05 May 2020



காரில் நான், எனது இடது பக்கத்தில் கஸ்தூரி மாமி, அவருக்கு இடப்புரமாக சத்தியா மாமி, எங்களுக்கு பின்னால் இருக்கையில் அவரது கணவர் பாலு மாமா, தாய்மாமா விஜயகுமார், அவரது மனைவி ரஞ்சினி, அவர்களது மகள் தீபா மற்றும் முன் இருக்கையில் கஸ்தூரி மாமியின் மகளான ராதா ஆகியோர் அமர்ந்திருந்தோம். எனது வலது பக்கத்தில் அர்ச்சனா அமர்ந்திருந்தாள்.

கார் பெரியப்பாளையத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. இந்த பெரியப்பாளையம் விவகாரம் இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டில் துவங்கியிருந்தது. நான் வேண்டாமென்றும் என் அம்மா திருமணம் முடித்தவுடன் பெரியப்பாளையம் போயே ஆகவேண்டும் என்று இருவரும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருந்தோம். சத்திரத்தில் திருமணம் செய்தால் பரவாயில்லை. ஒரு கோவிலில் திருமணத்தை முடித்துவிட்டு இன்னொரு கோவிலுக்கு செல்வதை அப்போதிலிருந்தே மிக கடுமையாக எதிர்த்துக்கொண்டிருந்தேன் நான். இத்தனைக்கும் அது எங்கள் குலதெய்வம் கூட கிடையாது. அப்படி என்றால் சிவபெறுமான் மட்டும் மட்டம் பெரியப்பாளையத்தம்மன் ஒஸ்தியா என்று கூட கேட்டுக்கொண்டிருந்தேன்.  அப்போதைக்கு அமைதியாய் இருந்துவிட்டு கடைசிநேரத்தில் காரில் இருந்தவர்களை கிளப்பிவிட்டுவிட்டார் அம்மா.

ஆனால் இப்போது மட்டும் அதே எதிர்ப்பை காட்டினோம் என்றால் காரின் உள்ளே இருப்பவர்கள் ஒருவழி செய்துவிடுவார்கள். உள்ளே இருந்த சில பெண்களுக்கு பெரியப்பாளையத்தம்மன் மீது கொஞ்சம் எக்ஸ்ட்ரா லவ் வேறு. முடியாது என்று முரண்டுபிடித்தால் அவ்வளவுதான். கஸ்தூரி மாமிக்கு அங்கேயே சாமி வந்துவிடும். அறைகுறை மனதுடன் அந்த பயணத்தை ஏற்றுக்கொண்டிருந்தேன் நான். அதற்காக பெரியப்பாளையம் செல்லப் பிடிக்காது என்பதெல்லாம் இல்லை. திருமணம் முடிந்த கையோடு வீட்டிற்கு சென்றுவிட்டால் கொஞ்சம் இளைபாரி கொள்ளலாம் என்ற சோம்பேரித்தனம்தாண். 

மாலையெல்லாம் கழட்டிடுரியா? எறங்கும்போது போட்டுக்கலாம்.” என்றார் கஸ்தூரி மாமி. நான் தாமதிக்காமல் கழட்டிவிட்டிருந்தேன். மொத்தம் மூன்று மாலைகள். அதுவரை ஐம்பது கிலோ எடை இருக்கும் ஒரு ஆறாம் வகுப்பு சிறுவன் கழுத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தது போலிருந்த எனக்கு இப்போது கழுத்து லேசாக ஆகிப்போயிருந்தது போலிருந்தது. அவளும் அவள் பங்குக்கு தனது மாலைகளை கழட்டி இருந்தாள்.

எனக்கு அலைபேசியை பார்க்கவேண்டும் போல இருந்தது. இவர்கள் கிளப்பிவிட்ட அவசரத்தில் எதெது யார் யார் பையில் சென்று சேர்ந்ததோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எதையாவது அறையிலேயே விட்டுவிட்டிருப்பார்களோ என்ற பயம் வேறு. ஆனால் அம்மாதிரியான நேரங்களில் அறையில் இருக்கும் எதையும் பெரும்பாலும் விடமாட்டார்கள். ஆனால் அது யார் பையில் சென்று சேர்ந்திருக்கும் என்றுதான் கண்டு பிடிக்கமுடியாது.

அந்த நேரத்தில் யாருடைய பை கண்ணில் தென்படுகிறதோ அவர்களது பையில் இன்னொருவரின் பொருள் திணிக்கப்பட்டிருக்கும். பிறகு பிரித்துக்கொள்ளலாம் பிறகு பிரித்துக்கொள்ளலாம் என்று எண்ணியே பல பொருட்களை பல பைகளுக்குள் சென்று சேர்த்திருப்பர். அதைப் போட்டவர் நினைவு வைத்திருந்தால் தப்பித்தோம். இல்லை என்றால் பொருளின் உரிமையாளர் தேடவேண்டியதுதான். அப்படித்தான் அன்று மாலை எனக்கு சொந்தமான ஒன்றை தேடவேண்டியதாய் போயிற்று. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.

இப்போதைக்கு எனது அலைபேசி ராதாவிடம் இருந்தது. நான் அது எங்கிருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு காரில் ஏறும்போதே தன்னிடம் இருப்பதாக ராதா சொன்னார். கார் கிளம்பிய சிறிது நேரத்தில் வாங்கிக்கொண்டேன். வாட்ஸப்பை திறந்தபோது தோழி சுகண்யாவின் குருஞ்செய்தியை பார்க்கமுடிந்தது. திருமணமானதும் அலைபேசியின் வாயிலாக கிடைத்த முதல் வாழ்த்து அவளுடையதுதாண் என்று நினைக்கிறேன். பதில் அளித்தேண் என்றூதான் நினைக்கிறேண்.

பிறகு சில நிமிடங்கள் கழித்து என்னிடம்  அலைபேசியை வைத்துக்கொள்ள இடமில்லாததால் ராதாவிடமே திரும்ப கொடுத்துவிட்டிருந்தேன். எல்லோரும் அவரவர் பங்குக்கு ஏதேதோ சம்பாஷனையில் ஈடுபட்டிருந்தனர். நான் மட்டும் அதிகம் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.

சற்றுமுன் நடந்தவை எல்லாம் ஒரு கனவு மாதிரி வந்து போய்க்கொண்டிருந்தது எனது மூளையில். குறிப்பாக தாலி கட்டிய அந்த தருனம். அதற்கு எந்த அளவிற்கு பயந்தேனோ அந்த அளவிற்கு அதன் மீதான கற்பனையும் கொஞ்சம் இருக்கத்தான் செய்திருந்தது. அதை எண்ணியபோது கற்பனைகளுக்கும் உண்மைகளுக்கும் இடையில் இருக்கும் தூரத்தை இன்னொருமுறை உணர முடிந்தது.

தாளி கட்டும்போது இல்லையென்றாலும் கட்டிய பின்பு ஒரு சில செயல்களை செய்வது போல கற்பனை செய்துவிட்டிருந்தேன். அது திட்டமா கற்பனையா என்று தெரியாது. நிறைவேறினால் திட்டம். இல்லையென்றால் கற்பனை. அவ்வளவுதான். அதன்படி  தாலிகட்டியவுடன் நான் அணிந்திருக்கும் கண்ணாடியை கழட்டிவிடவேண்டும்.  இரண்டு கைகளையும் மேளே உயர்த்தவேண்டும். எனது கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வரவேண்டும். சந்தோஷத்தில் உதடுகள் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கவேண்டும். அர்ச்சனாவின் உள்ளங்கையையோ அல்லது அவளையோ அணைத்து பிடித்தபடி ஒரு சில நொடிகள் நிற்கவேண்டும். தாலி கட்டியவுடன் அவள் காதில் அல்லது அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் என்ன சொல்லவேண்டும் என்றுகூட யோசித்திருக்கவில்லை என்பதை நினைத்தபோது எனக்கே சிரிப்பு வந்தது.

அதாவது பரவாயில்லை. தாலி கட்டிய கையோடு அர்ச்சனாவிடம்
‘தி லெட்டர் டு மை வைஃப், the letter to my wife,’
’ தி லெட்டர் டு மை ஃபியூச்சர், the letter to my future,’
‘தி லெட்டர் டு மை லேடிலவ், the letter to my ladylove’
என்ற ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதை வடிவிலான கடிதமாகவோ அல்லது சத்திய பிரமானமாகவோ எழுதி கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதில் ஒருவரியை கூட எழுதவில்லை. எழுதினால்தானே கொடுப்பதற்கு? எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமில்லையா என்று தோன்றியது அந்த கார் பயணத்தில் எனக்கு.

நான் எனது சிந்தனையிலிருந்து வெளியே வருவதற்கும் எங்களது அப்போதைய இலக்கான பெரியப்பாளையம் வருவதற்கும் சரியாக இருந்தது.
இறங்குவதற்குமுன் கஸ்தூரி மாமி இடம் இருந்த மாலைகளைப் பெற்றுக்கொண்டு அதை எனது கழுத்தில் அனிந்தும் கொண்டேன். காரின் வலது பக்கமாக அர்ச்சனா இறங்கினாள். அவளைப் பின் தொடர்ந்து நானும் இறங்கினேன்.

இறங்கி நடக்கும்போது காலில் வேட்டி ஏதோ சிக்குவது போலிருந்தது. அவ்வளவு நேரம் அமர்ந்துவிட்டு எழுந்ததில் அந்த வேட்டி அதன் இயல்பில் ஏதோ மாறி இருந்தது. இருக்கத்திலெல்லாம் பிரச்சனை இல்லை என்றாலும் நடக்கும்போது சிரமமாக இருந்தது. ராதாதான் கொஞ்சம் சரி செய்திருந்தார். பிறகு விஜி மாமா (விஜயகுமார்) ஏதோ முயல ஏதோ கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்ததுப்போலிருந்தது. பற்றாத குறைக்கு எனது காலிலிருந்த மெட்டி வேறு. அது காலிலிருந்து கழண்டு எனக்குமுன் எங்கேயோ ஓடுவதிலேயே குறியாய் இருந்தது.

உள்ளே செல்ல இதுதான் வழி அதுதான் வழி என்று ஆளாலுக்கு ஒன்றை காட்டி கடைசியில் விஜயகுமார் மாமா காட்டியவழியில்தான் போக முடிந்தது. படிகட்டுகளில் ஏறி இறங்க அந்த வேட்டி மிகுந்த சிரமத்தை கொடுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் காலில் சிக்கிக்கொண்டது.

”இன்னும் செட் ஆகலயாடா இது? என்னதான் இருந்தாலும் பாலாஜி அண்ணா கட்டிவிடுரா மாதிரியும் சரி செய்யுரா மாதிரியும் வராதுல?” என்றார் ராதா. அது உண்மைதான். உள்ளே மிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மெதுவாகவும் சென்று கொண்டிருந்தேன் நான். ராதாவின் கைப்பையில் இருந்த எனது அலைபேசி அலரியது.

பவானியம்மனின் சன்னதியை அடைந்திருந்தோம். அன்று வெள்ளிக்கிழமை என்பதே அந்த ஊர் மக்களுக்கு நினைவு இல்லை போலும். அவ்வளவு காலியாக இருந்தது கோவில். நாங்கள் அனைவரும் சாமி கும்பிட ஆரம்பித்திருந்தோம். மறுபடியும் அலைபேசி அலரியது. கண்டுகொள்ளவில்லை. யாரோ வாழ்த்து சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்களோ என நினைத்தேண்.

சாமி கும்பிட்டுவிட்டு உள்ளே இருக்கும் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டோம். மூன்றாம் முறை அலைபேசியின் சத்தம்.  யாரோ வாழ்த்து சொல்ல முயற்சிக்கிறார்களோ என்று நான் முதலில் நினைத்ததை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்திருந்தேன். தவிர கோயிலுக்குள் இருக்கும்போது அலைபேசியில் உரையாடுவது அவ்வளவு நன்றாக இருக்காது என்று தோன்றியது. கொஞ்சநேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம்.

நான்காவதுமுறை.

”யாரோ ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்காங்கல? வெளியில போயி எடுத்துக்கலாம்.” என்றார் ராதா. நானும் “இம்.” என்றபடி மேலே நடந்தேன்.

வரும்வழியில் ஒவ்வொரு சன்னதியாக நின்று கும்பிட்டு சுற்றிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு இடத்தில் நிற்கும்போதும் விஜி மாமா அவரிடமிருந்த சில்லறைகளை அங்கிருந்த தட்டுகளில் போட்டுக்கொண்டிருந்தார். அவரிடமும் சில்லறை இல்லை. பத்து பத்து ரூபாய்களாக அவரும் காணிக்கையாக செலுத்திக்கொண்டிருந்தார்.

முதல் சன்னதியில் காசைப் போட்டார். ஐந்தாவதுமுறை அலைபேசி அடித்தது.
”இத்தனைமுறை எனக்கு கால் வராதே!” என்று நினைத்தபடியே நகர்ந்தேன். அடுத்து ஏதோ ஒரு சாமியைக் காண்பித்து கும்பிட சொன்னார்கள். ஆறாவதுமுறை அலைபேசியின் சத்தம். ”ஏதோ தப்பா இருக்கே.” என்றது ஆழ்மனம். அங்கேயும் காணிக்கை போடப்பட்டது. மாமாதான்.
”அப்பா ஏதும் சில்லற கொடுக்கலையா” என்று கேட்டபடியே எனது கையில் காசை கொடுத்து போடவைத்தார். அந்த சன்னதியை சுற்றிவந்து பிறகு அடுத்த சன்னதிக்கு சென்றோம்.

ஏழாவதுமுறை அலைபேசி அடித்தது. இந்தமுறை ராதாவுக்கு கொஞ்சம் பயமாகி இருக்கவேண்டும். ராதா எனது கையில் அலைபேசியை எடுத்து கொடுத்தேவிட்டார். அங்கேயும் மாமா காணிக்கை செலுத்தினார்.  அவரது பணத்தை இப்படி கரைத்துக்கொண்டிருக்கிறோமே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால் அவர் எனக்காக அப்படி காணிக்கைச் செலுத்துவதைப் பார்க்கும்போது உள்ளூற கொஞ்சம் உவகையாகத்தான் இருந்தது. ஏனென்றால் என்னைப் பொருத்தவரையில் அது ஒரு அறிய நிகழ்வு.

ஆனால் எனக்கு அந்த காணிக்கை செலுத்துவது, அர்ச்சகர் தட்டில் காசு போடுவது, வெளியில் துலசிமாலைகளையும் கதம்ப மாலைகளையும் வாங்கிக்கொண்டுவந்து உள்ளிருக்கும் சாமிக்குப்படைப்பது, காசு கொடுத்து அர்ச்சனை சீட்டு வாங்கிக்கொண்டுபோய் அர்ச்சனை செய்துகொள்வது, தேங்காய் செட்டுகளை வாங்கிக்கொண்டுபோய் உள்ளே உடைப்பது, கற்பூரம் வாங்கிப்பொய் உள்ளே கொளுத்துவது, அகள்விளக்கு கொளுத்துவது, நெய்விளக்கு ஏற்றுவது, இவற்றை எல்லாம் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமல் செய்வது, எல்லாவற்றிற்கும் மேல் உள்ளிருக்கும் கடவுளிடம் நீ இதை செய்தால் நான் உனக்கு அதை செய்கிறேன் என்று அக்கிரிமெண்ட் போடுவது, வியாபாரம் பேசுவது போன்ற பழக்கமெல்லாம் கிடையாது.

கோயிலுக்குள் போவேன். கையெடுத்து கும்பிடுவேன். விபூதி குங்குமம் கொடுத்தால் வாங்கிக்கொள்வேன். இல்லை என்றால் அமைதியாக வந்துவிடுவேன். அவ்வளவுதான்.

நான் கேட்டு எந்த தெய்வமும் என்னை படைக்கவில்லை. நான் கேட்காமலேயே என்னை உருவாக்கிய அந்த கடவுளுக்கு எனக்கு எது தேவை எது தேவை இல்லை என தெரியும். இதுதான் எனது புரிதல் எனது நம்பிக்கை எல்லாம். அந்த நம்பிக்கையில்தான் அந்த கோயிலையும் சுற்றி வந்துகொண்டிருந்தேன்.

எட்டாவதுமுறையாக அடித்த அந்த அலைபேசியை ஒற்றைக்கையால் இயக்கமுடியவில்லை. எனது இன்னொரு கையை யாரோ பிடித்திருந்தார்கள். ராதாதான். அழைத்தவர் யார் என்றாவது பார்த்துவிடவேண்டும் என்று தோன்றியது.

சென்சாரில் விரலை வைத்தபோது அலைபேசி ஏற்றுக்கொல்ளவில்லை. இன்னொருமுறை வைத்தேன். அலைபேசி திறந்தது. நான் உள்ளே சென்று பார்ப்பதர்க்குள் ஒன்பதாவதுமுறை அடித்தது. எனது இன்னொரு கையை விடுவித்துக்கொண்டு அலைபேசியின் மேல் கவரை திறந்து அழைப்பை எடுப்பதர்க்குள் அது விடுபட்ட அழைப்பாகி பொய் இருந்தது.

எப்படியோ உள்ளே சென்று விடுபட்ட அழைப்புகளை பார்த்தேன். அண்ணாவிடமும் அப்பாவிடமும் இருந்து மாறி மாறி அழைப்புகள் வந்திருக்கின்றன. என்னமோ நடந்திருக்கிறதோ என்று தோன்றியது.
”யாருடா? இன்னும் ஒன்னே ஒன்னு இருக்கு சுத்திட்டு வந்திடலாம்.” என்று கேட்டுக்கொண்டும் சொல்லிக்கொண்டும் ராதா என்னை அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

நானும் நடந்துகொண்டே அப்பாவை அழைத்தேன். அவர் விஷையத்தை சொன்னார். அண்ணாவை அழைத்தேன். அவனும் அதே விஷையத்தை சொன்னான்.  அலைபேசியில் அடுத்தவரிசையில் கையை வைத்தேன். மூன்றாவதாக ஒரு மனிதர் அழைத்திருக்கிறார். அதைப் பார்த்த அந்த நொடி எனக்கு அதிர்ச்சி குழப்பம் தெளிவு என்று எல்லாம் ஒரே நொடியில் உதையமானது.

இதர்க்கு நடுவில் ராதா மட்டும் யார் என்று கேட்டுக்கொண்டிருந்தார். ”ஒன்னும் பிரச்சன இல்ல. அப்பாவும் அண்ணாவும்தான்” என்று சொல்லியபடியே அந்த மூன்றாவதாக மூன்றுமுறை அழைத்த மனிதரை அழைத்தேன். எடுத்தார்.

எனக்கும் அவர் யாரென்று தெரியும். அவருக்கும் நான் யாரென்று தெரியும். ஆனாலும் தனது வழக்கமான பானியில் அவர் பேச்சை ஆரம்பித்தார்.
”தம்பி வினோத்து, நான் சுதாகர் சார் பேசுரேன் பா.” என்று சொன்னவரிடம் என்ன பேசுவது என்று எனக்கு புரியவில்லை. அவரே தொடர்ந்து பேசினார்.
”நாங்க ஊத்துக்கோட்ட வரைக்கும் வந்துட்டோம். அதுக்குதான் உனக்கு ஃபோன் பண்ணா நீ எடுக்கல. சரினு உங்க அப்பாவுக்கும் அன்ணாவுக்கும் ஃபோன் பண்ணா நீங்க கெளம்பிட்டீங்கனு சொன்னாங்க.” என்றார். எனது மொத்த நாடியும் ஸ்தம்பித்து போயிருந்தது.
”நீங்க பெரியப்பாளையம் போய்க்கிட்டு இருக்கிறதா உங்கப்பா சொன்னாரு. அங்க முடிச்சுட்டு வேப்பம்பட்டுக்குதானே வருவீங்க? அங்க வெச்சி பாத்துக்குட்டுமா?” என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பாவிடம் பேசிவிட்டு சொல்வதாக சொன்னேன்.

அப்பாவிடம் விஷையத்தை சொல்லியபோது சரி என்றார். நானும் அப்படியே சுதாகர் சாரிடம் சொல்ல அவரும் சரி என்று சொல்லிவிட்டார். அங்கிருந்து விரைவாக கிளம்பவேண்டும் என்று எண்ணியும் கொண்டேன். அப்பாவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது.
”அங்கிருந்து அவங்களுக்கு வேப்பம்பட்டு தூரம். பேசாம பெரியப்பாளையத்திலேயே அவங்கள மீட் பண்ணி அனுப்பிடுங்க. அதுதான் அவங்களுக்கு பக்கம்.” என்றார். நான் சரி என்று சொல்லி சுதாகர் சாரை தொடர்பு கொண்டபோது இதே விஷையத்தை அவரிடமும் தெரிவித்திருந்தார் அப்பா.

”அப்போ நாங்க பெரியப்பாளையத்துக்கே வந்திடுரோம் வினோத் கொஞ்சநேரம் வெய்ட் பண்ணுங்க.” என்றார் சுதாகர் சார். நான் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தேன்.

இப்போது இவர்களை சமாலிக்கவேண்டுமே என்று தோன்றியது. அவர்கள் வருவதற்கு குறைந்தது அறை மணி நேரமாவது ஆகும். யாரேனும் காத்திருப்பதற்கு ஒப்புக்கொள்ளாமல் போனால் என்ன செய்வது? என்னவேண்டுமென்றாலும் நடக்கட்டும் அவர்கள் வரும்வரை நான் இங்கேயேதான் இருக்கப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டு பாலு மாமாவை அழைத்து விஷையத்தை சொன்னேன்.
”என்னுடைய சாருங்க ரெண்டு பேரு வராங்களாம். கொஞ்சநேரம் இங்கேயே இருந்துட்டு அவங்கள மீட் பண்ணிட்டு அப்புரம் கிளம்ப சொல்லி அப்பா சொல்லிட்டாரு. அதனால நாம கொஞ்சநேரம் இங்க இருக்க வேண்டியதாயிருக்கும். உங்களுக்கு ஏதாச்சும் ப்ரச்சன இருக்கா?” என்றேன் நான்.
”எங்களுக்கு என்ன பா இருக்கு? தாராளமா இருக்கலாம். அவங்க வந்ததும் பாத்துட்டே போகலாம்.” என்றார். விஷையம் அனைவருக்கும் பரவியது.

எதிர்ப்பு குரல் ஏதாவது வருமா என்று எதிர்பார்த்தேன்.
”பெரியப்பாளையத்து கோவில் ல உட்காந்துட்டு போனா புண்னியம் தான்” என்றார் ரஞ்சினி மாமி. எதிர்ப்பேதும் வரவில்லை. ஆருதலாக இருந்தது.
”யாருப்பா அவங்க உனக்கு தெரிஞ்சவங்களா?” என்றார் பாலு மாமா.

சுதாகர் சார் எனது ஆறாம் வகுப்பு ஆசிரியர். உடன் வந்து கொண்டிருக்கும் அருள்ராஜ் சார் என்னுடைய ஏழாம் வகுப்பு ஆசிரியர். நாங்கள் அழைப்பிதழை கொடுக்க பள்ளிக்கு சென்றபோது நவம்பர் மூன்றாம் தேதி நடக்கும் வரவேற்புக்கு வருவது கடினம் ஆனால் நிச்சயமாக திருமணத்திற்கு மூவரும் ஒரே காரில் வந்துவிடுகிறோம் என்றனர் ஆசிரியர் திரு சுதாகர், ஆசிரியர் திரு அருள்ராஜ் மற்றும் எனது பண்ணிரெண்டாம் வகுப்பு ஆசிரியர் திரு இருதயராஜ். அதற்கான திட்டங்களையும் நாங்கள் அழைப்பிதழை கொடுக்கும்போதே அவர்கள் மூவரும் தீட்டிக்கொண்டிருந்தனர்.
”இவங்க ப்லான் பண்ணுரத பாத்தா கண்டிப்பா வருவாங்க.” என்றான் அன்ணன்.
”எப்பிடி இருந்தாலும் நான் நிச்சயமா வருவேன்.” என்றார் என்னிடம் தனியே ஆசிரியர் திரு சுதாகர். நாங்கள் அழைப்பிதழை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் போதும் இன்னொருமுறை அதையே சொன்னார்.

எனது திருமணத்திற்கு முந்தையநாள் எனது நண்பண் ராஜாவிடமும் ”நாளைக்கு வினோத் கல்யானத்துக்கு போகனும்டா.” என்று சொல்லிக்கொண்டிருந்ததாக அலைபேசியில் என்னிடம் சொல்லி இருந்தான் ராஜா.
அதனாலேயே திருமணம் முடிந்ததும் ”சுதாகர் சார் வந்திருக்காரா? கண்டிப்பா வரேனு சொன்னாரு. நேத்து கூட ராஜா அவனுடைய மேரேஜ் இன்விடேஷன கொடுக்கப் போனப்போ சொன்னாராம்.” என்று நண்பண் மோகன்ராஜிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். வரவில்லை என்ற பதில்தான் வந்திருந்தது.

கடைசி நேரத்தில் ஏதாவது வேலை வந்திருக்கும். தவிர நூற்றி ஐம்பது மாணவர்களை விட்டுவிட்டு அதுவும் பள்ளி நாளில் விடுப்பு எடுத்துக்கொண்டு அறுவது கிளோமீட்டர் வருவது என்பது அவ்வளவு சாதாரன விஷையம் இல்லை என்று நினைத்து விட்டுவிட்டேன். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தோம்.

ஆனால் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள் எனது ஆசிரியர்கள். எனக்கு கற்பித்த எனது ஆசிரியர்கள். எனக்காக வந்துகொண்டிருக்கிறார்கள். விடுப்பு எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். என்னை வாழ்த்துவதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். தாமதமானாலும் தடைகளைத் தாண்டி வந்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த வரம்? எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்? இதைவிட வேறென்ன வேண்டும் இந்த பிறவியில் எனக்கு? என்றெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது அந்த பெரியப்பாளையத்து மண்ணில் எனக்கு.

கோவிலின் பின்புரம் அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம். திடீரென்று தோழி சுவேதாவின் நினைவு வந்தது. அழைப்பிதழை அனுப்பியபோது “இதென்ன இன்விடேஷனா இல்ல விசிட்டிங் கார்டா? எல்லார் மொபைல் நம்பரையும் வரிசையா போட்டிருக்கீங்க?” என்றாள். பொதுவாக பெரும்பாலும் இரண்டு எண்களைத்தான் போடுவார்கள். நாங்கள் மூன்று எண்களைப்போட்டிருந்தோம். அது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்று அப்போது புரிந்தது.

வருபவர்களை வெரும் கையோடு அனுப்பிவிட முடியாது. என்னிடம் பர்சில்லை. அவர்களுக்கு குடிக்கவாவது ஏதாவது கொனரவேண்டும் என்று தோன்றியது.
அண்ணா அழைத்து ராதாவிடமும் அதையேதான் சொன்னான்.
”கைல காசு இருந்தா ஏதாச்சு கூல்ட்ரிங்ஸ் வாங்கு ராதா நான் அப்புரம் வந்து தந்துடுரேன் என்றான்.”
”அதெல்லாம் இருக்கு வை டா டே.” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார் ராதா.
என்ன வாங்கலாம் என்று கேட்டதற்கு பொவோண்டோ என்றேன் நான். எல்லா பொருட்களிலும் நம் நாட்டுப் பொருட்களை வாங்க முடியாது என்றாலும் முடிந்த அளவுக்கு இந்தியநாட்டு பொருட்களை வாங்கி பயண்படுத்தவேண்டும் என்பது எனது நிலைப்பாடு.

குளிர்பாணம் வந்தது.
ஒரு இருவது நிமிடம் கழித்து ஒரு காரும் வந்தது.
”அவங்கதான் நு நெனைக்குரேன்.” என்றார் பாலு மாமா.
சுதாகர் சாரும் அருள்ராஜ் சாரும் என் எதிரே வந்து நின்றனர்.
சந்தோஷத்தின் மொத்த சாயலாய் நின்றுகொண்டிருந்தேன் நான்.
”வினோத். சாரி நாங்க கொஞ்சம் லேட்டா” என்று ஆசிரியர் திரு சுதாகர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நான்,

2 comments:

  1. விநோத் சார் ொவ்வொரு அத்தியாயமும் மிகவும் அற்புதம் தாஞ்கள் சொல்லவரும் செய்திகளை முறைப்ப படுத்தி மிக அற்புதமாக படைத்துள்ளீர்கள்மகிழ்ச்சி

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube