சில நாட்களுக்கு
முன்பு நண்பர் திரு மோஹன்ராஜ் அழைத்திருந்தார். ஒரு புதிதான அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு
வந்திருப்பதாக தெரிவித்தார். என்ன என்று கேட்டதற்கு நம்மை வைத்து
ஒரு விழிப்புணர்வு செய்ய திட்டமிட பட்டிருப்பதாக சொன்னார்.
22 December 2018
ஒரு நிமிடம்.
Posted by Vinoth Subramanian | Saturday, December 22, 2018 Categories: Article, Own Experience, Tamil, Visually challenged04 November 2018
தவறுதான்.
Posted by Vinoth Subramanian | Sunday, November 04, 2018 Categories: Article, Indian overseas bank, Job, Own Experience, Tamilநாம் செய்யும் மிகச்சிறிய தவறுகள்தான் யாரோ ஒருவரை பெரிய அளவில் பாதிக்கிறது. அப்படி ஒரு தவறைத்தான் நேற்று வங்கியில் கவணக்குறைவால் செய்துவிட்டேன். ஆனால் அதை சரி செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை.
30 October 2018
ஏர்டெல் சூப்பர் சிங்கர் வழங்கும் நீயா நானா!
Posted by Vinoth Subramanian | Tuesday, October 30, 2018 Categories: Article, Neeya Naana, Tamil, Visually challenged
பதிவின்
தலைப்பிற்காகவும், இந்த பதிவை எழுதியதற்காகவும் நான் வசைப்பாட படலாம் என்று தெரிந்தும்,
ஒரு பார்வையற்றவன் என்ற முறையில் எனக்கும் சமூக பொருப்பு இருப்பதாக நானே
நினைத்துக்கொண்டதால் இக்கட்டுரையை எழுதுகிறேன். நீயானானா.
13 September 2018
எவன் பாத்த வேல டா இது?
Posted by Vinoth Subramanian | Thursday, September 13, 2018 Categories: Article, Own Experience, Situation, Tamil, Visually challenged
கடந்த
ஆகஸ்டு பதிநேழாம்தேதி முன்னால் பிரதமர் திரு வாஜ்பாயின் மறைவை ஒட்டி விடுமுறை விடலாமா
வேண்டாமா என்று வங்கிகள் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் நான் ஃப்லிப்கார்டில் ஆர்டர்
செய்த ஒரு விவகாரமான பொருள் எனது கைக்கு வந்து சேர்ந்தது.
27 August 2018
POEM: THE LETTER, TO MY ANGEL.
Posted by Vinoth Subramanian | Monday, August 27, 2018 Categories: Angel, Letters, Own Experience, Poems
Holding my sinful tears
Beneath my eyelids
Scolding myself again and again
While scribbling this letter to you.
09 August 2018
இதுதான் காரனம்.
Posted by Vinoth Subramanian | Thursday, August 09, 2018 Categories: Article, Opinions, Self, Tamil
கிட்டத்தட்ட
ஆறு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.
நான் சந்தித்த பெரும்பாலானோர் கேட்ட ஒரே கேள்வி ‘ஏன்’ என்பதுதான். அடுத்த கேள்வி
’எப்படி’ என்பதாகத்தான் இருந்தது. என்னை எழுதவைத்ததும் இந்த தொடர் கேள்விதான்.
27 July 2018
DO NOT COME TO A CONCLUSION.
Posted by Vinoth Subramanian | Friday, July 27, 2018 Categories: Article, Memories, Opinions, Own Experience, Visually challenged
Each and everyone would be having opinion about visually
challenged people. We welcome it. But, how far they are true is the question. I
observe different people have opinions on us and felt like sharing a few here.
13 June 2018
ஒரு பயனம் -9.
Posted by Vinoth Subramanian | Wednesday, June 13, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Rudhra Moorthy, Suganya, Tamil
எந்த ஒரு
பார்வைத் திறன் குறையுடையவருக்கும் ஓடுவதில் ஒரு பிரச்சினையும் இருக்காது. அவர்களது ஒரே பிரச்சினை
விழுந்துவிடுவோமோ என்ற பயம்தான். எனக்கும் அந்த பயம் இருந்தது
அன்று.
06 June 2018
ஒரு பயணம் -8.
Posted by Vinoth Subramanian | Wednesday, June 06, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Tamil, Volunteers
”நாங்களேதான்.” என்றார் தர்மராஜ்.
”ஜி, நாம ட்ராவல் பண்ண அந்த ரூட் மேப்ப குடுக்குரீங்களா?
எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என்று நான் கேட்டதும்
கொடுத்தார். இந்த பதிவை எழுதுவதற்காக நான் அதை எடுத்தபோதுதான்
தெரிந்தது.
31 May 2018
ஒரு பயணம் -7.
Posted by Vinoth Subramanian | Thursday, May 31, 2018 Categories: Car rally, Friendship, Journey, Own Experience, Swetha, Tamil26 May 2018
ஒரு பயணம் -6.
Posted by Vinoth Subramanian | Saturday, May 26, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Tamil15 May 2018
ஒரு பயணம் -5.
Posted by Vinoth Subramanian | Tuesday, May 15, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Tamil
”குட் மார்னிங் எவெரி படி!!! (Good morning everybody)“ திரு அரோராவின் குரல்தான் அது. முழுப்பெயரை மரந்துவிட்டேன்.
கார் திரளணியின் விதிமுறைகளையும் வழிமுறைகளையும் விளக்க மேடையில் வந்து
நின்றார்.
08 May 2018
ஒரு பயணம் -4.
Posted by Vinoth Subramanian | Tuesday, May 08, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Tamil01 May 2018
ஒரு பயணம் -3.
Posted by Vinoth Subramanian | Tuesday, May 01, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Tamil
”அன்னா
இங்கதான் வேல செய்யுராரு. அதுதாண் அவர பாக்கவந்தேன்.” என்று சொல்லி நடந்தார்.
பிறரை பிந்தொடர்ந்து கொண்டே வெளியே நடந்தோம். வெளியில்
வந்ததும் ஆட்டோக்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.
27 April 2018
ஒரு பயணம் -2.
Posted by Vinoth Subramanian | Friday, April 27, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Tamil
ஒரு ஐந்து
நிமிடம் கழிந்திருக்கும். பாட்டியிடமிருந்து பதில் வந்தது. அந்த முதியவரும் சகஜமாக
பேச ஆரம்பித்தார். ஒன்று அந்த பாட்டி பாக்கை அவசர அவசரமாக விழுங்கி
இருக்க வேண்டும். இல்லையேல் தற்செயலாக சென்று தொண்டையிலும் மார்பிலும்
சிக்கியிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
25 April 2018
ஒரு பயணம்.-1.
Posted by Vinoth Subramanian | Wednesday, April 25, 2018 Categories: Car rally, Journey, Own Experience, Tamil
ஒரு பயணம் பாதையை
மட்டுமல்ல, சில நேரங்களில் வாழ்க்கையையும் நமக்கு காட்டுகிறது.
அதில் இருக்கும் சின்னச் சின்னத் திருப்பங்களும் ஸ்வாரசியமாக அமையும்போது பிறரிடத்தில் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றுகிறது. இந்தப் பதிவும் அப்படிப்பட்டதுதான்.
அதில் இருக்கும் சின்னச் சின்னத் திருப்பங்களும் ஸ்வாரசியமாக அமையும்போது பிறரிடத்தில் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றுகிறது. இந்தப் பதிவும் அப்படிப்பட்டதுதான்.
கடந்த ஏப்ரல் எட்டாம்
தேதி கார் திரளணியில் கலந்துக்கொள்ள ஒரு பார்வையற்றோர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
ஆங்கிலத்தில் car rally என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடக்கும்
ஒரு பந்தையம்தான் இந்த கார் திரளணி/பேரணி. இதைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதி இருந்தாலும்
தமிழில் எழுத ஏற்பட்ட ஒரு சிரு ஆசையின் காரனமாக எழுதுகிறேன். பங்குபெரும் ஒவ்வொரு பார்வைத்திறன்
குறையுடையவரும் அகமகிழ்ந்து அனுபவிக்கும் ஒரு திருவிழாதான் இது. அதில் நானும் ஒருவன்.
பரிசுகள் கிடைக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு அனுபவத்தை வீட்டிற்கு கொண்டுவர
முடியும். அதற்காகவே இந்த கார் ராலியை எந்தக்காரனத்திற்காகவும் தவறவிடுவதில்லை.
கடந்த எட்டாம்
தேதி நான் தனியாகத்தான் சென்றேன். பொதுவாக நண்பர்களுடன் செல்வேன். இதற்கு முன்பு ஒருமுறைமட்டும்
தனியாக சென்ற அனுபவம். அப்போதுகூட தெரிந்த சிலரை பார்க்க முடிந்தது. ஆனால் இது முற்றிலும்
வேறு மாதிரியான அனுபவம். சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க் என்னும் இடத்தில்தான்
கார் ராலி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. காலை எட்டு மணியிலிருந்து எட்டறை மணிக்குள் அங்கிருக்கவேண்டும்
என்று சொன்னார்கள். தாமதமானால் கார் கிடைக்காது. அதனாலேயே காலை நான்கு மணிக்கு எழுந்து
ஐந்தறை மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினேன். எங்கள் ஊரிலிருந்து சென்னை கடற்கரைக்கு
அந்த நேரத்திற்கு ரயில் கிடையாது என்பதால் ஆவடிவரை அப்பா வந்து வண்டி ஏற்றினார். எங்கள்
ஊரிலிருந்து ரயிலில் கிண்டி செல்ல இரண்டு மார்கம் உண்டு. ஒன்று சென்னை சென்ரலில் இறங்கி
அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும்.
இன்னொன்று சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்று அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து
செல்ல வேண்டும். எனக்கு எப்போதுமே இரண்டாம் மார்கம்தான். சென்னை செண்ட்ரலில் இருந்து
சாலையை கடந்து செல்லவெல்லாம் எனக்கு இன்னொருவர் தேவை. அதனால் தனியாக செல்வதென்றால்
கடற்கரை ரயில் நிலையம்தான்.
அப்பா ஆவடியில்
என்னை சென்னை கடற்கரை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு கிளம்பினார். காலை ஆறு பத்து மணிக்கு
ரயில் புரப்பட்டது. எப்படியும் எட்டு மணிக்கு சென்றுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயிலில் சொல்லிக்கொள்ளும்படி கூட்டமில்லை. திடீரென்று
ஒரு தாத்தாவும் பாட்டியும் ஏறினார்கள். வேறேதோ பாஷையில் பேசிக்கொண்டார்கள். நான் அமைதியாக
அமர்ந்துகொண்டு எதையோ யோசித்துக்கொண்டே வந்தேன். வண்ணாரைப்பேட்டை அருகே வண்டியை நிருத்தினார்கள்.
அவ்வளவுதான் பதினைந்து நிமிடங்களுக்கு வண்டி நகரவில்லை. பிறகு எடுத்தான். எதிரிலிருந்த
அந்த பாட்டி இரும ஆரம்பித்தார். வழக்கமான இருமல்தான் என நினைத்துக்கொண்டு அமைதியாக
வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். இருமல் கடுமையானது. கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
இன்னும் மோசமானது. பாட்டியால் பேச இயலவில்லை. எதுவோ தொண்டைக்குள் சிக்கியதுபோல் இருமினார்.
கிட்டத்தட்ட இரண்டு நிமிடம். ஆனாலும் நிற்கவில்லை. இப்போது மூச்சும் விடமுடியாததுபோல
சிரம பட்டார். தாத்தா மட்டும் ஏதோ அந்த பாஷையில் கத்திக்கொண்டிருந்தார். பாட்டியிடமிருந்து
எந்த பதிலும் இல்லை. சொல்லப்போனால் இழுத்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குமேல்
இருமவும் முடியவில்லை.
”தண்ணி குடிங்க!
தண்ணி குடுங்க!” என்று ஒரு குரல் எனக்கு பின்னால் இருந்து கேட்டது. அது ஒரு பென்ணின்
குரல். அதுவரை இருந்த நிசப்தம் ஓடும் ரயிலில் இருந்து இரங்கியது போலிருந்தது.
நான் எனது பையைத்திரந்து
தண்ணீரை எடுத்தேன்.
”இந்தாங்க.” என்று
நீட்டினேன்.
வாங்கவில்லை. ஒருவேளை
அவர்களிடமே இருக்கிறதோ என்னமோ என்று நினைத்துக்கொண்டு தண்ணீர் பாட்டிலை மடிமீது வைத்துக்கொண்டேன்.
ஒரு சில நொடிகள் மட்டும் அமைதியாக இருந்த அந்த பாட்டி மீண்டும் இடைவிடாது இருமி பின்பு
ஏதோ வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தி பயத்தை ஏற்படுத்தினார். இந்தமுறை தாத்தாவிற்கும்
என்ன செய்வது என்று புரியவில்லையா? அல்லது ஏதாவது செய்துகொண்டிருந்தாரா என்று தெரியவில்லை.
ஆனால் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்பதை மட்டும் பாட்டியின் நிலை தெரிவித்தது.
”மார பிடிச்சு
உருவுங்க! சீக்கிரமா!” என்று அதே பெண்ணின் குரல் எனக்கு பின்னால் இருந்து வர. கம்பாட்மெண்ட்
கொஞ்சம் கலங்கித்தான் போனது.
சில நொடிகள்தான்
தாமதம். அந்த பெண்ணே விரைந்து வந்து பாட்டியின் மார்பையும் முதுகையும் நீவிக்கொண்டிருந்தார்.
இப்போது பாட்டியால் மூச்சுவிட முடிந்தது. ஆனால் இருமல் மட்டும் நிற்கவில்லை.
வண்டி ராயபுரத்தை
தாண்டியது. நன்றாக பேசிக்கொண்டு வந்த பாட்டிக்கு என்ன ஆனது என்று என்னைப்போல் எல்லோருக்கும்
குழப்பம்தான். ஒருவழியாக விஷையத்தைக் கண்டு பிடித்த அந்த முதலுதவி செய்த பெண்,
”பாக்கு சாப்டாங்களா?
அதுதான் சிக்கிடுச்சா?” என்று கத்தினார்.
”எதுக்குதான் இதெல்லாம்
பண்ணுராங்களோ? தேவையா? இல்ல தேவையானு கேக்குரேன். பாக்கு போடுரது, தண்ணி அடிக்குரது,
சிகுரட் பிடிக்குரது அப்புரம் இப்பிடி கஷ்ட படுரது. இதெல்லாம் தேவையா?” என்று பின்னால்
இருந்து கத்திக்கொண்டிருந்தார்.
இந்த முறை பாட்டி
ஒரு பத்து வினாடிகள் இருமிவிட்டு பிறகு ”உ” என்று இழுக்க, தாத்தாவின் எந்த கேள்விக்கும்
பதில் வரவில்லை.
மீண்டும் ஒரு இனம்
புரியாத நிசப்தம் வண்டிக்குள் ஊடுருவியதை உணர முடிந்தது.
தொடரும்.
30 March 2018
எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேனே!!!
Posted by Vinoth Subramanian | Friday, March 30, 2018 Categories: Article, Betrayal, Own Experience, Tamil
நேற்று
முந்தினம் மத்தியம் வங்கிக்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். நான் சாப்பிட்டு முடித்துவிட்டு
வெளியேவந்தேன். கேஷியரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கையில் அமர்ந்தேன்.
10 March 2018
THE LETTER, TO MY BETRAYER.
Posted by Vinoth Subramanian | Saturday, March 10, 2018 Categories: Betrayal, Letters, Love, Own Experience, Poems
I predicted a treachery from you
Still I trusted
Cause I trusted my trust
Thank you very much for terminating it
19 February 2018
கடல் தாண்டும் பறவைக்கு.
Posted by Vinoth Subramanian | Monday, February 19, 2018 Categories: Letters, Own Experience, Poems, Tamil
பாஷை எதுவெனப்
புரியவில்லை
ஓசை மட்டும்
கேட்கிறது
ஆசையின்
ஓசையென அதை அறிந்ததும்,
அன்னார்ந்து
பார்த்தால் நீ,.
செல்லும்
இடமெது சொல்லாயோ?
என் பேச்சுக்கு
செவி மடுத்து நில்லாயோ?
உனக்கென
ஒருவன் கத்துவதை
கடைசிவரை
நீ அறியாயோ?
எனைக்
கடந்துப் போவது உன் உரிமை
என்றாலும்
எழுதுவது என் கடமை
ஈரம் இருப்பினும்
இக்கடல் மணலில்
நான் இருக்கும்வரை
இருக்கும் என் கவிதை
நீ கடலை
கடக்க கிளம்பிவிட்டாய்
காத தூரம்
போகின்றாய்
சமுத்திரம்
பெரிது பறவையே
உன் சாவிற்கும்
சாதனைக்கும் சாட்சி இல்லை
என்னிடம்
மட்டும் சொல்லிவிட்டு போ
எழுதிவைக்கிறேன்
உரைத்துவிட்டு போ
இந்த கடற்கரை
மணலைத் தவிற
வேறுகதியற்ற
என்னிடம் கத்திவிட்டு போ.
கூச்சல்
மட்டும்தான் உன்னுடையது
குழப்பங்கள்
எல்லாம் என்னுடையது
உனைப்
பார்த்ததும் பற்பல கேள்விகளென்னில்
பதித்துவைக்கிறேன்
இக்கடல் மண்ணில்
கூட்டத்திலிருந்து
செல்கின்றாயா?
இல்லைக்
கூட்டம் தேடிச் செல்கின்றாயா?
துணையைத்
தேடிச் செல்கின்றாயா?
இல்லைத்
துணையைத் தொலைத்து செல்கின்றாயா?
வாழ்வைத்
தேடி செல்கின்றாயா?
இல்லை
வாழ்க்கையை இழந்து செல்கின்றாயா?
இலக்கை
நோக்கிச் செல்கின்றாயா?
இல்லை
இலக்கே இன்றிச் செல்கின்றாயா?
எதையும்
எளிதில் அறியேன் நான்
ஏதாவது
சொல்லிவிட்டு போ.
எதுவும்
சொல்ல விரும்பாவிடினும்
நான் சொல்வதையாவதுக்
கேட்டுவிட்டு போ.
உன் கலைப்புக்கு
கிளைகள் இருக்காது
பசிக்கு
பழங்கள் கிடைக்காது
தீவுகள்
தெரிந்தால் நின்றுவிடு
தீவனம்
கிடைத்தால் தின்றுவிடு
நீளக்கடலைக்
கடக்கும் உனக்கு
நீரும்
கிடைக்காது குடிப்பதற்கு
கடக்கையில்
கலைப்பில் கண்ணீர் வரும்
அது கடலில்விழுமுன்
குடித்துவிடு, காலம்வரும்.
குளிர்தான்
போர்வை போர்த்திக்கொள்
மழைதான்
குடை அதை ஏற்றுக்கொள்
உடல் உலராது
கதிரவன் வரும்வரை
காற்றுதான்
உனக்கு கடைசிவரை.
இலக்கை
அடைந்து வந்தாலும் சரி
எதுவும்
இன்றி வந்தாலும் சரி
எழுகடல்
சுற்றிவந்தாலும் சரி
இல்லைஎல்லாம்
துலைத்து திரும்பிவந்தாலும் சரி
உனைப்பற்றிக்
கிருக்க இக்கிருக்கன் இருப்பான்
என எண்ணி
என்றாவது என்னிடம் வந்து சேர்.
எங்கோ
எனைவிட்டுப் போகும் பறவை நீ.
எப்பெயருனக்கிட்டு
வளர்ப்பேனிவ்வுரவைஇனி?
உருவமில்லாப்
பறவையே உனக்கு
என் உள்ளம்
என்றுப் பெயரிடவா?
சிறகே
இல்லாச் சிறுபறவையே உனக்கு
என் சிந்தனை
என்றுப் பெயரிடவா!
10 January 2018
நீங்க ஷட்டப் பண்ணுங்க!
Posted by Vinoth Subramanian | Wednesday, January 10, 2018 Categories: Article, Freedom, Love, Own Experience, Short Story, Tamil
அண்ணனுக்கு
வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி திருமனம்.
அதனால் பத்திரிக்கை வைப்பதற்காக கடந்த ஞாயிறன்று எனது நண்பர்களின் வீட்டிற்கு
சென்றிருந்தோம். சில உரவினர்களுக்கும் வைக்கவேண்டியிருந்ததால்
அண்ணனும் உடன் வந்திருந்தான்.
04 January 2018
ஹெலோ இந்தியன் பேன்க்?
Posted by Vinoth Subramanian | Thursday, January 04, 2018 Categories: Friendship, Own Experience, Tamil
இந்தியன்
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நண்பன் தமீம் கடந்த வியாழனன்று அழைத்திருந்தான். தனது பழைய அலைப்பேசி எண்ணை
கணக்கில் இருந்து நீக்கி புதிதாக வேறொரு எண்ணை சேற்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
நானும் கடிதம் எழுதி கொடுத்தால் மாற்றிவிடுவார்கள் என்று சொன்னேன்.
Subscribe to:
Posts (Atom)