26 May 2018

ஒரு பயணம் -6.

Posted by Vinoth Subramanian | Saturday, May 26, 2018 Categories: , , ,


வெளியிலிருந்தவர் என்னை காருக்குள் மிகக் கவனமாக அனுப்பினார். நான் முன்னிருக்கையில் அமர வைக்கப்பட்டேன். பார்வைத் திறன் குறையுடையவரை காரில் அமரவைப்பதும் எளிதுதான்.
சிலர் காரின் கதவை திறந்துவிடுவர். அதெல்லாம் செய்யவே தேவையில்லை. காரின் அருகே கூட்டிச் சென்றவுடன் அந்த பார்வை திறன் குறையுடயவரின் கையை காரின் கதவின்மேல் வைக்கவேண்டும். திறக்கத்தெரியவில்லை என்றால் மட்டும் உதவலாம். ஒருவேளை காரின் கதவை உடன் இருப்பவர் திறந்துவிட்டாரெனில் உள்ளே செல்லும் பார்வைத்திறன் குறையுடையவரின் தலை இடித்துக்கொள்ளாமலிருக்க அந்த காரின் மேர்கூறையின்மீது அந்த பார்வைத்திறன் குறையுடையவரின் கையை வைத்தால் இடிக்காமல் செல்வார்.

ஆனால் பெரும்பாலானோர் பார்வைத்திரன் குறையுடையவர் இடித்துக்கொள்ளாமல் இருக்க அவரின் தலையைப்பிடித்துக்கொள்வர். என்னை ஏற்றிவிடவந்தவரும் அதைத்தான் செய்ய எத்தனித்தார். ஆனால் எனக்கு ஏற்கனவே இடி வாங்கிய அனுபவமிருந்ததால் முன்னமே குணிந்து கொண்டு உள்ளே சென்றேன்.
முன்னிருக்கையாயிற்றே. சீட்பெல்ட்டை மாட்டிவிட்டுவிட்டார்கள். என்னை அழைத்துவந்தவர் கதவை மூடிவிட்டு விடைபெற்று சென்றார்

உங்க பேரு என்ன?” என்று கேட்டார் அந்த காரின் ஓட்டுனர் மற்றும் முதலாளி
வினோத். நீங்க?”
வருன்.”
நாம ரெண்டு பேருதான் இருக்கோமா?”
ஆமாம். என் வைஃப் வரேன்னு சொன்னாங்க.”
வருவாங்களா?”
இல்ல. லாஸ்ட் மினிட்ல அவங்களுக்கு உடம்பு சரியில்ல.”
உங்க வைஃப் வந்திருந்தா எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்.” என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையை அடக்கிக்கொண்டு,
ஆக்சுவலா, ஒரு காருல நாலு பேரு இருந்தாதான் ராலிய ரிலாக்சா கம்ப்லீட் பண்ண முடியும். யாரு கிட்டயாச்சும் வாலண்டியர்ஸ் (volunteers கேளுங்க.”
யாருக்கிட்ட கேக்க?”
யாராச்சும் வழியில இல்ல இந்த பக்கம் சைட்ல நிக்குரவங்க கிட்ட.” என்று நான் சொல்லி முடிக்க ஒருவர் வந்து ஒரு கவரை நீட்டினார். அதில் லேஸ் சிப்ஸ், பிஸ்கட்டுகள், மோமோ, தண்ணீர் பாட்டில் மற்றும் பேனாக்களும் பிற ஸ்டேஷ்னரி பொருட்களும் இருப்பதாக சொல்லி என் கையில் கொடுத்தார். நான் வாங்கியதும் வருன் வாங்கி இருவருக்கும் நடுவில் வைத்துக்கொண்டார். உடனே இன்னொருவர் வந்து மார்ஷலிடம் கையெழுத்து வாங்க வேண்டிய அட்டையையும், பிரெயில் வடிவிலான வழிவரைபடத்தையும் என்னிடம் கொடுத்து சென்றார். நான் வாங்கி வைத்துக்கொண்டேன்.

பிறகு அங்கிருந்த ஒரு பெண்மணி காரில் எட்டிப்பார்த்துவிட்டு
டூ யூ நீட் வாலண்டியர்ஸ்? (Do you need volunteers?)” என்று கேட்க, நான் உச்சபட்ச மகிழ்ச்சியில்,
இட் வில் பி ஃபைன் இஃப் யூ அரேஞ்ச். (It will be fine if you arrange.)” என்றேன்.
ஓக்கே தென் ஷால் ஐ அரேஞ்ச்டூ? (Okay then, shall I arrange two?)”
ப்லீஸ்!! (Please!!)” என்று நான் மிகுந்த ஆர்வமாக சொல்ல, அந்த பெண்மணியும் எங்கேயோ சென்றார். ’ஆஹா. நாம ஒன்னு கேட்டா ரெண்டு குடுக்குராங்களே.’ என்று விவரிக்கமுடியாத அளவிற்கு சந்தோஷத்திலிருந்தேன். எனது எதிர்ப்பார்ப்பு எகிரியது. சுமார் ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு இரண்டு பேரை காரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

பாத்து ஏறுங்க.” என்று ஒரு குரல்
மெதுவா மெதுவா.” என்று இன்னொரு குரல்.
எதுக்கு இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணுராங்க?’ என்று குழம்பிக்கொண்டே பின்பக்கமாக திரும்பியபோது, ’எது!!! விஷ்வலியா!!!’ என்று வாயடைத்துப்போனேன். என் வாயிலிருந்து வார்த்தை வருவதற்குள் அவர்கள் இருவரும் உள்ளே வந்து சேர்ந்தார்கள். பக்கத்திலிருந்த திரு வருன் அவர்கள் என்னவேண்டுமென்றாலும் நடக்கட்டும் என்றபடி அமர்ந்துகொண்டிருந்தார்.

சார், இவங்க ரெண்டு பேரும் விஷ்வலியா?”
ஆமா.” என்று காமாக பதில் சொன்னார் திரு வருன்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உள்ளே வந்துவிட்டார்கள். இறங்க சொல்வது நாகரீகமில்லை. அதே சமையம் வைத்துக்கொள்வதும் பல சிக்கல்களை உருவாக்கும். வருன் மட்டும் எந்த கவலையும் இல்லாமல் வண்டியை கிளப்பினார்.

வண்டி இரண்டடி நகர்ந்தது. எப்போதும்கோ, (go)’ என்று சொல்லும் திரு அரொரா எங்கள் வண்டியை மட்டும்ஸ்டாப் ஸ்டாப்என்று சொல்லி நிருத்தினார். அவர்கள் போகச்சொன்னால்தான் போகவேண்டும். இது வருனுக்கு தெரியாது.
டிட் யூ அட்டெண்ட் தி ப்ரீஃபிங்? (did you attend the briefing?)” என்று அரோரா கேட்க,
நோ.” என்றார் வருன் சர்வ சாதாரனமாக. ஏற்கனவே முன்னிருக்கையில் பெல்ட் அணிவித்து அமரவைத்தது, உதவியாலர்களுக்கு பதில் இரண்டு பார்வை திறன் குறையுடையவர்களை வண்டிக்குள் அனுப்பியதுடன் சேர்த்து இவர் சொன்ன பதிலும் எரிச்சலை ஏற்படுத்தியது.
அங்கு சொன்னதை மிகவும் சுருக்கமாக அரோரா சொன்னார். ஆனால் ஓட்டுனருக்கு புரிந்திருக்காது என்று மட்டும் தெரியும். மார்ஷலைப்பற்றி கேட்டபோதும் ஓட்டுனர் வருனுக்கு தெரியவில்லை. பதாகையை சுட்டிக்காட்டி இப்படித்தான் இருக்கும் பார்த்தவுடன் நின்றுவிடுங்கள் என்றார் அரோரா. உங்கள் வழிகாட்டி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்றார் அவர். என்னால் அமைதியாய் இருக்கமுடியவில்லை.

சார். ஆக்சுவலி வீ ஆர் த்ரீ விஷ்வலி இந்த கார். (Sir, actually we are three visually in the car.)” என்று ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்து சொல்லிவிட்டேன்.
ஐ அண்டர்ஸ்டேண்ட் சார். சம் கார்ஸ் டோண்ட் ஹேவ் நேவிகேட்டர்ஸ். சம் நேவிகேட்டர்ஸ் டோண்ட் ஹேவ் கார்ஸ். யூ த்ரீ மேக் இட் டன் ப்லீஸ். (I understand sir. Some cars don’t have navigators. Some navigators don’t have cars. You three make it done please.)” என்று அவர் சொன்னபோது என்னைவிட எனக்கு அவர் நிலைமை பரிதாபமாக தெரிந்தது.
ஓட்டுனரிடம் வழிமுறைகளை அவசர அவசரமாக சொன்னபோதும் சரி, என்னிடம் சில கார்களுக்கு வழிகாட்டிகள் இல்லை என்று ஆங்கிலத்தில் சொன்னபோதும் சரி அவர் உளரல் வெளிப்படையாய் தெரிந்தது. வழிகாட்டிகள் இல்லையென்றால் பின்னாலிருக்கும் பார்வைத்திறன் குறையுடையவர்களை வேறு கார்களுக்கு மாற்றி அனுப்பி இருக்கலாமே? உண்மை நிலை அதுவல்ல. அங்கு கார்களும் குறைவாக இருந்தது உதவியாலர்களும் குறைவாக இருந்தனர். ஆனால் பார்வையற்றவர்கள் மட்டும் அதிகமாக இருந்தனர். அதைச்சொல்ல எத்தனித்துதான் அவர் ஏதேதோ சொல்லிமுடித்தார்.

எங்கள் கார் கிளம்பியது. நான் விளக்கப்படத்தை படிக்க ஆரம்பித்தேன். ஓட்டுனர் முதளிலேயே வழியை தவர விட்டுவிட்டார். ”நீங்க சொன்ன லெஃப்ட் வரவே இல்லையே!” என்றார் ஒட்டுனர் வருன்.
ஃபர்ஸ்ட்ல இருந்து படிங்க?” என்றார் அவர். நானும் படித்தேன். திரும்பவும் படித்தேன். எங்கு நின்று கொண்டிருந்தோம் என்றும் சரியாக புரியவிலை. நானும் வருனும் குழம்பிக்கொண்டிருந்தோம்.
ஃபர்ஸ்ட்ல இருந்து படிங்க?” இந்த முறை சொன்னது ஓட்டுனர் இல்லை. பின்னாலிருந்த ஒரு பார்வைத்திறன் குறையுடையவர். நான் அவரை பொருட்படுத்தாமல் வருனிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தேன். யார் யாரிடமோ வருன் காரின் ஜன்னலை திரந்து விலாசத்தை கேட்டுக்கொண்டிருந்தார். ஒருமுறை நானும் வேறு வழியில்லாமல் கேட்டேன். சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தோம்.

நான் வேணும்னா படிக்கட்டுமா?” என்று பின்னால் இருந்த அதே நபர் குரல் எழுப்ப எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நான் மருபடிஉம் கண்டுகொள்ளாமல் ஓட்டுனர் வருனிடம் எங்கிருக்கிறோம் என்பதை கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஜி, நீங்க என்ன பண்ணுரீங்கனா, பொருமையா ஃபர்ஸ்டு பேஜில இருந்து படிங்க, இல்லாட்டி எங்க கிட்ட அந்த ரூட் மேப்ப குடுங்க. நாங்க படிக்கிறோம்.” என்று மருபடியும் குருக்கிட்டார். இந்த பக்கம் ஓட்டுனர் முதலிலேயே வழியை தவரவிட்டு கடுப்பேத்த, மருபக்கம் அந்த பின்னால் இருந்தநபர் அவ்வப்போது ஏதாவது சொல்ல கோபம் எகிரியது. அதுவும் குறிப்பாக நான் பிரெயில் வாசிப்பதை மட்டமாக எண்ணியபோது என்னாலேயே பொருத்துக்கொள்ள இயலவில்லை. நான் நன்றாகவே வாசிப்பேன். வழியை தவரவிட்டால் நான் என்ன செய்யமுடியும்? வருனையும் குறை சொல்ல முடியாது. ஏனனில் அவருக்கு இந்த பயணம் புதிது. நாற்பது கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும். நாங்கள் இன்னும் முறையாக தொடங்கவே இல்லை. சொல்லப்போனால் அது எனக்குதாண் தலைவலி. அதற்குதாண் ஒரு உதவியாலரையாவது தர சொன்னேன். அப்படித்தராவிட்டாலும் பரவாயில்லை. இப்படி தேவையில்லாமல் இன்னும் இரண்டு பார்வைத்திறன் குறையுடையவர்களை ஏற்றிவிட்டிருந்ததுதான் ஏமாற்றமாகவும் வெருப்பாகவும் இருந்தது. என்னடா பார்வையற்றவனாகிய நானே என்னைப்போன்றோரை வெருக்கிறேன் என்று தவறாக எண்ணவேண்டாம். எனது பிரச்சினை அவர்கள் பார்வையற்றவர்கள் என்பதில் இல்லை. முன்பின் தெரியாதவர்கள் என்பதில்தான். எனக்கு தெரிந்த அல்லது எனக்கு பரிட்சையமான பார்வையற்றவர் யாரேனும் காருக்குள் ஏறி இருந்தால் நிலைமைத்தெரியாமல் குருக்கிட்டு கோபப்படுத்தி இருக்கமாட்டார்கள். சொல்லப்போனால் உதவியாக இருந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் உள்ளே வந்தவுடன் அதிர்ச்சியானேனே தவிற கோபம் வரவில்லை. நார்ப்பது கிலோமீட்டர் பயணத்தில் இருவது கிலோமீட்டரை நாம் படித்து வழிகாட்டிவிட்டு மிச்சமிருக்கும் இருவது கிலோமீட்டரை அவர்களிடம் கொடுத்துவிடலாம் என்றும் யோசித்துவைத்திருந்தேன். அவர்களும் என்னைப்போன்றோர்கள்தானே என்று தோன்றாமல் இல்லை.
அதே சமையம் உதவியாலர்கள் இல்லை என்பதும் பிரச்சினை இல்லை. இதற்கு முந்திய ராலியில் தமிழே தெரியாதவரை வைத்து கிட்டத்தட்ட தனியாலாக பயணத்தை முடித்திருக்கிறேன். அதை இந்த வலைதலத்தில் எழுதியும் இருக்கிறேன்.
ஆனால் பின்னால் இருந்தவர்நாங்க படிக்கிறோம்.” என்று சொன்னது, அதுவும் நாங்கள் வழியை தேடிக்கொண்டிருக்கும்போது சொன்னது எனது ஈகோவை எட்டிப்பார்க்கவைத்தது.
கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வரீங்களா?” என்று அவரை கத்தவேண்டும்போல இருந்தது. ஆனால் என்னைநானே அடக்கிக்கொண்டு, ”கொஞ்சநேரம் இருங்க பாஸ்.” என்று சொன்னேன். நிமிடங்கல் கடந்தன. முதல் திருப்பத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. ”பேசாமல் சும்மா சுற்றிவிட்டு திரும்பிவிடலாம் சார்.” என்று வருனிடம் சொல்லலாம் என்றுகூட தோன்றியது. ஒரு வழியாக ஓட்டுனர் வழியை கண்டுபிடித்துவிட்டார்.
அப்பாடா.” என்று மூச்சை இழுத்துவிட்டபோது உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வதாக உணர்ந்தேன். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல் மார்ஷலிடம் வண்டியை நிருத்தியபோது நிம்மதியாக இருந்தது. நாந்தான் அட்டையை கொடுத்து கையெழுத்து வாங்கினேன். அவர்கள் நீட்டிய அட்டையில் வருன் கையெழுத்திட்டு கொடுத்தார். நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து ஆசுவாச படுத்திக்கொண்டேன். ஆனால் நிமிர்ந்து உட்கார முடியவில்லை. நெஞ்சை ஏதோ இருக்கி பிடித்ததைபோல ஒருணர்வு. தொண்டைக்குள் ஏதோ சிக்கியதுபோலொரு உணர்வு. கண்டுகொள்ளாமல் வருனை வழிநடத்திக்கொண்டே, பின்னால் இருப்பவர்களின் பெயர்களை விசாரித்தேன்.

ஒருவர் பெயர் தர்மராஜ். அவர்தான் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தவர். இன்னொருவர் சுப்புராஜ். ஆரம்பத்திலிருந்தே அமைதியாய் இருந்தார். என்னை விசாரித்தார்கள். நானும் விசாரித்தேன். அதற்கு பிறகு பயணம் நன்றாகவே போயிக்கொண்டிருந்தது. வருன் பையில் இருந்த லேஸ் பாக்கட்டை எடுத்து
லேஸ் சாப்புடிரீங்களா வினோத்?” என்றார். நான் வேண்டாம் என்றதும் அவர் அதை சரக்கென்று பிரித்துவிட்டு வண்டி சிக்னலில் நின்றபோதெல்லாம் நொருக்கினார். பிறகு மோமோவை எடுத்தார்.
வினோத் மோமோ?”
வேனாம் சார்.” என்றேன்.
ஏன் வினோத் சாப்புட மாட்டீங்களா?” என்று கேட்க நான் ஆமாம் என்று சொல்ல, அவர் மோமோவையும் சாப்பிட்டார். இந்தமுறை சிக்னல் எல்லாம் இல்லை. வண்டி சென்று கொண்டிருக்கும்போதே மோமோவும் உள்ளே சென்று கொண்டிருந்தது.

பின்னாலிருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன்.
ரெண்டு பேரும் பிரெயில் படிப்பீங்களா?” என்று நான் கேட்க அவர்கள் ஆம் என்றார்கள்.
சரி அப்படினா நான் இருவது கிலோமீட்டர் படிச்சிட்டு தரேன். நீங்க ஆளுக்கு பத்து பத்தா ஷேர் பண்ணிக்கோங்க.” என்றதற்கு அவர்கள் சந்தோஷமாக சரி என்று சொன்னார்கள்.

அடுத்தடுத்து மார்ஷல்களை அடையாலம் கண்டுகொண்டோம். லேசின் வாசமும், உள்ளிருந்த குளிர் சாதனமும், நெஞ்சை இருகி பிடித்திருந்த பெல்ட்டும் ஏதோ செய்துகொண்டிருந்தன. எனது உடலின் நிலமையை மோசமாக்கிக்கொண்டிருந்தன. அந்த பெல்ட்டை மட்டும் மார்பில் படாமல் ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் பிரெயில் விளக்கப்படத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். வருனும் காரை செலுத்தி கொண்டிருந்தார். ஒரு எட்டு கிலோமீட்டரை கடந்திருப்போம்.
”எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுரீங்களா?” என்று வருனை நான் பார்த்து கேட்க,
”சொல்லுங்க!” என்றார் மிகுந்த அக்கரையுடன்.
”கொஞ்சம் ஏசிய ஆஃப் பண்ணிட்டு விண்டோவ திரந்துவிட முடியுமா?”
”குளுருதா வினோத்?” என்றார்.
”இல்ல கொஞ்சம் ஃப்ரெஷ் ஏர் கெடச்சா நல்லா இருக்கும்.” என்றேன்.
ஜன்னலை திரந்தார். நானும் சமாலித்துக்கொண்டு வழியைப்படித்து சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் குளிர்கிறதா என்று கேட்டதைத்தான் ஜீரனிக்க முடியவில்லை.

கடந்த ஜனவரி மாதம் குடும்பத்துடன் கொல்க்கத்தாவிற்கு சென்றிருந்தோம். அங்கு வெப்பநிலை பதினைந்து டிகிரிக்கு கீழிருந்தது. இரவில் எட்டு டிகிரியாக இருந்தது. ஆண்கள் பென்கள் மட்டுமல்லாமல் அங்கிருந்த ஆடுகளுக்கு கூட ஸ்வெட்டர்களை அணிவித்திருந்தார்கள். ஆனால் ஒரு நான்கு பேர் மட்டும் ஸ்வெட்டர் ஏதும் போடாமல் வெரும் சட்டையைப் போட்டுக்கொண்டு திமிராக திரிந்து கொண்டிருந்தார்கள். அதில் மூன்றுபேர் என் தந்தை, அண்ணன் மற்றும் என் மாமா. அவர்களாவது பரவாயில்லை. அந்த கொல்கத்தா குளிரில் காலையில் குளிப்பதற்கு வெந்நீரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் நான்காவதாய் இருந்தவந்தான் குளிரைப்பற்றி கொஞ்சம்கூட பயப்படாமல் கிட்டத்தட்ட பனிக்கட்டி போலிருந்த பச்சைத்தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல. நாந்தான்.
என்னைப்போல் குளிர்கிறதா என்று கேட்டாரே என்று தோன்றியது. இயற்கையாக இருக்கும் குளிர் பிடிக்கும். ஆனால் குளிர்சாதனம் துளி கூட பிடிக்காது.

கார் அதன் போக்கில் போய்க்கொண்டிருந்தது. என்னால் சமாலிக்கமுடியவில்லை. அந்த பெல்ட்டை எப்படியாவது கழற்றிவிடவேண்டுமென்று நினைத்தேன்.
”இந்த பெல்ட்ட லூஸ் பண்ண முடியாதா?” என்று வருனிடம் கேட்டேன். அவர் முடியாது என்றார். எப்படி கழற்றுவது என்று தெரியவில்லை. தேடிக்கொண்டிருந்தேன். முன்னிருக்கையில் இருப்பவர் சீட்பெல்ட்டை அணிந்திருக்கவேண்டும். மார்ஷல்கள் பார்த்தால் தண்டனைப்புள்ளிகளை அளித்துவிடுவார்கள். ஆனால் அது நமக்கு தெரியாது. இது வழிகாட்டிக்கும் பொருந்துமா என்று யோசித்தேன். வேறு யோசனை தோன்றியது. பின்பக்கமாக திரும்பி,
”உங்க ரெண்டுபேருல யாராச்சும் முன்னாடி வரீங்களா? நான் பின்னாடி இருந்துக்குறேன்.” என்றேன்.
”அதெல்லாம் வேனாம் நாங்க இங்க நல்லா செட்டிலாகி இருக்கோம். நீங்க அங்கேயே இருங்க.” என்றார் தர்மராஜ் விஷையம் புரியாமல். ச்சே இவங்க மட்டுமில்லனா நாம பாட்டுக்கு ஃப்ரீயா பின்னாடி உக்கார்ந்திருக்கலாமோ என்று கூட தோன்றியது.

ஒரு பதிமூன்று கிலோமீட்டரை கடந்திருப்போம். வாந்தி வருவதுபோல் இருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சுவிடமுடியாததுபோல் இருந்தது. உடல் கட்டுப்பாட்டை இழந்தது. நான் மார்பில் ஒட்டிக்கொண்டிருந்த பெல்ட்டைக் கையால் விளக்கிக்கொண்டே மெதுவாக முன் பக்கமாய்ச் சரிந்தேன்.
”என்னங்க ஆச்சு!” என்று வருன் பதரினார்.
”ஒன்னுல்ல சார். ஒன்னுமில்ல ஒன்னுமில்ல.” என்று சொல்லிக்கொண்டே நான் அடுத்து செல்லும் இடத்தை படித்தேன். சில நிமிடங்கள் கழிந்தடு நிமிர்ந்தேன். பெல்ட்டை கழற்றினால்தான் வேளைக்காகும் என்று தேடிக்கொண்டிருந்தேன்.
பொதுவாக விமானத்தில்தான் பெல்ட் எப்படி அணிவது என்று குழம்புவார்கள். எனது நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. நாங்கள் கொல்கத்தாவிற்கு முதன்முதலாக விமானத்தில் சென்றபோது பணிப்பெண் வந்து எனக்குசீட் பெல்ட் அணிவிக்கும் முன்பு நானே அணிந்து கொண்டேன். என்ன செய்ய? பெரிய விஷையங்களை எளிதாக செய்பவர்களின் மானம் சிறு விஷையங்களில் போயிவிடுகிறது. நான் தேடிக்கொண்டிருந்ததைப்பார்த்துவிட்டு வருன் அதை ஒரு நொடியில் கழற்றிவிட்டார். அவமானமாக இருந்தது. அதைவிட பயமாக இருந்தது. மார்ஷல் கண்ணில் பட்டால் தண்டனைப்புள்ளிகள் கொடுப்பார்கள். வருனிடம் விஷையத்தை சொன்னேன். சொல்லிவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன்.

”பிஸ்கேட் சாப்பிடுரீங்களா வினோத்?” என்றார் வருன் சில நேரம் கழித்து.
”இல்ல வேணாம் சார். நான் சாப்பிடமாட்டேன்.” என்றேன்.
”அப்போ என்னதான் சாப்பிடுவீங்க?” என்று கோபமாய் கேட்டார். எனக்கே வாந்தி வருவது போல இருந்தது. இப்போதுபோய் இப்படி கேட்கிறாரே என்று நினைத்துக்கொண்டே,
”ட்ராவலிங்ல சாப்பிட மாட்டேன் சார்.” என்றேன்.
பேசாம இவரு கிட்ட வண்டிய நிருத்திட்டு ஒரு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக்கொடுக்க சொல்லலாமா என்று தோன்றியது. ச்செ என்ன நினைப்பார் நம்மைப்பற்றி? என்று நினைக்கும்போது கேவலமாக இருந்தது. பொதுவாக மலைப்பிரதேசங்களில் பயணம் செய்யும் சிலருக்கு இப்படியான உடல் பிரச்சினை வரும். ஆனால் எனக்கு அங்கெல்லாம் வந்ததில்லை. எனது நேரம் இங்கு மாட்டிக்கொண்டேன்.

ஒருவழியாக இருவது கிலோமீட்டரை தாண்டி இருந்தோம். நானும் கையிலிருந்த மேப்பை பின்னால் திரும்பி தர்மராஜிடம் கொடுத்தேன். சுப்புராஜ் அதை வாங்கி மெல்லமாகப் படித்தார்.
”சத்தமா படிங்க! அப்போதான சாருக்கு கேட்கும்.” என்று கத்தினேன்.
திடீரென்று காரின் ஜன்னல்கள் மூடப்பட்டன. வருனை நோக்கித்திரும்பினேன்.
”அவர் படிக்குரது இப்போக்கூட கேக்கலங்க.” என்றார். புரிந்துகொண்டு எதுவும் பேசாமல் முன் பக்கமாக சாய்ந்தேன்.
திடீரென்று வருன் என் தோளை மிக மெதுவாக தொட்டு,
”பெல்ட் போடுங்க! இங்க மார்ஷல் இருக்காங்க!” என்றார். நானும் பதரியடித்து எழுந்து பெல்ட்டை தேடுவதற்குள்,
”வேனாம் போடாதீங்க பக்கத்துல வந்துட்டோம்!” என்றார் மெதுவாக.
அந்த மார்ஷலிடமும் கையெழுத்து வாங்கிவிட்டு நகர்ந்தோம். தண்டனைப்புள்ளிகளை அளித்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே,
”பாஸ் என்னால முடியல. முன்னாடி பெல்ட் போட்டு உட்கார முடியல. பெல்ட் போடலனா பெனால்டி கெடைக்கும். வீனா பெனால்டி வாங்க கூடாதுனா யாராச்சும் முன்னாடி வாங்க.” என்றேன் பின்னால் திரும்பி .
”என்னாச்சு?” என்றா தர்மராஜ்.
”அவருக்கு மூச்சு விட முடியல.” என்றார் வருன்.

அண்ணா மேம்பாலத்துக்கு கொஞ்சதூரத்தில் முன்பு நான் இறங்கி தர்மராஜை முன்னிருக்கையில் அமரவைத்தேன். மார்ஷலிடம் கொடுக்கவேண்டிய அட்டையையும் தர்மராஜிடம் கொடுத்தேன். காருக்கு வெளியே நின்ற அந்த பத்து நொடிகள் ஓரளவுக்கு ஆசுவாசத்தை தந்தது.
பின்னால் சென்று அமர்ந்ததும் கார் கிளம்பியது. கொஞ்சம் சோர்வாக இருந்தது. யாரிடமாவது சொல்லவேண்டும் போல இருந்தது. வீட்டில் உள்ளோரிடம் சொன்னால் பதரி விடுவார்கள். யாரிடம் சொன்னால் எதுவும் செய்யமுடியாதோ, அதே சமையம் யாரிடம் சொன்னால் நிம்மதியாய் இருப்பதாய் உணர முடியும் என்று யோசித்தேன். முதலில் மூளைக்கு எட்டிய பெயர், ’சுவேதா.’
அலைபேசியை எடுத்தேன். மிஸ்டு கால்கள் வந்திருந்தன. உள்ளே பார்த்தால், ‘சுவேதா.’
அதே சமையம் குருஞ்செய்தியும் வந்திருந்தது. யாரென்று பார்த்தேன். ’சுவேதா.’
யாரிந்த சுவேதா? இதுவரை ஒருமுறை கூட நேரில் சந்தித்ததில்லை. பிறகெப்படி ஒரு நல்ல தோழியாக மாறினாள்? அதுவும் நான் ஆருதல் தேடும் அளவிற்கு? என்று எண்ணியபோது வியப்பாக இருந்தது

தொடரும்.

2 comments:

  1. படிக்கிர எங்கலுக்கே மூச்சு திணர்ரமாதிரி ிருக்கே, ுங்கல நெனச்சா!

    ReplyDelete
  2. அடுத்த போஸ்டுல சரி பண்ணிடலாம்.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube