உங்க தாத்தாவ தொரத்துர?”
”யாரு டேடி அவரு?”
”உங்க அம்மாவுக்கு சித்தப்பா மொற டா. நம்ம வீட்டு பின்னாடிதான்
குடிவந்து இருக்காங்க.” என்றார்.
”அதுதான் குரல் மட்டும் அடிக்கடி கேட்டா மாதிரி ஞாபகம் இருக்கு… இவர்தான் அவருனு லைட்டா டௌட் இருந்திச்சு ஆனா அமைதியா இருந்துட்டேன்.”
என்றேன் நான்.
”அவரும் உன்ன பாத்திருக்க மாட்டாருனு நெனைக்கிறேன். அண்ணன
மட்டும் பாத்திருக்காரு.” என்றார்.
”நான் நம்ம வீட்டு மாடியில பொழுதுக்கும் திரிஞ்சிக்கிட்டிருக்குரத ஊரே பாத்திருக்கும்.
இவரு மட்டும் எப்படி பாக்காம விட்டிருப்பாரு?” என்று கேட்டுவிட்டு,
”இந்த மாதிரி எத்தன சொந்தக்காரங்க ஊருல இருக்காங்களோ?” என்று நான் சொல்ல வீடும் வந்தது.
ஒருநாள்
தாத்தா என்னை அப்பாவுடன் பார்த்துவிட்டார்.
”இவர நான் பேன்குல பாத்து இருக்கேனே!” என்று அதிர்ச்சியை
வெளிப்படுத்த, “என் பையந்தான்.” என்று அப்பா
நிதானமாக பதிலலிக்க அவருக்கு நம்ப முடியவில்லை.
”உன் பையனா?” என்று திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்.
பிறகென்ன
வங்கிக்கு வரும்போதெல்லாம்
“பேரா” தான்!!!
நேற்றும்
அதேமாதிரிதான் அழைத்தார். ஆனால் எனக்குதான் கொஞ்சம் கவணமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.
”பணம் எடுக்கலாம்னு வந்தேன்.”
”உங்களுக்கு பென்ஷன் இவ்வலவு சீக்கிரமா போடமாட்டாங்களே? இன்னைக்குதான் தேதி 28. இதுக்கப்புரம்தான் போடுவாங்க.
அப்புரம் ஏன் வந்தீங்க?”
”அது தெரியும். ஒருவேள சீக்கிரம் போட்டிருப்பாங்களோனு
நெனச்சிவந்தேன்.”
”வழக்கமா எப்பிடி போடுவாங்களோ அப்பிடித்தான போடுவாங்க?” என்று கேட்டுவிட்டு, ”அடுத்த ரெண்டு நாள் பேன்க் லீவு.
31 அன்னைக்குதான் வரனும்.” என்றேன்.
”இல்லாட்டி ஏ.டி.எம் கார்டு வெச்சிருக்கீங்களா?
என்றதற்கு “இல்லை” என்றார்.
”வேர வழி இல்லையே. கார்டு இருந்திருந்தா ஒருவேள இன்னைக்கு
சாயுங்காலம் போட்டாங்கனா கூட எடுத்திருக்கலாம். இல்ல நாளைக்கோ
அடுத்தநாளொ போட்டிருந்தாக்கூட எடுத்திருக்கலாம்.” என்று சொல்லி
அமைதியாய் இருந்தேன்.
மனதிற்குள்
மட்டும் இவர் அப்படிக்கேட்டுவிடக்கூடாது என்று தோன்றியது.
”உன்னாண்ட (உன்கிட்ட) ஏதாச்சும்
இருக்கா?” கேட்டுவிட்டார்.
”என் கிட்டையா? சம்பலம் போட்டாதான இருக்கும்?”
என்று பதிலலித்தேன். ஆனால் முந்தினமே சம்பலம் போட்டுவிட்டார்கள்.
”உங்களுக்கு போட்டதுக்கப்புரம்தான எங்களுக்கு போடுவாங்க?” என்று எக்ஸ்ட்ரா வசனம் வேறு.
”ஆமாம். மாசக்கடைசி இல்ல.” என்று
அவருக்கு அவரே சமாதானம் சொல்லிவிட்டு,
”அம்மா அண்ட (அம்மா கிட்ட) ஏதாச்சும்
இருக்குமா?” என்றார்.
“நான் குடுத்தாதான் (கொடுத்தால்தான்) அம்மாக்கு.” என்றேன்.
”ஆமா.” என்றார்.
”இல்லாட்டி ஒன்னு செய்ங்க. வெளில எங்கயாச்சும் வாங்கிட்டு
ரெண்டு நாள் கழிச்சுத் தரேன்னு சொல்லுங்க.” என்றேன்.
”அப்படித்தான் செய்யனும்.” என்றவர் மருபடியும்,
“உன் கிட்ட ஏதாச்சும் தேருமா?” என்று கேட்க,
”நீங்களே சொல்லுரீங்களே மாசக்கடைசினு. அப்புரம் எப்படி?
போட்டாதான்.” என்றேன். ஆனால்
கையில் கொஞ்சம் பணம் இருந்தது.
”சரி பாக்கலாம்.” என்றவர் மெதுவாக கிளம்பினார்.
அவர் போன
பிறகு ”நீயாடா
இப்பிடி?” என்று என்னை நானே வியப்பாகக் கேட்டுக்கொண்டேன்.
நான் செய்தது
தவறா என்று எனக்கே தெரியவில்லை.
ஆனால் சரியல்ல என்று மட்டும் தெரியும்.
என்ன செய்ய? மனிதர்களின் மனங்கள் எப்போதுவேண்டுமானாலும்
எப்படிவேண்டுமானாலும் மாரும் என்பதற்கு விதிவிளக்குகள் இல்லாமல் போனதுதான் விதி.
அதில் நானும் ஒருவனாக இருப்பேன் என்று எண்ணியதில்லை. என்றும் எண்ணியதில்லை. அவர் போனவுடன் சிலநொடிகள் என்னை
என்னாலேயே நம்ப முடியவில்லை. கடந்தகாலத்தில் வலிகள் தந்தவர்கள்
எல்லாம் நொடிப்பொழுதில் வந்து மறைந்தார்கள். இரண்டரை வருடத்திற்குள்ளா,
அல்லது இரண்டரை மாதத்திற்குள்ளா என்று தெரியவில்லை. மாறி இருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது. ஒரு சில சம்பவங்கள்
ஒரு சில மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன்.
அதில் நான் அகப்பட்டதும் கூட அடக்கமா என்பதை நினைக்கும்போது வியப்பாக
இருந்தது.
வங்கியில்
வேலைக்கு சேர்ந்த புதிதில் நிறைய பேருக்கு உதவ வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஆனால் கடன் கொடுப்பதுப்பற்றி
எந்தத் தெளிவும் இல்லை. நம்பிக்கையானவர்கள் கேட்டால் மட்டும்
கொடுப்பது என்று தீர்மானம் செய்துவைத்திருந்தேன். ஆனால் ஒருவன்
நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக மாறுவதும் அவன் நம்பும் மனிதர்களிடம் இருக்கிறது என்பதைப்
புரிந்துகொள்ளும்போது வேதனையாக இருந்தது.
வங்கிக்கு
சேர்ந்த சில மாதங்களில் நெருங்கிய நட்பு வட்டாரத்திலிருந்த ஒருவர் என்னை அனுகினார். தான் வேலை செய்யும் பள்ளியில்
இருந்து வெளியே வந்துவிட்டதாகவும், சீருடை தைப்பதற்காக செலவு
செய்த தொகையைத்திருப்பி செலுத்தினால்தான் சான்றுதல்களைத் தரமுடியும் என்று பள்ளிநிர்வாகம்
சொன்னதாகவும், அந்தத் தொகையைக் கடனாகத் தந்தால் உதவியாக இருக்கும்
என்றும் என்னிடம் சொன்னார். நானும் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
அந்த நபரின் கணக்கு எண்ணை வாங்கி பணத்தை அனுப்பிவிட்டேன். தொகை கொஞ்சம் அதிகம்தான். முதல்முறை இன்னொரு வங்கிக்கு
பணப்பரிவர்தனை செய்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. அனுப்பிவிட்டு
அழைத்தேன். எடுக்கவில்லை. பலமுறை அழைத்தும்
எடுக்கவில்லை. சிலமுறைத்தொடர்பு கொண்டபோது (பிசி) என்றும் வந்தது. பணம் சென்று
சேர்ந்தவுடன் எந்த அழைப்பும் வரவில்லை. பிறகு அன்றூ இரவு எடுத்தவர்
பணம் வந்துவிட்டதாக சொன்னார். சரி என்று விட்டுவிட்டேன்.
அதன்பிறகு ஒன்றறை வருடங்களுக்கு நான் ஏதும் கேட்கவில்லை. ஒஉர்நாள் நினைவு வந்தது. எனது நிலமை சரியில்லாத நேரம்.
அம்மாவிற்கு உடல்நிலைச் சரியில்லாததால் அழைத்தேன். ”எப்போ குடுத்த?” என்று கேட்டவர் நான் சொன்னதைக்கேட்டுவிட்டு
”சத்தியமாக ஞாபகம் இல்ல.” என்றார். பிறகு ஏதோ ஞாபகம் வந்ததாய், “அந்தப்பக்கம் வந்தா தரேன்.
அதுகூட ஃபுல்லா முடியாது.” என்றார். சென்னை வந்தார். ஆனால் பணம் வரவில்லை. சரியெண்றூ கணக்கு எண்ணைக் குருஞ்செய்தியில் அனுப்பி கேட்டபோது அதற்கு பதில் வரவில்லை.
இன்னொரு
நபர். இவர் சொந்தக்காரர்.
கல்லூரியில் மகன் படிப்புக்கு பணம் கட்டவேண்டுமென்று அப்பாவை அனுகினார்.
பிறந்ததில் இருந்து பார்த்ததாலும், மிக நல்லவர்
என்ற அனுமானம் இருந்ததாலும், முக்கியமாக படிப்பிற்கு என்பதாலும்
நான் கொடுக்கிறேன் என்று ஆஜர் ஆனேன். அண்ணன் திருமனத்திற்காக
சேர்த்துவைத்திருந்த பணமது. இதுவரைக்கொடுத்ததிலேயே அதுதான் அதிகம்.
வங்கியில் பணமெடுப்பதற்குமுன் எங்கேயோ மண்டைக்குள் பொறிதட்டியது.
சம்மந்தப்பட்ட மானவனை அழைத்து ”எப்படி ஃபீஸ் கட்டுவீங்க?
வரையோலைதான (டீடீ) ” என்றதற்கு ஆமாம் என்றான்.
சரி அந்த கல்லூரி பெயரிலேயே வரையோலை எடுத்துவிடலாம் என்று நினைத்ததுதான்
தாமதம். உடனடியாக அழைப்புவந்தது. “டீடீ எல்லாம் எடுக்கவேனாம்பா. காசாவே தந்துரு. என் கிட்ட இருக்குரத வெச்சி நான் மொத்தமா எடுத்துக்குரேன்.” என்று அவசர அவசரமாக பேசியவிதம் பாதிவிஷையத்தைப் புரியவைத்தது. இருந்தாலும் என்ன செய்ய? கொடுக்கிறேன் என்று சொல்லி அலைக்கழித்தால்
சரியாக இருக்காது என்பதால், “கடவுளே இந்த காசு படிப்புக்குதான்
போகனும்.” என்று வேண்டிக்கொண்டேன். வீட்டில்
வந்து பணம் வாங்கியவர்
”ஒரு மாசத்துல திருப்பி தந்துடுரேன் வினோத். இல்லனா எவ்வலவு
வட்டி போட்டுக்கலாமோ சொல்லு.“
”வட்டிக்கு விடுரவன் இல்ல நான். அவசரத்துக்கு கேட்டிங்க.
அதுவும் படிப்புக்குனுவேற கேட்டீங்க. அதனாலதான்
ரிஸ்கெடுத்திருக்கேன். அதே மாதிரி ஒரு மாசத்துல தரேன்னு நீங்க
சொல்ரதெல்லாம் கஷ்டம். எனக்குத்தெரியும். தாராலமா டைம் எடுத்துக்கோங்க. மூனு நாலு மாசம் கழிச்சு
தந்தா போதும். சரி என்று கிளம்பியவர் நான்கு மாசம் கழித்துப்பாதிப்பணத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு,
மிச்சத்தை அப்புரம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதில் வேடிக்கையான தகவல் என்னவென்றால், அந்த பணம் படிப்பிற்காக
செலவிடப்படவில்லை என்பதுதான். சரி போகட்டும். அண்ணனுக்கு திருமனம் வைத்துவிட்டு, பணத்தை ஏற்பாடு செய்துக்கொண்டு
இருக்கிறோம் என்று இவருக்குத்தெரியும். இவர் மட்டுமல்ல அப்பாவிடம்
கடன் வாங்கிய ஒரு சிலருக்கும் தெரியும். மிக நெருங்கிய ஒன்றிரண்டு
பேருக்குமட்டும் அப்பா பலவருடங்களுக்குமுன்பே கடன் கொடுத்து இருந்தார். திருப்பிக்கேட்டபோது இழுத்தடித்தார்களேத்தவிற திருப்பிக்கொடுக்கவில்லை.
திருமனம் வைத்திருக்கிறோம் என்று சொல்லியும் திருப்பிக்கொடுக்கவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் அப்பாவும் வருந்திக்கொண்டிருந்தார்.
“நான் பாத்துக்குரேன் டேடி.” என்று சொல்லி அவரைக்கொஞ்சம்
தேற்ற முயன்றேன்.
வங்கியில்
சேர்ந்தபோது ஒரே குறிக்கோல்தான்.
அண்ணனுக்குத்திருமனம் செய்யவேண்டும். அதை நான்
சம்பாதித்து சேர்த்துவைத்த பணத்தில் செய்யவேண்டும். முடிந்த அளவுக்கு அப்பாவையும்
வீட்டில் உள்ளோரையும் சிரமப்படுத்தாமல் தனியாளாகச்செய்யவேண்டும் என்பதுதான். செய்தாயிற்று.
இப்போது யோசித்தாலும் மலைப்பாக இருக்கிறது. ஏதோ சாதித்ததுபோல் ஓர் உணர்வு. ஆனாலும்
ஒரு பயம் இருதிவரை இருந்தது. அதற்காகவே யாரெல்லாம் என்னிடம் வாங்கியதை திரும்பிக் கொடுக்கமுடியும்
என்று எண்ணினேனோ அவர்களையெல்லாம் அனுகினேன். ஆனால்… முடிவாய்க் கிடைத்த பதில் ‘முடியாது’
என்பதுதான்.
யாரேனும் முகம்
தெரியாத நபர் கடன் கேட்டு நான் கொடுத்து, வாக்குருதிகளை அவர்கள் மீறி இருந்தால். இந்தப்பதிவை
எழுதியிருக்க மாட்டேன். ஆனாள் இதெல்லாம் நன்கு தெரிந்தவர்களால், பழகியவர்களால் தீட்டப்பட்ட
கத்திகள். காலத்திற்கும் வலிக்கும்படிதான் இதையத்தில் இரக்குவார்கள்.
இன்று காலை எதிர்
வீட்டுப்பையன் வீட்டிற்கு வந்தான். நல்லவன். வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தோம். “தம்பி,
உதவினு யாராச்சும் 5000 ரூபா கேட்டா விசாரிச்சு குடு. ஆனால் கடன் சொல்லி எவனாச்சும்
500 ரூபா கேட்டாக்கூட குடுக்காத.” என்றேன்.
உதவி என்பது வேறு.
அவர்கள் ஒருபோதும் பிரச்சினை இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு கூட தெரிந்த ஒருவர் தன்
மகளை கல்லூரியை விட்டு நிருத்திவிட்டார். விசாரித்துப்பார்த்தால் அவரிடம் பணமில்லை.
போன பருவத்திற்கும் நாந்தாந் கொடுத்தேன். மருபடியும் கேட்க தயங்கி இருக்கிறார்கள்.
விஷையம் தெரிந்ததும் அழைத்து பணம் கொடுத்து அடுத்தநாளெ கல்லூரியில் சேர சொன்னேன். இப்போது
சந்தோஷமாகப் படித்துக்கொண்டிருக்கிறாள் அந்தப்பெண். அந்தப்பெண்ணைப் போன்றே இன்னும்
சிலர் இருக்கிறார்கள். அவர்களது படிப்பு முடியும்வரை உதவலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
பெருமைக்காகவெல்லாம் சொல்லவில்லை. அப்படி சிலரை
படிக்கவைப்பதில் ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சி. அது என்னால் முடிந்த உதவி. அவர்களால் இயலாது.
திருப்பிக்கொடுக்கவும்முடியாது. நானும் கேட்கமாட்டேன். கொடுத்தாலும் வாங்கமாட்டேன்.
ஆனால் கடன் என்ற
பெயரில் தேவையே இல்லாமல் நம்மைப் புகழ்ந்துவிட்டு, தற்பெருமைப்பேசிவிட்டு பிறகு அவர்கள்
தன் இன்னொரு முகத்தைக் காட்டும்போதுதான் நாம் இதுவரை நம்மிடம் இல்லாத இன்னொரு முகத்தைத்
தேடவேண்டியிருக்கிறது. அதைத்தான் அன்று அந்தத்தாத்தாவிற்கு காட்டியிருக்கிறேன் என்று
நினைக்குறேன். ”மிஞ்சிப்போனா 500 ரூபா கேட்டிருப்பாரா? கொடுத்திருக்கலாம். திரும்பத்தந்தா
சரி. இல்லனா ஏமாத்துரவங்க லிஸ்டுல அவர் பேரும் இருக்கப்போகுது. அவ்வலவுதான?” என்று
என் மனம் சொல்லுவதையும் என்னால் கேட்க முடிந்தது. ஆனால் இங்கு பணம் பிரச்சினை அல்ல.
எப்போது வேண்டுமானாலும் மாறும் அவர்களது குணம்தான் பிரச்சினை. அந்த மனம்தான் பிரச்சினை.
நாளை எப்படியும் அந்த மனிதர் பணமெடுக்க வங்கிக்கு வருவார். பாற்போம். என்னிடம் இயல்பாகப்பேசுகிறாரா,
இல்லை அவருக்கு அன்று கடன் கொடுக்காமல் இருந்ததால் கண்டுகொள்ளாமல் போகிறாரா என்று.
வணக்கம்,
ReplyDeleteஉங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? அல்லது நிதி உதவி தேவைப்பட்டால், உலகெங்கிலும் குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதத்தில் 2% குறைவாக, உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவ 5,000 டாலர்களை 100,000,000 டாலர்களுக்கு கடன்களை வழங்குகிறோம். ஆர்வமுள்ளவர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்: (stefanjonesloanfirm@gmail.com)
கடன் வழங்க.
Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.
ReplyDeleteContact : Mr. Raymond Doison
Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
skype:crusaderbroker.bgassurance
Whatsapp : +380 50 922 4887
With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.
We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.
All relevant business information will be provided upon request.
BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!
If Interested kindly contact me via
Email:~ crusaderbroker.bgassurance@gmail.com
Skype ID:crusaderbroker.bgassurance
serious enquiry only.
Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.
Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.
ReplyDeleteContact : Mr. Raymond Doison
Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
skype:crusaderbroker.bgassurance
Whatsapp : +380 50 922 4887
With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.
We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.
All relevant business information will be provided upon request.
BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!
If Interested kindly contact me via
Email:~ crusaderbroker.bgassurance@gmail.com
Skype ID:crusaderbroker.bgassurance
serious enquiry only.
Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.