”அன்னா
இங்கதான் வேல செய்யுராரு. அதுதாண் அவர பாக்கவந்தேன்.” என்று சொல்லி நடந்தார்.
பிறரை பிந்தொடர்ந்து கொண்டே வெளியே நடந்தோம். வெளியில்
வந்ததும் ஆட்டோக்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.
”எங்க போகனும்?” என்றார் ஒரு ஆட்டோ ஓட்டுனர்.
”ஒலிம்பியா டெக் பார்க்.” என்றேன். அவர் இன்னொருவரை அழைத்தார்.
”போகலாம் வாங்க ஸார்.” என்றவரிடம்,
”எவ்வலவு?” என்றேன் தாமதிக்காமல்.
”நூத்தி ஐம்பது ரூபா.” என்றார்.
”எது! இதுக்கு முன்னாடி நான் வந்திருக்கேனே! வெரும் என்பது ரூபாதான? இவ்வலவு டபிலா சொல்லுரீங்க?”
என்றேன்.
என்னை
கூட்டி வந்த அந்த புதிய இளைஞர் அருகில்தான் இருந்தார். ’இவன் ஸ்டேஷனுக்கு புதுசுனுதான
சொன்னான்’ என்று நினைத்திருக்க கூடும். அப்படி சொன்னால் ஆட்டோக்காரர்கள் குரைப்பார்கள் என்ற நம்பிக்கையில் சொன்னேன்.
”அதெல்லாம் கெடையாது சார். இப்போ நீங்க நிக்குரது ரேஸ்
கோஸ்ட்ல. இங்கிருந்து சுத்தி போகனும். எஸ்டேட்ல
இருந்து போனாதான் நீங்க சொல்லுர ரேட் எல்லாம் வரும்.” என்றார்
அந்த ஆட்டோ காரர்.
உரவினர்
ஒருவர் இருக்கிறார். பேரம் பேசுவதில் தங்கப்பதக்கமே கொடுக்கலாம். அப்படி பேரம்
பேசுவார். ஏதோ சண்டை போடுவது போலவே பேசுவார். எந்த ஊராக இருந்தாலும் சரி. களத்தில் இறங்கினார் என்றால்
கடைக்காரன் செத்தான். ஒரு தலைவாரும் சீப்பு பத்து ரூபாய் என்று
சொன்னால் கூட ஐந்து ரூபாய்க்கு கேட்பார். கேட்டிருக்கிறார்.
ஐந்து ரூபாய் என்று சொன்னால் ‘எங்க வீட்டுக்கிட்ட
இது மூனு ரூபா’ என்பார். மூன்று ரூபாய்
என்றால் ‘ரெண்டு ரூபாய்க்கு கூட வராது இந்த சீப்பு’ என்பார். சரி என்று கடைக்காரன் ஒத்துக்கொண்டு ஒரு
ரூபாய்க்கு கூட கொடுத்துவிடுவான். ஒருவேளை ஒரு
ரூபாய் என்று சொல்லி இருந்தால், ‘இதெல்லாம் நாங்க ஃப்ரீயாவே வாங்குவோம்’
என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.
ஆனால்
நான் அதற்கெல்லாம் சரி பட்டு வரமாட்டேன் என்று எனக்கே தெரியும். கொஞ்சநேரத்திற்கு மேல் பேரம்
பேச தெரியாது. கேட்டதை கொடுத்துவிடுவேன். ஆட்டோக்காரர் நூற்றி ஐம்பதுற்கு கீழ் இறங்கவில்லை.
ஓலாவைஓ
ஊபரையோ புக் செய்திருக்கலாம்.
ஆனால் நேரமில்லை. அப்போது ஏழு நாற்பதுக்குமேல்
ஆகியிருந்தது. அதற்கு முந்தினமே ஓலாவிலும் ஊபரிலும் எவ்வலவு ஆகும்
என்று பார்த்திருந்தேன். இவர் சொன்ன விலைக்கு பாதி கூட இல்லை.
”ஆனா 150 ரொம்ப அதிகம்.” என்றேன்.
”நான் நூத்தி அம்பதுதான் வாங்குரேன்.” என்றார்.
அருகிலிருந்த
அந்த இளைஞருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சென்னைக்கு புதிது என்பதால் அமைதியாக இருந்தார்.
நான் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அமைதியாக
ஏறி அமரச் சென்றேன். அந்த இளைஞர்தான் ஏற்றிவிட்டார்.
”இல்ல நான் வரல. இவர் மட்டும் தான்.” என்றார் அந்த இளைஞர் ஆட்டோக்காரரிடம். அந்த இளைஞரும்
என்னோடு வருவார் எண்று நினைத்துக்கொண்டு அவ்வலவு ரூபாய் கேட்டிருப்பாரோ என்று கூட தோன்றியது.
”தேன்க்ஸ் சார்.” என்று அந்த இளைஞரிடம் நான் சொல்ல ஆட்டோ
கிளம்பியது.
காலையில்தான்
ரயிலுக்கு பயணச்சீட்டு எடுத்து கொடுத்துவிட்டு மிச்ச சில்லரையை அப்பா கொடுத்தார். எழுவது ரூபாய் என்று நினைக்கிறேன்.
அதற்குள்ளாகவே பயணச் செலவு முடிந்துவிடும் என்று நினைத்தேன்.
ஆனால் பர்சை எடுக்க வைத்துவிட்டார் அந்த ஆட்டோ காரர். பர்சிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளையும், சட்டை பாக்கெட்டிலிருந்த
எழுவது ரூபாயிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் தாளையும் எடுத்து தனியாக வைத்துக்கொண்டேன்.
அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தாலும் பரவாயில்லை. பேசிய நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஒரு பதினைந்து நிமிடமாவது ஆட்டோவை ஓட்டினால்
நன்றாயிருக்கும் என நினைத்தேன்.
ஐந்து
நிமிடம் கூட இருக்காது. வண்டியை ஒலிம்பியா டெக் பார்க்கிற்குள் விட்டார். அங்கு
இருந்த ஒரு உதவியாளர் பார்த்துவிட்டார்.
“ஈவெண்டுக்கா வந்திருக்கீங்க?” என்றார் அந்த உதவியாளர்.
”ஆமாம் சார்.” என்றேன் நான் உள்ளிருந்தே.
”உள்ள கொண்டுபோயி விட்டுடவா?” என்றார் ஆட்டோக்காரர்.
நான் எதுவும் பேசவில்லை. இறங்கி கொண்டேன்.
“இதுக்கு போயி நூத்தி அம்பதா?” என்று கேட்கலாம் என்று
தோன்றியது. பிறகு என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு,
”நூத்தி அம்பதா சார்?” என்று மட்டும் கேட்டேன்.
அவர் வாய்
திறக்கவில்லை. மேல் பாக்கெட்டிலிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு
“நூத்தி அம்பதா?” என்றேன்.
”ஆமாம் சார். சரிங்க சார்.” என்றார்.
நான் பணத்தை
கொடுத்துவிட்டு ஒரு நிமிடம் அங்கேயே நின்றேன். அது நூற்றி ஐம்பது ரூபாய்க்கான
பயணமில்லை என்பது அவருக்கு தெரியும். எனக்கும் தெரிந்திருக்கும்
என்று அவர் உணர்ந்திருப்பார் என நினைத்து ஒரு சில நொடிகள் அங்கு நின்றேன். ஒருவேளை மனம் மாறி மிச்ச பணத்தை திருப்பி தருவாரோ என ஒரு கணம் யோசித்து நின்றேன்.
அவரின் குரலில் குற்ற உணர்ச்சி புலப்பட்டதாக உணர்ந்தேன். மீண்டும்
“சரிங்க சார்.” என்றார்.
”நாம போகலாமா?” என்று அந்த உதவியாளர் கேட்க,
”ஓகே.” என்றேன் நான்.
என்னை
அறைக்குள் கொண்டு போயி விட்டார் அந்த உதவியாளர். ஒருங்கிணைப்பாளர் மட்டும் இருந்தார்.
பெரிதாக கூட்டமே இல்லை. நான் சென்று அவர் முன்பு
நின்றேன். “கொஞ்சநேரம் கழிச்சு கூப்பிடுரேன்.“ என்றார். சரியென்று இருக்கையில் சென்று அமர்ந்தேன்.
சரியாக
மணி ஏழு ஐம்பத்து நான்கு. ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். சில நிமிடங்கள் கழித்து
ஒருங்கினைப்பாலரிடம் எனது வருகையை நினைவு படுத்தினேன். அவரும்
சரி என்று சொன்னார்.
மீண்டும்
சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
ஒரு பெண்மணி வருகை பதிவேட்டை எடுத்துக்கொண்டுவந்தார். அதில் ஏற்கனவே கார் ராலிக்கு பதிவு செய்தவர்களின் பட்டியல் இருந்தது.
ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்குதான் முதல் உரிமை. தவிற என் பெயரை ஒரு மாதத்திற்கு முன்பே தொலைபேசியில் அழைத்து பதிவு செய்து
கொண்டார்கள். மருபடியும் ஒருமுறை இரண்டு நாட்களுக்கு முன்பும்
கேட்டு உறுதி செய்து பதிவு செய்து கொண்டார்கள்.
பட்டியலில்
இருக்கும் பெயரையும் பதிவு செய்தோர் பெயரையும் ஒவ்வொருவரிடமாக கேட்டு சரிபார்த்து குறித்துக்கொண்டு
வந்தார். எனக்கு
முன்னால் ஒரு பெண்ணிடம் கேட்டுவிட்டு என்னிடம் வர யாரோ அந்த பெண்மணியை அழைத்துவிட்டார்கள்.
சென்றுவிட்டு ஒரு இரண்டு நிமிடம் கழித்து வந்தார்.
”உங்க பேரென்ன?”
“வினோத்.” என்றேன் நான். அவர் அந்த
பதிவேட்டை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.
ஒரு சிரிய
மௌனத்திற்கு பிறகு,
”என்ன சொன்னீங்க?”
”வினோத்.”
”வினொத்தா?”
”ஆமாம் மேடம். வினோத்.”
”ரெஜிஸ்டர் பண்ணீங்களா?”
”பண்ணேன்.”
”லிஸ்ட்ல பேரில்லையே!” என்று சொல்லிவிட்டு அங்கு வந்த யாரிடமோ பேசத்தொடங்கினார்.
‘லிஸ்ட்ல பேரில்லையா? ரெண்டு வாட்டி ஃபோன் பண்ணி கேட்டாங்களே.‘
என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ’இந்த ரெஜிஸ்ட்ரேஷன்
வெரிஃபை பண்ணுர மேடமோட வாய்ச எங்கேயோ கேட்டிருக்கோமே?’ என்றும்
தோன்றியது. உடனே மூளைக்குள் பொறி தட்டியது. அதே சமையத்தில் பேசிக்கொண்டிருந்த பெண்மணியும் என்னிடம் திரும்பி,
”ஆனா வினோத்… உங்க பேரு இதுல…” என்று
நிருத்தினார்.
தொடரும்.
0 comments:
Post a Comment