ஒரு ஐந்து
நிமிடம் கழிந்திருக்கும். பாட்டியிடமிருந்து பதில் வந்தது. அந்த முதியவரும் சகஜமாக
பேச ஆரம்பித்தார். ஒன்று அந்த பாட்டி பாக்கை அவசர அவசரமாக விழுங்கி
இருக்க வேண்டும். இல்லையேல் தற்செயலாக சென்று தொண்டையிலும் மார்பிலும்
சிக்கியிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
கடற்கரை
ரயில் நிலையத்தில் வண்டி நின்றது.
நேரம் ஏழு ஐந்து. நானும் வண்டி முழுதாய் நிற்பதற்குள்
வாசலின் அருகே வந்து நின்றேன். இறங்கி படிக்கட்டைக் கண்டுபிடித்து
அந்தப் பக்கம் சென்று தாம்பரம் செல்லும் ரயிலை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தை நேரமின்மைக்
காரனமாக மாற்றிக்கொண்டு,
”வெளிலயா போரிங்க?” என்று பக்கத்தில் இறங்குவதற்காக நின்றுகொண்டிருந்தவரிடம்
கேட்க அவர் ஆமாம் என்றார்.
”நான் தாம்பரம் ட்ரெயின் பிடிக்கனும். வழியில விட முடியுமா?”
என்றதற்கு அவர் தாமதிக்காமல் சரியென்று சொல்லி கையை பிடித்துக்கொண்டு
நடந்தார். மூன்றாவது நடைமேடயில் என்னை விட்டுவிட்டு சென்றார்.
நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறிக்கொண்டேன். வழக்கமாக
அந்த ரயிலின் ஒரு பக்க சுவற்றில் சாய்ந்து கொண்டேன். நீண்ட தூரம்
பயணம் செய்வதாக இருந்தால்தான் உட்காருவேன். இல்லையென்றால் அந்த
வாசலுக்கு அருகாமையில் இருக்கும் சுவற்றில் சாய்ந்துகொள்வதுதான் வாடிக்கை.
ரயில்
கிளம்பியது. எப்படியும் எட்டு மணிக்குள் சென்றுவிடுவோம் என்று நம்பிக்கை பிறந்தது.
வழக்கம்
போல அடுத்த நிலையத்தில் திருநங்கைகள் ஏறிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் கை தட்டியவுடன்
நான் எனது குச்சியை எடுத்து முன் பக்கமாக வைத்துக்கொண்டேன். என்னிடம்
வந்து காசு கேட்டுவிட கூடாது என்பதற்காகத்தான். அதை எப்போதும்
செய்வேன். எனக்கு பார்வை தெரியாது என்பதை யாரிடம் காட்டிக்கொள்கிறேனோ
இல்லையோ திருநங்கைகளிடம் மட்டும் காட்டிக்கொள்ள யோசிக்கவே மாட்டேன்.
ஒருவர்
அருகே வந்து “குடுப்பா.” என்று சொல்லி என்னையும் கையிலிருந்த குச்சியையும்
பார்த்தவுடன் ”சாரி” என்று சொல்லிவிட்டு
அடுத்த பயணியிடம் நகர்ந்தார்.
அவர்கள்
அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் கையிலிருந்த குச்சியை பாக்கெட்டில் செருகிக்கொண்டேன். கொடுக்க கூடாது என்றெல்லாம்
இல்லை. நானும் கொடுத்திருக்கிறேன். ஆனால்
அவர்கள் எப்போதும் அந்த வழியில் ரயிலில் ஏறி காசு கேட்பார்கள். பாவமாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது?
காசு கேட்பதற்கு அவர்களிடம் தினமும் ஒரு காரனம் இருக்கும். ஆனால் கொடுக்காமலிருக்க என்னிடம் ஆயிரம் காரனங்கள் இருக்கின்றன. ஒரு சில திருநங்கைகள் மிகவும் நல்லவர்கலாகவும் இருப்பர். அப்படி ஒரு திருநங்கை என்னிடம் ஒருநாள் மிகவும் கணிவோடு பேசினார். என் படிப்பு, பூர்வீகம், வேலைப்பற்றியெல்லாம்
சாதாரனமாக கேட்டார். நானும் பதில் சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.
அதுவும் அதே ரயிலில்தான் ஒருநாள் நடந்தது. அவர்களாவது
பரவாயில்லை. நான் ரயிலிலிருந்து இறங்கி எனது கல்லூரிக்கு
செல்லும் வழியில் ஒரு நடுத்தர வயது பெண்மணி அமர்ந்து யாசகம் கேட்டுக்கொண்டு
இருப்பார். நான் எப்போது அவரை கடந்து சென்றாலும் “பாத்து போப்பா. நேரா போப்பா.”
என்றெல்லாம் சொல்வார். என்னிடம் பணம் கேட்டதில்லை. ஒருமுறை கொடுத்தால் தினமும் கேட்பாரோ
என்ற பயத்தில் நானும் கொடுத்ததில்லை. நண்பர் ஒருவர் விசாரித்ததில் அந்தப்
பெண்ணின் மகள் எங்கேயோ படித்துக்கொண்டிருப்பதாகவும், இவர் யாசித்து
பணம் சம்பாதித்து வருவது அந்த பெண்ணின் மகளுக்குத் தெரியாது என்றும் சொன்னதாக சொன்னார்.
இதைப்பற்றி
யோசித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு யுவதிகள் ஒரு சிறுவனுடன் ரயிலில் ஏறினர். அந்தச்சிறுவனை மட்டும் எனதருகில்
நிற்க வைத்துவிட்டு அவ்விரு யுவதிகளும் எனக்கு முன்னால் நின்று கொண்டனர். எனது இடது புரத்தில் கொஞ்சம் இடமிருந்தது. வழியில் நின்றால்
யாரேனும் இடித்துவிடுவார்கள் என்ற கரிசனத்தில் கொஞ்சம் நகர்ந்துகொண்டு,
”உள்ள வந்துக்கோங்க மேடம்.” என்று அவர்களுக்கு கேட்காத
மாதிரி கையில் இடத்தை சுட்டிக்காட்டினேன். அங்கு ஒருவரால்தான்
நிற்க முடியும். நானும் அந்த ஒரு யுவதியை மட்டும்தான் நின்றுகொள்ள
சொன்னேன். அவரும் வந்து எனது வலப்பக்கத்தில் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டார்.
அறை மணி
நேரத்திற்கு முன்னால் உயிர் போகும் அளவிற்கு இருமிக்கொண்டிருந்த வயதானவருக்கு தண்ணீரை
மட்டும் நீட்டிவிட்டு, ஐந்து நிமிடங்களுக்கு முன்பு காசு கேட்க வந்த திருநங்கையிடம் குச்சியை நீட்டிவிட்டு
இப்போது ஒரு இளம்பெண்ணை யாரேனும் இடித்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் இடம் தருவது
என்பது எனக்கே வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் அந்த இன்னொரு
யுவதி வழியில்தான் நின்று கொண்டிருந்தார். இருவருக்கும் இடம்
தருவதாக இருந்தால் நான் வழியில்தான் நிற்க வேண்டியிருக்கும். பிறகு எவனாவது அர்ச்சனை செய்துவிட்டு போவான். தேவையா? திருவள்ளுவரே
“நிற்க அதற்கு தக” என்று சொல்லியிருக்கிறார்.
கடைபிடிக்க வேண்டியது கடமை அல்லவா?
சிரிது
நேரம் கழித்து அந்த இரு யுவதிகளும் சிறுவனுடன் இறங்கினார்கள். வாசலில் ஒரு இலைஞர்
நின்று கொண்டிருந்தார்.
”கிண்டிக்கு ப்லாட்ஃபார்ம் எந்த பக்கம் வரும்?” என்று
கேட்டேன்.
”வந்ததும் சொல்ரேன்.” என்றார்.
கிண்டி
ரயில் நிலையம் வந்தது.
“இந்த பக்கம் தான் சார்.” என்றார் இலைஞர். இறங்கியதும்,
”எங்க போகனும்?” என்ற அந்த இளைஞரிடம்,
”வெளில. அங்கிருந்து ஏதாச்சும் ஆட்டோ பிடிச்சு ஒலிம்பியா
டெக் பார்க் போகனும்.” என்றேன்.
”சரி வாங்க.” என்று அந்த இளைஞர் தோளைப்பற்றிக்கொண்டு நடந்தார்.
”வெளில எந்த பக்கம் போனா ஈசியா ஒலிம்பியா டெக் பார்க் போக முடியும்?
பிக்காஸ் நான் இந்த ஸ்டேஷனுக்கு புதுசு.” என்றேன்.
”நானும் கூட புதுசுதான்.”
என்றார்.
”ஓ! நீங்களும்
இந்த ஸ்டேஷனுக்கு புதுசா?”
”இல்ல. சென்னைக்கு
புதுசு.”
தொடரும்.
0 comments:
Post a Comment