04 January 2018

ஹெலோ இந்தியன் பேன்க்?

Posted by Vinoth Subramanian | Thursday, January 04, 2018 Categories: , ,


இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நண்பன் தமீம் கடந்த வியாழனன்று அழைத்திருந்தான். தனது பழைய அலைப்பேசி எண்ணை கணக்கில் இருந்து நீக்கி புதிதாக வேறொரு எண்ணை சேற்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். நானும் கடிதம் எழுதி கொடுத்தால் மாற்றிவிடுவார்கள் என்று சொன்னேன்.
பிறகு போன சனியன்று அழைப்பு வந்தது. கடிதம் கொடுத்ததாகவும் ஆனால் பழைய எண்ணை மாற்றவில்லை என்றும் சொன்னான். புத்தாண்டு விடுமுறை கழியட்டும். அப்புரம் பார்த்து கொள்ளலாம். எப்படியும் மாற்றிவிடுவார்கள். இல்லையென்றால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நினைவு படுத்தலாம் என்று சொல்லி இருந்தேன். நேற்று முந்தினம் மத்தியம் அழைப்பு வந்தது. அதே பிரச்சினைதான். இன்னும் மாற்றாமல் இருந்திருக்கிறார்கள்.
நீ ப்ரேன்ச் கு ஃபோன் பண்ணி கேளு. ரெஸ்பான்ஸ் பண்ணலனா. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஹெட் ஆஃபிஸ்லதான் இருக்காரு. அவரவெச்சி மூவ்  பண்ணலாம்.” என்றேன்.
சரி என்று சொன்னவன் மீண்டும் அழைத்து, “ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்குராங்க டா.” என்றான். சரி என்று எனக்குத் தெரிந்த அந்த நபரின் எண்ணை இவனுக்கு அனுப்பினேன்.

நாம் கொஞ்சம் கூர்ந்து கவணித்தால் தெரியும். வாடிக்கையாளர்கள்உக்கு வங்கிமேலிடம் பணியும். வங்கிமேலிடத்துக்கு வங்கிக்கிளைகள் பணியும். அதனால் வங்கிக்கிளைக்கு தேவையானதைக்கூட வாடிக்கையாளரைவைத்து அனுகுவது புத்திசாலித்தனம் என்பது என் புரிதல். புரியாதவர்கள் இதை அப்படியே மரந்துவிட்டு சம்பவத்தைப் படிக்கவும்.

உணவு இடைவேளையின்போது  அழைத்து கேட்டதற்குநான் இன்னும் அவருக்கு கால் பண்ணல டா. கொஞ்சம் வெய்ட் பண்ணி பாக்கலாம்னு இருக்கேன்.” என்றான். மாலையும் அதே நிலைமைதான். இவனது எண்ணும் மாற்றப்படவில்லை. ஆனால் இவன் வங்கியை மட்டும் அழைத்து பேசியிருக்கிறான்.
ரொம்ப மோசமா ட்ரீட் பன்றாங்க டா. கேட்டா பதில் சொல்ல மாட்டீங்குராங்க. ஃபோன் எடுத்தா நாம பேசுரதுக்குள்ள ரிசீவர கீழ வெச்சிடுராங்க. சரி காலைல கூட்டமா இருக்கும்னு இப்பொ பண்ணா, ப்ரேன்ச் கு வர சொல்ராங்க. ஏற்கனவே லெட்டர் தந்திருக்கோம் சார் அப்பிடினு சொன்னா அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுனு சொல்ராங்க. அக்கௌண்ட் நம்பர் சொன்னா, சொல்ரதுக்குள்ள கட் பண்ணிடுராங்க. சரினு கஸ்டமர்கேர்க்கு கால் பண்ணா இன்னும் பழைய நம்பர்தான் இருக்குனு சொல்ராங்க.” என்றான்.

நான் எனக்குத் தெரிந்த அந்த நபரை அழைத்தேன். ஆனால் என் நல்லநேரம் அவரும் அழைப்பை எடுக்கவில்லை.
நீ ப்ரேன்ச்சோட நம்பர குடு அவர் கூப்டாருனா நான் பேசி ஏதாச்சும் செய்யமுடியுமானு பாக்குரேன்.” என்று சொல்லி கிளையின் தொலைப்பேசி எண்ணையும் அவனது கணக்கு எண்ணையும் கேட்டு மனப்பாடம் செய்துகொண்டேன். அந்த நபர் என்னை அழைக்கவும் இல்லை நான் அழைத்தும் எடுக்கவில்லை.
பிறகென்ன? நேராக வங்கிக்கே தொடர்பு கொண்டேன். எனக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்று பரிசோதிக்கவேண்டுமெனத் தோன்றியது. ஒரு கை பார்த்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டே மனதிற்குள் இருந்த தொலைப்பேசி எண்ணை அலைப்பேசியில் இறக்கி அழுத்தினேன். எதிர் முனையில் ஒருவர் அழைப்பை எடுத்தார். “ஹெலோ இந்தியன் பேன்க்?” என்றேன். “ஆமாம்.” என்றார் மெல்லிய குறலில்.
இப்போது மனதில் இருந்த நண்பனின் சேமிப்பு கணக்கு எண்ணை அவரின் காதுகளிலிறக்கினேன்.
நான் ஒரு அக்கௌண்ட் நம்பர் சொல்ரேன் சார்.” என்று துவங்க அவர் மிகவும் பொருமையாகசொல்லுங்க சார்என்றார். கணக்கு எண்ணை சொல்லிவிட்டு, “இதுல மொபைல் நம்பர் ஆட் பன்றதுக்காக லாஸ்ட் வீக் லெட்டர் குடுத்துட்டு போயிருந்தோம். ஆனாஇன்னும்...  அது மட்டும் கொஞ்சம் ரிசால்வ் பண்ணீங்கனா, நான் வேணும்னா ஒரு மெயில் கூட அனுப்புரேன். அவரு விஷ்வலி இம்பேர்ட். திரும்ப பேன்க் வர கொஞ்சம் கஷ்டம்.” என்று நான் சொல்ல,
மொபை நம்பர் சொல்லுங்க?” என்றார். என்ன பொசுக்குனு கேட்டுட்டார்? ஐயையோ! இவன் என்ன நம்பர் தந்திருக்கான்னு தெரியலையே! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு
அதுதான் லெட்டர்ல எழுதியிருக்கோம் சார்.” என்று உளர, ”பரவாயில்ல சொல்லுங்க.” என்றார். ”ஒரு நிமிஷம் ஸார்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

மீண்டும் நண்பனை அழைத்து. ”அடே! மொபைல் நம்பர் சொல்லுடா.” அவனும் சொன்னான். உடனே மனப்பாடம் செய்துகொண்டு வங்கியை அழைத்தேன். எப்படியோ திட்டுவார் என்று நினைத்துக்கொண்டே கணக்கு எண்ணையும் அவனது அலைப்பேசியின் எண்ணையும் மனதிற்குள் ஓட்டிக்கொண்டிருந்தேன். மருமுனையில் நீண்டநேரம் கழித்து ஒருத்தர் தொலைப்பேசியை எடுத்தார். ”ஹெலொ?” ’ஐயையோ இது வேற வாய்சா இருக்கே!’ என்று நினைத்துக்கொண்டு, ”இந்தியன் பேன்க்?” என்றேன். ”ஆமாம் ஸார்.” என்றவரிடம், ”ஒரு நிமிஷத்துக்கு முன்னாடிநான் ஒரு மொபைல் நம்பர்அக்கௌண்ட்ல…” என்று குழம்ப, உள்ளுக்குள் இருந்த எண்களும் குழம்பிக்கொண்டிருந்தன. ”ஒரு நிமிஷம் சார்என்றவர், இதற்குமுன்பு நான் பேசிய அந்த நல்லவரை அழைத்து தொலைப்பேசியை கொடுத்தார். பேசிக்கொண்டிருந்தபோது அழைப்பைத் துண்டித்ததற்கு கோபப்படுவார் என்று நினைத்துக்கொண்டேஹெலோ, சாரி சார் அது டிஸ்கனக்ட்…” என்று முடிப்பதற்குள்.
நோ ப்ராப்லம் சார். சொல்லுங்க?” என்று மிகத்தன்மையாக பேசினார்.
அக்கௌண்ட் நம்பர்… 9472xxx91” என்று சரியாக சொல்லி முடித்தேன். நண்பனின் பெயரையும் சொன்னேன். சரியாகத்தான் இருந்தது.
ஸார் மொபைல் நம்பர்
சொல்லுங்க சார்!” என்றவரிடம், அலைப்பேசி எண்ணை சொல்லியவுடன் அதை கணினியில் தட்டச்சு செய்து
ஓகே ஸார். ஐ வில் சேஞ்ச்.” என்று சொல்லி துண்டித்தார்.

ஒரு சந்தேகத்துடன் நண்பனை அழைத்து, அவனது அலைப்பேசி எண்ணை சொன்னேன். அதில் ஆறாவதாய் இருக்கும் எண் 7 இல்லை 8 என்றான்.
ஐயையோ! மாத்திட்டாங்களே டா!”
என்ன டா சொல்லுர? யாருக்கு ஃபோன் பண்ண? அப்பொ நீ சொன்ன அந்த சார்க்கு பண்ணலையா?”
இல்லடா. அவர் எடுக்கலனு உங்க ப்ரேன்ச்சுக்கே அடிச்சேன்.”
எடுத்தாங்களா?”
எடுத்தாங்க.”
பேசுனாங்களா?”
பேசுனாங்களே.”
மாத்திட்டாங்களா?”
ஆமாம்டா. மாத்திட்டாங்க. இப்போ அதுதான் பிரச்சின.”
செ. கடைசில இப்பிடி ஆகிடிச்சே. நீ இன்னொரு டைம் நம்பர கேட்டிருக்கலாம்ல? அது 74 இல்லடா 84.”
நான் என்னடா பண்ணுரது. லெட்டர் குடுத்திருக்கோம்னு சொன்னா மாத்திருவாங்கனு நெனச்சேன். அவரு என்னையவிட நல்லவரா இருக்காரு. இப்பிடி சடனா மொபைல் நம்பர் கேப்பாருனு நெனைக்கல. அதனாலதான் உனக்கு ஃபோன் பண்ணி உடனே மொபைல் நம்பர் கேட்டுட்டு உடனே வெச்சேன். சரி போகட்டும். கால் கட் பண்ணதுக்காச்சும் கோப படுவார்னு பாத்தா, நோ ப்ராப்லம்னு சொல்லி நம்பர மாத்தி இப்போ ப்ராப்லம் ஆக்கிட்டாரு. ஆனா இப்போ கூட நோ ப்ராப்லம்தான். நான் நாளைக்கு ஃபோன் பண்ணி நான் 74 நு சொல்லவே இல்லனு சொல்லிடுவேன். லெட்டர்ல 8 தான போட்டிருக்கீங்க?”
ஆமாம். அதுல கரக்டாதான் எழுதி குடுத்திருக்கோம்.”
அப்பிடினா பிரச்சின இல்ல. லெட்டர்தான் பேசும். ஆனா இப்போ நான் தப்பா குடுத்த நம்பர்க்கு பண்ணா யாரு பேசுவா? அப்பிடி ஒரு நம்பர் எக்சிஸ்டா இல்லனா ரொம்ப சந்தோஷம். ட்ரை பண்ணி பாப்போம்.” என்று சொல்லி நான் அந்த எண்ணுக்கு அழைத்தேன்.

எனக்கு ரிங் போச்சே.” என்றான் என் நண்பன் என்னை அழைத்து.
யாருக்கு?”
நீ நம்பர மாத்தி குடுத்தியே அவங்களுக்கு.”
நீயும் பண்ணியா? எனக்கு பிசினு வந்திச்சு. ட்ரூ காலர்ல அவரு யாருநு கண்டுபிடிச்சிட்டேன். பேரு அஷோகாஆஆவாம். பேருக்கு பின்னாடி நெரைய ஏ போட்டு இருக்காரு.”
டே! கால் வருதுடா. அந்த நம்பர்ல இருந்து.” என்றான்.
நானும்தான கால் பண்ணேன்?” என்றேன்.
அப்போ எனக்கு மட்டும் ஏன் பண்ணுராரு? சரி இப்பொ என்ன செய்ய?”
ஒருநாள் வெய்ட் பண்ணு. இவங்க மாத்துராங்களானு பாப்போம். மாத்திட்டாலும் பிரச்சன இல்ல. அதுவரைக்கும் எந்த ட்ரான்சாக்ஷனும் பண்ணாத. இப்போ நான் தப்பா குடுத்த நம்பருக்கு தேவையில்லாம ஓ.டி.பி (otp) போகும். நாளைக்கு நான் கால் பண்ணி சால்வ் பண்ண ட்ரை பண்ணுரேன்.”
அப்பிடியா? சரி. உனக்குவேற ஏதாச்சும் இன்ஃப்லுஎன்ஸ் இருக்கா?”
அதுசரி. என்னுடைய இன்ஃப்லுயென்ஸ் வெச்சி என்னுடையபக்கத்து கௌண்டர்ல பத்துரூபாக்கு சேஞ்ச் கூட வாங்க முடியாது.” என்றேன்.
சரி. அதுவரைக்கும் நான் கஸ்டமர் கேர் கிட்ட கேட்டுக்கிட்டே இருக்கேன்.” என்று துண்டித்தவன் அன்று இரவே அழைத்து,
இன்னும் என்னுடைய பழைய நம்பர்தான் இருக்காம்டா. கஸ்டமர் கெர் கிட்ட ஒரு நாலுதடவ விசாரிச்சிட்டேன். அப்படினா இப்போவும் மாத்தலையா?” என்று கேட்டபோது சந்தோஷமா இருந்தது. அவனது பழைய எண்ணை மாற்றாதவரைக்கும் சந்தோஷம். அடுத்தநாளுக்காக இருவரும் காத்திருந்தோம்.

நேற்று காலை அவனை அழைத்து,
ப்ரேன்ச்சுக்கு கால் பண்ண போரேன். எல்லாத்தையும் கடகடனு சொல்லுரேன் கேட்டுக்கொ. உன்னுடைய அக்கௌண்ட் நம்பர் 9472xxx91. அக்கௌண்ட்ல அப்டேட் பண்ண நீ எழுதி குடுத்த நம்பர் 9962xxx89. உன்னுடைய பழைய நம்பர்அது கேட்டா என்ன செய்ய? அதையும்சொல்லு.” என்றேன். அவன் சொன்னான்.
சரி என்று அழைப்பை துண்டிக்க முணையும்போது,
கேர்ஃபுல் டா. 74 84 ? கரக்டா சொல்லு பாப்போம்? அதுசரி ப்ரேன்ச் நம்பர் ஞாபகம் இருக்கா?”
அடே! ஒரு நம்பர்தானடா தப்பா சொன்னேன். நடுவுல 84. சரியா? ப்ரேன்ச் நம்பர நான் சேவ் பண்ணல. ஆனா ஞாபகம் இருக்கு. 044 222xxxx00. டன்?” என்று சொல்லி துண்டித்தேன்.

ஒரு நான்கு எண்களை ஞாபகம் வைத்துக்கொள்வதெல்லாம் பெரிய விஷையமே இல்லை. நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது யார் அதிக தொலைப்பேசி மற்றும் அலைப்பேசி எண்களை நினைவு வைத்திருக்கிறோம் என்று விளையாட்டாக எங்களை நாங்களே பரிசோதித்துக்கொண்டோம். அப்போது நண்பன் இங்கில்பெர்த் (Engleberth) என்பவன் தன் நண்பர்கள் உரவினர்கள் என்று ஒரு 65 பேர்களின் எண்களை மனப்பாடமாக சொன்னான். நான் 58 எண்களை நினைவில் வைத்திருந்தேன். ஆனால் இப்போதுதாண் மிகவும் கெட்டுவிட்டோம். சரி விஷையத்துக்கு வருவோம். வங்கியை அழைத்தேன்.

ஹெலோ இந்தியன் பேன்க்?”
ஆமாம் சார்.”
அக்கௌண்ட் நம்பர்…”
குவரீஸ் (queries) பாக்க ஆளில்ல ஸார். மத்தியானம் கூப்புடுரீங்களா?”
நான் நாலு மணிக்குமேல கூப்பிடவா??” என்றதற்கு. சரி என்றார்.
இதை நண்பனிடம் சொன்னதும்.
நாலு மணிக்குமேல பேசுனா பேன்க்ல இருக்கவங்க நல்லா பேசுவாங்களோ?”
இப்பொ கூட நல்லாதான் பேசுனாரு. அங்க ஆளுங்க இல்லையாம். அதனாலதான் அப்புரம் கால் பண்ண சொன்னாரு.” என்றேன்.
அப்பிடினா அங்க இருக்க யாரோ ஒருத்தர்தான் ரொம்ப இர்ரெஸ்பான்சிபிலா இருக்காருனு நெனைக்குரேன். எடுத்ததும் வணக்கம் இந்தியன் பேன்க்னு சொன்னாரா?”
இல்ல நாந்தாண் எடுக்கும்போதெல்லாம்ஹெலோ இந்தியன் பேன்க்அப்பிடினு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”
மீண்டும் நான்கு மணிக்கு அழைத்தேன். ஒருவர் எடுத்தார்.
ஹெலோ இந்தியன் பேன்க்?”
சொல்லுங்க சார்?” என்றார் ஒருவர். அவர் வேறொருவர் என்பது மட்டும் புரிந்தது.
அக்கௌண்ட் நம்பர். 9472xxx91.” என்று சொல்லி பெயரும் சொல்ல அவரும் உறுதி படுத்திக்கொண்டார்.
லாஸ்ட் வீக் மொபை நம்பர் சேஞ்ச் பண்ண லெட்டர் குடுத்துட்டு போனோம். ஆனா இன்னும் சேஞ்சாகல. நீங்க கொஞ்சம்…” என்று சொல்ல அவர்,
அக்கௌண்ட்ல 99xxx74x9 அப்பிடிங்குர நம்பர் இருக்கு ஸார்.” என்றார்.
”74? 84 சார்!”
இல்லையே!74 தான இருக்கு?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.
எனக்கும் தெரியும். ஆனால் என்ன செய்ய.. நானும் தவறு செய்திருக்கிறேன். ஒரு எண்ணை தெரியாமல் தவறுதலாக சொல்லியிருக்கிறேன். அதை பொதுவெளியில் இந்த வளைதளத்தில் ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அந்த இடத்தில் என் மீதுதான் தவறு என்று சொன்னால் எல்லாம் நாசமாய் போகும். தவிற கொஞ்சம் பிசகினாலும் அவனை வங்கிக்கு அழைத்துவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு,
இல்லையே சார்! எங்க நம்பர்தான் சார் அது. லெட்டர்ல கூட அதைத்தான் எழுதி தந்திருக்கோம்.” என்று எனது நேற்றைய கவணக் குறைவை மறைத்து வாதாடினேன்.
அப்பிடியா? ஆனாஇதுல 74 தான் இருக்கு. சரி நோ ப்ராப்லம் சார். அது ஒரு பிரச்சன இல்ல. மாத்திடலாம். நான் பாத்து மாத்திடுரேன்.” என்றார்.
நேற்று இரவு நண்பன் அழைத்து,
மாறிடிச்சு டா. இப்போ புது நம்பர்கு மெஸ்ஸெஜ் வருது.” என்றான்.

2 comments:

  1. ஆண்டின் முதல் பதிவே அஸத்தல். பலெ பலெ ஸெம எக்ஸ்பிரியன்ஸ். இனிமே நீங்கலே நெனச்சாலும் அந்த நம்பர் மரக்காதில்ல? :)

    ReplyDelete
  2. 59ஆவதாக இந்த டொலைப்பேசி என் உங்களுக்கு இருக்கும் நு நினைக்கிரேன் அன்னா.ஹஹஹஹ

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube