22 December 2018

ஒரு நிமிடம்.

Posted by Vinoth Subramanian | Saturday, December 22, 2018 Categories: , , ,



சில நாட்களுக்கு முன்பு நண்பர் திரு மோஹன்ராஜ் அழைத்திருந்தார். ஒரு புதிதான அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு வந்திருப்பதாக தெரிவித்தார். என்ன என்று கேட்டதற்கு நம்மை வைத்து ஒரு விழிப்புணர்வு செய்ய திட்டமிட பட்டிருப்பதாக சொன்னார்.

அவர் விஷையத்தை விளக்கியதும் நான் சரி என்று சொல்லிவிட்டேன். பிறகு அது சம்மந்தமான ஒரு குரல் பதிவை புலனத்தில் (வாட்ஸப்பில்) அனுப்பினார். அந்த பதிவை நான் கேட்டதும் உடனே முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் முதலில் சரி என்று சொன்னதால் எனது பெயரை கொடுத்துவிட்டதாகவும் சான்றிதழ் கூட தயார் செய்துவிடுவார்கள் என்றும் கூறியதால் அறை மனதோடு ஒத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் நண்பர் சொன்னபடியே எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்திருந்தேன். அவரோடு சேர்ந்து இன்னும் சில நண்பர்களும் வந்திருந்தார்கள். துவக்க விழா தினத்தந்தி அலுவலகத்தில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நான் அதற்கெல்லாம் செல்லவிரும்பவில்லை. ஒருங்கிணைப்பாலர் மட்டும் சென்றிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து நானும் நண்பர் மோஹன்ராஜும் ரயில் நிலையத்தை விட்டு சம்மந்த பட்ட இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தோம். வழியில் நின்று கொண்டிருந்த காவளர்கள் எங்களை தடுத்து அங்கிருந்த எழும்பூர் சிக்னலில் நிருத்தினர். அங்கிருந்த ஒருவர் எனது கையில்  ஒரு காகித கட்டை கொண்டுவந்து கொடுத்தார். அவை துண்டு ப்ரசூரங்கள் என்று தெரிந்துகொள்வதில் எனக்கு நீண்டநேரம் பிடிக்கவில்லை. அங்கிருந்த ஒலிபெருக்கியில் ஒரு பார்வைத்திறன் குறையுடையவர் பேசிக்கொண்டிருந்தார். நான் வாட்ஸப்பில் கேட்ட அதே வாக்கியங்கள். சிக்னல் போடும்போதெல்லாம் பேச வேண்டும்.  துண்டு ப்ரசூரங்களை வினியோகிக்கவேண்டும்.

வாகன நெரிசலில் ஆம்புலன்ஸுகளுக்கு எப்படி வழிவிடவேண்டும் என்று விளக்கி அதன் முக்கியத்துவத்தை விவரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் அது. முக்கியமான ஐந்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென வலியுருத்திக்கொண்டிருந்தார்கள். அதையும் சிக்னலில் வாகனங்கள் நிற்கும் ஒரு நிமிடத்திற்குள் விவரித்துவிடவேண்டும். அந்த ஒரு நிமிடத்திற்குள் என்ன விழிப்புணர்வை உருவாக்க முடியுமோ அதை செய்துவிடவேண்டும். சிக்னல் விழுந்ததும் ஓரமாய் வந்துவிட வேண்டும். அடுத்தமுறை சிக்னல் போடும்போது மீண்டும் முன்னே சென்று மற்றவர்கள் துண்டு ப்ரசூரங்களை வினியோகிக்க, பார்வைத்திறன் குறையுடையவர், ஆம்புலன்சுகள் சாலையில் வரும்போது மக்கள்  கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை விளக்கவேண்டும்.

சாலையில் பயணம் செய்யும்போது ஆம்புலன்சுகள் வரும்போது வேகத்தை குறைக்கவேண்டும், இடது பக்கம் செல்லும் வாகனங்கள் இண்டிகேட்டர் போட்டு வண்டியை இடது பக்கமாக நிருத்தவேண்டும், நடுவில் வரும் வாகனங்களுக்கு இடது பக்கம் இருக்கும் வாகனங்கள் முன்னே வந்து நிற்க வழி கொடுக்கவேண்டும், வலது பக்கமாக இருக்கும் வாகனங்கள் சாலையின் நடுவே வரவேண்டும், அப்படி வந்ததும் பின்னால் வரும் ஆம்புலன்சானது எந்த தடையும் இன்றி முன்னால் சென்றுவிடும். இந்த விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்று எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு தன்னார்வ தொண்டு நிருவணத்துடன் பார்வைத்திறன் குறையுடையவர்கள் இனைந்து எடுத்த முயற்ச்சிதான் இந்த விழிப்புணர்வு ப்ரச்சாரம். சில நிமிடங்கள் கழித்து நானும் நண்பர் மோஹன்ராஜும் அங்கிருந்து கிளம்பி ரயில் நிலையத்தை அடைந்தோம். சென்னையிலுள்ள ஒரு சில சிக்னல்களில் இந்த விழிப்புணர்வு ப்ரச்சாரத்தை மேர்க்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி. கொஞ்ச நேரம் கழித்து அழைப்பு வந்தது. போதுமான அளவு பார்வைத்திறன் குறையுடையவர்கள் வராததால் ஒவ்வொரு சிக்னலுக்கும் ஒரு பார்வைத்திறன் குறையுடையவர் என்று திட்டமிடவிருப்பதாக செய்தி காதில் விழுந்தது. தனியாகவெல்லாம் செல்லவிரும்பவில்லை. என்னையும் மோஹன்ராஜையும் பிரித்தால் அங்கிருந்து ஓடிவிடலாம் என்று நானும் திட்டமிட்டுக்கொண்டேன். இருதியில் சிக்னல்களை ஒதுக்கினார்கள்.

செண்ட்ரல் சிக்னலுக்கு யார் செல்வது என்று கேட்டதும் நானும் மோஹன்ராஜும் ஒத்துக்கொண்டோம். எங்களுடன் ராகினி என்ற ஒரு பார்வைத்திறன் குறையுடைய பெண்ணும் இருந்தார்.
மூவருமாய் சேர்ந்து செண்ட்ரல் சிக்னலை அடைந்தோம். அங்கு ஒரு தனியார் தொண்டு நிருவணத்தை சேர்ந்த ஒருவர் எங்களை ரிசீவ் செய்து ப்ரதான சிக்னலுக்கு அழைத்துச்சென்றார்.

காவல்துறையிடம் ஏற்கனவே அனுமதி பெற்றுதான்  இருந்தோம். எழும்பூர் சிக்னலுக்கு துணை ஆனையர் கூட வந்து ஆதரவு அளித்திருந்தார். ஆனால் செண்ட்ரல் சிக்னலை அடைந்ததும் நிலைமை வேறு விதமாக இருந்தது. அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் அந்த தொண்டு நிருவனத்தை சேர்ந்த பெந்தான் அனுமதி பெற்றுக்கொண்டிருந்தார். முதலில் தயங்கி பிறகு அனுமதி வழங்கப்பட்டது.

சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போதெல்லாம் பேசவேண்டும். நாங்கள்தான் பேசவேண்டும். ஒரு நிமிடத்திற்குள் பேசவேண்டும். பார்வையற்றவர்களை வைத்து விழிப்புணர்வு செய்தால் மக்கள் கேட்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

அந்த தனியார் தொண்டு நிருவனத்தை சேர்ந்த பெண் எங்கள் மூவரையும் வாகனங்கள் நின்றதும் கொண்டு போய் நிருத்தினார். ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த மற்றும் நாங்கள் கேட்ட ஸ்கிரிப்டை ஒரு முறை மனதில் நிலைநிருத்திக்கொண்டேன். இதில் மோஹன்ராஜுடன் டிஸ்கஷன் வேறு.  ஸ்டார்ட் பண்ணுங்கஎன்று அந்த பெண் சொல்ல, ’மேடம் நீங்க ஒருடைம் ட்ரையல் காமிங்கஎன்று அவரையே பேசவைத்தோம். அந்த பெண் சத்தமாக  பேசிவிட்டு ப்ரசூரங்களை சிக்னலில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் வினியோகித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் என்னை பேசவும் சொன்னார். நான் ஒரு இரண்டு பாஇண்டுகளை பேசிவிட்டுமிச்சத்த பேசுடாஎன்று மோஹன்ராஜை தட்டினேன். அவர் பேசிமுடித்தார். சிக்னல் முடிந்தது. நாங்கள் பின்னே ஓடிவந்தோம். வாகனங்கள் முன்னே சென்றன.
நீங்க கொஞ்சம் வாஇச ரெய்ஸ் பண்ணி பேசுங்கஎன்றார் அந்த தொண்டு நிருவன பெண். எழும்பூர் சிக்னலில் துவக்கவிழா என்பதால் ஒலிபெருக்கியெல்லாம் வைத்துக்கொண்டிருந்தார்கள். இங்கு அதெல்லாம் கிடையாது. வாகனங்களின் இரைச்சலில் கத்தவேண்டும். ‘நானெல்லாம் க்லாஸ் ரூம்ல செமினார் எடுக்குரேன்ற பேருல கத்துனாலே கடைசி பென்ச்சில இருக்கவனுக்கு கேக்காது. பத்தாததுக்கு மார்க் போடுர வாத்தியாரு போயி லாஸ்ட் பென்ச்சில உக்காந்துக்குவாரு. இதுல இந்த சிக்னல்ல யாருக்கு நாம பேசுரது கேக்க போகுது?’ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே சிக்னல் விழுந்தது. பிறகென்ன? ஒருமுறை நானும் அடுத்தமுறை சிக்னல் விழும்போது மோஹன்ராஜும் மாறி மாறி கத்திக்கொண்டிருந்தோம். அவராவது ஒரு நிமிடம் பேசினார். நானெல்லாம் முப்பது வினாடிக்குள் முடித்துவிட்டேன்.

நீங்க பேசுரது பின்னாடி இருக்க யாருக்கும் கேக்க மாட்டிங்குது சார்.’ என்று அந்த போக்குவரத்து காவலரும் எங்களிடம் சொன்னார். வேறு வேறுவழியில்லையென்று எனக்கும் புரிந்தது. ஒலிபெருக்கியோடு சென்றிருந்தால் அந்த முயற்ச்சி எதிர் பார்த்ததைவிட நன்றாகவே வந்திருக்கும். என்ன செய்ய?

ஒரு நான்கு ஐந்து முறை சிக்னல் போடும்போதெல்லாம் கத்திவிட்டு முடித்தோம். ‘சரி கெளம்புங்க மேடம்என்றார் அந்த போக்குவரத்து காவலர். ‘ஒரு மணி நேரம் அவேர்னஸ் குடுக்கனும் சார்என்றார் அந்த தொண்டு நிருவன பெண்.
அதெல்லாம் கஷ்டம் மேடம். இது மெய்ன் சிக்னல்என்று அவர் மறுக்க அந்த பெண் கொஞ்சம் கெஞ்சி இன்னும் கொஞ்ச நேரத்திற்கு அனுமதி பெற்றார். பிறகென்ன? நானும் மோஹன்ராஜும் இன்னும் ஒரு நான்கைந்து முறை கத்திக்கொண்டிருந்தோம். ஞாயமாக ப்ரச்சாரம் செய்துகொண்டிருந்தோம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த இரைச்சலில் நாங்கள் பேசியது யாருக்கும் கேட்கவும் இல்லை கேட்டவர்களுக்கு புரியவும் இல்லை. அதனால்தான் கத்திக்கொண்டிருந்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.  மற்றபடி அந்த நோக்கம் உன்னதமானதுதான்.
இந்தமுற சிக்னல் விழும்போது நீங்க இங்கேயே இருங்க. நாங்க பேம்ப்லெட்ஸ் மட்டும் குடுத்துட்டு வந்திடுரோம்என்று அந்த பெண் சொல்லிவிட்டு செல்ல, நாங்கள் தனியாக நிற்பதை அந்த போக்குவரத்து காவலர் பார்த்துவிட்டுஅவ்வளவுதானா சார்?’ என்று கேட்க நான் உடனே ஆமாம் என்று வேகமாக தலையை ஆட்ட, எங்களை அங்கிருந்து அழைத்து சென்று ஓரமாக நிருத்தினார்கள். ஆளுக்கு ஒரு தர்பூசனியும் கிடைத்தது. ஆனால் யார் வாங்கிக்கொடுத்ததென்று தெரியாது. நான் வேண்டாமென்று சொல்லி கொடுத்துவிட்டேன்.

ப்ரசூரங்களை வினியோகித்துவிட்டு திரும்பிய பெண்ணுக்கு நாங்கள் அங்கில்லாதது கண்டு கொஞ்சம் அதிர்ச்சி. அங்கிருந்து வந்துஎன்ன ஆச்சு?’ என்று அந்த பெண் கேட்ககூட்டிட்டு வந்துட்டாங்க மேடம்என்றேன் நான்.
இருந்திருந்தால் இன்னும் ஒரு இரண்டு சிக்னலுக்கு நின்று இருப்போம் என்றுதான் நினைக்கிறேன்.

பேம்ப்லெட்ஸ யாரும் வாங்க கூட மாட்டிங்குராங்கஎன்றார் அந்த பெண். கிட்டத்தட்ட ஏழாயிரம் ப்ரதிகளை அச்சிட்டிருந்தார்களாம். என்று அவர்களுடன் வந்த ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் அந்த இடத்தைவிட்டு கிளம்பினோம். நாங்கள் விழிப்புணர்வு ப்ரச்சாரம் செய்துவிட்டு பின்னால் வரும்போது  இடையில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது
ஏண்டா எரும மாடு. ஆம்புலன்ஸ் வருதுல? ஒதுங்கி நிக்க மாட்ட?’ என்று எங்களுக்கு அனுமதி அளித்த அந்த போக்குவரத்து காவலர் ஒரு வண்டிக்காரனை பார்த்து கத்தியது மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அதைத்தான் அவர் தினமும் செய்கிறார் என்றும் புரிந்தது.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube