மழைதான்
அந்த அதிர்ச்சி. ஆனால் நான் அதிகம் எதிர்பார்த்த அதிர்ச்சி. எனது முகூர்த்த
கால் அன்று மழை நன்றாக பெய்யவேண்டும் என்றும் அதே சமையம் பெய்யவே கூடாது என்றும் இரட்டை
மனநிலையில் இருந்தேன் நான். அந்த இரண்டுக்கும் காரனம் இருந்தது.
ஏற்கனவே
வீட்டிற்கு வெளியே முகூர்த்த கால்களை நட்டு இருந்தார்கள். எழுந்தவுடன் வெளியில் சென்று
ஒருமுறை சாமி கும்பிடவேண்டும். மழை கொட்டிக்கொண்டிருந்தது.
சாமி கும்பிட்டு உள்ளே வந்தோம்.
இதுதான் ஆரம்பம். இனி சடங்குகள்தான். அதில் இவர்கள் செய்யும் கூத்திற்கு அளவே இருக்காது. எண்ணெய் நலங்கு வைப்பது முதல் சடங்கு. அதன்பிறகு திருமணம் வரைக்கும் மொத்தம் ஐந்து நலங்குகள். அவர்களாக விருப்பப்பட்டால் மூன்று என்பார்கள். ஆட்கள் இருந்தால் ஐந்து என்பார்கள். கூட்டத்தில் ஏதாவது ஒரு பெண் ஏழு என்று சொல்லி எரிச்சலை கிளப்பும். அதுவும் இவர்களின் ஃபார்முலா படிதான் எல்லாம். அங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபார்முலா. எதை பின்பற்றுவது என்பதில் இருக்கும் குழப்பத்தில் மனமகன் செத்தான்.
நமக்கு வேறு அப்போதுதான் லாஜிக் பேச தோன்றும். ”கல்யானம் முடியுரவரைக்கும் நீ வாயவே தொரக்க கூடாது” என்பது எதிர் வீட்டு அக்காவின் கட்டளை. அதையேத்தான் அவர் எட்டு நாட்களாக சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலைமையில்தான் என்னை எண்ணெய் நலங்கு வைத்துக்கொள்வதற்காக அழைத்துவந்து நடு ஹாலில் நிற்க வைத்தார்கள். இப்போது எதை அணிவது என்பதில் சிக்கல். ஒருவர் வேட்டி என்றார். ஒருவர் எந்த ஆடையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். ஒருவர் பழைய முழுக்கால் சட்டையாக இருந்தாலும் சரி என்றார். இன்னொருவர் மனமகன் எந்த உடுப்பில் இருக்கின்றானோ அதே உடுப்பில்தாண் நலங்கு வைக்க வேண்டும் என்றார். எல்லாம் பெண்கள்தான். கடைசியில் நான் எந்த உடுப்பில் இருந்தேன் என்பதே எனக்கு நினைவில் இல்லை.
ஹாலை விட்டு வெளியில் இருந்த முற்றத்திற்கு என்னை வரச்சொன்னார்கள். மனையைப்போட்டார்கள். அங்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை கஸ்தூரி மாமி எனக்கு கற்பித்துக்கொண்டிருந்தார். வலது காலை வைத்துதான் மனையை தாண்டவேண்டும், அதில் ஒரு துணி, அடியில் கொஞ்சம் அரிசி வாழைப்பழம் போன்றவற்றால் அந்த மனை அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒருமுறை நீளம் பார்த்துக்கொள்வதற்காக கீழே குணிந்து மனையைப் பார்க்கமுயன்றால் விடமாட்டார்கள். அவர்களுக்கு நான் எதற்கு கீழே குணிகிறேன் என்ற உளவியல் காரனமெல்லாம் தெரியாது. எப்படியோ தாண்டிவிட்டேன். கால்கள் மட்டும் மனைக்கு முன்பு இருக்கும்படி உட்கார வேண்டும்.
முன்பு விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. கைக்கு முன்பு பல பொருட்கள் இருப்பதால் அமைதியாக அமர வேண்டும் என்பது மட்டும் எப்போதும் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். தெரியாமல் கைப்பட்டு ஏதேனும் கீழே தவறி விழுந்தால் அவ்வளவுதான். அவசகுனம் என்று யாராவது சொல்லக்கூடும். அல்லது நினைக்கவாவது செய்வார்கள். அங்கு ஒரு எட்டு பெண்கள் இருந்தார்கள். நலங்கு வைக்க ஆரம்பித்தார்கள். ”தலையில எண்ணெய கொஞ்சமா வைங்க.” என்று சொல்லிவிட்டேன். அப்போதும் ஒரு அக்கா ஆர்வக்கோலாறில் அதிகமாக வைத்துவிட்டார். ஒவ்வொருவரும் தலை, இரு கைகள், கண்ணங்களில் நலங்கு வைத்து, நெற்றியில் பொட்டுவைத்து அரிசி போட்டு செல்ல, அவர்களை கை எடுத்து கும்பிட வேண்டும் என்பது எனக்கு மாமி சொன்னது. அதில் அவர்கள் எப்போது முடித்துவிட்டு செல்வார்கள் என்பது ஓரளவுக்கு அனுமானித்தாலும், அநேக முறை கையெடுத்துக்கும்பிடும் டைமிங் மிஸ்தான்.
எட்டு பேர் நலங்கு வைத்து முடித்து ஒன்பதாவது நபருக்கு ஆளில்லை. இரட்டைப்படையில் இருக்கக்கூடாது என்பது விதி. ஒருவரை குறைத்தால் மனஸ்தாபம் வந்துவிடும். இப்போது எட்டை ஒன்பதாக்க வேண்டும் அல்லவா? ஏற்கனவே நலங்கு வைத்த ஒருவரை அழைத்து நலங்கு வைக்கவைத்து ஆரத்தி எடுத்து முடித்துவைப்பார்கள். எங்கள் ஊரில் சிறு வயதில் கிரிக்கட் விளையாடும்போது ஏதாவது ஒரு அணிக்கு ஆள் குறைந்தால் ”டே நான் டபில் சைடுடா.” என்று ஒருவன் கிளம்புவான். அவனை இரு அணிக்கும் ஆடவைத்து ஆட்டத்தை முடித்துக்கொள்வார்கள். அதேதான் இங்கேயும். ஒருவழியாக ஆரத்தி எடுத்தபின் என்னை மனையைச் சுற்றிவர சொன்னார்கள். வந்தேன். பிறகென்ன? குளியல்தான்.
குளித்துவிட்டு பின் பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு, அவர்கள் கொடுக்கும் இனிப்பு, பழம் மற்றும் பால் சாப்பிட்டு முடித்தேன். எல்லா நலங்குக்குப் பிறகும் இதுதான் வரையறை. திருமணம் முடிக்கும்வரை பால், பழம், இனிப்பு கொடுத்தே கொன்று விட்டார்கள். மழைமட்டும் அதன் வேலையைப்பார்த்துக்கொண்டிருந்தது. நெருங்கிய உரவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். சிலர் கோட் போட்டுக்கொண்டும், சிலர் கொடை போதும் என்ற நிலைமையிலும் பிரவேசித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவருக்கு குளிர் காய்ச்சல் வந்து முகூர்த்தகாலுக்கு முந்தினம் வந்து படுத்தவர்தான். எழவே இல்லை. எனக்கு வேறு கொஞ்சம் பயமாகவே இருந்தது. காரனம் அந்த மழைக்காலமும் நலங்கு வைக்கப்பட்டுக்கொண்டிருந்த எனது நிலையும்தான்.
பொதுவாக திருமணக்காலங்களில் மனமக்களுக்கு உடல் உஷ்னமாகிவிடக் கூடாது என்பதற்காக எண்ணெய் நலங்குகளும் சந்தன நலங்குகளும் வைப்பார்கள். பற்றாத குறைக்கு இனிப்புகள்வேறு. ஆனால் இவையெல்லாம் மழைக்காலங்களுக்கு பொருந்துமா என்பதையெல்லாம் யோசிப்பதற்கு ஆளில்லை என்பது மனமக்களின் துருதிரிஷ்டம். ”எதுக்கோ கவணமா இருந்துக்கோ சாமி.” என்று தம்பி வெங்கடேசன் அலைபேசியில் சொன்னது மட்டும் மனதில் அவ்வப்போது வந்து போனது. நான் திருமணத்தின்போது அச்சப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு முக்கியமான விஷையங்களில் ஒன்று என் உடல்நிலை. எங்கே சலி பிடிக்கவைத்துவிடுவார்களோ என்ற அச்சம்தான் அது. இரண்டாவதாக இருந்த அச்சத்தைப் பற்றி பிறகு சொல்கிறேன். அதற்குள் மூன்றாவதாக ஒரு இடியை இறக்கினார்கள் உரவினர்கள்.

அவைதான்
அணிகளன்கள். எதிர் வீட்டு நந்தினி அக்காவும் உரவினர் ராதாவும் அவர் கழுத்திலிருந்த ஒரு
சங்கிலியை கொண்டுவந்து மாட்டிவிட்டார்கள். தவிற அண்ணனின் பிரேஸ்ஸிலேட்
வேறு. அதற்கு முன்பே பாலாஜி அண்ணா நான் அசந்த நேரமாக பார்த்து
கடைக்கு கூட்டி சென்று ஒரு மோதிரத்தை வாங்கி அணிவித்துவிட்டார். செண்டிமெண்டில் சிக்கியதால் மீரமுடியவில்லை. இப்போது
அந்த மோதிரத்தோடு இவையும் சேர்ந்து கொண்டதால் கடுப்பாக இருந்தது எனக்கு.
பொதுவாகவே
தங்கம் என்றால் பிடிக்காது.
அது மட்டுமல்ல. கையில் ஒரு கை கடிகாரம் கூட இப்போதெல்லாம் அணிவதில்லை. டக்கின் செய்யப்பட்ட ஒரு சட்டை, அதற்கான ஜீன் அல்லது
சாதா முழுக்கால் சட்டை, அதைத்தாங்கிப்பிடிக்க ஒரு பெல்ட்,
மற்றும் கண்களை மறைத்துக்கொள்ள ஒரு கண்ணாடி. இதுதான்
நான். இவ்வளவுதான் நான். இதைத்தாண்டி கழுத்தில்
ஒரு ருத்திராட்சை அவ்வளவுதான். ஆனால் அன்று அவர்கள் வைத்ததுதாண்
சட்டம். திருமணம் முடிந்து மருவீடு செல்லும்வரை நகைகளை கழட்ட
கூடாது என்றும், கட்டாயம் அணிந்துதான் ஆக வேண்டும் என சொல்லிவிட்டார்கள்.
சரி என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.
நந்தினி அக்கா அணிவித்த சங்கிலி மட்டும் பெரியதாக இருந்ததால் எளிதில் கழுத்தைவிட்டு எடுக்க முடிந்தது. அதை அப்படியே தலைக்குமேல் அலேக்காக தூக்கி தனியாக ஒளித்துவைத்து விட்டேன். தவிர அது உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் ராதா அணிவித்த சங்கிலி கழுத்தோடு கச்சிதமாக ஒட்டியிருந்ததால் எப்படி கழட்டுவது என்று தெரியவில்லை. அன்னாவின் பிரேஸ்ஸிலேட்டும் அதே நிலைமைதான். அது கையில் மிகவும் தலர்வாகத்தான் இருந்தது. அதையும் எப்படி கழட்டுவது என்று தெரியவில்லை. முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரிய? நான் இவற்றை கழட்டிவிடும்படி கத்தி கொண்டிருந்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. அணிகளன்களை அணிவதே அச்சம் என்றால் அடுத்தவரின் அணிகளன்களை வாங்கி அணிவது அச்சத்தின் உச்சம்.

மத்தியமாகியிருந்தது. மழை சற்று ஓய்ந்திருந்தது.
பணி நிமிர்த்தமாக அண்ணாவுடன் பாரத ஸ்டேட் வங்கிவரை செல்லவேண்டியிருந்தது.
சென்றுவிட்டு திரும்பும்போது அண்ணாவிற்கு வந்த அழைப்பு ஒரு தகவலை உறுதி
செய்தது. அது அந்தப் பெண்ணின் வருகை. அந்த
ஒன்றறை ஆண்டில் மட்டும் நான்கு முறை என் கனவில் வந்திருந்தார் அந்த பெண். கனவில் வந்த நான்குமுறையும் பேசவில்லை. அதை நினைக்கும்போது எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. இப்போது எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாள் அன்றே வந்திருக்கின்றார்.
அவர் அன்று வருவார் என்று ஓரளவு அனுமானமாய்த் தெரிந்தாலும் மழைத்தடுத்துவிடும்
என்று நினைத்தேன். ஆனால் வரலாறு வளிமையானது. நமக்கான நாட்களெல்லாம் நமக்கானதாகவே இருந்தாலும் அவை எல்லா நேரங்களிலும் நாம்
விரும்பியபடி இருப்பதில்லை என்பதை அன்று இன்னொரு முறை புரிந்துகொண்டபடி வீட்டிற்குள்
நுழைந்தேன்.
உரவினர் கூட்டம் அதிகமாக இருந்தது. என்னை விசாரித்தவர்களை நானும் விசாரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டேன். அந்தப் பெண்ணும் வந்திருந்ததை உணர முடிந்தது. குழு குழுவாக அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சந்தன நலங்குக்கு அழைப்பு விடுத்தார்கள். பாலாஜி அண்ணாதான் வேட்டி கட்டி விட்டார். முறைப்படி தாய்மாமந்தான் மனமகனை அழைத்து சென்று மனையில் அமரவைக்கவேண்டும். அதேபோல் மாமாதான் அழைத்து சென்று மனையில் அமரவைத்தார். மாலையை அணிவித்தார். மோதிரம் ஒன்றை விரலில் மாட்டிவிட்டார். அது விரலுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல இருந்தது. பொதுவாக ஆண்களுக்கு மோதிரம் எடுப்பதென்றால் அளவு பதிநாறுக்கு மேல்தான் எடுப்பார்கள். குறைந்த பட்சம் பதிமூன்று. பெரும்பாலான பெண்களுக்கு கூட பண்ணிரண்டிற்கு கீழ் வராது என்பார்கள். ஆனால் எனது விரலின் அளவு பத்து. பதிநொன்று கூட பரவாயில்லை. பிறகென்ன? தாய்மாமன் போட்ட மோதிரம் தவறி விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்தேன். விழுந்துவிடும் என்ற பயத்தில் விரலில் கெட்டியாக பிடித்துக்கொண்டேன். அது அவ்வளவு தலர்வாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நலங்குகள் தொடங்கின. முதலில் பண்ணீர் தெளித்து, கைகளிலும் கண்ணங்களிலும் சந்தன நலங்கு வைத்து, நெற்றியில் பொட்டு வைத்து, அட்சதை தூவி செல்ல நான் கையெடுத்து கும்பிட வேண்டும். நலங்கு வைத்த கையோடு ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த வரிசைப் பொருட்களை தட்டில் வைத்து என்னிடம் கொடுக்க, நான் பின்னால் நின்றுகொண்டிருந்த ராதாவிடம் கொடுத்து பூஜை அறைக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட அனைவரும் நலங்கு வைத்து முடித்திருந்தனர். அம்மா அனைவரையும் சுற்றுமுற்றும் ஒருமுறைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி,
”நீ போயி வை மா.”
என்றார். அந்தப் பெண் தயங்கி இருக்கவேண்டும். இரண்டாவது முறையும் அதே குறல், அதே பெயர்,
அதே வார்த்தை. தயக்கம் சற்றும் தணியாதவராய் அந்தப் பெண் என்னை நோக்கி வருவதை என்னால்
உணர முடிந்தது. நான் என் வாழ்வில் சற்றும் எதிர்பாராத தருனம் ஒன்று என் எதிரில் வந்து
நின்றதுபோல் இருந்தது.
நலங்கு வைக்க போடப்பட்ட மனக்கட்டையை தாண்டிய போதும், காலுக்கு முன்னால் இருந்த விளக்கு உள்ளிட்ட பொருட்களை யூகித்து அறிய முயன்ற போதும் நீங்கள் எத்தகைய அவஸ்தையை அனுபவித்து இருப்பீர்கள் என்பதை நன்கு அறிந்து கொண்டேன். இருவரும் தொடுகிற முதல் ஸ்பரிசத்தை எடுத்துச் சொல்லி முடித்தது நன்றாக இருந்தது.
ReplyDeleteநன்றி சார். தொடர்ந்து படிக்கவும். கதை முன்னும் பின்னும் நகரும் தன்மை கொண்டது. அந்தப் பெண் இந்த கதையின் நாயகி அல்ல.
Deleteமுதல் அத்தியாயத்துல போட வேண்டிய கருத்து இது இங்க போடுறதுக்கு சாரி. சுவாரசியமா போகுது. ரொம்பநாளா பார்வையற்றவர்களுக்கு கல்யாணம் நடக்கும்போது இந்த சடங்குலாம் எப்படி எதிர்கொள்வாங்கன்னு சந்தேகம் இருந்துட்டே இருந்தது. இப்போ தெளிவாகுது. முதல் அத்தியாயத்துல அர்ச்சனா உங்ககிட்ட சொன்ன அந்த ஒரு வார்த்தை என்ன?
ReplyDelete