06 June 2018

ஒரு பயணம் -8.

Posted by Vinoth Subramanian | Wednesday, June 06, 2018 Categories: , , , ,


நாங்களேதான்.” என்றார் தர்மராஜ்.
ஜி, நாம ட்ராவல் பண்ண அந்த ரூட் மேப்ப குடுக்குரீங்களா? எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என்று நான் கேட்டதும் கொடுத்தார். இந்த பதிவை எழுதுவதற்காக நான் அதை எடுத்தபோதுதான் தெரிந்தது.
Please click here to read the previous post
அது அவர் பயணம் செய்த அதற்கு முந்தைய கார் பயணத்தின் விளக்கப்படமென்று. ஒலிம்பியா டெக்பார்க்கிற்கு பதிலாக சவேரா ஹோட்டல் என்று போட்டிருந்தது. நொந்துபோனேன். பார்த்தபோதே பரிசோதித்து வாங்கி இருக்கவேண்டும். அப்படி வாங்கியிருந்தால் இந்த பதிவின் ஆராம் பகுதியை இன்னும் சுவாரசியமாக எழுதியிருக்கலாம்.

சரி விஷையத்திற்கு வருவோம். சுற்றி உதவியாளர்கள் இருக்க, மேசையின்மீது உணவு வந்து சேர்ந்தது. எனக்கு வலது பக்கத்திலிருந்த உதவியாளர் எதிரிலிருந்த தர்மராஜிற்கு தட்டிற்குள் இருந்த உணவுகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தார்.
எனக்கு சப்பாத்தி வேனாம். இத வேற யாராச்சும் பயன்படுத்திக்கட்டும்.” என்றார் தர்மராஜ்.
இங்க அதெல்லாம் பண்ண முடியாது ஜி. ஒன்னு சாப்பிடலாம் இல்லனா அப்படியே வெச்சிடலாம். அவ்வளவுதான்.” என்றார் அந்த ஆண் உதவியாளர்.
யோவ்! அது என்ன டிஷ்யு பேப்பரா யா யாராச்சும் பயன்படுத்திக்க?” என்றூ நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
ஜி, உங்களுக்கு சப்பாத்தி வேணுமா?” என்றார் அந்த உதவியாளர் என்னிடம்.
அவருடையதையும் சேர்த்து வைங்க.” என்று சொல்லியிருப்பேன். ஆனால் என் மனது என்னிடம்இது என்ன லயோலா காலேஜ் மெஸ்ஸுனு நெனச்சியாஎன்று கேட்க,
சரிங்க சார்.” என்றேன்.
வைத்தார். சாப்பிட்டேன். பிறகு கொஞ்சம் உணவு, கொஞ்சம் காரகுழம்பு. அவ்வளவுதாண். ”போதும்என்றேன்.
பாஸ், நீங்க இன்னும் தொடங்கவே இல்ல.” என்றார் அவர்.
இல்ல போதும். அவ்வளவுதான்.” என்றேன் நான்.
என்ன பாஸ் நீங்க? தொடங்கரதுக்கு முன்னாடியே முடிச்சிட்டீங்க?”
இல்ல சப்பாத்தி வேற சாப்பிட்டேன்ல? அதுதான்.”
எது அந்த ஒன்னா? அட போங்க பாஸ்.”

உணவு நன்றாகதான் இருந்தது. ஆனால் நாந்தான் எனது உடல்நிலையை எண்ணி சாப்பிட பயந்தேன்.
ஜி, நல்லா சாப்புடுங்க ஜி.” என்றூ என்னைப்பார்த்து சொன்ன தர்மராஜ் உடனே, “சாம்பார் இருக்கா?” என்று அந்த உதவியாளரிடம் கேட்டு பிசியானார். நான் சிரித்துக்கொண்டேன். கை கழுவ யாராவது அழைத்து செல்வார்களா என்று காத்துக்கொண்டிருந்தேன்.

சாப்டீங்களா வினோத்?” என்று ஒரு பெண்ணின் குரல். அது பூர்னிதான். ஒருமுறை பார்த்ததற்கே என் பெயரை நினைவில் வைத்து அழைக்கிறார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகவும் ஆநந்தமாகவும் இருந்தது.
சாப்டேண் பூர்னி மேம்.” என்றேன்.
ஹேண்ட் வாஷ் பண்ண போகலாமா?” என்றூ அவர் என்னை கேட்க, நானும் எனது பையை அங்கேயே வைத்துவிட்டு எழுந்து அவருடன் சென்றேன். வாஷ்பேசனிடம் என்னை விட்டுவிட்டு விளகி எங்கேயோ சென்றார். நான் கையை அளம்பிவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றேன்.
அங்கேயே நில்லுங்க வினோத். வரேன்.” என்றார். நான் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் அந்த குழாய் பக்கம் திரும்பினேன்.
அது நின்னுடும்.” என்றார்.
நான் கைகளைத்துடைத்துக்கொண்டிருந்தபோதே,
ரெஸ்ட்ரூம் போகனுமா வினோத்?” என்று சற்றுதூரத்திலிருந்து சத்தமாக கேட்டார்.
இப்படி ஒரு ஆணிடம் ஒரு பெண் குறிப்பிட்ட தொலைவிலிருந்துரெஸ்ட்ரூம் போகனுமா?’ என்று கேட்டால் வராமலிருந்தால்கூட வந்துவிடும். வருவது போலிருந்தால் நின்றுவிடும். எனக்கு எப்படி இருந்தது என்றெல்லாம் தெரியாது. ஆனால் இல்லையென்று மட்டும் மெதுவாக சொல்லிக்கொண்டே வேகமாக தலையை ஆட்டினேன்.
சிலநொடிகளில் வந்து கையை பிடித்த பூர்னி என்னை அழைத்து சென்றுகொண்டே,
ஜேர்னி எப்டி இருந்திச்சு வினோத்?”
பரவாயில்ல மேம். நீங்க போனிங்களா?”
இல்ல. வாலண்டியர்ஸ் இல்லனாதான் நாங்க போவோம்.”
அட போங்க மேம் நீங்க வேற. நீங்க வந்திருக்கலாம். எனக்கெல்லாம் வாலண்டியர்சே இல்ல. மூனு விஷுவலி ஒரே காருல போனோம். நீங்க வந்திருக்கலாம் என்கூட.” என்றேன்.
, அப்படியா?”
பூர்னி மட்டும் என்னுடன் பயணம் செய்திருந்தால் அந்த பயணம் எவ்வளவு இனிமையானதாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். என் பையை எடுத்து கொடுத்தார்.
ஃபங்ஷன் ஹால்க்கு போயிடலாமா?”
ஓக்கே மேம்.” என்றேன்.
அந்த கலையரங்கிற்குள் என்னை அழைத்து சென்று அமரவைத்தார்.
தேன்க்ஸ்.”
ஓக்கே. பாய்.”

பூர்னி விடைப்பெற்ற சில நிமிடங்களில் கூட்டம் சேர்ந்தது. போட்டி முடிவுகள் வரும்வரை சிலர் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். வழக்கம்போல நண்பர் கனேஷும் பாடினார். முடிவுகளுக்காக காத்திருந்தோம். ஒருவேளை நமக்கு பரிசு கிடைத்தால் என்னைதான் விதிமுறைகளின்படி வழிகாட்டி என்றூ அழைப்பார்கள். அந்த இருவருக்கும் ஏதும் கிடைக்காது. வழக்கம்போல பணமாக கொடுத்தால் என்ன செய்ய? பாதியை கொடுத்துவிடலாம். இல்லையென்றால் முக்கால்வாசியை கொடுத்துவிடலாம். என்றூ முடிவுசெய்துகொண்டேன். அதே சமையம் பரிசு கிடைக்காது என்பதிலும் உறுதியாய் இருந்தேன். நினைத்ததுபோலவே எனக்கு கிடைக்கவில்லை. பரிசுகளைக் கொடுத்துவிட்டு திரு அரோரா சில நிமிடங்கள் பேசினார். இந்த திரளணியை ஏற்பாடு செய்து முழுதாய் பொருப்பேற்று நடத்திய ரவுண்ட் டேபில் (Round Table) என்ற தன்னார்வ தொண்டு நிருவணத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தார். சில துயரங்களுக்கு வருந்துகிறோம் என்று சொல்லும்போது எனக்கு பின்னாலிருந்த ஒரு பார்வைத் திறன் குறையுடையவர் எழுந்து,

