14 February 2016

சகாயம் பேசுகிறார்!

Posted by Vinoth Subramanian | Sunday, February 14, 2016 Categories: , , , ,வங்கிக் கணக்கில் வெரும் ஏழாயிரம் ரூபாயையும், கடனில் கட்டப் பட்ட ஒரு வீட்டையும் வைத்திருக்கும் மாமனிதர்தான் திரு சகாயம் I.A.S. அவர் தன் பேச்சைத் துவங்கிய உடன் அரங்கமே என்னைப் போல எதிர்ப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துஎன்ற வாசகத்தை உருவாக்கித் தன் வாழ்க்கையாகவே மாற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதரின் வாழ்க்கைப் பாதையில் கடந்து வந்த வளிகலைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றாள் அவரது இருபத்துநான்கு ஆண்டுகளில் அவர் சந்தித்த இருபத்து ஐந்து பணி இட மாற்றங்கள்தான் சாட்ச்சி. அத்தனை வளிகளையும் தாங்கிக் கொண்டுதான் அவர் பேச்சை ஆரம்பித்திருந்தார். மாணவர்களிடம் பேசுவது மிகவும் பிடித்த ஒன்று என்று கூறிய அவர், அன்னாப் பல்களைக் கழகத்தில் பொறியியல் படிக்கும் ஆஷா என்ற மாணவி இவரை அழைத்ததும், அந்த மாணவி இவரிடம் தான் ஒரு பிரதமராகவேண்டும் என்று தொலைப்பேசியில் கூறியதையும் மிகப் பெருமையாகக் கூறினார். அப்படிப் பட்ட இலக்குகளை மாணவர்கள் தன் வாழ்வில் லட்ச்சியமாக வைத்திருக்கவேண்டுமெனக் கருதுவதாகக் கூறினார். ”நீங்கள் எனக்கு முன்மாதிரிஎன்று ஆஷா கூறியதையும், அதற்கு அவர்என்னை எல்லாரும் ஒரு மாதிரி என்று கூறுகிறார்கள் நீ மட்டும்தான் முன்மாதிரி என்கிறாய்என்று சொன்னதை பகிரும்போது  அரங்கத்திற்கு கைகள் முளைத்துவிட்டன.

இலக்கும் லட்ச்சியமும்:

வாழ்வில் என்னவாக ஆகவேண்டும் என்பது இலக்கு என்றும், என்ன செய்வதற்காக ஆகவேண்டும் என்பது லட்ச்சியம் என்றும் கூறிய அவர், பிரதமராக வேண்டுமென்பது இலக்கு, மனிதர்களுக்குச் சேவைச் செய்யவேண்டும் என்பது லட்ச்சியம் என்று விளக்கினார். இலக்கு வெவ்வேறாக இருந்தாலும், இன்றைய இளஞ்ஞர்களுக்கு லட்ச்சியம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவதாகச் சொன்னார்.

வருத்தம்:

வாகன நெரிசலில் சிக்கியதால் தாமதமாகிவிட்டது என்ற அவர், அத்தனை பேரும் கார்களிலும், மோட்டார் வாகனங்களிலும் சீறிப் பாய்ந்துக் கொண்டிருக்கும்போது ஒரு முதியவர் மட்டும் தன் மிதிவண்டியை சிறமப் பட்டு மிதிக்கும்போதும் அவர் மட்டும் பின் தங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு தான் மிகவும் வருந்துவதாகக் கூறினார்.

நள்ளிரவில் வந்த அழைப்பு:

உசுலம்பட்டியிலிருந்து யாரோ ஒருவர் இவரை அழைத்திருக்கிறார்கள். அதுவும் இரவு பண்ணிரண்டு மணி அலவில். என்னமோ ஏதோ எனப் பதரி அழைப்பை எடுத்திருக்கிறார். எதிர் முனையில் இருந்தவர். “நேரமாகிவிட்டது, தவறான நேரத்தில் தொந்தரவு செய்துவிட்டேன்என்று புலம்பிப் பிரச்சினையை சொல்லாமல் இழுத்தடித்திருக்கிறார். திரு சகாயத்தின் நீண்டநேர கேல்விக்குப் பின் பிரச்சினையை சொல்லி இருக்கிறார். ”பக்கத்துல இருக்கும் மதுபானக் கடையில விற்கும் சரக்குல (rum) போதையே ஏறமாட்டிங்குது சார். போலி சரக்கு குடுத்து ஏமாத்துராங்க சார்.” என்று சொல்லி இருக்கிறார். எப்படி இருந்திருக்கும்?
தண்ணி இல்லாக் காட்டிற்கு இவரை மாற்றி விடுவோம் என்று சொல்லுபவரிடத்தில்தண்ணி இல்லாக் காடு என்று இந்தத் தமிழ்நாட்டில் ஏதும் இல்லைஎன்ற சகாயம், ”எல்லா மாவட்டத்திலும் மதுக் கடைகள் இருக்கிறதேஎந்தத் தண்ணி இல்லாக் காட்டிற்கு தன்னை மாற்ற முடியும்?  என்றார்.

சிறுமியின் ஆசை:

படித்தவர்களிடத்தில்தான் பொய்களும் பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணமும் இருக்கும் ஆனால், சிறுவர்களிடம் எப்போதும் உன்மைதான் புலப்படும்.” என்ற திரு சகாயம்,
ஒருமுறை ஏதோ ஒருப் பள்ளிக்குச் சென்றானுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார். அங்கு அனைவரிடமும், “உங்கள் இலக்கு என்ன?” என்றுக் கேட்டிருக்கிறார். அதில் ஒரு சிறுமி தான் மருத்துவராகவேண்டும் என்றுக் கூறி இருக்கிறார். ”எதற்காக மருத்துவராக வேண்டும்என்று கேட்ட திரு சகாயத்திடம், “சம்பாதிப்பதற்காகஎன்று பதிலளித்திருக்கிறார் அந்த சிறுமி. அதிர்ந்து போன திரு சகாயம், “சம்பாதித்து?” என்றுக் கேட்க, அதற்கு அந்தச் சிறுமிமருத்துவராகி சம்பாதித்து வீட்டிற்கு அரிசி வாங்கவேண்டும்என்று பதிலளித்திருக்கிறார். அந்தச் சிறுமியின் வறுமை தன்னை மிகவும் பாதித்ததாக சொன்னார் திரு சகாயம்.

சாக்ரடீசின் மனைவியும், சகாயத்தின் மனைவியும்:

எவ்வலவு பெரிய மேதாவியாக இருந்தாலும் வீட்டில் மதிப்பு கிடைப்பது கடினம்என்றுக் கூறிய திரு சகாயம், சாக்ரடீசின் மனைவி அவரை எப்போதும் வசைப் பாடிகொண்டிருப்பார் என்று படித்திருப்பதைப் பகிர்ந்துக் கொண்டார். ”அப்படித் தான் ஒருமுறை சாக்ரடீசை அவர் மனைவி மிகவும் பயங்கரமாக வசைப் பாடிக் கொண்டிருந்தாராம். சாக்ரடீசதற்கு பதில் ஏதும் பேசாமல் இருக்க மனைவிக்கு கோவம் வந்துவிட்டது. ஒரு குடம் தண்ணீரை எடுத்து சாக்ரடீசின் தலையில் ஊற்றி இருக்கிறார் அவர் மனைவி. அப்போதுதான் சாக்ரடீசின் வாயில் இருந்து வார்த்தை வந்ததாம். ’இவ்வலவுநேரம் இடி இடித்துக் கொண்டிருந்தது, இப்போதுதாண் மழை பெய்கிறது.’” என்று சாக்ரடீசின் வார்த்தைகளைச் சொல்லிய சகாயம், “எனக்கு இத்தனை முறை பணி இட மாற்றம் நிகழ்ந்தபோதும், என் மனைவி ஒருமுறைக் கூட முகம் சுலித்ததேஇல்லை.” என்றார்.

எப்படிப் பட்ட வளி?

ஒருமுறை என்னைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்திருந்தார்கள்.  பெரிதாக ஏதாவது இருக்கும் என்று நினைத்துத் துரித கதியில் விமானத்தைப் பிடித்துச்  சென்றேன். அழைத்தவர்கள் பெரிதாக ஏதும் பேசவில்லை. சாதாரனமாகப் பேசிவிட்டுத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். சென்னை விமான நிலையத்தை அடைந்தபோது ஒரு ஊடகர் வழிமறித்துக் கேட்டார். அப்போதுதான் எனக்கே தெரியும் நான் பணியிடமாற்றம் செய்யப் பட்டிருக்கிறேன் என்று.”

டேவிக்கா:

அனைவரும் கிராமங்களை நோக்கிச் செல்லுங்கள்என்ற திரு சகாயம், தான் கிராமத்தில் பார்த்த தேவிக்கா என்றச் சிறுமியைப் பற்றிப் பகிர்ந்துக் கொண்டார். ஒவ்வொருவரையும் ஆங்கிலத்தில் ‘What is your father’ என்று கேட்டிருக்கிறார். அவர்களும் பதிலளித்திருக்கிறார்கள். இருதியாக தேவிக்கா. தன் தந்தையின் வேலைக்குஆங்கிலத்தில் வார்த்தைக் கிடைக்கவில்லை. சிறிதுநேரம் தயங்கி இருக்கிறாள். பிறகு துணிச்சலுடன், ‘my father is working in orakkadai’ என்று பதிலளித்திருக்கிறாள். இதைப் பகிர்ந்துக் கொண்ட திரு சகாயம், “தமிழ் பேசுகிறேன் என்றப் பெயரிலாங்கிலத்தை அதில் உட்புகுத்தி தமிழைக் கொலை செய்யும் மக்களுக்கு நடுவில், ஆங்கிலத்தில்உரக்கடைஎன்ற தமிழ் வார்த்தையைப் புகுத்தி ஆங்கிலத்தை கொலை செய்து விட்டாள் என் தமிழ்நாட்டுச் சிறுமி  தேவிக்கா. இதை நினைத்தாலே மிகப் பெருமையாக இருக்கிறது.” என்று தன் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தினார் திரு சகாயம்.

மனு கொடுத்தவரும் மதியழகனும்:

திங்கற் கிழமைகளில் மனு வாங்குவது வழக்கம். பத்து மணிக்குத் துவங்கி ஒரு மணிவரை போகும். சில நேரம் அது நான்கைத் தாண்டிவிடும். எப்போதும் பட்டினியாக இருக்கும் என் ஏழை மக்களுக்காக இரண்டுமணிநேரம் பட்டினியாக இருப்பது தவறில்லை.” என்ற திரு சகாயம், ஜூனியர் விகடனில் வெளிவந்த தன் அனுபவத்தை மீண்டும் பகிர்ந்துக் கொண்டார். நாற்பத்தைந்து வயதுமிக்க ஒருவர் கிழிந்த ஆடைகளுடன் இவரது அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் உள்ளேவரவில்லை. நேரம் முடிந்தவுடன் திரு சகாயம் வெளியே செல்லும்போது அந்த மனிதர் தான் மனுக் கொடுக்கவந்ததாகவும், உள்ளே வரத் தயங்கியதாகவும் கூறியிருக்கிறார். தான் சுதந்திரப் போராட்டத் தியாகி திரு வாவூ சிதம்பரனாரின் பெயரன் என்றும், தனக்கு உணவிற்கு ஏதாவது வழி செய்து தருமாறும் சகாயத்திடம் கேட்டிருக்கிறார். அதிர்ந்து போன சகாயம், உணவகத்தில் இடமும், வங்கியில் ஐம்பதாயிரம் பணமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்தச் சம்பவம் ஜூனியர் விகடனில் அச்சிட்டு வெளியிடப் பட்டிருக்கிறது. ”ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் பெயரனுக்கே இங்கு உணவிற்கு வழியில்லை என்றால் யாருக்காக வாங்கப் பட்ட சுதந்திரமிது அதை ஆடம்பரமாக அனுபவிப்பது யார்??” என்று கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது.
செய்தியைப் படித்துவிட்டு சிங்கப் பூரிலிருந்து ஒருவர் சகாயத்தை அழைத்து, தான் அந்த மனிதருக்கு ஒருலட்ச்சரூபாய் வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்தில் சகாயம் பணியிடமாற்றம் செய்யப் பட்டிருக்கிறார். இலட்ச்சரூபா என்பதால் சகாயம் அந்த மனிதரை தொழிலதிபர் என்றும், வேறு பெரிய துறையில் பணியாற்றுபவரென்றும் கற்பனைச் செய்திருக்கிறார். நமக்கும் அப்படித்தானே இருக்கும்? சகாயம் அவரை விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் பெயர் மதியழகன், ஓட்டுனராக இருக்கிறார் என்று. ”அந்த ஓட்டுனருக்கு இருக்கும் மனிதாபிமானம் எல்லோருக்கும் இருக்கவேண்டுமென்றார். எந்த மேடைக்குப் போனாலும், எல்லா இடத்திலும், மதியழகனைப் பற்றி பேசுவேன்.” என்றார்.

வருகின்ற தேர்தலை ஞாயமான முறையில் நடத்தப் பாடுபடுங்கள்.” என்ற தன் ஆசையைத் தெரிவித்தார் சகாயம்.

சிந்திப்போம்.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube