கடந்த இரண்டு மாதங்களாக அம்மாவிற்கு உடல் நலம் சரி இல்லை. விளைவு, உரவினர்களின் வரத்து அதிகமாகி இருக்கிறது. அப்படித்தான்
சென்ற புதன் கிழமை அத்தை தன் மகளுடன் வீட்டிற்கு வந்திருந்தாள். அத்தையென்றால் அப்பாவின் உடன்பிறவா சகோதரி. நீண்ட வருடங்கள் கழித்து வந்திருக்கிறார்கள்.
நானும் அத்தைப் பெண்ணும் சுமார் பதினொன்றாண்டுகளுக்குமுன் பார்த்திருப்போம்.
அத்தையுடன் மட்டும் அப்பப்போது தொலை பேசியில் பேசுவதுண்டு.
ஆந்திராவில் கட்டிக் கொடுத்ததால் மகள்களுக்குத் தமிழ் என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனால் அத்தை இரண்டிலும் கை தேர்ந்தவர்.
சம்பவம் நடந்த அன்று, வழக்கம்போல வங்கியில் இருந்து என்னை அழைத்துச் செல்ல அப்பா வந்திருந்தார். நானும் மேளாலரிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
”உங்க அத்த பொன்னு வந்திருக்கா பா.” என்றார் அப்பா. யாரென்று கேட்டதற்கு விஷையத்தைச் சொன்னார். வங்கிக்கும் அழைத்து வந்திருக்கிறார். நடக்க ஆரம்பித்தபோது எங்களை பின் தொடர்ந்த கொலுசொலியை வைத்துப் புரிந்துக் கொண்டேன்.
நான் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டில் இறங்க, அவள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.
பைக்கில் அப்பாவும் நானும் அமர்ந்து கொண்டோம். எனக்குப்பின்னால்தான் அவள் அம்அர்ந்தாக வேண்டும். அப்பா தெலுங்கில் ஏறி உட்கார சொல்ல அவள் தயக்கத்துடன் இசைந்தால்.
”எப்போ வந்தாங்க?” என்று அப்பாவிடம் கேட்டேன்.
”மத்தியானம். ஏன் அவ கிட்டயே கேக்க வேண்டியதுதான? தெலுங்கு தெரியாதா?” என்றார்.
”அதெல்லாம் தெரியும்.” என்று பதிலளித்துவிட்டு அமைதியாகினேன்.
வீடு வந்தது. அவள் இறங்கி மேலே நடக்க நான் பின்னால் சென்றேன். கடையில் ஏதோ வாங்க வேண்டுமென்பதற்காக அப்பா வாங்கிய பூவை என் கையில் கொடுத்து மேலே போக சொன்னார். நானும் வாங்கிக் கொண்டு சென்றேன். ஊள்ளே நுழைந்ததுதான் தாமதம்,
அத்தைப் பெண்ணுக்காக பூவாங்கி வந்திருக்கிறான். என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த மாதிரி வேலையெல்லாம் பெரியம்மாதான் செய்வார்.
என்னைக் கலாய்த்ததும் அவர்தான். முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் பின்னர் அதை கண்டுகொள்ளாததுபோல் அத்தையை நலம் விசாரிக்க ஆரம்பித்திருந்தேன். வங்கிக்குச் சென்றதைப் பற்றி அத்தைப் பெண்ணிடம் என் அம்மா விசாரித்துக் கொண்டிருந்தார்.
அவளிடம் பேசுமாறு அத்தை என்னிடமும், என்னிடம் பேசுமாறு அம்மாஅவளிடமும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தனர். நான் மடிக் கணினிப் பக்கமும், அவள் தொலைக் காட்சிப் பக்கமும் சென்றுவிட்டோம். அப்போதுதான் முகநூலில் பின் வரும் பதிவையும் போட்டிருந்தேன்.
//அத்தைமகள் அத்தையுடன் வீட்டிற்கு வந்திருக்கிறாள், இருவரும் சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருப்போம். இப்போது எங்களை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள சொல்கிறார்கள். முதலில் அப்பா, பிறகு அம்மா, இப்போது அத்தை. என்ன பேசுவது? எப்படி துவங்குவது?//
வீட்டில் தொலைக் காட்சி தெலுங்குமொழியில் கதரிக் கொண்டிருந்தது. அத்தை திட்டிக் கொண்டிருந்தாள்.
”நான் எங்க பொழுதுக்கும் பாத்துக்கிட்டு இருக்கேன்?” என்று தெலுங்கில் கோவித்துக் கொண்டு தொலைக் காட்சியை அனைத்தாள்.
”பாக்கட்டும் விடேன் அத்த!” என்றேன் தமிழில்.
”தெலுங்கு தெரியுமா?” என்றார் அத்தை.
”எனக்கு நல்லாவே தெலுங்கு தெரியும்.” என்றேன். சிறிது நேரம் கழிந்தது. அம்மாவும் அப்பாவும் அந்த பெண்ணை கூட்டிக் கொண்டு எங்கேயோ சென்றனர்.
நானும் அத்தையும் மாடிக்குச் சென்று உரையாடிக் கொண்டிருந்தோம்.
”யாரையாச்சும் லவ் கிவ் பன்றியாடா?” என்றார் எடுத்த உடனே.
”அப்படியெல்லாம் எதுவும் இல்ல அத்த. ஏன் கேக்குர?” என்றேன்.
”என் பொண்ண தரலாம்னுதான்!” என்றார். அது விளையாட்டுக்காக ஏற்பட்ட உரையாடல்தான் என்று எனக்கும் தெரியும் அத்தைக்கும் தெரியும். அதனால் சிரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம்.
சிறிதுநேரம் அமர்ந்துகொண்டும், சிறிதுநேரம்நடந்து கொண்டும் உரையாடல் தொடர்ந்தது. அனைத்து விஷையங்களைப்பற்றியும் பேசினோம்.
அத்தை என்னைப் பற்றியும், வேலை, சம்பலம் போன்ரவற்றைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்.
நானும் பதிலுக்கு அனைவரைப் பற்றியும் கேட்டறிந்துக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன்.
அந்தப் பெண்ணைப் பற்றியும் அதிகம் கேட்டுத் தெரிந்துக்கொண்டேன்.
ரேனிகுண்டாவில் ஜூனியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாளாம். விடுதிதான்.
அலைபேசி வைத்திருக்க கூடாது, தந்தையைத் தவிற வேரு எந்த ஆடவரும் பார்க்கவரக் கூடாது போன்ற சட்ட திட்டங்களைப் போட்டு கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறார்கள்.
அத்தைக்கு மொத்தம் மூண்ரு மகள்கள். இவள்தான் பெரியவள். இதற்குமுன்னும் இவளை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
இதற்கு இடையில் முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு மாமா ஒருவர் அலைபேசியில் அழைத்திருந்தார்.
அப்பாவிடம்தான் என் அலைபேசி எண்ணையே வாங்கியதாக சொன்னார். ஆனால் காரணம் எல்லாம் கூறவில்லை என்றார்.
எப்படி இருந்தாலும் அப்பா காரனம் கேட்பார்.
வ்ஈட்டிற்கு வந்ததும் கேட்டுவிட்டார். நானும் முகநூல் பதிவைக் காண்பித்துவிட்டேன். மறைக்க்வெல்லாம் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் வேறு யார் மூலமாவதுத் தெரிந்தால்தான் சிக்கல். அப்பாவிடம் பொதுவாக எதையும் மறைப்பதில்லை.
அத்தைக்குப் புடவையையும் மகளுக்கு சுடிதாரையும் எடுத்து வந்திருந்தார்கள்.
எனது பட்டமளிப்புவிழா புகைப்படத்தையெல்லாம் அம்மா அவளுக்கு மடிக் கணினியில் காண்பிக்க சொன்னார்.
ஏன் அவசரப் படுத்துகிறார்கள் எனக் குழம்பிக் கொண்டிருந்தேன்.
அப்பாவும் அதையேதாண் சொன்னார். அதிகாலை அவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்கிறார்கள் என்று அப்பா சொன்னதும் இன்னும் குழப்பம் அதிகமானது.
