31 May 2018

ஒரு பயணம் -7.

Posted by Vinoth Subramanian | Thursday, May 31, 2018 Categories: , , , , ,


அதே வியப்புடன் தோழி சுவேதாவுக்கு கூகுல் வாய்ஸ் இன்புட் உதவியுடன் (Google voice input) குருஞ்செய்தியை குரல் வழியில் அனுப்ப முயற்சி செய்தேன். தட்டச்சு செய்ய சோம்பேரித்தனமாக இருந்ததால் அந்த முயற்சி.
சுமார் மூன்று முறை தோற்றேன். ஏனென்றால் பக்கத்தில் சுப்புராஜ் படித்துக்கொண்டிருந்தார். நான் பேசியதையும் சுப்புராஜ் படித்ததையும் எனது அலைபேசி ஏடாகூடமாக பதிவு செய்து என்னை மேலும் சோர்வாக்கியது. நான் ’please pray for me to’ என்று சொல்லும்போது பக்கத்திலிருந்த சுப்புராஜ் ‘Caution speed breakers’ என்று படித்துக்கொண்டிருந்தார். அது இரண்டையும் கலந்து ‘Please pray for speed breakers’ என்று பதிவு செய்து கொண்டது. சரி இதற்கு மேல் முடியாது என்று தட்டச்சு செய்தேன். பார்வைத்திறன் குறையுடையவர்களுக்கு தொடுதிரை அலைபேசிகளில் தட்டச்சு செய்வது என்பது கொஞ்சம் சவாலான காரியம்தான். வண்டி வேகத்தடையில் ஏறி இறங்க, நான் ஓரிடத்தில் விரல் வைக்க நினைக்க என் விரல்கள் வேறோரிடத்தில் வீழ்ந்தன. எப்படியோ குருஞ்செய்தியை தட்டச்சு செய்து முடித்தேன்.
’Please pray for me to complete the journey. My body doesn’t permit.’ என்று அனுப்பினேன்.
அறை நிமிடங்களில் சுவேதாவிடமிருந்து பதில் வந்தது.
’I am already praying for you da.’ என்று பதிலை அனுப்பினாள். அப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

நானாக இருந்திருந்தால் கூட ஓக்கே ஷுவர் (Okay sure) என்றுதான் அனுப்பி இருப்பேனோ என்னவோ. ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டேன். ஒரு எக்களிப்பு. காலையில் சாப்பிட்டது நெஞ்சில் இருந்து இறங்கியது. பொரை ஏரியது. தொண்டையில் காரம் பரவியது. ஒரு நான்கு ஐந்து முறை இருமிவிட்டு தண்ணீரை குடிக்க உடல் உடனே ஒரு புத்துணர்ச்சியை அடைந்தது.

சே, நாம ஏதோ சும்மா ப்ரே பண்ணிக்கோனு சொன்னா இவ ஆல்ரெடி ப்ரேயிங் டா னு மெஸ்ஸேஜ் அனுப்புராளே.’ என்று நினைக்கும்போது ஏதோ போலிருந்தது. தவிற நான் தனியாக பேரணிக்கு வருவது சுவேதாவிற்கும் சுகண்யாவிற்கும் துளி கூட விருப்பமில்லை. தோழி சுகண்யாவைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர்கள்தான் அன்று காலை கூட அலைபேசியில் அழைத்து நான் சரியாக சென்று சேர்ந்துவிட்டேனா என்று உறுதி செய்து கொண்டனர்.
சுகண்யாவை வேண்டுமென்றால் சிறுவயதிலேயே தெரியும். ஆனால் சுவேதா அப்படியல்ல. கிட்டத்தட்ட பத்து மாதங்கள்தான் பழக்கம்.

சுகண்யாதான் சுவேதாவை கடந்த வருடம் அரிமுகம் செய்து வைத்தார். ஒருமுறை சுகண்யா மற்றும் அபிநயா என்ற இன்னொரு பெண்ணும் கான்ஃப்ரன்சிலிருக்கும்போது என்னையும் அழைத்தனர். அப்போதுதான்என் ஃப்ரண்ட் சுவேதா இருக்கா. பேசு.’ என்றார் சுகண்யா. நான் பெரிதாக ஏதும் பேசவில்லை. சுவேதாவும் எதுவும் பேசவில்லை. முன்பின் தெரியாத பெண்ணிடம் எதுவும் பேச எனக்கு பெரிதாக விருப்பமில்லை. அவளே முதலில் பேசட்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். ஏதோ பேசினோம். மிச்சமிருந்த இருவரும் எங்களைப்பற்றி எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். பிறகு பேசிமுடித்தவுடன் சுகண்யாவைத் தனியாக அழைத்து சுவேதாவைப் பற்றி கேட்டேன். முனைவ பட்டம் பெற படித்துக்கொண்டிருப்பதாக சொன்னார். நான் படித்த சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் சுகண்யாவோடு பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்ததாகவும் பன்னிரண்டாம் வகுப்புமுடித்துவிட்டு இன்றுவரை நேரில் கூட பார்க்காமல் தினமும் அலைபேசியில் பேசிக்கொள்வோம் என்றும் சொன்னாள். பள்ளிப்படிப்பில் ஏற்பட்ட நட்பை இன்னும் அவர்கள் தொடர்வது வியப்பாக இருந்தது. அவர்கள் அலைபேசியில் இன்னும் தொடர்வது மகிழ்சியாக இருந்தது. அதன் பிறகு நானும் சரி என்று விட்டுவிட்டேன்.

ஒருமுறை நானும் என் அண்ணனும் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு அழைப்பு வந்தது.
நான் சுகண்யாவோட ஃப்ரண்ட் சுவேதா. எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் செய்ய முடியுமா?” என்று கேட்டாள். நான் திரையரங்கில் இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் சொல்லி அழைப்பை அவசர அவசரமாகத் துண்டித்தேன்.
சில நிமிடங்களில் சுகண்யா அழைத்து சுவேதாவிடம் எனது அலைபேசி எண்ணை கொடுத்ததாகவும், சுவேதாவுக்கு எதோ உதவி தேவையென்றும், அவளே என்னை அழைப்பால் என்றும் சொன்னாள்.
அவங்க ஏற்கனவே கூப்டுட்டாங்க. நான் அப்புரம் கூப்பிட சொல்லிட்டேன். நான் தியேட்டர்ல இருக்கேன். என்று சொல்லி துண்டித்தேன்.
அடுத்த நாள் சுவேதாவிடமிருந்து அழைப்பு வந்தது.
ஹெலோ சார், நான் சுவேதா. சுகண்யாவோட. . .”
ஃப்ரண்ட். தெரியும். சொல்லுங்க மேம். (ma’am.)” என்றேன்.
இந்த டி.ஆர்.பி. (TRB) பாலி டெக்னிக் (polytechnic) எக்ஷ்சாமுக்கு நானும் அப்லை பண்ணி இருக்கேன்.” என்று நிருத்தினாள்.
சரி.”
நீங்க மெட்டீரியல்ஸ் கலக்ட் பண்ணிக்கிட்டு இருக்குரதா,”
சுகண்யா சொல்லி இருப்பா.”
ஆமாம். அதனால உங்க கிட்ட ஏதாச்சும் மெட்டீரியல்ஸ் இருந்தா மெயில் அனுப்ப. . .”
முடியும்.” என்று அவள் தொடங்கி முடிக்க யோசித்த வார்த்தைகளையெல்லாம் நான் முடித்துக்கொண்டிருந்தேன்.

முதலில்சார்என்றவள் பிறகு அந்த வார்த்தையை நீக்கிவிட்டுவாங்க போங்க என்று அழைத்துக்கொண்டிருந்தாள்.
எனக்கும் எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. நானும் அப்படியே அழைத்துக்கொண்டிருந்தேன்.
பிறகு படிப்பு சம்மந்தமானதை மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டிருந்தோம். அவ்வளவுதாண். இதற்குமேல் இவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று நினைக்கும்போதெல்லாம் அழைத்தாள். ஒரு சில நேரங்களில் கோபமாக வரும். முன்பின் தெரியாதவனிடம் பேசினால் அவர்கள் வீட்டில் ஏதாவது சொல்வார்களோ என்று கூட பயமாய் இருந்தது. அப்படித்தான் ஒருமுறை அழைத்தாள். ”மெட்டீரியல்ஸ் மெயில் பண்ணிட்டு கால் பண்ணுங்கஎன்றாள். நான் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் அழைத்து தகவல் சொல்லவில்லை. ஏதோ வேலை இருந்ததால் அழைக்கவில்லை. இரண்டுமணிநேரம் கழித்து அழைத்தாள்.
எ ப்போ மெயில் அனுப்புவீங்க?”
அனுப்பியாச்சே! எப்பையோ அனுப்பியாச்சே!” என்றதற்கு
கால் பண்ணி சொல்ல மாட்டீங்களா? நான் இங்க வெய்ட் பண்ணிக்கிட்டே இருக்கேன்.” என்றாள்.
கோவத்தை அடக்கிக்கொண்டு,
சாரிங்க, மெயில் பாத்திருப்பீங்கனு நெனச்சேன். பிசியா இருந்துட்டேன். அதுதான் கால் பண்ணல.” என்றேன்.
தேங்க்ஸ்.” என்று துண்டித்தாள்.
எதற்கு காத்திருக்கவேண்டும்? மின்னஞ்சலை பார்த்திருக்கலாமே? என்று தோன்றியது.
அதன் பிறகு பலமுறை பேசியிருக்கிறோம். முதலில் பெரும்பாலானவை தேர்வு சம்மந்தப்பட்டதாக இருந்தன. போகப்போகத்தான் புரிந்தது, உதவி செய்வதில் அவளுக்கு நிகரில்லை என்று. தேர்வு நால் வந்தது. விண்ணப்பித்திருந்தபோதும் தேர்வு நாளன்று எனது பட்டமளிப்புவிழா இருந்ததால் நான் பாலிடெக்னிக்கில் ஆசிரியராகும் அந்த தகுதித் தேர்வை எழுதவில்லை. அதன் பிறகு அவள் அழைத்தபோதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் அழைப்பை எடுத்ததில்லை. எடுக்க கூடாது என்றெல்லாம் இல்லை. அந்த நேரம் பார்த்து நான் ஏதாவது வேலையாக இருந்துவிடுவேன். சில நேரங்களில் திரும்ப அழைக்கவும் முடியாமல் போயிருக்கின்றன.  அது சில மனக்கசப்பை உண்டு பண்ணிவிடும். பிறகென்ன? புரிதலின்மையில் புதைந்து, விளக்கங்களில் விதைந்து, சண்டைகளில் வாடி, சமாதானங்களில் வளர்ந்து, பகிர்வுகளில் விரிந்து, நம்பிக்கையில் உயர்ந்து, இன்று நட்பாக நிற்கிறோம் என்று நினைத்தபோது இன்பமாக இருந்தது. இன்னல்கள் வரும்போதெல்லாம் இளைப்பார ஒரு நட்பு கிடைத்தது என்பதை நினைத்தபோது மனதிற்கு ஆருதலாக இருந்தது. நிறையமுறை அவளை கஷ்டப்படுத்தியிருக்கிறேன் என்று நினைத்தபோது வருத்தமாக இருந்தது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு எத்தனைக்காலம் அதே நெருக்கத்துடன் சாத்தியப்படும் என்று தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சையம். மிகையாகச் சொல்லவில்லை. என் உயிர் இவ்வுடலைவிட்டு பிரிந்தபின் எனக்காக சிந்தப்படும் கலப்படமற்ற கண்ணீர் துளிகளில் அவளுடையதும் நிச்சையம் இருக்கும் என்பது மட்டும் மருக்கமுடியாத உண்மை என்று தோன்றியது. அந்த நம்பிக்கை ஏதோ சாதித்தது போல் இருந்தது. ஒரு மனிதனின் உண்மையான சாதனை என்பது தனக்காக இன்னொரு உண்மையான மனிதனை சம்பாதிப்பதுதான். அதன் வெளிப்பாடுதான் நான்வேண்டிக்கொள்ளச் சொன்னதும், அவள் அதற்கு முன்பே வேண்டிக்கொண்டிருந்ததும்.

தூரத்தில் வருனின் குரல் கேட்டது. அது நான் பயணத்தில் இருப்பதை உணர்த்தியது.
ரூட் கஷ்டமா இருக்கும்போதெல்லாம் வினோத் கைட் (Guide) பண்ணிட்டு. இப்போ ஈசியா இருக்கும்போது உங்கக்கிட்ட குடுத்துட்டாரு.” என்றார்.
என்ன சார்?” என்றேன் நான் பின்னாலிருந்து.
இல்ல வினோத், சந்துபொந்துல எல்லாம் நீங்க கைட் பண்ணிட்டு, இப்போ ஈசியா இருக்கும்போது அவங்க கிட்ட குடுத்துட்டீங்களே. அப்பிடினு சொன்னேன்.” என்றார்.
அது எப்பவுமே அப்பிடித்தான் சார்.” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தேன்.
ஒருவழியாக ஒலிம்பியா டெக் பார்க்கை அடைந்தோம்.
மூனு விஷுவலிய வெச்சி ஜெர்னிய கம்ப்லீட் பண்ணியிருக்கீங்க சார். அச்சீவ் பண்ணி இருக்கீங்க. நீங்க கிரேட். ஸ்பெஷல் அப்லாஸ் ஃபார் யூ. (Special applause for you.)” என்று சொன்னேன்.
எனக்கும் ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இது. நான் ரொம்ப எஞ்சாய் பண்ணேன்.” என்றார்.
வண்டி அரோராவின் முன்னே சென்று நின்றது.
ஃபைனலி யூ கம்ப்லீடட் தீ ஹோல் ஜேர்னி! (Finally you completed the whole journey!) வெரிகுட்!! (Very good!!)” என்று பாராட்டினார். நாங்கள் காரை விட்டு வெளியே வந்தோம். ஓட்டுனர் வருனுக்கு நன்றி சொல்லி கிளம்பினேன். ஒருவர் என்னை சாப்பிட அழைத்து சென்றார்.

கை அளம்பும் இடத்தில் பூர்னியின் குரல் கேட்டது. அவர் பக்கமாக லேசாக தலையைத்திருப்பி மீண்டும் திரும்பி கொண்டேன்.
இவங்கள நான் காலையில பாத்தேன் சார்.” என்றேன் என்னுடன் இருந்த உதவியாலரிடம்.
என்னைய கூடதான் நீங்க பாத்தீங்க.” என்றார் அவர்.
அய்யையோ மானம் போச்சே. என்று நினைத்துக்கொண்டு, அவருடன் உணவு மேசைக்கு வந்து சேர்ந்தேன். எதிரில் யாரோ இருவர் வந்து அமர்ந்தனர்.
”அப்புரம் என்ன ஐ.ஓ.பி? (IOB?)” என்றார் என்னைப்பார்த்து. அடையாலம் கண்டுகொண்டேன். தர்மராஜும் சுப்புராஜும்தான் அது. கேட்டது தர்மராஜ்தான்.
”மகாப்பிரபு! நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?”


தொடரும்.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube