06 February 2016

சகாயம் வருகிறார்!

Posted by Vinoth Subramanian | Saturday, February 06, 2016 Categories: , , , ,


அப்படி ஒரு நாள் என் வாழ்வில் வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கடந்த வாரம் சனிக் கிழமை லிஓவின் வீட்டிற்குச் செல்வதாகத் திட்டம். அதிகாரப் பூர்வமான அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். வங்கியில் இருக்கும்போது அழைப்பு வந்தது

ஒருநாள் இரவு தங்கி விட்டுச் செல்லும்படிச் சொன்னார். அதனால் அதற்கேற்ப தயார் செய்து கொண்டு கடற்கரை ரயில் நிலையம் செல்லும் வண்டியைப் பிடித்துப் பயனித்துக் கொண்டிருந்தேன். லிஓவின் அலைப்பேசியில் பிரச்சினை இருந்தது. அதனால் சென்னைக்கு  வந்திருந்த வலன்இன் அலைப்பேசி எண்ணைக் கொடுத்திருந்தார். அழைத்தேன். அவனும் லிஓவிடம் அலைப்பேசியைக் கொடுத்துவிட்டான். அவர் இங்கு சகாயம் வருகிறார், உங்கள் வங்கியில் கடன் வாங்க வேண்டுமாம், என்றுப் பிதற்றிக் கொண்டிருந்தார். எனக்கொன்றும் புரியவில்லை. கடற்கரை மார்கமாக வந்து திருமயிலையில் இரங்கிக் கொல்வதாகச் சொன்னேன். சரியென்றுச் சொல்லித் துண்டித்துவிட்டார். ரயிலில் யாமினி ரோஷினி என்று இர்அண்டுச் சிறுமிகள். மேலேத் தொங்கிக் கொண்டிருந்தக் கைப்பிடியை எட்டி எட்டித் தொட்டுக்கொண்டிருந்தனர். தங்கை ரோஷினிக்கு உயரம் பத்தவில்லை. அக்கா யாமினி அவளைத் தூக்கிக் கொண்டாள். வண்டி நிற்கும்போதெல்லாம் விளையாட்டை ஆரம்பித்திருந்தார்கள். கிளம்பும்போதெல்லாம் அமைதியாய் சென்று அமர்ந்துவிட வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை. அப்படித்தான் செய்தார்கள். எப்போது ரயில் நிற்கும், எப்போது எட்டிக் கம்பியைத் தொடலாம் என்று ஆர்வமாக இருந்தார்கள். அங்கு அமர்ந்திருந்த முதியவர் அவர்களை உர்ச்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். ரயில், நிலையங்களில் நிற்கும்போதெல்லாம் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். அக்காவும் தங்கையும் மாறி மாறி மேல் கம்பியைத் தொட குதித்துக் கொண்டிருந்தார்கள். தொடும்போதெல்லாம் இன்னொருமுறைத் தொடவேண்டுமென்ற ஊக்கமும், தவறவிடும்போதெல்லாம் எப்படியாவதுத் தொட்டுவிடவேண்டுமென்ற உத்வேகமும் அவர்களிடத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது. கடற்கரை ரயில்நிலையம் அவர்களின் ஆனந்தத்திற்கும், முயற்சிக்கும், பெற்ற மற்றும் பெறாத வெற்றிகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தது. நானும் ரயில்நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். எப்போதும் ஆண் குறளில் அல்லது தானியங்கி அறிவிப்பில்தான் அறிவிப்புகள் வரும். அன்று வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒரு பெண் ரயில்களின் அட்டவனைகளை அறிவித்துக் கொண்டிருந்தார். வேலச் சேரி செல்லும் ரயில் என்னை வெகுநேரம் காக்கவைக்கவில்லை. வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டேன். லிஓவயும் திருமயிலை ரயில்நிலையத்திற்கு வ்அந்து என்னை அழைத்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டேன்.

திருமயிலை ரயில்நிலையமும் வந்தது. வாசலுக்கு அருகில் வந்து நிற்கும்போது ஒரு இள்அம்பெண் ஒரு ஆணிடம் உரையாடிக் கொண்டிருந்தார். எதைப் பற்றிய உரையாடல் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவள் பேசிய அந்த வார்த்தை மட்டும் செவியில் நன்றாக விழுந்தது.
ஷுருதியோட அப்பாவுக்கெல்லாம் மறு ஜென்மமே கெடையாது தெரியுமாஅவரெல்லாம் திரும்ப பொறக்கவே மாட்டாரு.” என்றாள். அதன் பிறகும் மறு ஜென்மம் பற்றிய பேச்சுதான். ஆனால் எனக்கு சரியாக எதுவும் கேட்கவில்லை.
எது? ஷுருதியோட அப்பாவுக்கு மறுஜென்மமே கெடையாதா? எதுக்கு அப்படி? அந்த மனிஷன் என்ன பன்னாரு?” என்று எனக்குள்ளேயேக் கேட்டுக் கொண்டேன். அவளிடமா கேட்க முடியும்? மிகவும் சிறமப் பட்டு சிறிப்பை அடக்கிக் கொண்டேண்.
ஷுருதியோட அப்பாக்கு மறுஜென்மம் இல்லனாலும் பரவாயில்ல. ஷுருதிக்கு இருக்கனும்.” என்று நினைத்துக் கொண்டே குச்சியை லேசாகப் பற்றிக்கொண்டு இரங்கினேன். எவனோ குச்சியை தட்டிவிட்டான். விழுந்து விட்டது. எப்படித் தேடுவது? ஷுருதியை அல்ல. குச்சியைத்தான். நல்லவேளை இறங்கியவுடனேயே காலில் பட்டது. குணிந்து எடுத்துக் கொண்டேன். தட்டிவிட்டவர் மன்னிப்புக் கேட்டார். பரவாயில்லை என்றுச் சொல்லி நடந்தேன். லிஓவிடமிருந்து சரியான நேரத்தில் அழைப்பு வந்தது. வந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் வந்து கொண்டிருந்தார். அவரென்னைக் கீழே வர முடியுமா எனக் கேட்டார். நான் மேலே வரச் சொன்னேன். இருதியில் இருவரும் கிளம்பி நடுவில் சந்திக்கலாம் என முடிவெடுத்தோம்.

யாரோ வருவது போல் தெரிந்தது.
படிக்கட்டு எங்க இருக்கு?” என்றேன். ஒரு பெண் நேராக செல்லுங்கள் என்றார். நடந்தேன். “ஐயோ அப்படிப் போகாதீங்க!” என்று அலரினாள். தண்டவாலத்தை நோக்கி நடந்திருக்கிறேன் என்றுப் புரிந்துக் கொண்டேன். வலப் புரம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். படிக்கட்டு வந்தப் பாடு இல்லை. அபையக் குரள் இட்டப் பெண் கொஞ்சம் உதவியும் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. இப்போதெல்லாம் அப்படித்தான் தோன்றுகிறது. எப்போது முழுப் பார்வையும் போனதோ அப்போதே வெட்கம், மானம், சூடு, சொரனை இதையெல்லாம் விசா எடுத்து வெளி நாட்டிற்கு அனுப்பிவிட்டாயிற்று. முன்பெல்லாம் யாரேனும் சம்மந்தப் பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்றுச் சொன்னாலும்நானே போயிடுவென்.” என்றுச் சொல்லி நடக்க ஆரம்பித்துவிடுவேன். இப்போதெல்லாம் யாராவது வந்து எங்கு போகனும் என்று கேட்டால் கூடகூட்டிட்டுப் போய் விட்டா நல்லா இருக்கும்…” என நினைக்கத் தோன்றுகிறது. கேவலமான வாழ்க்கைதான். என்ன செய்வது? பயனித்துதானெ ஆகவேண்டும்? அப்படியே நின்றுவிட்டால் நிற்கவேண்டியதுதான். குறைந்தபட்சம் தவறி விழுவதற்காவது நான்கடிகள் எடுத்துவைக்கவேண்டும். அப்போதுதான் யாரிடமிருந்தாவது உதவி கிடைக்கும். நான்கல்ல. அதற்கும் மேல் சில அடிகளை எடுத்துவைத்திருப்பேன். படிக்கட்டும் வரவில்லை; லிஓவும் வரவில்லை. பின்னால் ஒருவர் வந்தார். படிக்கட்டுவரை வந்து படியில் விட்டார்.
இதுக்கு மேல நான் பொயிக்குவென் சார்.” என்று சொன்னேன். சொன்னதுனால் வழி தெரியும் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இறங்கும்வரைப் பிரச்சினை இல்லை. பிறரின் காலடிச் சத்தத்தைக் கேட்டு இறங்கிவிடலாம்.  அதற்குப் பிறகுதான் தயங்கவேண்டும்.

இறங்கி முடிப்பதற்குள் லிஓ வந்துவிட்டார். குச்சியை வாங்கிக் கொண்டு “welcome to Chennai after a very long time.” என்றார். நான் இதற்கு முன்பு சென்னைச் சென்றதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. சொல்லிக் கொண்டே பைக்கில் ஏறினேன்.
சகாயம் வராருனு இங்க ஃபுல்லா டிராஃபிக்.” என்றார். எதற்கு வருகிறார் என்று கேட்பதற்குள் பேச்சு வேறு திசைக்குச் சென்றது. எனக்கும் அவருக்கும் பேசுவதற்கு நிரைய இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிதான் பேசுவோம். ஆனால் அதைப் பற்றியே நிறையப் பேசிவிடுவோம். இருப்பிடத்தை அடைந்திருந்தோம். வலன், எபின், ஷேரன் எல்லாம் வீதியில்நின்று கொண்டிருந்தார்கள். கேட்டால் சகாயம் வருகிறார். மாலை ஐந்து மணிக்கு வரவேண்டுமாம்; ஆனால் இன்னும் வரவில்லை. எங்கு என்று கேட்பதற்குள் மீண்டும் பேச்சு வேறு பக்கம் திரும்பியது. கமலும் வந்து இனைந்துக் கொண்டார். ஷேரன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அருட் தந்தை ரொசாரிஓ என்னை வரவேற்றது கொஞ்சம் குழப்பியது.
மேலெ குறிப்பிட்டவர்களெல்லாம் YCS-YSM இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அதன் தமிழாக்கம் சரியாக நினைவில் இல்லை. அதனால் ஆங்கிலத்திலேயே YCS-YSM என்று சொல்லிவிடுகிறேன். ரேச்சல் அந்த இயக்கத்தின் ஒரு பிரதிநிதி. ஏற்கனவெ என்னூரில் சந்தித்திருக்கிறோம். நினைவு படுத்தினார்.
என்னநடக்குது இங்க? ஏதாச்சும் நிகழ்ச்சியா?”
ஆமாம் அன்னா. ஜெனரல் பாடி மீட்டிங் (general body meeting) சிறப்பு விருந்தினரா சகாயம் வராரு.”
என்ன? இங்கயா! வந்து?”
வந்து கொஞ்ச நேரம் பேசுவாரு.”
அப்போ அதுக்குதான் எல்லாரும் காத்துக்கிட்டு இருக்கீங்கலா?” என்று வியப்புடன் கேட்டதும் லிஓவும் ஷேரனும் உள்ளே வந்தார்கள்.
வந்துட்டாரு.” என்று ஷேரன் சொல்ல லிஓ அவருடனே என்னை அனுப்பிவைத்தார். நான் சென்ற இடத்திற்குதான் ர் வரப் போகிறார் என்றெல்லாம் தெரியாது. வியப்பாக இருந்தது. ஒருவேளை ஐந்து மணிக்கு வந்திருந்தால் கூட அவர் உரையை கேட்க முடியாமற் போயிருந்திருக்கும். ஏதோ எனக்காகவே நடப்பதுபோல் இருந்தது.
அரங்கிற்குள் நுழைந்ததும் தமிழ் தாய் வாழ்த்துப் பாடி திரு சகாயத்தை அறிமுகப் படுத்தினர். அவரைப் பற்றி ஏற்கனவே அதிகம் கேல்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் சந்திப்பேன் என்றெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. மறு ஜென்மம் தேவைப் படுவது ஷுருதிக்கோ இல்லை அவரது தந்தைக்கோ அல்ல. இந்த மாமனிதருக்குதான். அவர் பேச்சைத் தொடங்கினார்.

தொடரும்

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube