13 June 2018

ஒரு பயனம் -9.

Posted by Vinoth Subramanian | Wednesday, June 13, 2018 Categories: , , , , ,


எந்த ஒரு பார்வைத் திறன் குறையுடையவருக்கும் ஓடுவதில் ஒரு பிரச்சினையும் இருக்காது. அவர்களது ஒரே பிரச்சினை விழுந்துவிடுவோமோ என்ற பயம்தான். எனக்கும் அந்த பயம் இருந்தது அன்று.
Click here to read the previous post
ரயிலின் வேகத்திற்கு ஓரளவிற்கு ஈடுகொடுத்து ஓட முயன்றாலும், உள்ளே கால் வைக்கும்போது இடரினால்? அவ்வளவுதான். தவிற கொஞ்சம் பேர் தொங்கிக்கொண்டுவேறு சென்றனர். நின்றுவிட்டேன். ரயில் மட்டும் தன் வேகத்தைக்கூட்டி, நகர்ந்து, கடந்து, விரைந்து, பின் கானாமலேயே போனது.
என்ன சார்? ஏறலயா?” என்றார் என்னை அழைத்து சென்றவர் சற்று முன்னே சென்றவுடன்.
இல்ல சார். அடுத்த வண்டியில ஏறிக்கலாம். இது போனா இன்னொன்னு.” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் பின்னால் நகர்ந்து சென்று நின்றுகொண்டேன். அப்படி வெரும் வார்த்தைக்கு சொன்னேனே தவிற, மனம் உள்ளே விம்மிக்கொண்டிருந்தது. ’விழித்திறன் குறைபாடு மட்டும் இல்லாமலிருந்திருந்தால் விட்டிருப்பேனா இந்த வண்டியை?’ என்ற கேள்விக்குஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்என்ற எதார்த்தமான வலிதான் விடையாக இருந்தது.

அன்று மட்டுமல்ல. அனேகமுறை இதுபோல் நடந்திருக்கிறது. ரயில் புரப்படும் தருவாயில் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் ஓடிச்சென்று ரயிலை பிடிப்பார்கள். நான் மட்டும் அடுத்த வண்டியை பிடித்து கொள்ளலாம் என்று மெதுவாக சென்று கொண்டிருப்பேண். ஓடுபவர் யாரையேனும் அழைத்து உடன் ஓடலாம்தான். ஆனால் யார் வருவார்? ’சற்று முன்னமே கிளம்ப வேண்டியதுதானேஎன்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் நான் இங்கு முன்வைக்கும் பிரச்சினை அதுவல்ல. முதல் வண்டியை பிடிக்க நான் என்றுமே ஓடியதில்லை (இது போன்ற எதிர்பாராத தருணங்களைத் தவிற.) எனது பிரச்சினையெல்லாம் ஒரு வண்டியிலிருந்து இன்னொரு வண்டிக்கு மாறும்போதுதான். குறிப்பாக கடற்கரை ரயில் நிலையத்தில்தான் இந்த பிரச்சினை. நான் ஏறும் முதல் ரயில் தாமதமாக கடற்கரை ரயில் நிலையத்தை அடையும்போது இரண்டாவதாய் நான் பிடிக்க நினைக்கும் ரயில் சரியான நேரத்திற்கு கிளம்பிவிடும். என்னுடன் முதல் வண்டியில் இருக்கும் பயணிகளெல்லாம் அந்த வண்டி நிற்கும் முன்னமே குதித்து ஓடி அந்த இரண்டாம் வண்டியை பிடித்துவிடுவர். ஆனால் நானோ அன்று எப்படி கிண்டி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேனோ அதேமாதிரி பரிதாபமாக நின்று கொண்டிருப்பேன்.

சரி திரும்ப கிண்டி ரயில்நிலையத்திற்கே வருவோம். அப்படி நின்று கொண்டிருந்தபோதுதான் பின்னாலிருந்த ஒரு பெண்மணி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர் என்னைதான் கேட்கிறாரோ என்று கூட தோன்றியது. திரும்பினேன்.
என் பையன தெரியுமா பா உனக்கு?”
என்னைத்தான் கேட்கிறாரா என்று குழம்பிக்கொண்டிருந்தேன்.
அதே கேள்வியை உடனே வேறொருவனிடமும் கேட்டதுபோல் இருந்தது.
அந்த பையன தெரியுமா உனக்கு
உடனே அந்த பெண்மணி என்னிடம்,
உன் பேரென்ன பா?” என்றார்.
என்னையா?”
ஆமாம் பா.”
என் பேர் வினோத்.” என்று சொல்லி முடிப்பதற்குள்,
வினோத் அண்ணா!” என்று ஒரு பையனின் குரல். அடையாலம் கண்டுகொண்டேன்.
ருத்ர மூர்த்தி?”
ஆமாம் அண்ணா. நீங்க எங்க அண்ணா இங்க?”
தெரியுமா பா உங்க ரெண்டு பேருக்கும்?” என்றார் அந்த பெண்மணி.
தெரியும் அம்மா. எங்க சீனியர்தான் இவர்.” என்றான் ருத்ர மூர்த்தி.

அந்த பெண்மணி அவனது அம்மா என்று புரிந்து கொண்டேன். அவர்களும் கார் திறளணிக்கு வந்து திரும்புவதை சொன்னார்கள்.
எங்க பா போகனும் நீ?”
வேப்பம்பட்டு மா. திருவல்லூர் பக்கத்துல. இங்கிருந்து பீச் போயிட்டு, அங்கிருந்து திருத்தனி ஃபாஸ்ட் பிடிச்சு போகலாம்னு நெனச்சேன். ஆனா இங்க ட்ரெயின எடுத்துட்டாங்க. இப்போ பீச் ஸ்டேஷன்ல ஏழு ப்பத்து திருவல்லூர் வண்டிபிடிச்சுதாண் போக முடியும்.” என்று சலித்துக்கொண்டே சொன்னேன்.
நாங்களும் பீச் போயி திருத்தனி ஃபாஸ்ட் பிடிக்கலாம்னுதான் நெனச்சோம். இவங்க அப்பா டிக்கட் வாங்க போயிருக்காரு. அதுக்குள்ள ரயில் போயிடுச்சு. இதுக்குமேல அடுத்த வண்டி பிடிச்சு பீச் ஸ்டேஷன் போயி சேருரதுக்குள்ள திருத்தனி ஃபாஸ்ட் போயிடும். செண்ட்ரல்தான் போகனும்.” என்றூ சொல்லி முடித்தார். யோசித்தேன். தயங்கினேன். பிறகு கேட்டேவிட்டேன்.
அம்மா.. நீங்க செண்ட்ரல் போரதுனால. என்னையும் குட கூட்டிட்டுபோயி…”
அதுக்கென்ன, வாப்பா! ஒன்னாவே போயிடலாம். நாங்க கூட்டிட்டு போரோம். செண்ட்ரல்லயே ரயில் ஏத்திவிட்டிடுரோம்.” என்றார். மிகவும் ஆருதலாய் இருந்தது.

சென்னை கடற்கறை செல்லும் ரயில் வந்தது. ஏறிக்கொண்டோம். எனக்கு இருக்கை கிடைத்ததும் அமர்ந்து கொண்டேன். பிறகு ருத்ரமூர்த்தியையும் என்னருகில் அமரவைத்தார்கள். சென்னை பூங்கா ரயில் நிலையம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.
நீ கார் ராலிக்கு வந்ததே எனக்கு தெரியாதுடா. யாரோ ருத்ரன் நு அனௌன்ஸ் பண்ணாங்க. ஆனா அது நீதான் அப்பிடினு எனக்கு தெரியாது.”
எல்லா வருஷமும் அம்மா அப்பாவோட வருவேன் அண்ணா. அக்காவும்தான். ஒரு காருல நான் அப்பாவ கூட்டிக்குவேன். இன்னொரு காருல அக்கா அம்மாவோட போவாங்க. அது அவங்களுக்கு ஒரு சந்தோஷம்.” என்றான். அவனது அக்காவும் விழித்திறன் குறையுடையவர்தான் என்பது அவன் சொன்னதிலிருந்து ஞாபகம் வந்தது.
திருத்தனியிலிருந்து வரியா டா?”
ஆமாம் அண்ணா.”
நானே இன்னைக்கு காலைல அஞ்சறைமணிக்கு கிளம்பி ஆவடி வந்து, அங்கிருந்து பீச் ட்ரெயின் பிடிச்சு வந்து சேந்தேன்.”
ஓஹோ. நாங்க ரெண்டறை மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி மொதல் வண்டிய பிடிச்சி வந்து சேந்தோம் அண்ணா.”
எது! காலைல ரெண்டறையா?”
ஆமாம் அண்ணா. இல்லாட்டி சரியா வந்து சேர முடியாம போயிடிச்சுனா கார் கிடைக்காம போயிடும். அதனாலதான்.”
இந்த வாட்டி கொஞ்சம் டல்லுதான் ல? ஃபர்ஸ்ட் பிரைஸ் எவ்வளவு கொடுத்தாங்களாம்?”
ஆமா அண்ணா. இந்தமுற நெரைய பேருக்கு கார் கெடைக்கலனு வேற சொன்னாங்க. அது மட்டுமில்லாம கேஷ் பிரைஸ் இல்லையாம். வெரும் ஷீல்டு மட்டும்தான் தந்தாங்களாம்.” என்று அவன் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
அப்படினா கேஷ் பிரைஸ் இல்லையா?”
தரலையாம்.” என்று சொன்னவன் என்னுடைய பயணத்தைப்பற்றி கேட்டான். நான் நடந்ததைச் சொன்னேன். அவனுக்கென்ன சொல்வதென்று தெரியவில்லை. நானே ஆரம்பித்தேன்.
அங்கிருந்து எப்பிடி வந்தீங்க?”
பஸ்ல தான் அண்ணா?”
முன்னமே சந்தித்து இருந்தால் 80 ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டேன்.

அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய பூங்கா ரயில்நிலையம் வந்தது. இறங்கியதும் அவனது அப்பா என் கையை வந்து பிடித்துக்கொண்டார். ருத்ரமூர்த்தி அவனது அம்மாவுடனும், நான் அவனது அப்பாவுடனும் சென்று கொண்டிருந்தோம்.
ருத்ரன எப்பிடி பா உனக்கு தெரியும்?” என்றார் ருத்ரமூர்த்தியின் அப்பா.
ஒரே ஸ்கூல் சார். எனக்கு ஜூனியர். நான் பண்ணிரெண்டாவது படிக்கும்போது ருத்ரமூர்த்தி ஆறாவதோ ஏழாவதோ படிச்சிக்கிட்டு இருந்தான்.”
நீ என்ன பா பண்ணுர?”
பேன்குல வேல செய்யுரேன் சார்.”
திருத்தனியில கூட மகேஷ் நு ஒரு பையன் பேன்குலதான் வேல செய்யுரான்.” என்றார்.
தெரியும் சார். மகேஷும் நானும் ஒரே க்லாஸ்தான். இப்போஎஸ்.பீ.ஐ லவர்க் பண்ணுரான்.”
ஆமாம் பா. நான் பேன்குல பாத்திருக்கேன். அடிக்கடி பாப்பேன்.” என்றவர், ”இவந்தான் என்ன பண்ண போரானு தெரியல.” என்றார். அவர் பையனைத்தான் சொன்னார் என்று புரிந்தது. செண்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம். திருவல்லூர் செல்லும் வண்டி நின்று கொண்டிருந்தது. ருத்ரமூர்த்தியின் அப்பா என்னை ஏற்றிவிட்டு,
நான் வரட்டுமா பா?” என்று கேட்டு விடைபெற,
ரொம்ப நன்றி சார்.” என்று பதிலலித்தேன் நான்.

அவர் இறங்கியதும் சுமார் ஆறு முப்பத்தைந்து மணிக்கு ரயில் கிளம்பியது. அவர்கள் மட்டும் வந்து உதவி செய்யவில்லை என்றால் முக்கால்மணிநேரம் தாமதமாக வீட்டிற்கு சென்றிருப்பேன். மிகப்பெரிய உதவியை அவர்கள் செய்தது போலுணர்ந்தேன்.

ரயில் முன்னே நகர எனது மனது அன்று காலையில் இருந்து ணடந்த ஒவ்வொன்றையும் அசைபோட்டு ஆராய்ந்து கொண்டிருந்தது. பொதுவாக உதவியாளர்கள் அதிகமாய் இருப்பார்கள். ஆனால் இந்த முறை இல்லை. பதிவு செய்யப்பட்ட கார்களும் அதிகமாய் வரவில்லை. பொதுவாக கார் ஓட்டுனர்களெ விழா முடிந்தவுடன் போட்டியாலர்களை அவரவர் போகவேண்டிய இடத்திலோ அல்லது அதற்கு தோதான இடத்திலோ விட்டுவிடுவர். ஆனால் விழா முடிந்ததும் அப்படி எந்த காரும் நின்றதாக தெரியவில்லை. பொதுவாக பங்கேற்றவர்களுக்கு கொடுக்கும் சான்றுதல்கள் கூட இந்த முறை கொடுக்கப்படவில்லை. ஏதாவது பொருள்களை கொடுத்தால் கையில் சுமந்து வரமுடியாது என்று எண்ணி கவனமாக ஒரு லேப்டாப் பையை கொண்டுபோனால் அந்த பையை தூக்கி உள்ளே வைப்பதற்காக இன்னொரு ட்ராலி பையை கொடுத்ததை எண்ணும்போது உள்ளூர சிரிப்புதான் வந்தது. எல்லாவற்றிற்கும் மேல் ருத்ர மூர்த்தியின் அப்பாவின் ’இவந்தான் என்ன பண்ண போரானு தெரியல’ என்ற அந்த வார்த்தைகள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தன.

அது ஒரு தனிப்பட்ட ஒரு தந்தையின் ஆதங்கம் அல்ல. பார்வைத்திறன் குறையுடையவர்களைப் பெற்ற ஒவ்வொரு தாய் தந்தையின் வார்த்தைகள்தான் அது.
பொதுவாக பார்வைத்திறன் குறையுடையவர்களின்மேல் பலருக்கு பரிதாபம் வரும். அது அவரவர் கண்ணோட்டத்தைப்பொருத்தது. ஆனால் ஒருவர் பார்வைத்திறன் குறைபாடுடன் பிறந்தாலோ அல்லது அவ்வாறு இடையில் ஆனாலோ அது அதிகம் பாதிப்பது அவர்களது பெற்றொரைத்தான். அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் போராட்டம்தான். தன் பிள்ளைக்கு பார்வையில்லை என்று தெரிந்த அந்த நொடியிலிருந்து அவர்கள் படும் இன்னல்களை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. இந்தப் பிள்ளையை வைத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியில் தொடங்கும் அவர்களது பாதை அறியாப் பயணம் அந்த பார்வைத்திறன் குறையுடைய மகனுக்கோ அல்லது மகளுக்கோ ஊக்கம் தந்து, உலகம் தந்து, துணிச்சல் தந்து, அரும்பாடுபட்டு கல்வி தந்து, பிறகு அவர்களை சமூதாயத்தில் ஓரங்கமாய் மாற்ற அவர்கள் படும் அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படி ஒரு பார்வையற்றவரை பிள்ளையாக பெற்றுவிட்டாலே பெரும்பாலான குடும்பங்களில் அந்த பெற்றொர்களை உரவினர்கள் உதாசின படுத்துவார்கள். ஏலனம் செய்வார்கள். இகழ்வார்கள். அதையெல்லாம் பட்டவர்கள் மட்டும்தான் உணரமுடியும். அதுவும் ஒன்றுக்குமேற்பட்ட பார்வையற்றவர்களுக்கு பெற்றோர்களென்றால் இன்னும் நிலைமை மோசம். கொஞ்சம் பணமிருந்தால் தப்பித்தார்கள். இல்லையென்றால் எவரும் மதிக்கமாட்டார்கள். அப்படியே தன் பார்வைத்திறன் குறையுடைய பிள்ளைகளுக்கு கல்வி தந்து ’என் புள்ளையும் படிச்சாச்சு’ என்ற சந்தோஷத்தை அவர்களின் வேலையின்மை கெடுத்துவிடும். ஒருவேளை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர்களின் பார்வைத்திறன் குறையுடைய பிள்ளைகளுக்கு வேலையும் கிடைத்துவிட்டால் திருமனம் தீராத பிரச்சினையாக வந்து நிற்கும். ’எனக்கு பிறகு இவனை/இவளை யார் பாத்துப்பாங்களொ?’ என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமலேயே பல பெற்றொர்களின் காலம் சுழன்றுகொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்த வேளையில் எனது ஊர் வந்தது. இறங்கிக்கொண்டேன். கொஞ்சதூரம் நடைமேடையில் நடந்து செல்லும்போது அண்ணனும் அண்ணியும் வந்து எதிரே நின்றார்கள். கையிலிருந்த குச்சியை அண்ணியும் தோளிலிருந்த பையை அண்ணனும் வாங்கிக்கொண்டனர். அங்கிருந்து வீட்டிற்கு பைக்கில் கிளம்பினோம். இருவரும் கார் ராலி எப்படி இருந்தது என்று விசாரித்தனர். பிறகு வீட்டிற்கு சென்றவுடன் அப்பா விசாரித்தார். பிறகு அம்மா விசாரித்தார். பிறகு சுவேதா அழைத்து விசாரித்தாள். அனைவரிடமும் பதில் சொன்னதும் இருதியாக அடுத்த நாள் சுகண்யா அழைத்தாள். சொல்லப்போனால் இந்த பயணமே சுகண்யாவிடமிருந்துதான் துவங்கியது. காளை எட்டு மணிக்கெல்லாம் போட்டி நடக்கும் இடத்திலிருக்கவேண்டுமாம் என்று சொன்னதற்கு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளது வீடு பக்கம் என்பதால் போட்டிக்கு முந்தினம் அவளது வீட்டில் தங்கிவிட்டு போட்டியன்று காளை கிளம்பி செல்லுமாறு சொன்னாள். அவளது அம்மா மற்றும் அப்பாவிடமும் விஷையத்தை சொல்லிவிடுவதாக சொன்னாள். அவர்களையெல்லாம் சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் பிரச்சினையேதுமில்லை. ஆனால் நான்தான் தயங்கி பின் அந்த யோசனையை கைவிட்டு எனது வீட்டிலிருந்தே கிளம்பினேன்.

செல்ஃபோன் இன்னும் சினுங்கிக்கொண்டே இருந்தது. எடுத்தேன். வழக்கம்போல மிக மெல்லிய குறலில் கேட்டாள்.
”கார் ராலி எப்பிடி இருந்திச்சு?”

முற்றும்.



1 comment:

  1. உண்மையாகவே சூப்பரா எழுதறீங்க பாஸ் எழுத்து திறமை

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube