07 December 2017




கிறித்துவ தேவாலையங்களில் ஒரு ஜபம் சொல்வார்கள். ’எல்லாம்வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளெ உங்களிடமும், நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.
ஏனனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே என் பாவமே என் பெரும்பாவமே. ஆகையால்…’ அதற்குமேல் மரந்துவிட்டது. ஆனால் அந்த சம்பவம் மட்டும் நினைவில் இருக்கிறது. அந்த ஒற்றைநொடி வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இந்தப்பதிவு எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது, என்மீது பழிபாவமும் சேர்ந்திருக்காது.

போன வருடம் நான் ஐந்தாம் வகுப்புவரை படித்த சிறுமலர்பார்வையற்றோருக்கானப் பள்ளியில் பழைய மாணவர்களுக்கான முதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு வந்திருந்த ஆசிரியைகள் தன் மாணவர்களை வெகு சுலபமாக அடையாளம் கண்டுகொண்டார்கள். பெண்கள் என்றால் பராவாயில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அந்தப்பள்ளியில் பண்ணிரண்டாம் வகுப்புவரைப் படிக்க அனுமதி உண்டு. ஆனால் எங்களுக்கு ஐந்தாம் வகுப்புவரைதான். இருப்பினும் ஆசிரியைகள் எங்களையும் அடையாளம் கண்டுகொண்டதுதான் ஆச்சர்யமாக இருந்தது. உணவு இடைவேளியின்போது ஒரு ஆசிரியை வந்து என் பெயரை சரியாக அழைத்தார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அழைத்தால் ஆச்சர்யமாகதானெ இருக்கும்? அப்படிதான் எனக்கும் இருந்தது. கொஞ்சநேரம் பேசிவிட்டு நகர்ந்தார். சில நிமிடங்களில் இன்னும் இரண்டு ஆசிரியைகள் வந்தார்கள். ஒருவருக்கு என்னை அடையாலம் தெரிந்து பெயரை சொல்லியும் அழைத்தார். இன்னொருவருக்குதான் சரியாக நினைவில் இல்லை. ’எந்த வினோத் மிஸ் இவன்?’ என்று கேட்க, ‘அதுதான் மிஸ்ஹரிஇழுத்துட்டுப்போயி…’ என்று உடன் இருந்த ஆசிரியை நினைவுபடுத்த அந்த ஆசிரியையுடன் சேர்ந்து எனக்கும் பழையதெல்லாம் நினைவுக்கு வந்தது.

அவன் பெயர் ஹரி கிருஷ்னன். நான் முதலாம் வகுப்புப் படிக்கும்போது  என்னுடன் வந்து சேர்ந்தான். நாளடைவில் மிகவும் நெருக்கமானோம். எங்களைப் போன்றே எங்கள் பெற்றோர்களும் நல்ல நட்பில் இருந்தனர். விடுதியில் விட்டுச் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்துக்கொள்ளும்படி என் அம்மா அவனிடமும், அவனைப் பார்த்துக்கொள்ளும்படி அவனம்மா என்னிடமும் சொல்லிச் செல்வார்கள். நாங்கள் மூன்றாம் வகுப்புப் படிக்கும்வரை எங்கள் நட்பு மிகவும் ஆழமானதாக இருந்தது. விடுதி காப்பாலர் பொது இடங்களில் எங்களைப்பாராட்டியதும் அவ்வப்போது நடக்கும்.  ஒருமுறை பண்ணிரண்டாம் வகுப்பு படித்த இரு மாணவிகளுக்குள் ஏதோ மனக்கசப்பு. எங்களை விடுதி காப்பாலர் அழைத்துஇவர்களை போல ஒற்றுமையாக இருங்கள்என்று அவர்களிடம் அறிவுருத்தி அனுப்பியது கூட நினைவிருக்கிறது.
அவ்வப்போது எங்களுக்குள் சண்டையும் வரும். அப்படி வந்திருந்தால் கூட இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்க்க் கூடும்.


காலை உணவு முடிந்தவுடன் மருந்தகம் செல்லும் வழக்கம் அந்தப்பள்ளியில் இருந்தது. அனைவருக்கும் சத்துமாத்திரைக் கொடுப்பார்கள். அதற்காக ம்அனியனியாய் செல்வொம். அனியின் முன்னாடி நிற்பவர் அனைவரையும் அழைத்துச்செல்லவேண்டும். ஒருவர் பின் ஒருவர் நின்றுகொண்டு, கைகளைப்பிடித்துக்கொண்டு அப்படியே ரைல்வண்டி மாதிரிச் செல்வோம். எனது அனியில் அனேக நேரம் நாந்தான் மோட்டர்மேன். அதிகம் பேரை வைத்துக்கொள்ளமாட்டேன். ஹரி மட்டும் எப்போதும் இருப்பான். அதைத்தவிற ஒன்றிரண்டு பேர் அவ்வலவுதான். எந்த அனி முன்னே செல்வது என்ற அறிவிக்கப்படாத போட்டி சில நேரங்களில் நிகழும். ஒருநாள்டே, யாரோ பின்னாடி வராங்க டா. அவங்க நம்மல முந்திராம பாத்துக்கோடா. வேகமா போடா.’ என்றான் ஹரி. வேகத்தைக்கூட்டினேன். அன்று நாங்கள்தான் முதல். அதுபோல் இன்னொருநாளும் நிகழ்ந்தது.  அன்று காலை நான், ராம்கோபால், ஹரி மூவரும்தான் மருந்தகத்துக்கு கிளம்பினோம். வழக்கம்போல நாந்தான் அழைத்துச்சென்றேன். அன்று அவ்வளவு வேகமில்லை. அதற்காக மெதுவாகவும் செல்லவில்லை. ராம்கோப்பால் என் கையைப்பிடித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் ஹரி இருந்தான். திரும்பும் இடம் வந்தது. அந்த தரையில் சிறிய சிராய்ப்பு இருக்கும். ’அம்மாஎன்று ஒரு சத்தம். விழுந்துவிட்டான். அங்கிருந்த பணிப்பெண் பார்த்துவிட்டார். உடனே விரைந்துவந்து அவனைத்தூக்கி அங்கிருந்த கல்லில் அமரவைத்தார்.

இங்கு இன்னொரு விஷையத்தையும் சொல்லவேண்டும். பார்வைத்திறனைத் தவிற காலிலும் அவனுக்கு பிரச்சினை இருந்தது. இரண்டுமுறை அவனது அண்ணன் ஒருவரின் கவணக்குறைவால் கால் உடைந்திருக்கிறது. நடப்பதில் கொஞ்சம் சிறமம் இருக்கும். ஆங்கிலத்தில் லிம்பிங் என்று சொல்வார்களே அதுதான்.
நடக்கமுடியுமா டா ஹரி?’ என்றவரிடம்முடியாது அக்காஎன்று அழுகையுடன் சொன்னான். அவ்வலவுதான். மூன்றாவதுமுறை என்னால் நடந்திருக்கிறது. அன்றுதான் அவன் கடைசியாக நடந்தது. உடனே என்னுடன் இருந்த இன்னொருவனையும் என்னிடமிருந்து பிரித்து இன்னொரு அனியுடன் இனைத்தார் அந்த அக்கா. என்னையும் ஏதோ ஒரு அனியில் கடைசி ஆளாக அனுப்பினர். ’வினோத் தான் இழுத்துட்டுப்போனான்என்று தொடங்கி, சில
இழுத்துட்டுப்போனான்’ என்று தொடங்கி, சில ஆண்டுகள் கழித்து இவந்தான் தள்ளிவிட்டான் என்றெல்லாம் சொல்லத்தொடங்கினர். நான் வேறு பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது எனது பழைய பள்ளியில் மீண்டும் நான்காம் வகுப்பில் சேர்ந்தான் ஹரி. எனக்கு இரண்டு வருடம் பின்னால் என்னைத் துறத்திக்கொண்டுவந்தான். அதை அப்படித்தான் சொல்லமுடியும்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை எங்கு படித்தான் என்று தெரியாது. ஆனால் நான் பண்ணிரண்டாம் வகுப்பு முடித்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் வந்து சேர்ந்திருக்கிறான். கல்லூரிக்கு சென்றவுடன் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல அந்தப்பள்ளிக்கு சென்றபோது அவனை சந்தித்தேன். நான் எதுவும் பேசவில்லை. அம்மா மட்டும் பேசினார். ’நல்லா இருக்கியா வினோத்’ என்று கேட்டதாக நினைவு. ’நல்லா இருக்கேன்’ என்று சொன்னேன் என நினைக்கிறேன். அந்த வகுப்பில் படிக்கும் என் நெருங்கிய நண்பன் தமீமிடம் ஹரியைப்பற்றி பிறகு விசாரித்தேன்.
’இன்னும் அப்பிடியேதான் டா இருக்காண். கால் எல்லாம் எதுவும் சரியாகல. ஆனா உன்னைய பத்திமட்டும் எல்லாருக்கிட்டையும் சொல்லிக்கிட்டே இருப்பான். நீதான் அவனோட இந்த நெலமைக்கு காரனம்னு நெனைக்கும்போதெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பான். எங்க போனும்நாலும் யாராச்சும் தூக்கிட்டு போவோம். அவசர தேவைக்கு மட்டும் அவன் அம்மா வந்திடுவாங்க. அவங்க ஸ்கூல்லயேதான் இருப்பாங்க.’ என்றான். என்னால் எதுவும் பேச இயலவில்லை. அமைதியாக இருந்தேன்.
வேகமாக செல்ல வேண்டும் என்பது எனக்குமட்டும் ஆசையில்லை. அவனுக்கும்தான். இரண்டுமுறை விழுந்தவன் என்றெல்லாம் சிந்திக்க அந்த வயதிற்கு தெரியவில்லை. நானும் என் நண்பனும் யாரிடமும் தோற்க கூடாது என்பது மட்டும் மனதில் இருந்தது.

நான் கல்லூரியின் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்தபோது அவர்கள் பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஹால்டிக்கட் எண் கூட வந்திருந்தது.
அந்த ஆண்டு (2011) ஃபிப்ரவரி ஐந்து அன்று தமீம் அழைத்தான்.
’வினோத் ஒரு விஷையம்டா’ என்றவன் தொடர்ந்து பேசினான். ‘ஹரி எறந்துட்டாண்டா.’ என்றான்.
ஒருவாரம் உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறான். தலையில் ஏதோ நீர் சேர்ந்ததாக சொன்னார்கள். திடீரென்று காலமாகி இருக்கிறான்.
பண்ணிரண்டு ஆண்டுகளாக தன்னை சுமந்த அத்தனைப்பேரிடமிருந்தும் அவன் பாரத்தை அவனே இரக்கிவைத்திருக்கிறான்.
நான் சுமந்த பாவத்தின் நிலை மட்டும் இன்றுவரை தெரியவில்லை.

அந்த சிறுமலர் பார்வையற்றொர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு வெளியே வரும்போது நான்தான் சிறந்த மானவனாக (best out going student) அறிவிக்கப்பட்டேன். புனித லூயி பள்ளியில் பண்ணிரண்டாம் வகுப்பு முடித்துவரும்போது சிறந்த மானவனுக்கு வழங்கப்படும் விருதான (wisdom international award)  என்ற விருதிற்கும் நாந்தாண் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
ஆனால் அதெல்லாம் நாம் செய்யும் சில பாவங்களுக்கு ஈடுகொடுக்காது என்று அந்த ஆசிரியர் மூலமாகத்தான் புரிந்தது.  
இன்று டிசம்பர் ஏழு இரண்டாயிரத்து பதிநேழு. என் வாழ்வின் முதல் நண்பன் என்னுடன் கடைசியாக பயணித்து மூன்றாவதுமுறை விழுந்து சரியாக பதிநெட்டு ஆண்டுகளாகின்றன. என்னதான் இரண்டு முறை விழுந்திருந்தாலும், அவன் உயிருடன் இருந்த அந்த பண்ணிரண்டு ஆண்டுகளும் (1999 to 2011) என்னால் ஏற்பட்ட துயரத்தை தான் தாங்கி இருக்கிறான்.
அவனது இருதி மூச்சில் என்ன நினைத்திருப்பான்ஓ,  என்னை நினைத்திருப்பானோ? தெரியாது. இதை இன்று எழுதவேண்டுமென தோன்றியது.
எதுவாயிருந்தாலும்,
எல்லாம்வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.

1 comment:

  1. எனக்கு உங்களுடைய மரக்கமுடியாத பதிவுகளில் இதுவும் ஒன்று அன்னா.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube