31 March 2020



ஊத்துக்கோட்டையில் மருந்து வாங்குவதற்காக என் அண்ணன் தனது வண்டியை நிறுத்திவிட்டு மருந்தை வாங்கிவிட்டு வெளியெ வந்தான். அப்போது முகம் தெரியாத ஒருவர் அண்ணனை நிறுத்தி பேச்சுக் கொடுத்திருக்கிறார். அந்த முகம் தெரியாதநபர் பேசிவிட்டு சென்ற பிறகுதாண் அண்ணன் உடனே என்னைத் தொடர்புகொண்டான்.

24 March 2020



அக்டோபர் 24 2017. நானும் அந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்ணும் பேசிக்கொண்டிருந்தோம்.
உங்கள் அண்ணனின் திருமணம் முடிந்த உடன் உங்கள் அண்ணியின் தங்கையான அர்ச்சனாவையும் உங்களுக்கே தருவதாக சொல்லியிருக்கிறார்களே. அவ்வாறு அவர்கள் திரும்ப உங்களிடம் வந்து கேட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற மிக ஞாயமான கேள்வியை என்னிடம் எழுப்பினார் அந்தப் பெண்.

18 March 2020



திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது எனது ஆசையல்ல அது ஒரு இலக்காகவே ஆகிப்போனது என்று நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காரணம் எனது எதிரில் நலங்கு வைக்க நின்று கொண்டிருந்த பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெந்தான். அதற்கு முழூ காரணம் அவரில்லை என்றாலும் என்னைப்பொருத்தவரையில் அவரின் பங்கு அதில் மிக முக்கியமானது. மேலும் அந்தப் பெண்ணின் பெயரை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்பாததற்கு காரணம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் எதிர்காலமுமே. ஏனென்றால் அந்தப் பெண் என் வாழ்வின் ஒரு கசப்பான கடந்த காலம்.

11 March 2020



மழைதான் அந்த அதிர்ச்சி. ஆனால் நான் அதிகம் எதிர்பார்த்த அதிர்ச்சி. எனது முகூர்த்த கால் அன்று மழை நன்றாக பெய்யவேண்டும் என்றும் அதே சமையம் பெய்யவே கூடாது என்றும் இரட்டை மனநிலையில் இருந்தேன் நான். அந்த இரண்டுக்கும் காரனம் இருந்தது.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube