நாம் செய்யும் மிகச்சிறிய தவறுகள்தான் யாரோ ஒருவரை பெரிய அளவில் பாதிக்கிறது. அப்படி ஒரு தவறைத்தான் நேற்று வங்கியில் கவணக்குறைவால் செய்துவிட்டேன். ஆனால் அதை சரி செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை.
இப்போது அதுதான் ஒரு பெரிய பாவத்தை சுமக்க நேரிடுமோ என்று பயமாய் இருக்கிறது. எவன் ஒருவன் தன்மீது இருக்கும் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறானோ அவனே பிறரைக் குற்றம் சொல்லவும் தகுதியானவன் என்பது எனது நம்பிக்கை. அதன் அடிப்படையில்தான் இந்த பதிவையும் எழுதுகிறேன்.
நேற்று
ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தார்.
அவரது மனைவிக்கு பண அட்டை (debit card) வந்திருக்கிறது
என்று வங்கியில் இருந்து அழைப்பு வந்ததாக சொன்னார். நாங்கள்தான்
அழைத்திருந்தோம். இப்போது அதை வாங்கவேண்டுமாம். வங்கிக்கு வரலாமா என்று கேட்டார். எங்கள் வங்கியை பொருத்தவரையில்
பண அட்டைகளை சம்மந்தப்பட்ட நபர் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கிளைக்கு வந்துதான்
பெற்றுக்கொள்ளவேண்டும். வீட்டிற்கேல்லாம் அனுப்ப மாட்டார்கள்.
கணக்குக்கு சொந்தக்காரர்தான் வரவேண்டும் என்று சொன்னேன்.
தனது மனைவி
கர்பமாக இருப்பதாகவும் பயணம் செய்வது சிறமம் என்றும் சொன்னார். பிறகு இரு வினாடி கழித்து
’சரி சார், இன்னைக்கு கூட்டிட்டு வந்து கார்டு வாங்கிக்கிறேன்’
என்றார்.
நான் சரி
என்றேன்.
’மூனு மணிக்கு கூட்டிட்டு வரலாமா சார்?’ என்றார்.
நான் சரி வாங்க என்று சொல்லிவிட்டேன். அங்குதான்
தவறு செய்து விட்டேன். அந்த நேரத்தில் பண அட்டை வழங்க முடியாதநிலை. ஆனால் வங்கி மாலை வரை இயங்கும் என்பதை மட்டும் மனதில்
வைத்துக்கொண்டு, தவிற சனிக்கிழமைகளில் மத்தியத்துக்குமேல் கூட்டம்
இருக்காது என்பதாலும், எளிதாக வேலை முடிந்துவிடும் என்று எண்ணியதாலும்
அவர்களுக்கு அட்டை கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் வர சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன்.
அதன் பிறகு அதை மரந்துவிட்டேன்.
சிலநேரம்
கழித்து ஒருவர் நேராக என்னிடம் வந்து,
’ஏ.டி.எம். கார்டு வேணும். மனைவிக்கு’ என்றார்.
’சார் ஆனா எல்லாரும் வேற வேலைல இருக்காங்க. இன்னைக்கு முடியாது என்றேன்.
’ஆனா காலைல ஃபோன் பண்ணதுக்கு மூனு மணிக்கு மேல வந்தா ஒன்னும் பிரச்சினை இல்லனு
தான சொன்னாங்க? அதனாலதானே நான் இவங்கள கூட்டிட்டு வந்தேன்.’
அப்போதுதான்
நினைவுக்கு வந்தது. தவறு செய்து விட்டேன்.
அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
யோசிக்காமல்
வர சொல்லிவிட்டோமே. என்று நினைத்து என்ன செய்வதென்று நானும் குழம்பி விஷையத்தை பிறரிடம் சொன்னேன்.
வங்கியிலிருந்தவர்களுக்கு
இவர் அழைத்தது ஏதும் தெரியாது.
’மண்டே அவர வரச் சொல்லுப்பா’ என்று ஒருவர் சொன்னார்.
’காலைல ஃபோன் பண்ணாங்க சார். வர சொல்லிட்டேன் சார்.
சார் அவங்க கன்சீவ்னு நெனைக்கிறேன் சார்.’ என்றேன்.
வங்கியிலிருந்த இன்னொரு
ஊழியர் ஒருவர்,
உடனே அந்த வாடிக்கையாளரின் கனவரிடம் ‘திங்க கிழம வாங்க சார்.’ என்றார்.
’நான் ஃபோன் பண்ணிட்டு தானெ வந்தேன்?’ என்று அந்த வாடிக்கையாளரின்
கனவர் சொல்ல
அந்த
ஊழியர் ’இல்ல நு சொல்லல. திங்க கிழம நீங்க வாங்க.’ என்றார்.
’இவங்கள அடிக்கடி கூட்டிட்டு வரமுடியாது.’ என்றார்
அந்த பெண்ணின் கனவர்.
’நீங்க வாங்க. ஒரு லெட்டர் மட்டும் இவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு வாங்க. உங்க நெலம புரியுது. இங்கையும் இப்பிடி ஆயிடிச்சு.’
’அப்போ நான் மட்டும் வந்தா போதுமா?’ என்றவரிடம்,
’வாங்க’ என்று சொல்லி அனுப்பினார் அந்த ஊழியர்.
அதிகார
கடிதத்தை (authorization
letter) கொண்டுவாருங்கள் என்று
சொல்ல எனக்கு அதிகாரமில்லை. இல்லையென்றால் நானே கூட சொல்லியிருப்பேன். நல்லவேலை உடனிருந்தவர்கள் உதவினார்கள்.
ஆனால்
ஒன்று மட்டும் உண்மை. ஒரு சிறு கவன குறைவாலும் நினைவில் வைத்திருக்கவேண்டிய விஷையத்தை மரந்ததாலும்
ஒரு கர்பிணியை அலைய வைக்க வேண்டியதாகப்
போயிற்று. அதற்கு நாந்தான் பொருப்பும் கூட.
திங்களன்று கூட்டிவாருங்கள் என்று சொல்லி இருந்தால் நாளையே வந்திருப்பார்கள்.
தேவையில்லாமல் அலையவைத்துவிட்டேன்.
எப்படி
இருந்தாலும் இன்னும் சில மாதங்களுக்கு சம்மந்தப்பட்டவர் அந்த அட்டையை பயண்படுத்தப்போவதில்லை.
அந்த கர்பிணியின் கனவர்தான் பயண்படுத்தப்போகிறார் என்று நன்றாக
தெரியும். அப்படியே அட்டையின் உரிமையாளரின் பண அட்டையை இன்னொருவர்
(அது யாராக இருந்தாலும் சரி) பயண்படுத்தி அதில்
பணமெடுக்க முயன்று கணக்கில் பணம் கழிந்து, பணம் கைக்கு வராமல்
போனால் அவரால் சட்டப்படி புகார் கொடுக்க இயலாது என்று நீதிமன்றம் சில மாதங்களுக்குமுன்பு
ஒரு வழக்கில் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
ஆனால்
அதெல்லாம் அவர்களின் பாடு.
இப்போதைக்கு ஒன்று மட்டும்தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வாடிக்கையாளரின் கனவர் அதிகார கடிதத்தை பெற்று வந்து பண அட்டையை
வாங்கிச் செல்லும்வரை எனக்கு நிம்மதி இருக்காது. ஒருவேலை அந்த
பெண்ணின் கனவர் வந்து பண அட்டை வாங்குவதில் ஏதேனும் கையெழுத்துப்போன்ற நடைமுறை சிக்கல் ஏற்பட்டு மீண்டும்
திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த பாவத்தை நாந்தான் சுமக்க வேண்டியிருக்கும்.
Guilt always hearts but rectifies.
ReplyDeleteRelax வினொத். நிச்சயமாக திங்கள்கிழமை கொடுத்து விடலாம்.
ReplyDeleteThere's always a way out - when you are Frank and straight forward...