சார்?” என்று சத்தமாக அழைக்க, அரங்கம் அமைதியானது.
மேடையிலிருந்தவர் அவரின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தார்.
அந்த பார்வையற்றவர் கொஞ்சம் தினரினாலும் ஆங்கிலத்திலேயே முயற்சி செய்தார்.
ஐ காட் டிரைவர், ஹீசெட் ஹீ கம் டொ மீ. ஹீ செட் மீ டொ வெய்ட். - - - வாஸ் வெய்ட்டிங். பட்- பட்- ஹீ நாட் கேம். நாட் கம். ஹீ வாஸ் நாட் கம் டு மீ. ஹீ வாஸ் வித் சம்படி. ஹீ வாஸ் ஆன் த ராலி. ஹீ வாஸ் ஹேப்பி.”
உடனே குருக்கிட்ட அந்த ரவுண்ட் டேபில் அமைப்பின் தலைமை நிர்வாகி,
சாரி சார். வீ அப்பாலஜைஸ் ஃபார் தேட். வீ ரியலி அப்பாலஜைஸ். (Sorry sir. We apologize. We really apologize for that.)”
ஆனால் அந்த பார்வைத்திறன் குறையுடையவர் விடவில்லை.
னோ சார். ஐ காட் டிரைவர்! ஹீ டாக்ட் டு மீ. பட்- பட்- ஹீ வெண்ட் வித் சம்வன்.”
வீ ஆர் சாரி சார். நெக்ஸ்ட் டைம் வீ வில் ரிசால்விட். (We are sorry sir. Next time we will resolve it.)”
பட் சார்,” என்று அந்த பார்வைஹ்திறன் குறையுடையவர் மீண்டும் பேச முயல, ஒட்டுமொத்த அரங்கமும் உச்சுக்கொட்டியது.

தேசிய பார்வையற்றவர் சங்கத்தின் தலைவர் திரு ராமமூர்த்தி கத்தியேவிட்டார்.
எவன் டா அவன்! அதுதான் பெரிய மனுஷங்க மண்ணிப்பு கேக்குராங்க இல்ல? திரும்ப திரும்ப பேசிக்கிட்டு இருக்க?”
அந்த பார்வைத் திறன் குறையுடைவர் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்தார். பொதுவில் மண்ணிப்பு கேட்ட அந்த நிர்வாகிகளின்மீது மிகுந்த மரியாதையும் கொஞ்சம் பறிதாபமும் தோன்றியது.  பொதுவெளியில் மண்ணிப்பு கேட்பது என்பது எல்லோராலும் முடியாது. பெரும்பாலானோர் ‘வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றுதான் சொல்வார்கள். அப்படி மண்ணிப்பு கேட்பவர்கள்மீது தன்னிச்சையாகவே ஒரு மதிப்பு தோன்றும் என்பதை அறிவார்ந்தவர்கள் மட்டுமே அறிவர். அதே சமையம் அந்த பார்வைத்திறனுடையவரைப் பார்க்கும்போதும் வருந்த தோன்றியது. அவரது பிரச்சினை கார் கிடைக்கவில்லை என்பதல்ல. ஓட்டுனர் ஒருவர் அவரிடம் வந்து நாமிருவரும் பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் இன்னொருவருடன் சென்றதுதான் ஜீரனிக்க முடியாமல் இருந்திருக்கும். ’இவனும் பாதிக்க பட்டிருக்கான்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். எல்லோரைப்போல எனக்கு அவர் தனது பிரச்சினையை சொல்லும்போது உச்சிக்கொட்டவெல்லாம் தோன்றவில்லை. பக்கத்திலிருந்திருந்தால் தோளில் தட்டி ’விடுங்க ஜி விடுங்க ஜி’ என்று ஆருதலாய் இரண்டு வார்த்தை சொல்லி தேற்ற முயன்றிருப்பேண். வேறு என்ன செய்ய? துரோகத்தின் வலிமை அத்தகையது. அது தரும் வலி அவ்வளவு கொடியது. அந்த பார்வையற்றவருக்கு இருதியில் அது அவமானத்தையும் தேடித்தந்தது என்பதுதான் ஜீரனித்துக்கொள்ளவேண்டிய உண்மை.

விழா முடிவிற்கு வந்தது.  எல்லார் கையிலும் ஒரு சிறிய ட்ராலி பேக்கை (trolley bag) கொடுத்து அனுப்பினார்கள். எல்லோரும் தேநிர் அருந்த ப்ரதான அரைக்கு வந்தோம். நான் ஏற்கனவே கொண்டுவந்திருந்த எனது மடிக்கணினி பையை (laptop bag) அந்த ட்ராலி பையில் வைத்தேன். அது கனக்கச்சிதமாக உள்ளே சென்றது. யாராவது கிண்டி ரயில் நிலையத்தில் கொண்டு விடுவார்களா என்று யோசித்தேன். ஒரு உதவியாளர் வந்தார். அவர் யாரிடமாவது கேட்டு சொல்வதாக சொன்னார். யாருடன் கூட்டணி வைப்பது என்றும் தெரியவில்லை. ஒரு மேசையில் அமரவைக்கப்பட்டேன். தேநீர் பிடிக்காது என்று சொல்லி சமோசாவை மட்டும் கொரித்தேன். பக்கத்து மேசையில் பூர்னி தன் தோழர்களுடன் வந்து அமர்ந்தார்.

”டீ சாப்பிடலையா வினோத்?” என்றார்.
”பழக்கம் இல்ல பூர்னி மேம்.” என்றேன் நான். அந்த இடத்தில் யாருமே எனக்காக இல்லாதபோது என் பெயரை அழைத்து விசாரிக்க முன்பின் தெரியாத ஒருவர் இருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது
நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தன. ஐந்து மணிக்குள் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்றூ நினைத்தேன். அவ்வாறு கிளம்பினால்தான் கடற்கரை ரயில் நிலையம் சென்று ஆறு மணிக்கு வரும் வேலூர் விரைவு மிந்தொடர்வண்டியை பிடிக்க இயலும். ஆனால் எனது ஆசை நிராசையானடு. யாராவது தெரிந்தவர்களிருந்தால் உடன் சென்றிருப்பேன். எப்போதும் கார் ஓட்டுனர்களே உதவுவார்கள். எனது ஓட்டுனர் அப்போதே கிளம்பிவிட்டார். அருகில் இருந்த பூர்னியை அழைக்கலாமா என்று யோசித்துவிட்டு ஒரு பத்து வினாடிகள் கழித்து,
”பூர்னி மேம்?”
”சொல்லுங்க வினோத்.”
”யாராச்சும் கிண்டி ரைல்வே ஸ்டேஷன் போரவங்க இருந்தா கேட்டு சொல்லுரீங்களா?”
”கண்டிப்பா வினோத். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. உங்கள பஸ் ஏத்திவிட யாராச்சும் வருவாங்க. டீ குடிச்சிட்டு இருக்காங்க.” என்று சொல்லிவிட்டு பூர்னி அவரின் நண்பர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார்.
”போன வருஷமெல்லாம் வாலண்டியர் கொச கொசனு வருவாங்க பூர்னி.” என்று சொல்லிக்கொண்டிருந்தார் அவரது நண்பர்.
அது உண்மைதான். இந்த வருடம் எல்லாமே குறைவு என்று நானும் நினைத்துக்கொண்டேன்.

அனைவரும் எழுந்தனர். அங்கிருந்த ஒருவர் என் கையை பிடித்துக்கொண்டு நடந்தார்.
”வேறு யாருக்காச்சும் ஹெல்ப் பண்ணனுமா டா? நான் போயி பாக்கவா?” என்று பூர்னி என்னுடன் இருந்த அவரது நண்பரிடம் கேட்டார்.
”சரி போயி பாரு.” என்று என்னுடன் இருந்தவர் சொல்லிவிட்டு என்னை கூட்டிக்கொண்டு வெளியே நடந்தார். பூர்னி திரும்பி வந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது. இன்னொருமுறை சந்திக்க போவதில்லை. வருகிறேன் என்றாவது சொல்லிவிட்டு போகலாம் என்று தோன்றியது. ஆனால் பூர்னி வரவில்லை.

”ரைல்வே ஸ்டேஷன் வாக்கபில் டிஸ்டன்ஸ்தான்” என்றார் வெளியிலிருந்த ஒருவர். ’அடப்பாவிகளா அதுக்குபோயி 150 வாங்கிட்டானே அந்த ஆட்டோகாரன்.’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். உடன் வந்தவரிடமும் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டேன்.
என்னுடன் வந்தவருக்கும் சென்னையைப் பற்றி எதுவும் தெரியவில்லை. சாலையை கடந்து எதிர்புரம் வந்தோம்.
என்னுடன் சிலரும் வந்தனர். நான் ஷேர் ஆட்டோ ஏதாவது வருமா என காத்திருந்தேன். எதுவும் வரவில்லை. பேருந்து வந்தது. நான் பேருந்தில் ஏறமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஓலாவை புக் செய்யலாம் என்றதற்கு உடனிருந்த உதவியாளர் கொஞ்சநேரம் காத்திருக்கலாம் என்று சொன்னார். இன்னொரு பேருந்து வந்தது. சில பார்வையற்றவர்கள் ஏறினார்கள். நான் ஏறவில்லை.
”ரைல்வே ஸ்டேஷன் பக்கத்துலதான் கொண்டு போயி விடுவாங்களாம் ஜி. அங்கிருந்து கொஞ்சம் தூரம்தான் நடக்கனுமாம்.” என்றார் ஒருவர்.
எனக்கு பயமாய் இருந்தது. தனியா வேறு செல்கிறோம். வேறு எங்காவது இறங்கிவிட்டால்?  சரி ஆட்டோவாவது வரட்டும் என்று  ஆட்டோக்காக காத்திருந்தோம். வரவில்லை. சரி இதற்குமேல் எனக்காக பிறரை காக்கவைப்பது சரியாக இருக்காது என முடிவுசெய்துகொண்டு பேருந்து வந்தால் ஏறிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். எனது நல்லநேரம் ஆட்டோ வந்தது.
உடன் இருந்தவர் முன்னே சென்று அதை நிருத்தி ஏதோ பேசிவிட்டு என்னிடம் வந்தார்.
”80 ரூ கேக்குராங்க.” என்றார். நான் உடனே சரி என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். உதவியாளர்களுக்கு நான் நன்றி சொல்ல ஆட்டோ கிளம்பியது.
அன்று காலையில் சந்தித்த ஆட்டோக்காரருக்கும் இவருக்கும் எவ்வளவு வித்தியாசம் அவரது நல்ல குணம் உணர்த்தியது. அவரிடம் நிறைய கேள்விகள் இருந்தன. நான் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன்.
”நான் இவ்வளவு அதிகமா கேக்கமாட்டேன். ஆனா சுத்தி போகனும் அதனாலதான் 80 ரூ கேட்டேன்.” என்றார். நான் எதூவும் சொல்லவில்லை
”எங்க இருந்து சார் வரீங்க?” என்றார் ஆட்டோக்காரர்.
”வேப்பம்பட்டு.”
”இங்க இன்னா சார்”
”கார் ராலி சார்.”
”இன்னாது சார்?”
”பந்தையம் சார்.”
”இன்னாது சார்?”
அவருக்கு புரியவில்லை என்று தெரிந்தது
”ஃபங்ஷன் சார்.”
”ஓஹோ. அதுதான் நெரியபேரு வந்துக்கிறீங்களா?”
”ஆமாம் சார்.”
”நீ இன்னா சார் பன்ற?”
”வேல செய்யுரேன் சார். பேன்குல.”
”ஆஹான்.”
”படிப்புலாம் எப்பிடி சார்?”
”படிச்சிருக்கேன்.”
”உங்குளுக்கெல்லாம் இஸ்கூல் ஏதோ இருக்குதுல?”
”ஆமாம் சார்.”
”எங்க சார் படிச்சீங்க?”
”அடையாரு.”
”நீங்க எல்லாம் எப்டி சார் படிப்பீங்க? எழுத்தெல்லாம் தெரியுமா?”
”இல்ல சார் அதுக்கு வேற மெத்தேட் இருக்கு. பிரெயில் நு சொல்லுவோம்.”
”இன்னா சார்?”
”தொட்டு தொட்டு படிப்போம்.”
”எக்சாம் லா எப்பிடி சார்?”
”நாங்க சொல்ல சொல்ல ஒருத்தங்க எழுதுவாங்க.”
”ஓஹோ. காலேஜி எங்க சார்?”
”லயோலா காலேஜ் சார்.”
”எது இந்த நுங்கம்பாக்கத்துல இருக்குதே. லைலா காலேஜி. அதுவா?”
”ஆமாம் சார்.”
”ஓஹோ. அங்க இன்னா சார் படிச்சிக்கீரீங்க நீங்க? டிகிரியா?”
”ஆமாம் சார். எம்ஃபில் படிச்சிருக்கேன்.”
”எது சார்? இந்த பி.ஏ. பிகாம்னெல்லாம் வருமே. அதுவா?”
”ஆமாம் சார்.”
”உங்குளுக்க்லாம் படிச்சாலே வேல குடுத்துருவாங்கல?”
”இல்ல சார். அதுக்கு எக்சாம் எல்லாம் எழுதனும்.”
”பேன்குல எப்பிடி சார் சேந்தீங்க?”
”அதுக்கு எக்சாம் இருக்கு. அது எழுதி பாஸ் பண்ணி”
”உங்களுக்கெல்லாம் படிப்பில்லனா அவ்லதான்ல?”
”ஆமாம் சார்.” என்றேன் நான். அதிலிருந்த உண்மை ஏதோ புரிந்தது போலிருந்தது.
”எந்த பேன்கு சார்? இந்தியனா?”
”இல்ல இந்தியன் ஓவர்சீஸ் சார்.”
”எங்க சார்?”
”ஊருலையே சார்.”
”அம்மா அப்பா எல்லாம் இருக்காங்களா?” என்றூ கேட்டவர் அவர்களின் விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
”கல்யானம் ஆயிடிச்சா சார்?”
”இன்னும் இல்ல சார்.” என்றேன் நான்.
அதன் பிறகு ஒரு சில நொடிகளுக்குள் கிண்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தோம்.

நான் இறங்கி நூறு ரூபாய் தாளை நீட்டினேன். அவ வாங்கிக்கொண்டார்.
”சேஞ்ச் வேணுமா சார்?” என்று கேட்டுக்கொண்டே இருவது ரூபாயை திருப்பி கொடுத்தார். எனக்கு வாங்கவேண்டாம் என்று முதலில் தோன்றிநாலும் பிறகு எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டேன். ஏனோ தெரியவில்லை. அவரை பிடித்திருந்தது.
”ரைல்வே ஸ்டேஷன் உள்ள யாராச்சும் போரதா இருந்தா அவங்க கூட என்னைய அனுப்பி விடுரீங்களா சார்?” என்று கேட்டேன்.
அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை அழைத்தார்.
”டேய். சார பத்தரமா கூட்னுபோயி டேசனுள்ள உட்டுருனம் சரியா?”
அவர் சொன்னதும் இருவர் வந்து என்னை பிடித்துக்கொண்டனர். நாங்கள் நடந்து செல்லும்போதே பின்னிருந்து அந்த ஆட்டோகாரர் அழைத்தார்.
”டேய். சார ஒழுங்கா உட்டுட்டு வரனும் சரியா?”
”அதெல்லாம் பக்காவா ட்ராப் பன்னிடுவோம் நா.” என்றான் என்னுடன் வந்த ஒருவன்.
”டே ப்லாட்ஃபார்ம் டிகட் எடுக்கலயே டா?” என்றான் அவன் உடன் வந்த இன்னொருவனிடம்.
”இல்ல அதெல்லாம் தேவயில்ல. யாராச்சும் உள்ள போரவங்களோட என்னைய விட்டுடுங்க. நான் அப்பிடியே போயிக்குரேன்.” என்றேன் நான் அவர்களிடம். அதை ஆமோதித்து அவர்களும் என்னை நடைமேடைக்கு சென்றுகொண்டிருந்த இன்னொருவரிடம் சேர்த்துவிட்டார்கள்.

அவருடன் நான் படிக்கட்டிலிறங்கும்போது கீழே நின்றுகொண்டிருந்த ரயில் புரப்பட தயாராகி கொண்டிருந்தது.
”ட்ரெயின் ஒன்னு நிக்குது.” என்றார் அவர்.
”வேகமா போனா பிடிச்சிடலாம் ல?” என்று நான் சொல்லிக்கொண்டே அவருடன் வேகமாக படிக்கட்டிலிரங்கினேன்.
”ஆமாம் வேகமா போனா பிடிச்சிடலாம்.” என்று சொல்லிக்கொண்டே அவரும் என்னை வேகமாக கூட்டிச்சென்றார். படிக்கட்டை முழுதாய் கடந்து நடைமேடையில் கொஞ்சதூரம் ஓடினோம். ரயில் புரப்பட்டுவிட்டது
”ரொம்ப கூட்டமா இருக்கு. ஆனாலும் பரவாயில்ல. பிடிச்சிடலாம் பிடிச்சிடலாம்.” என்று சொல்லிக்கொண்டே என்னுடன் இருந்தவர் என்னை ரயிலின் அருகே அழைத்து சென்றார்.
அவர் எனது வலது புரத்தில் என்னுடன் ஓடி வந்து கொண்டிருந்தார். ரயில் எனது இடது புரத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
”ஏறிடுங்க சார்! ஏறிடுங்க சார்!” என்றார் மிக அருகில் சென்றவுடன்.
நான் ரயிலின் கம்பியை பிடிப்பதற்காக இடது கையை நீட்டினேன். வாசலில் தொங்கிக்கொண்டிருந்த ஒருவரின் முதுகு கையில் தட்டுப்பட்டது. ரயில் நகர்வது கைக்கு தெரிந்தது. இந்த ரயிலை விட்டால் அவ்வளவுதான். பிறகு கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ஆறு இருவதுக்கு புரப்படும் திருத்தனி மின்விரைவு வண்டியை பிடிக்க முடியாது. அதைவிட்டால் அங்கு ஏழு பத்திற்குதான் வண்டி என்ற நினைப்பு என்னை நகர்ந்துகொண்டிருக்கும் ரயிலுடன் ஓட சொன்னது. நானும் ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடிவெடுத்தேன்.
”வேனாம் வேணாம்.” என்றார் ரயிலில் இருந்த ஒருவர். உள்ளே ’வேணாம்’ என்ற குரல் இரண்டு மூன்றாக ஒலிக்கத்தொடங்கியது.
”ஏறிடுங்க ஏறிடுங்க!” வலது புரம் இருந்தவர் ஊக்குவித்து கொண்டுதான் இருந்தார்.
கம்பி கையில் கிடைக்கவில்லை. கொஞ்சம் இடரினாலும் அவ்வளவுதான்.
”வேனாம். வேணாம். முடியாது!”
”ஏறிடுங்க!”
”வேணாம்!”
”ரீச் ஆகிட்டீங்க ஏறிடுங்க!”
”அடுத்த வண்டில வாங்க. வேணாம்!”

அடுத்த பதிவுடன் முடிகிறது.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube