10 January 2018

நீங்க ஷட்டப் பண்ணுங்க!

Posted by Vinoth Subramanian | Wednesday, January 10, 2018 Categories: , , , , ,


அண்ணனுக்கு வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி திருமனம். அதனால் பத்திரிக்கை வைப்பதற்காக கடந்த ஞாயிறன்று எனது நண்பர்களின் வீட்டிற்கு சென்றிருந்தோம். சில உரவினர்களுக்கும் வைக்கவேண்டியிருந்ததால் அண்ணனும் உடன் வந்திருந்தான்.
நண்பர்களின் வீடுகளை முடித்துவிட்டு வியாசர்பாடிக்கு சென்றோம். அதுதான் அம்மாவின் பூர்வீகம். அங்குதான் என் தாய் மாமா மற்றும் இதர உரவினர்கள் வீடு இருக்கிறது. அம்மாவின் உடன் பிறவா சகோதரர்கள் மட்டுமே அதிகம் பேரிருக்கிறார்கள். அந்த அனைவரும் உரவு முறையில் எனக்கு மாமாக்கள்தான் என்று சொல்லிப் புரியவேண்டியதில்லை. தவிற அண்ணன் சிறுவயதில் அங்கேயே வளர்ந்ததால் ஒரு சில நண்பர்களும் தேருவார்கள். அதனாலேயே அங்கு சென்றால் கொஞ்சம் அச்சமாக இருக்கும். ஒருவர் வீட்டில் சாப்பிட்டால் மற்றவர்கள் கோவித்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களின் வீட்டிலும் சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது குடிக்கவாவது வேண்டும். எனக்கு தேநீர், காப்பி பால் என்று எதுவும் குடிக்கும் பழக்கம் இல்லாததால் தப்பிப்பிழைப்பதே கடினமாகிவிடும். பற்றாக்குறைக்கு பத்திரிக்கை வேறு வைக்க சென்றோமா? சொல்லவே வேண்டியதில்லை.

நானாவது நண்பர்கள் வீடோடு நிறுத்திக்கொண்டு தாய்மாமா வீட்டில் தஞ்சமடைந்து மாமியுடனும் அவர்களின் மகள் தீபாவுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அவந்தான் பாவம். இன்னும் சில வீடுகளை முடித்துவிட்டு வந்து சேர்ந்தான். யார் எங்களை சாலையில் பார்த்தாலும் அவர்கள் வீட்டில் சென்று அட்டெண்டன்ஸ் போடவேண்டும். ”அந்த மாமா ரெண்டுவாட்டி பாத்துட்டாருடா. உள்ள போயிட்டு வந்திடுவோம்.” என்று அண்ணன் சொல்ல தாய்மாமாவீட்டிலிருந்து கிளம்பி அந்த மாமாவின் வீட்டிற்குள் நுழைய இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

வாடா நல்லவனே! நீதான் நேத்து எனக்கு கால் பண்ணுரேன்னு சொன்னவனா? உனக்காக வாட்ஸப்பையும் ஃபேஸ்புக்கையும் தொறந்துவெச்சிட்டு கெடந்தேன். ஒரு மெஸ்ஸேஜ் கூட காணும். ஏமாத்திரியா நீ?” என்று சொல்லிக்கொண்டே ப்ரியா அக்கா என்னை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். ப்ரியா அக்கா அண்ணனின் நெருங்கிய தோழி. அவர் மட்டுமல்ல அந்த குடும்பமே எங்களுக்கு மிகவும் நெருக்கம். சிறுவயதில் அண்ணனும் சரி நான் சென்றாலும் சரி அவர்கள் வீட்டில்தான் அதிகநேரம் செலவிடுவோம். சாப்பிடுவது கூட அங்குதான். ப்ரியா அக்காவிற்கு திருமனமாகி ஒரு குழந்தையும் இருக்கிறான். இப்போதுதான் அமேரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் இணையவங்கி (internet banking) பெறவேண்டுமாம். அதற்கு என்ன செய்யவேண்டுமென்றுதான் முந்தின நாள் ப்ரியா அக்கா கேட்டிருந்தாள். ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். தோழியிடம் கேட்டு சொல்கிறேன். இல்லையென்றால் ஒரு படிவம் நிரப்பித் தரவேண்டும். அந்த படிவம் இருக்கிறது அனுப்பிவைக்கிறேன் என சொல்லியிருந்தேன்.

ஏன் டா கால் பண்ணல? இதுல அஞ்சுமணிக்கெல்லாம் வீட்டுக்குப்போயி  கால் பண்ணுரேன்னு வெட்டி பில்ட்டப் வேற.” என்று கலாய்த்துவிட்டார். சொன்னால் சொன்ன நேரத்துக்கு அழைப்பது என்பது எனது பிறவி குணம். இந்த உண்மையை சொன்னதற்கே எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்குமென நினைக்கிறேன்.
நீ எப்பிடி இவங்க வீட்டுல இருக்க?” என்று அண்ணன் ப்ரியா அக்காவை கேட்க,
சும்மாவந்தேன் டா. பாப்பாவ கூட்டிக்கிட்டு.” என்றார்.
இல்ல அக்கா. நேத்து ஃப்ரெண்டுக்கு கால் பன்னி கேட்டேன். அவ கேட்டுட்டு சொல்ரேன்னு சொன்னா. அதுதான் லேட்டு. அதுவும் இல்லாம இன்னைக்கு சண்டேதான்னு கொஞ்சம் கேஷ்வலா இருந்துட்டேன்.” என்று சொல்லி நண்பன் மகேஷை அழைத்து மொத்த விவரத்தையும் கரந்து அக்காவிடம் கம்மியூனிக்கேட் செய்தேன். உண்மையிலேயே முந்தின நாள் தோழியை அழைத்துதான் இருந்தேன். அவள் தெரியவில்லை என்று சொன்னதால்தான் ப்ரியா அக்காவை அழைக்கவில்லை.

மாமா அங்குதான் இருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள். பெயர் குறிப்பிடவிரும்பவில்லை. பள்ளிக்கு செல்லும் அந்த இரண்டாவது மகளிடம் நான் பேசியதில்லை. கல்லூரியில் படிக்கும் முதல் மகள் என்னிடம் பேசியதில்லை. இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு தீபாவுடன் இந்த மாமாவின் மூத்த மகளும் வந்திருந்தார். சுமார் பதினைந்து நாட்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். ஆனால் நானும் இந்த பெண்ணும் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. என்னிடம் அவள் பேசவில்லை அல்லது அவள் பேசாததால் நான் அவளிடம் பேசவில்லை. கடைசிநாளுக்கு முந்தினம்நாளைக்கு ஜெயிலுக்கு போகனும்.” என்று அவள் தீபாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். வீட்டைத்தான் அப்படி சொல்லியிருக்கிறாள். அவர்கள் கிளம்பும்நாளன்று நானும் அவர்களுடன் கிளம்புவதாக திட்டம். அதற்காக முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன்.

கண்ணத்தில் பிலேய்டை வைத்துக்கொண்டிருந்த அந்த தருணம், ”மாமா எனக்கொரு ஹெல்ப் பண்ணுரீங்களா?” என்று ஒரு குரல். கண்டிப்பாக இவள்தான். ப்லேய்டால் கண்ணத்தைக்கீரியெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் கனவு இல்லை என்று மட்டும் தெரியும். இத்தனைநாள் பேசாதவள் இன்று மட்டும் ஏன் பேசுகிறாள்? என்று குழப்பமாய் இருந்தது. திரும்பி மட்டும் பார்த்தேன். ”எங்கப்பா ஏதாச்சும் கேட்டாருனா என்னப்பத்தி பாசிட்டிவா சொல்லுரீங்களா?” என்றாள். என்னிடத்தில் வேறு எவனாவது இருந்திருந்தால் கண்ணத்தில் ப்லேய்டையும் கண்களில் காதலையும் வைத்துக்கொண்டு அந்த வசனத்தை அப்படியே மாற்றிஉங்க அப்பா கிட்ட என்னப்பத்தி பாசிட்டிவா ஏதாச்சும் சொல்லுரியா?” என்று பேசியிருப்பான். என்ன செய்ய? எனக்கு அதெல்லாம் வராது. அமைதியாய் எந்த மாதிரி என்று கேட்பதுபோல் கேட்காமல் இருந்தேன்.
அத கத்துக்கிட்டேன் இத கத்துக்கிட்டேன் அப்பிடி ஏதாச்சும்.” என்று முடித்தாள். நானும் சரி என்றேன்.

மாமா வீட்டிற்கு சென்றோம். நலம் விசாரித்தவர்எப்பிடி பா நம்ம பொண்ணு? நல்லா பேசுராளா? அங்க வந்து ஏதாச்சும் கத்துக்கிட்டாளா? இந்த இங்கிலீஷு, டைப்பிங்கு அதெல்லாம்?” விட்டால் சான்றிதழே கேட்பார் போல இருக்கே என நினைத்துக்கொண்டு,
அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்லமாமா. பொண்ணு நல்லாவே பேசுரா. என்கிட்ட ரொம்ப நல்லா பேசுரா மாமா. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாச்சும் லேப்டாப்பே கதினு கெடந்தா. கொறஞ்சது அஞ்சு பக்கமாச்சும் டைப் பண்ணிருவா மாமா. கம்பியூட்டர் மேல அவ்வலவு ஆர்வம்.”
அப்பிடியா? சரி. அப்பொ அந்த இங்கிலீஷு?”
ஐயோ மாமா! நீங்க வேற, நாங்க ரெண்டுபேரும் தமிழிலயே பேசிக்க மாட்டோம். இங்கிலீஷ் மட்டும்தான்.”
அப்பிடியா? இந்த மூஞ்ச பாத்தா அப்பிடி ஒன்னும் தெரியலயே?”
இதுல பொய் சொல்லுரதுக்கு என்ன இருக்கு மாமா? வீட்டுக்கு வந்த மத்தவங்களவிட இவளுக்கு எல்லாத்துலையும் கொஞ்சம் ஆர்வம் அதிகம் மாமா.”
வேரிகுட் வேரிகுட்.
அவள் என் அத்தையை/அவளது அம்மாவை அழைத்து கொண்டிருந்தாள். சிக்னெல் கிடைக்கவில்லைபோலும். வெளியே சென்றவளை, “எதுக்கு வெளில போர?” என்று மாமா அதட்டினார். இதுதான் அவர். இந்த கண்டிப்புதான் அவர் சுபாவம். இந்த பெண் வந்திருந்தபோது வீட்டிற்கு மாமாவும் ஒருமுறை வந்து, பிஸ்கட், பழங்கள், பொட்டளங்கள் எனபை நிறைய வாங்கிவந்தார். அந்த தின்பண்டங்களை ஒரு ஆள் மட்டும்  சாப்பிட்டால் ஒரு மாதத்திற்கு சாப்பிடலாம்.
அப்படிதான் ஒருமுறை அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதபோது நலம் விசாரிக்கவந்தார். இரண்டுமாதத்திற்கான பிஸ்கட்டுகளை வாங்கி வந்திருந்தார். அடிப்படையில் மிகவும் நல்லவர். பெண் பிள்ளைகள் என்பதால் கூடுதல் கண்டிப்பு. செல்லம் கொடுத்தால் கெட்டுவிடுவார்களோ என்ற பயம் ஏகத்துக்கும் காண முடிந்தது. இன்னும்கூட பெரும்பாலான இல்லங்களில் பென்பிள்ளைகள் வயதிற்கு வந்துவிட்டால் பெற்ற தகப்பன்களின் பாசமானது பயமாக மாறி பிஸ்கட் பாக்கெட்டுக்குள்ளேயும் மிச்சர் பாக்கெட்டுக்குள்ளேயும் சென்று ஒளிந்து கொள்கிறது. ஆனால் பெண் பிள்ளைகளை படிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவரது தனி அடையாலம் எனச் சொல்ல்லலாம். ஆனால் அதுமட்டும் போதுமென்று சொல்லமுடியாது என்பது என் புரிதல்.

அதன் பிறகும் அந்த பெண்ணை வழியில் அவ்வப்போது பார்த்ததுண்டு ஆனால் பேசியது கிடையாது. அண்ணனுக்கு பாய் என்று சைகையில் சொல்வாள் அவ்வலவுதான்.
அப்படித்தான் புத்தாண்டிற்கு முந்தினம் பத்திரிக்கை வைக்க இந்த மாமாவின் வீட்டிற்கு அப்பாவுடன் சென்றேன்.
என் பொண்ணுக்கு ஏதாச்சும் சொல்லிக்கொடு பா. கம்பியூட்டர் எல்லாமெதுவுமே தெரியாது.”
நாமதான் அப்பிடி நெனச்சிட்டிருக்கோம். ஆனா அவங்கெல்லாம் நல்ல டேலெண்டட் மாமா.” என்று சொல்லிவிட்டு, “இப்போ என்ன படிக்குராங்க?” என்று கேட்க, ”சொல்லு! மாமாக்கிட்ட என்ன படிக்குரனு சொல்லு!” என்று அவர் தன்மகளிடம் குரலை உயர்த்த அவளும் சொல்லி முடித்தாள். என்ன கல்லூரி என்று மாமாவிடம்தான் கேட்டேன். அவளே முன்வந்து சொன்னாள். என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றெல்லாம் நினைத்துக்கொண்டு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அமைதியாய் இருந்தால் அதற்கும் திட்டுவிழும் என்பதால் அந்த தருணத்தில் அந்த திருவாய் மலர்ந்தது. ”ஹேப்பி நியூயர் மாமா.” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். அவரும் திரும்ப வாழ்த்தினார்.
மாமாக்கு ஹேப்பி நியூயர் சொல்லு!” என அவளிடம் உறத்த குரலில் சொல்ல,
ஐயோ மாமா! எதுக்கதெல்லாம். பரவாயில்ல.” என்று சொல்லி வெளியேறினேன். ஆனால் அடுத்தவாரமே இவரது வீட்டிற்கு செல்லும் வாய்ப்பும் பதிவு எழுத பொருளும் (content)  கிடைக்குமென நினைக்கவில்லை.
வினோத், இவ அக்கௌண்ட்ஸ் படிக்குரா. அதுல ஏதாச்சும் சொல்லிக்குடு பா.” என்று வழக்கம்போல இந்த வாரமும் ஆரம்பித்தார்.
அது என் டிப்பார்ட்மெண்ட் இல்ல மாமா. அதுவும் இல்லாம இவங்களுக்கெல்லாம் நாம எதுவும் சொல்லித்தரவேண்டிய அவசியமே இல்ல.” என்று நான் முடிக்க, ப்ரியா அக்காவிடம்நீ ஏதாச்சும் சொல்லிக்குடு மாஎன்றார்.
ஐயா! அக்கா மாட்டிக்கிட்டாஎன உள்ளுக்குள் மகிழ்ந்த நேரத்தில்,
அண்ணா தண்ணி.” என்று இவள் வாட்டர் பாட்டிலை நீட்டினாள்.
எது! அண்ணாவா?” என நினைத்துக்கொண்டே வாங்கி நீரை அருந்தினேன். தாகமெல்லாம் ஏதும் இல்லையென்றாலும் ஒரு மாமன் மகள்அண்ணாஎன அழைக்கும்போது அதை ஜீரனம் செய்யவாவது அந்த நீர் தேவைப்படுமென்பதால்தான் குடித்தேன். ஒரு மாமன் மகளேஅண்ணாஎன அழைக்கிறாள் என்றால் வினோத் எந்த அளவிற்கு ஒரு அக்மார்க் முத்திரை குத்தப்படாத நல்லவன் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கிடையில் ”நானும் அந்த டிப்பார்ட்மெண்ட் இல்ல.” என்று ப்ரியா அக்காவும் நழுவ மாமா ”அப்போ சின்ன பொண்ணுக்கு ஏதாச்சும் சொல்லிக்கொடு.” என்றார்.
”யாராச்சும் வந்தாங்கனா இவரு ஓவரா பண்ணுவாரு.” என்று இவள் பக்கத்தில் இருந்துகொண்டு முனுமுனுத்துக்கொண்டிருந்தாள்.

பேச்சு வேறு திசைக்கு சென்றது.
“அந்த ராம்பாபு உன்ன கேட்டாரு வினோத்.” என்றார் மாமா.
”யாரவரு?” என்று மாமியும் ப்ரியா அக்காவும் ஒரு சேர கேட்க,
”அவர்தான் இவன அவர் படிச்ச ஸ்கூல்ல சேத்துவிட்டார்.” என்றார்.
”என்னைய இன்னும் ஞாபகம் வெச்சிருக்காரா?” என்று நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன்.
”ஆமாம் பா. ஆனா பாவம். இப்பொ அவருக்கு உடம்பு முடியல. கேன்சர் வந்திடுச்சு. ஒரு காது வேற கேக்கலையாம்.” என்றார்.
”ஐயையோ! நான் அவர சின்னவயசுல ஒரேஒருதடவ  பாத்தது. அதுக்கப்புரம் போயி பாக்கவே இல்ல.”
”நீ போயி பாத்திருக்கனும்!” என்றார் கண்டிப்புடன்.
ஆமாம். அவர் சொன்னதுசரிதான். கடன் கொடுத்தவனையும் கற்றுக்கொடுத்தவனையும் மட்டும் மரக்காமல் மரந்துவிடவேண்டுமென்ற மதச்சார்பற்ற சம்பர்தாயத்தை உலகின் பெரும்பாலான மனித மூளைகள் பின்பற்றிவருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது என நினைக்கிறேன்.
”நான் மரக்கல மாமா. போயி பாக்கனும்.” என்றேன்.
”மத்தியம் என்ன சாப்புட்ட?” என்ற மாமியின் கேள்விக்கு,
”கார கொழம்பு சாதம்.” என்றேன்.
”கார கொழம்பா? கார கொழம்பு சாப்புட்டா அப்புரம் கரி கொழம்பெல்லாம் யாரு சாப்பிடுவா?” என்றார் மாமா.
”நான் நான்வெஜ் சாப்புடமாட்டேன் மாமா.”
”என்னது?”
”ஆமாம் இவன் அசைவம் சாப்பிடமாட்டான்.” என்றார் மாமி.
”அப்பிடியா? என் பொண்ணுங்க எல்லாம் நான்வெஜ்தான்.”
”ஐயையோமருபடியுமா?”என நினைத்துக்கொண்டு,
”நான்வெஜ் நல்லதுதான் மாமா. ரொம்ப நல்லது. நாந்தான் சாப்பிடமாட்டேன்.” என சொல்லிக்கொண்டு
”அந்த ராம்பாபு, டெல்லியில இருக்காருனு சொண்ணீங்கலே மாமா?” எனப்பேச்சை மாற்றினேன்.
”ஆமாம். ப்ரஃபசரா இருந்தாரு. ஆனா வந்துட்டாரு.” என்றார்.
”சரி மாமா. நான் கெளம்புரேன்.” என்று எழுந்து விடை பெற்றேன்.
”டே! இன்னைக்காச்சும் அந்த ரெஜிஸ்ட்ரேஷன் லின்க் அனுப்புவியா டா?” என்று ப்ரியா அக்கா கேட்க,
”அக்கா, கண்டிப்பா அனுப்புரேன் அக்கா. நேத்து அந்த டாகுமண்ட்ட அனுப்பலாம்னுதான் நெனச்சேன்.”
”ஆனா அனுப்பலையே.” என்று அவர் என்னை மீண்டும் கலாய்க்க,
”டாகுமண்ட்டுனா என்னனு சொல்லு?” என்று மாமா அவரின் மூத்தமகளை மீண்டும் வம்பிற்கு இழுக்க, கடுப்பானவள்
”நீங்க ஷட்டப் பண்ணுங்க.” என்று அவரிடம் சீறீனாள். அது வெளியே நிற்கும் எனக்கும் கேட்டது. உள்ளே இருந்த ப்ரியா அக்காவும் மாமாவின் இலையமகளும் கொல் என்று சிரிக்க, நானும் சிரித்துக்கொண்டே பிரதான வாசலை நோக்கிநடந்தேன்.
வீட்டில் உணவுஇருப்பதால் வெளியில் சாப்பிடவேண்டாம் என்று அம்மா சொன்னதை மீறி சிந்துபவன் சென்று சீக்ரட்டாக பட்டர் நாணும், பண்ணீர் பட்டர் மசாலாவும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்கு சென்று எங்களுக்காக இருந்த காரக்குழம்பு சாதத்தையும் சாப்பிட்டுவிட்டு, அப்படியே ப்ரியா அக்காவிற்கு அந்த வலைதள முகவரியை முகநூலில் அனுப்பிவைத்துவிட்டுப் படுத்தேன்.
”நீங்க ஷட்டப் பண்ணுங்க!” என்ற வார்த்தைமட்டும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அது பிக்பாசில் ஓவியா சொன்னவார்த்தை எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஓவியா சொல்லும்போது கூட அந்த வார்த்தையில் வலி இருந்திருக்காது. ஆனால் அவள் நிச்சையம் வலியுடந்தான் சொல்லியிருப்பாள். மற்றவர்கள் முன்பு என் அப்பா என்னை இப்படி மட்டந்தட்டுகிறாரே என்ற மனதின் குமுரலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அன்பு என்பது ஒரு இனிமையான உணர்வு. ஆனால் அதையே
காட்டக்கூடாத விதத்தில் காட்டினால் கசப்பானதாகத்தான் மாறும் என்றுமட்டும் புரிந்து கொள்ளமுடிந்தது.

4 comments:

  1. lovely and awesome post! especially "அன்பு என்பது ஒரு இனிமையான உணர்வு. ஆனால் அதையே
    காட்டக்கூடாத விதத்தில் காட்டினால் கசப்பானதாகத்தான் மாறும் என்றுமட்டும் புரிந்து கொள்ளமுடிந்தது."

    ReplyDelete
  2. மிகவும் நல்லவன் வினோத் இதுதான் சிறப்பு

    ReplyDelete
  3. "ஆனால் பெண் பிள்ளைகளை படிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவரது தனி அடையாலம் எனச் சொல்ல்லலாம். ஆனால் அதுமட்டும் போதுமென்று சொல்லமுடியாது என்பது என் புரிதல்." Loved this line! A very relatable post. So simple yet beautiful. :)

    ReplyDelete
  4. அண்பிற்கும் கண்டிப்பிற்கும் உள்ள நூலளவிலான வித்தியாசம் மரையும்போது அதை எதிர்கொள்ளும் மனதின் எதிர்வினையே அந்த வார்த்தை. அதை பதிவாக்கியவிதத்திற்குக் கிடைத்த பரிசு ’இன்னொருமுரை படிக்கலாமே” என்ற வாசகனின் ஆர்வம். அருமை அன்னா!

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube