04 September 2016

என் தனிமைக்கோர் கடிதம்.

Posted by Vinoth Subramanian | Sunday, September 04, 2016 Categories: , , ,


தன்-இமையைத் தனிமைப் படுத்திவிட்டே,

விழிகள் விடியலை ரசிக்கின்றதோ?

என்னிமைகளுக்கு மிதே நிலைமையென்று,

என் விழிநீர் விழித்தாண்டி வருகிறதோ?




விழிகள் இரவில் ஒதுங்கிவிடும்.

இமைகள் கூட இனைந்துவிடும்.

இமைகளுக்காய் ஏங்கிய விழிநீர்மட்டும்,

துணையின்றி தனியே துலைந்துவிடும்.


என்னுடன் இருக்கும் யே தனிமையே,

உனக்கென எழுதும் கடிதம் இது.

தினந்தினம் துலைகின்றதென் கண்ணீர்!

தேடவும் துடைக்கவும் யாருமில்லை.


உனர்வின்றி இருக்கும் போதுமட்டும்

உனைத்துணை யாக்கினான் இவ்விறைவன்.

உணர்வுடன் இருக்கும் என்னிடத்தில்,

தனிமையே உனக்கேன் தீராக் காதல்?


நான் பிறக்கும் முன்பும் உன்னுடந்தான்,

போன பின்பும் உன்னுடந்தான்!

வாழும்போதும் உன்னுடனே

எனை இருக்க சொல்வதேன் விளங்கவில்லை!


என் துணை யாசிக்கும் தனிமையே,

உனக்கெனத் துணையொன்று கிடையாதா?

படைப்பினில் பலவும் தனித்தனிதான்.

பக்கத் துணையாய்ப் போயிருக்க முடியாதா?


விரிட்சம் ஒன்று வலரும் மட்டும்,

மண்ணில் வேரது தனியேதான்.

கோடி விண்மீன் கூட்டத்திலும்,

இரவில் நிலவது தனியேதான்.


தண்ணீர் குலத்தில் இருந்தாலும்,

தாமரை இலையோ தனியேதான்

சுதந்திரமாய் தென்றல் திரிந்தாலும்,

சுற்றுவதென்னவோ தனியேதான்


கருவில் இருக்கும் சிறு குழந்தை,

கல்லரை சென்ற ஒரு மனிதன்,

எல்லாம் படைத்த ஏக இறைவன்,

என எல்லோர் விதியிலும் நீயேதான்.


தனிமையே உனக்குத் துணையாக,

இயற்கையும் இறைவனுமே இருக்க,

சிலனாள் மட்டும் வாழ்ந்து செல்லும்

எந்தன் துணைக் கேட்டு கெஞ்சுவதேன்?


நான் விடைபெற்றுச் செல்லும் வேளை வரும்

அப்போது என்னிடம் வந்துவிடு.

இப்போதும் எனைவிட்டுச் செல்லாய் என்பின்,

என் இமைகளை நிரந்தரமாய் இணைத்துவிடு.


முற்றும்.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube