”இருக்கு. இருக்கு இருக்கு.” என்றார்
அந்த பெண்மணி.
”அது, நான் கீழயே பாத்துட்டேன். மேலயே இருக்கு வினோத்.” என்று சொல்லி குரித்து கொண்டு
சென்றார். அவர் குரலை ஏற்கனவே எங்கேயோ கேட்டேன் என்று முந்தைய பதிவில் சொன்னேன்.
அது வேறு
எங்குமில்லை. இரண்டாம் முறை அலைபேசியில் அழைத்து எனது வருகையை உறுதி செய்தார்கள் என்று சொன்னேன்
அல்லவா? அதில் பேசியவர் இவர்தான்.
அனைவரிடமும்
வருகைப்பதிவு எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதே சமையம் பார்வை திறன்
குறையுடைய போட்டியாலர்களும் அவர்களின் நட்பு மற்றும் உரவினர் வட்டாரங்களுக்குள் இனைந்துகொண்டிருந்தனர்.
சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் தனது நண்பர்களை
தேடிக்கொண்டிருந்தனர். சிலர் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்களை பிறருக்கு
கற்பித்துக்கொண்டிருந்தனர். நான் மட்டும் யாரிடமும் சேராமல் தனியாக
அமர்ந்து கொண்டிருந்தேன். ஏனென்றால் எனக்கு தெரிந்த யாரையும்
அங்கு நான் கண்டறியவில்லை.
உதவியாலர்கள்
மட்டும் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர். தண்ணீர் மட்டும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
சில நிமிடங்களுக்குள் காலை உணவிற்கு எங்களை அழைத்து சென்றார்கள்.
எனக்கு பின்னால் ஒரு பார்வையற்றவர் வந்துகொண்டிருந்தார். அவர்தான் பக்கத்திலும் அமர்ந்தார். பேச்சு கொடுத்ததில்
அவர் பெயர் அழகிரி என்றும் 1991லிருந்து கனரா வங்கியில் பணி புரிகிறார்
என்பதும் தெரிந்தது.
எதிரில்
ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் இந்தியன் வங்கி. பேச்சு கொடுத்ததில் அவர் பெயர்
ஸ்ரீதர் என்று சொன்னார். விசாரித்து பார்த்தால் நான் பள்ளி படிக்கும்போது
ஒரு வகுப்பு சீனியர் என்று கண்டுகொண்டேன். நீண்டநாள் கழித்து
அவரிடம் பேச மகிழ்ச்சியாக இருந்தது. காலை சிற்றுண்டிகளை ட்ரேக்களில்
கொண்டு வந்து வைத்தார்கள். நான் சாப்பிட்டு முடித்துவிட்டு யாரேனும்
கை கழுவ அழைத்து செல்வார்களா என காத்துக்கொண்டிருந்தேன். மேசைகள்
மிக நெருக்கமாக இருந்தன.
”ஹேண்ட் வாஷ் பண்ணனுமா” என்று ஒரு குரல் என் இடப்பக்கத்திலிருந்து
வந்தது. எனது இடது பக்கத்தில்தான் அந்த கனரா வங்கிக்காரரும் அமர்ந்து
கொண்டிருந்தார். ஆனால் சாப்பிட்டு முடிக்கவில்லை. நான் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.
”ஒரு நிமிஷம் இருங்க” என்ற அந்த பெண் என் அருகில் வர தயாராக,
”நான் வேணும்னா எழுந்துக்கட்டுமா?” என்ற அந்த கனரா வங்கி
காரரிடம் வேண்டாம் என்று சொல்லி அந்த பெண் உதவியாலருக்காக காத்திருந்தேன். என் வலப்புரத்தில் வந்த அந்த இளம்பெண்,
”போலாமா?” என்று கேட்க, நானும் மெதுவாய்
எழுந்தேன்.
”பேக் (bag) இங்கேயே இருக்கட்டுமே.” என்றார் அந்த இளம்பெண்.
“இல்ல ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு அப்பிடியே போயிடலாம்.” என்று
சொல்லி எனது பையை எடுத்து இடப்பக்க தோளில் மட்டும் மாட்டிக்கொண்டேன்.
அந்த பெண்
என் இடது கையை பிடித்துக்கொண்டு நடந்தார்.
”உங்க பேரென்ன?”
”வினோத்.”
”ஓக்கே.”
”என்ன?”
”ஓக்கே நு சொன்னேன்.”
”ஓக்கே.” என்று நான் சொல்ல அவரும்,
”என் பேரு பூர்னி.” என்றார்.
”ஓக்கே மெடம்.” என்றேன் நான்.
”மேடம் எல்லா வேனாம்? பூர்னினே கூப்புடுங்க.”
”சரி பூர்னி… பூர்னி…” என்றூ இருமுறை
அவருக்கு கேட்டது மாதிரியும் கேட்காதது மாதிரியும் அவரின் பெயரினை உச்சரித்தேன்.
எனக்கே நகைச்சுவையாக இருந்தது. என்னைவிட நிச்சையமாக
சின்னப்பெண்ணாகத்தான் இருப்பார். இருந்தாலும் மரியாதை கொடுத்து
பழகிவிட்டது. எல்லா இடங்களிலும் அப்படித்தான். வங்கியில்கூட மேளாலரை மேடம் என்று அழைப்பது போலதான்
பராமரிப்பாலரையும் அழைப்பேன். ’நீ என்ன அக்கானே கூப்பிடலாமே பா.’
என்பார் பராமரிப்பாலர். ஆனாலும் மேடம்தான்.
மாற்றிக்கொள்ள இயலவில்லை. அதற்கு காரனங்களும் இருக்கிறது,
அதை பிறகு சொல்கிறேன். இப்போது பூர்னியுடன் தொடருவோம்.
”நீங்க என்ன பண்ணுரீங்க?”
”வர்க் பண்ணுரேன். பேன்க்குல. ஐ.ஓ.பி.”
”நீங்க?”
”இங்கதான். டெக் பார்க் ல.”
”ஓக்கே.”
”ஸ்டெப் வினோத்.” என்றார் ஒரு சிரு படிக்கட்டு வந்தவுடன்.
”ஓக்கே.”
கை அலம்பும்
இடத்தை சென்றடைந்தோம். என் கையை குழாயின் மீது வைத்தார். இடது தோளில் தொங்கிக்கொண்டிருந்த
எனது பை முன் பக்கமாக வந்து கழுவுதொட்டியை (wash
basin) இடிக்க அதை நான் கை அளம்பி முடிக்கும்வரை அவர் பிடித்து கொண்டிருந்தார்.
சங்கடமாக இருந்தது. பிறகு அங்கிருந்து கிளம்பினோம்.
”உங்கள நீங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்த எடத்துலேயே விட்டுரவா? உங்க ஃப்ரென்ட்ஸோட?” என்று கேட்டார்.
பூர்னி
மட்டுமல்ல, பெரும்பாலோர்
ஒரு பார்வையற்றவரை இன்னொரு பார்வையற்றவர்இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று சேற்கவேண்டுமென்றால்
அவர்களிருவரும் தோழர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். சில நேரங்களில் அவர் யாரென்றே தெரியாது. அந்த இந்தியன் வங்கிக்காரர் நன்கு தெரிந்தவர் என்றாலும் அவ்வளவு நெருக்கமெல்லாம்
இல்லை.
”இல்ல பரவாயில்ல. அந்த ஹால்லையே விட்டுடுங்க.”
என்றேன் நான்.
”சரி.” என்று அழைத்து சென்றார்.
என் தோள்களை
பிடித்து அமர வைத்துவிட்டு,
”ஓக்கேவா வினோத்?” என்றார்.
”ரொம்ப தேன்க்ஸ்.”
”ஓ க்கே. ஏதாச்சும் வேணும்னா கேளுங்க.” என்று சொல்லி கடந்தார்.
நான் அங்கேயே
அமர்ந்து கொண்டு யோசித்து கொண்டிருந்தேன்.
அதுவும் என்னை அமர வைக்க அவர் சிறம பட்டதை எண்ணியபோது ஏதோ போல் இருந்தது.
சரியாக நான் அந்த நாற்காளி முன்புதான் நிற்கிறேனா என்பதை உறுதி செய்துகொண்டு
நான் அமரும்வரை.. சொல்ல போனால் அமர்ந்த பின்பும் அவரின் கைகள்
என் முழங்கையின் மேல் பகுதியின்மீதே இருந்தது. இந்த பதிவை படிக்கும்
ஒவ்வொரு பார்வையற்றோர் அல்லாதோருக்கும் ஒன்று சொல்ல விழைகிறேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் பார்வையற்றவரை கையாளுவது அவ்வளவு கடினமானதல்ல
(ஒரு சில இடங்களை/மனிதர்களை தவிற.)
உதாரனத்திற்கு
ஒருவர் ஒரு பார்வையற்றவரை அழைத்து செல்லவேண்டுமென்றால் முதலில் அந்த பார்வையற்றவரின்
கையை அழைத்து செல்பவர் பிடிக்கக் கூடாது.
மாராக அழைத்து செல்பவரின் கையைத்தான் பார்வையற்றவர் பிடிக்கவேண்டும்.
இயங்கு திறன் (mobility) வகுப்பில் பொதுவாக பரிந்துறைக்கப்
படுவது முழங்கைக்கு மேலுள்ள பகுதியை அழைத்து செல்லப்படும் நபர் பிடித்துக் கொள்ளவேண்டும்என்பதுதான்.
ஆனால் என்னை கேட்டால் உள்ளங்கைதான் எப்போதும் சரியான பகுதியாக இருக்கும்
என்பேன். அவ்வாறு அழைத்து செல்பவர் ஓரடி அல்லது அறையடி பார்வையற்றவருக்கு
முன்னே நடக்கவேண்டும். அப்போது கையை பிடித்துக்கொண்டுவரும் பார்வையற்றவர்
தன்னை அழைத்து செல்பவரின் அசைவுகளை உள்வாங்கி நடக்க இயலும். உண்மையை
சொல்லவேண்டுமென்றால் உள்ளங்கையை பிடித்து செல்லும்போது வார்த்தைகள் அதிகம் பயன்படாது.
கொஞ்சம் துணிச்சல் மிக்கவர்களாக இருப்பின் உள்ளங்கையை பிடிக்கும் பட்சத்தில்
ஒன்றாக கூட நடக்கலாம். அதேபோல் ஒரு பார்வையற்றவரை அமரவைக்கவேண்டுமென்றால்
அவர்களின் கையை பிடித்து இருக்கையை தொட்டுக் காட்டலாம். சாய்வு
நாற்காலியாக இருந்தால் சாயும் பகுதியை தொட்டுக் காட்டினால் போதுமானது. நிறைய மெனக்கெட வேண்டியதில்லை. ஒருவேளை அழைத்து செல்லும்
நபரும் பார்வையற்றவரோடு அமரவேண்டுமென்றால் முதலில் அழைத்து செல்பவர்தான் அமரவேண்டும்.
பார்வையற்றவரின் கையை பிடித்து கொண்டே அமர வேண்டும். பிறகே அந்த பார்வையற்றவரை கையை விடாமல் அமரும்படி பணிக்கலாம். அப்படி செய்யும்போது கையை பிடித்து கொண்டிருக்கும் பார்வையற்றவருக்கு தான்
அமரவிருக்கும் இருக்கையின் உயரம் புரிந்துவிடும். உதாரனத்திற்கு
ரயில்நிலையங்களிலும் பேருந்துநிலையங்களிலும் இருக்கும் இருக்கைகள் ஒரே மாதிரி உயரத்தில்
இருப்பதில்லை. இதைக்காட்டிலும் முக்கியமான விஷையம் ஒன்றிருக்கிறது.
அது உதவி கேட்கும் பார்வையற்றவரின் குச்சியை பிடித்துக்கொண்டு அழைத்து
செல்வது. முடிந்தளவு தவிற்கவும். இதில்
இன்னொரு வகையறாக்கள் இருக்கின்றன. சமமாக நடத்துகிறேன் என்ற பெயரில்
பார்வையற்றவரின் தோளில் கையை போட்டுக்கொண்டு அவரை முன்னே நடக்கவிடுவது. ஆனால் அது கொஞ்சம் ஆபத்துதான். பழகியவர்களாக இருந்தால்
பார்வையற்றவர் தன்னை அழைத்து செல்பவரின் தோளை பிடித்து கொண்டோ அல்லது கை போட்டு கொண்டோ
நடக்கலாம். இதையெல்லாம் உதவி செய்பவரிடம் நேரடியாக சொல்ல முடியாது.
பழகியவர்களிடம்தான் சொல்ல இயலும். அதைக்கூட எல்லோரிடமும்
சொல்ல இயலாது என்றுதான் நினைக்கிறேன். பார்வையற்றவர்களை கையாள்வதில்
இன்னும் சில வழிமுறைகள் இருக்கின்றன. உங்களிடம் சொல்லவேண்டுமென்றுதான்
ஆசை. ஆனால் கார் ராலியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிமுறைகளை
பற்றி ஒரு சிற்றுறை வழங்க எங்களை சுமார் ஒருமணி நேரம் கழித்து உள்ளே அழைத்தார்கள்.
நான் சென்றேன். நீங்களும் வாருங்கள். கார் ராலி என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள. ஆண்டுதோறும்
நடக்கும் அந்த அழகான பயணத்தைப் பற்றி அறிந்துகொள்ள. அடுத்த பதிவில்
பயணத்தை தொடர்வோம்.
தொடரும்.
0 comments:
Post a Comment