04 December 2017

நின்றால் என்ன?

Posted by Vinoth Subramanian | Monday, December 04, 2017 Categories: ,



திரு விஷால் அவர்கள் ஆர்.கெ. நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அதே சமையத்தில் சமூக வலைதளங்களில் ஒரு எதிர்ப்பு குறளை பார்க்க முடிகிறது.

’அவர் ஒரு நடிகர், அவரைப்போன்றோருக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது’ ’இதற்கு முன் பட்டதெல்லாம் போதாதா?’ என்றெல்லாம் வெவ்வேறு விதமாக வெருப்பை தன் விருப்பங்களாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தவறு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதுதான் இந்தத்தமிழகத்தில் நடந்திருக்கிறது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து தன்னால் முடிந்தவரை சம்பாதித்துவிட்டார்கள். சிலர் தன் படம் வரும்பொதெல்லாம் அரசியலுக்கு வருவது போலவே நடிப்பார்கள். என்ன செய்ய? தலைவிதி என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்களை அவ்வலவு பெரிய இடத்தில் தமிழன் வைத்துவிட்டான். அதை அவர்களும் தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று சமூகவலைதளங்களில் ஒலிக்கும் குறல் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமே. அது வெகுஜன மக்களை ஏதும் செய்யப்போவதில்லை என்பதுதான் எதார்த்தத்தில் இருக்கும் உண்மை. இருந்தாலும் அவர்களின் குறளுக்கு ஒரு வலிமை இருக்கிறது. இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரியான புரட்சி நடந்திருக்காது. இந்த குறள் கூட ஒலிக்கவில்லை என்றால் சமூகம் மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துவிடும் என்ற உண்மையை மறுக்க முடியாது. இப்போதிருக்கும் பிரச்சினை இது உண்மைக்குறளா இல்லை உணர்ச்சிவசப்பட்ட குறளா என்பதுதான்.

சரி விஷையத்திற்கு வருவோம். எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். தயவு செய்து விஷாலுக்கு எதிரான விசிலை எனக்கெதிராக ஊதிவிட வேண்டாம். விஷால் ஒரு நடிகர். என்ன செய்தார்? என்பதுதான் கேள்வி. ஒரு நடிகரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பது எந்த அளவுக்கு அணுபவ ரீதியாக சரியோ. அதே அளவுக்கு சரியான இன்னொரு விஷையம் அவர் ஒரு இந்திய குடிமகனாக தேர்தலில் நிற்க அணுமதி உண்டு என்பதுதான். எனக்குத்தெரிந்த ஒரு விஷையம், அவர் நிச்சையம் வெல்வதற்காக நிற்கவில்லை. அது அவருக்கும் தெரியும் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் முயற்சி செய்கிறார். அதற்கு பின்னணியில் ஏதோ ஒன்று அல்லது யாரோ சிலர் இருக்கலாம் இருக்கிறார்கள் என்பதுதான் புரிதல். அந்த புரிதலை அப்படியே வைத்துக்கொண்டே நாம் நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வோம்.

விஷால் ஒரு நடிகர். திரும்பத் திரும்ப இதையே எழுதிக்கொண்டிருக்கிறேனா? ஆம் திரும்பத்திரும்ப ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அப்பாவி மக்கள் வாழும் சமூகத்தில் இதைத்திரும்பத்திரும்பத்தான் எழுத வேண்டியிருக்கிறது. நன்கு யோசித்துப்பார்த்தால் ஒரு விஷையம் தெள்ளத்தெளிவாகப்புரியும். விஷால் ஒரு நடிகர். விஷால் மட்டும்தான் நடிகரா?

ஒரு நடிகன் என்பவன் கேமிரா முன்பு நடிக்கும் சாதாரன கலைஞன். அவனுக்கு நாம்தான் அரசியல் சாயம் பூசுகிறோம். ஆனால் ஒரு அரசியல்வாதி என்பவன் மக்கள் முன்பே நடிக்கும் உன்னதக்கலைஞன். நாம்தான் அவனைத்திரும்பத்திரும்பத்தேர்ந்தெடுத்துத் தலைவனாக்கிக் கொண்டிருக்கிறோம். ஏமாந்துக்கொண்டிருக்கிறோம்.
ஆர்.கெ நகர் என்பது ஒன்றும் சாதாரன தொகுதி அல்ல. ஒரு முதல்வராக இருந்தவரின் தொகுதி. உங்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லி அவர் முதலில் தன் நடிப்பை ஆரம்பித்து வைத்த தொகுதி. வெள்ளம் வந்தபோதே வாகனத்திலிருந்துக்கொண்டே ‘வாக்காளப்பெருமக்களே’ என்று பிரச்சாரம் செய்த தொகுதி. தேர்தல் நேரங்களில் மட்டும் திருவிழாக்கோளம் பூண்ட அந்த தொகுதி மற்ற நேரங்களில் எப்படி இருந்தது என்பதை அந்த தொகுதி மக்களையே கேட்டால் தெரியும்.

அந்தத்தொகுதியில் இருக்கும் ஒருவரை இதற்கு முன் நடைபெறுவதாய் இருந்த இடைத்தேர்தல் நேரத்தில் சந்தித்து ’எதுக்கு காசு வாங்குரீங்க?’ என்று கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு அவர் ‘காசு வாங்குரது ஓட்டவிக்குரதுக்கு இல்ல. நோட்ட சம்பாதிக்கிரதுக்கு. குடுக்குரவங்க கிட்ட எல்லாம் வாங்கிட்டு நாங்க ஒருத்தருக்கு போட்டுருவோம். ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டுதான? இப்பொ வாங்கலனா இவங்கக் கிட்டயெல்லாம் எப்பவுமே வாங்க முடியாது. யாரு ஜெய்ச்சாலும் நல்லது செய்யப்போரதில்ல. அது எங்களுக்கும் தெரியும். அவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் வாங்குரோம். ஜெய்ச்சதுக்கப்புரம் அவங்க கோடில சம்பாதிப்பாங்க. நாங்க ஒரு ஐநூறோ ஆயிரமோ சம்பாதிச்சிக்கிறோமே.’ என்றார்.
மக்கள் நம்புவதாய் நடிக்கிறார்கள். அரசியல்வாதிகள் நம்பவைத்து நடிக்கிறார்கள். அவ்வலவுதான் வித்தியாசம். முன்னால் முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் நடிக்கவில்லையா? தர்ம யுத்தம் என்ற பெயரில் பதவிக்காக ஒருவர் நடிக்கவில்லையா? அம்மாவிற்கு அப்புரம் நீங்கள்தான் என்று நடித்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த கூட்டம் அந்த குடும்பம் வீழ்ச்சிக்காணும்போது இனி நாங்கள்தான் என்று தன் சுய சொரூபத்தை காட்டவில்லையா? மத்தியில் சிலர் நடித்ததையும் நடித்துக்கொண்டிருப்பதையும் நாடு காணவில்லையா? இதுதான் நிஜம். இந்த நிஜத்தைதான் நாம் ஜீரனித்துக்கொள்ளவேண்டும். அதனால் போட்டியிட விரும்புபவர் நடிகரா இல்லையா என்பதை பார்க்காமல் நல்லவரா இல்லையா என்பதை ஆராய்வோம்.
சுருங்கச்சொன்னால், மதத்தின் அடிப்படையில் ஜோசஃப் விஜை என்று குறிப்பிடுவது எந்த அளவுக்கு தவறோ அதே மாதிரிதான் நடிகர் என்ற பிம்பத்தைவைத்து ஒருவரை ஏற்றுக்கொள்வதும் எதிர்ப்பதும் தவறு.

1 comment:

  1. good analyses such a powerfull thoughts. enduce to thing and aware. keep going!

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube