சனிக்
கிழமை வழக்கம்போல வங்கியில் இருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவர் அழைத்திருந்தார்.
அப்பாவின் அலைபேசிக்கு ஏதோ குருஞ்செய்தி வந்ததாகவும், 5000 கட்டவேண்டும் என்றும் குருஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டதையும் தெரிவித்தார்.
நான் எனக்கு அந்த குருஞ்செய்தியை அனுப்ப சொன்னேன். அனுப்பினார். இது எங்கள் வங்கியில் இருந்து அனுப்பப்படவில்லை.
”நம்ம பேங்குல இருந்து போகல.” என்று சொல்ல கொஞ்சம் குழப்பமாக
இருந்தது. நண்பரை திரும்ப அழைத்து “அண்ணா
அப்பாவோட கார்டு நம்பர் மெஸ்ஸேஜோட மேட்ச் ஆகுதானு பாரு அண்ணா.” என்றேன். ஆகுது என்றார்.
யாருக்கோ
பண அட்டையின் நம்பர் தெரிந்திருக்கிறது என்று உறுதி செய்து கொண்டு.
”இந்த மாதிரி மெஸ்ஸேஜெல்லாம் கண்டுக்கவேணாம்னு அப்பா கிட்ட சொல்லிருங்க அண்ணா.”
என்று சொல்லிவிட்டு ”வேணும்னா கார்ட மட்டும் ப்லாக்
பண்ணிடலாம்.” என்றேன். புதுசு வர ஒரு மாதம்
ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை என்று சொன்னவர் வங்கிக்கு வந்தார்.
இப்போதைக்கு பண அட்டையை மட்டும் முடக்கிவிட்டு பிறகு மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம்
என சொல்லி
மேலாலளரிடம்
அனுப்பினேன். சென்றவர் திரும்பி வந்து “அப்பா வந்தாத்தான் ஆக்ஷன் எடுப்பாங்களாம்டா” என்றார்.
நண்பரின் அப்பா வந்து சேர்ந்தார்.
”நான் எதுவுமே கட்டவேண்டியது இல்லையே! எதுக்கு என்ன…”
”இது ஐ.ஓ.பி ல இருந்து வந்த மெஸ்ஸேஜ்
இல்ல. உங்க கார்டு நம்பர் லீக் ஆகி இருக்கு. யாரோ உங்கள ட்ரேஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஸோ ப்லாக்
பண்ணிடலாம்.” என்றேன்.
”எனக்கு ஒரு இலட்ச ரூபாய் வரவேண்டியது இருக்கு. செக் அனுப்புரனு
சொன்னவங்க இன்னும் அனுப்பவே இல்ல.” எண்றார்.
”அது அவங்க கிட்ட தான் சார் கேக்கனும். எங்களுக்கு தெரிய
வாய்ப்பே இல்ல. அவங்க போட்டா இங்க வரும். உங்க கணக்குக்குதான் வரும். ஃபோன் பண்ணி கேளுங்க.”
என்று சொல்லி அவரையும் மேலாளரிடம் போக சொன்னேன்.
மேலாளர்
அறையில் ஏதோ சத்தம். இவர் ஏதோ ஐ.ஓ.பி என்று சொன்னது
மட்டும் காதில் விழுந்தது. மேலாளர் அனிதாவை அழைத்தார்.
உள்ளே சென்ற அனிதா திரும்பி வந்து “சொல்லிட்டிருக்காங்க
மா.” என்று சுஜாவிடம் சொல்ல விஷையம் புரிந்தது. ஒரு நிமிடம் நானெ திகைத்துப் போனேன். அனிதாவை மீண்டும்
அழைத்தார் மேலாளர். மீண்டும் சென்று வந்த அனிதா “ஒன்னறை லட்சம் கான் மா.” என்றா சுஜாவிடம். அப்படியென்றால்
கணக்கில் பணம் வந்திருக்கிறது. யாரோ கை வைத்திருக்கிறார்கள். எனக்கு
இருப்பு
கொள்ளவில்லை. நெருங்கிய நண்பரின் தந்தையாயிற்றே! பழைய மேலாளராக இருந்திருந்தால்
அறைக்குள் ஓடி இருப்பேன். ஏதோ எனக்கே நடந்தது மாதிரி இருந்தது.
கணக்கை முடக்கினார்களா,
இல்லை பண அட்டையை முடக்கினார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே
எவனோ எங்கிருந்தோ வெர்ச்சுவல் கத்தியை வீசிக் கொள்ளையடித்துக்கொண்டிருந்தான். ஒரே நாளில்
ஒன்னறை லட்சம் எடுப்பது அவ்வலவு எளிதில் முடியாது என்று தெரியும். முன்னமே தொடங்கி
இருக்கிறார்கள்.
சுஜாவிடம் ”ஒன்னறை
லட்சமா சுஜா மேம்?” என்று கேட்டதற்கு “தெரில
பா, உள்ள பேசிக்கிட்டு இருக்காங்க.” என்றார்.
இடத்தில் வந்து
அமைதியாக அமர்ந்து கொண்டேன். வேறென்ன செய்ய முடியும்? பொதுவாக எங்கள் வங்கி தொடர்பாக
என்ன சந்தேகம் என்றாலும் அந்த நண்பர் என்னைத்தான் அழைப்பார். அவரது தந்தைக்கும் என்னை
நன்கு தெரியும். ஆனால் அலைப்பேசியில் தொடர்பு கொண்டதில்லை.
”சீக்ரெட் நம்பர
சொல்லிட்டேன்.” என்று ஒரு குறல். என் இடத்திற்கு வந்து விட்டார், என்னிடம்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்
என்று புரிவதற்கு நேரம் பிடிக்கவில்லை. கோவம் ஒரு பக்கம், வருத்தம் ஒரு பக்கம். எனக்கே
இப்படியென்றால் இழந்தவருக்கு?
”எதுக்கு சார்
சொன்னீங்க? இங்க இருந்து ஃபோன் பண்ணா ஒன்னு நான் பண்ணனும் இல்லாட்டி ப்ரேன்ச் ல இருந்து
பண்ணனும். எத்தன டைம் பேசி இருக்கீங்க? சரி யாரோ உங்களுடைய ஏ.டி.எம். பின் நம்பர கேட்டதும்
எனக்காச்சும் கால் பண்ண வேண்டியதுதான?” என்று நானும் உண்மைத்தெரிந்தும் உளரிக்கொண்டிருந்தேன்.
”என் கிட்ட உங்க
நம்பர் இல்லையே.” என்றார்.
”அண்ணா கிட்ட இருக்கு
சார். எதுவா இருந்தாலும் எனக்குதான் கால் பண்ணுவாரு.” என்று சொல்ல,
”ஐ.ஓ.பி ல இருந்து
பேசுரோம் நு சொன்னாங்க.” என்றவர், “தெரியாம சொல்லிட்டேன். என்பத்தி அஞ்சாயிரம் போச்சு.
உங்களுக்கு மட்டும் பையன் கால் பண்ணலனா எல்லாமும் போயிருக்கும்.” என்று நிறுத்தினார்.
”எப்பொ சார் சொன்னீங்க?”
என்று கேட்டதற்கு, “நேத்து ” என்றார்.
மனதைக் கல்லாக்கிக்
கொண்டு,
”சொல்ரேன்னு தப்பா
நெனச்சிக்காதிங்க. வெளிப்படையாவெ சொல்லிடுரேன். ஒரு ஃபார்மாலிட்டிக்கு வேணும்னா புகார்
குடுத்துட்டு போங்க. ஆனா… திரும்ப கெடைக்குரது கஷ்டம்.”
”99% திரும்ப வராது
அப்பிடிங்குரீங்க. ஒரு பர்செண்ட் தான்… வந்தா வரும். இல்ல?” என்று அவர் கேட்க ஆமாம்
என்ற த்வனியில் அமைதியாய் இருந்தேன்.
”உங்க பணத்த எடுத்துட்டாங்க”
என்று சொன்ன மேலாளரின் வார்த்தையைவிட ”திரும்ப கெடைக்காது” என்று நான் சொன்னதுதான்
அதிக வேதனையை ஏற்படுத்தி இருக்கும். என்ன செய்ய? போளியாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி
சந்தோஷப்படுத்துவதைவிட, உண்மையை சொல்லி கஷ்டப்படுத்திவிடுவதே மேல் என்று தோன்றியது.
மனிதர் கிட்டத்தட்ட உடைந்து போயிருந்தார்.
பக்கத்தில் ஒருவர்
புகார் படிவத்தை நிறப்பிக்கொண்டிருந்தார்.
”நாம கொடுக்குரத
கொடுப்போம் ஸார். அப்புரம் என்ன நடக்குதோ கடவுள் விட்ட வழி” என்று சொல்லிக்கொண்டே பாதிக்கப்பட்டவரிடம்
கையெழுத்து வாங்க படிவத்தை நீட்டினார்.
கண்ணீரின் நிறம்
நீலமென்று அவர் கையில் இருந்த பேனா காகிதத்திடம் சொல்லிக் கொண்டிருந்தது.
Good article. Language of the article is also very good.
ReplyDeleteவிழிப்புனர்வும் வருத்தமும் ஒன்று கலந்த பதிவு ஆன்னா.
ReplyDelete