இரண்டு மாதம் விடுமுறைதான் என்று அத்தை சற்று நேரத்திற்கு முன்பு கூறி இருந்ததுதான் குழப்பத்திற்குக் காரனம்.
நான் அவர்கள் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு செல்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன் உடனே கிளம்புகிறார்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. சாப்பிட்டுவிட்டுப் புகைப்படங்களை காண்பிப்பதாக முடிவு செய்து கொண்டோம்.
முதன்முறையாக அவள் கிளம்புவதற்குள் அவளிடம் பேசிவிடவேண்டும் எனத் தோன்றியது.
அம்மா சாப்பிட அழைத்தார். அத்தைதான் தோசைவார்த்துக் கொண்டிருந்தார். அவளுடன் சேர்ந்து சாப்பிடவேண்டுமெனத் தோன்றியது. நேராக எதையும் கேட்கவில்லை.
”அந்த பொன்னையும் சாப்பிட சொல்லவேண்டியதுதான?” என்று அத்தையிடமும் அம்மாவிடமும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தேன்.
”அவளுக்கு பசிக்கலையாம். அப்புரம் சாப்டுக்குராளாம்.” இருவரும் ஒரேபதிலையே கூறினர். அந்தப் பெண்ணும் அதைத்தான் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
என்ன செய்வது? கூட்டணி அமைக்கமுடியாமல் தனியாகவே தொகுதியை நிரப்பிக் கொண்டிருந்தேன்.
இரவு உணவு எனக்கு மட்டும் ஏதோ முடிந்தது. அம்மா அந்த பெண்ணுக்கு புகைப் படங்களைக் காட்டும்படி சொல்ல, நானும் மடிக்கணினியை கொண்டுசென்று வீட்டின் மையத்தில் வைத்துவிட்டேன். மூவரும் பார்க்கத் தொடங்கினார்கள்.
ஒருவழியாக பார்த்து முடித்துவிட்டார்கள்.
”டே, அந்த துப்பட்டா ஃபோட்டோ போட்டு காட்டுடா.” என்றார் அம்மா.
”எந்த துப்பட்டா?” என்ற்உ நான் குழப்பத்தில் கேட்க? அவள் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
பிறகுதான் நினைவுக்குவந்தது. அது நான் முதுகளை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஷேக்ச்பியர் அவர்களது மேக்பெத் (Magbeth) நாடகத்தை நடிக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படம். கதைப்படி மொத்தம் ஆறு சூன்யக் காரர்கள். அதில் நானும் ஐந்துப் பெண்களும் நடித்திருந்தோம். கருப்புநிற ஆடைத் தேவைப் பட்டதால் ஒரு பைய்யனிடம் கருப்புநிற சட்டையையும், க்ரிஷா (grisha) விடம் தலையில் அணிந்து கொள்ள கருப்புநிற துப்பட்டாவையும் வாங்கிக் கொண்டேன். அந்த புகைப்படம் சிலநாட்கள் முகநூலைப் பயம் உருத்திக் கொண்டிருந்ததெல்லாம் பழைய வரலாறு.
ஆனாலும் அந்தப் புகைப்படங்கள் எங்கு இருக்கிறது என்று மரந்துவிட்டேன். நல்லவேளை அவர்களும் மரந்து குடும்ப சுற்றுலா சென்றபோது எடுத்தப் புகைப்படங்களைக் காண்பிக்கச் சொன்னார்கள். அந்த சூன்யக் காரப் புகைப்படத்தில் என்னைப் பார்த்திருந்தால் போகும்வரை சிரித்துக் கொண்டே இருந்திருப்பாள்.
புகைப்படங்கள் முடிந்தபாடில்லை. எதிர்வீட்டு அக்கா திடீரென வீட்டிற்கு வந்தார். பிரிஞ்சி (vegetable biriyani) சாதத்தைக் கொண்டுவந்து சாப்பிடும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நாங்கள் வடித்ததே இன்னும் தீற்க்கப் படாமல் இருந்தது. இப்போது இதுவும் சேர அம்மா என்னையும் கொஞ்சம் சாப்பிட சொன்னார்.
என்ன செய்வது? சரி என்று சொல்லி சாப்பிட அமர்ந்துவிட்டேன். கொஞ்சமாகத் தான் சாப்பிடமுடியும் என்று தெளிவாக சொல்லிவிட்டேன். இரண்டாம் முறை இரவு உணவு. எதிர்பார்க்கவே இல்லை. அருகில் அமர்ந்தது அவள்தான். நிச்சையமாக அவளுக்காக சாப்பிடவில்லை. அம்மாவுக்காகத்தான்.
வாழ்வில் சில விஷையங்கள் நினைக்கும்போது நடப்பதில்லை. ஆனால் நினைத்து, ஓய்ந்து, மரந்த பின்பு நடந்துவிடும். அந்த மாதிரியான விச்சித்திரமான நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்வில் அடிக்கடி நடப்பதை உணர்ந்திருக்கிறேன். அதில் ஒன்றுதான் அவள் என்னுடன் அருகில் அமர்ந்து சாப்பிட்டது.
உன்மைய்லேயே தூரம் தமிழுக்கும் தெலுங்கிற்கும் இல்லை. மௌனத்திற்கும் மொழிகளுக்கும்தான். அந்த மௌனத்தை அவள் அன்று இரவு முழுதும் கலைக்காமல்தான் இருந்தாள்.
எப்படி இருந்தாலும் போகும்போது சொல்லிவிட்டுதான் போகவேண்டும் என்று இரவே தீர்மானித்துவைத்திருந்தேன். அவள் தெலுங்கில்தான் சொல்லிவிட்டு செல்வாள் என ஊகித்தும், உள்ளுக்குள் அவள் என்னிடம் பேசப் போகிற முதல் வார்த்தையை உச்சரித்தும் கொண்டேன்.
மருநாள் வந்தது. தியானத்திற்காக ஐந்து மணிக்கு எழுந்திரிக்கவேண்டிய நான் அன்று கொஞ்சம் தாமதமாகவே எழுந்தேன்.
”போயிட்டாங்களா டேடி? (Daddy)” என அப்பாவிடம் கேட்டென். அதுதான் நான் அன்று பேசிய முதல் வார்த்தை.
”அது எப்படி டா சொல்லாம பொவாங்க?” என்றார்.
அவர்கள் கிளம்ப தயாராகி இருந்தார்கள். பால், தேனீர், பழச்சாரு என எதை அருந்த சொன்னாலும் அவள் வெட்கத்துடன் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் குடிக்க வெட்கப்படுவதை அம்மாவும் அப்பாவும் அன்புடன் கண்டித்துக் கொண்டிருந்தார்கள். நான் கோவத்துடன் ரசித்துக் கொண்டிருந்தேன்.
கிளம்பும்போது அத்தை என் கையில் ஐநூறு ரூபாயைத் தினித்தார். நான் வேண்டாம் என்ரு சொல்லியும் கேட்கவில்லை.
”மாமா கிட்டெல்லாம் போயிட்டுவரேன் னு சொல்லு!” என்று அத்தையும் அம்மாவும் அவளிடம் ஒன்றிற்கு இரண்டுமுறைக் கூறினர். நான் எதிரில்தான் எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்தேன்.
ஆனால் அவள் என்னைக் கடந்து உள்ளே சென்றாள். குளித்துக் கொண்டிருந்த என் அண்ணன் இடம் ”bye மாமா,” என்று இருமுறைக் கத்தினாள்.
பிறகு வெளியே வந்தாள். என்னிடம், மிக மெல்லிய குறளில், ”bye மாமா.” என்றாள்.
நானும் பதிலுக்கு ”bye." என்று முடித்தேன்.
தெலுங்கில் துவங்கும் என நான் நினைத்தது, ஆங்கிலத்தில் முடிந்தது. நாங்கள் இருவரும், பிரிவதற்காகத்தான் பேசினோம். அவள் கடைசியாகப் பேசிய முதல் வார்த்தையும் களையாத மௌனமாய்தான் காதில் விழுந்தது.

0 comments:
Post a Comment