10 August 2019

அருவது வயது ஆதரவற்றோர்கள்.

Posted by Vinoth Subramanian | Saturday, August 10, 2019 Categories: , , , ,


அனைவருக்கும் வணக்கம். பல மாதங்களுக்கு பிறகு உங்களை இந்த வலைதலம் மூலமாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நேரடியாகவே தலைப்புக்கு வந்துவிடுகிறேன். அருவது வயது ஆதரவற்றோர்கள். வேறு யாருமல்ல. இங்கு வாழும் பெரும்பாலான பார்வையற்றொர்கள்தான்.


ஏற்கனவே பார்வையற்றொரின் பலதரப்பட்ட பிரச்சனைகளை ஆங்காங்கே இந்த வலைப்பூவில் அலசி உள்ளோம். அதில் ஒன்றுதாண் பார்வையற்றோர் வாழ்வில் திருமனம். இந்த பதிவும் அதைப்பற்றியதுதான்.
திருமனம். பார்வைத்திறன் குறையுடையவர்கள் வாழ்க்கையில் சிலருக்கு அது கேள்விக்குறி. சிலருக்கு அது ஆச்சர்ய குறி.
உலகிலேயே மிகவும் அற்புதமான படைப்பு கண். இந்த உலகம் கண்ணில்தான் தொடங்குகிறது. கண்ணில்தான் சஞ்சரிக்கிறது. கண்ணில்தான் முற்றுப்பெறுகிறது. அதை முழுதும் இழந்தவர்களுக்கு இந்த உஅலகம் முழுதாக தொடங்குவதுமில்லை சஞ்சரிப்பதுமில்லை ஆனால் முற்றுப்பெறாமல் இருப்பதுமில்லை.
இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக சொல்லவேண்டுமென்றால், பார்ப்பதற்க்கும், பேசுவதற்கும் உணர்வுகளை பரிமாறிக்கொள்வதற்கும் பயண்படும் கண்கள் பார்வையற்றோற்கு மட்டும் கண்ணீருக்காக மட்டும்தான் பயண்படுகிறது. சரி விஷையத்துக்கு வருவோம்.
இன்றைய சூழலில் ஒரு பார்வைத்திறன் குறையுடைய மனிதருக்கு சவாலாக இருப்பது இரண்டுதான். ஒன்று வேலை. இன்னொன்று திருமனம். இது எல்லோருக்கும் சவால்தான் என்றாலும் நிறைவேறக்கூடியதாகவே பெரும்பாலானோருக்கு இருந்திருக்கிறது.
ஆனால் பார்வையற்றோரின் வாழ்வில் இவை இரண்டும் அனேகருக்கு நிகழ்வதில்லை. வேலை கூட பரவாயில்லை. முயற்சி செய்பவர்களுக்கு எப்படியாவது கிடைத்துவிடும். ஆனால் திருமனம்? அதனால் கிடைக்கும் சுக துக்கங்கள்? இவையெல்லாம்தான் பெரும்பாலான பார்வையற்றோர்களை ஒரு கட்டத்தில் ஆதரவற்றவர்களாக அடையாளப்படுத்திவிடுகின்றன.
எனக்குப்பின் இவனுக்கு/இவளுக்கு யார்?” என்ற ஒரு பார்வையற்றவரின் பெற்றோரின் பதில் தெரியாத கேள்வியுடனேயே அந்த தலைமுறை முடிவுக்கு வந்துவிடுகின்றது. அந்த காலத்தில் போர்கலாலும், துறவு மேற்கொள்வதாலும் முடிவுக்கு வந்த சந்ததிகள் ஒரு தனி மனிதனின் பார்வையின்மையால் முடிவுக்கு வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பிநாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றாராம் புத்தபிறான். துன்பமே ஆசைக்கு காரனம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும். பார்வையில்லை என்பது ஒரு துன்பம். ”எனக்கு மட்டும் பார்வை இருந்திருந்தா?” என்பது நிறைவேற முடியாத ஆசை. அதன் ஊடாக பற்பல ஆசைகள் தோன்றி தோன்றி அழிந்து போகின்றன. ஒவ்வொரு நாலும், ஒவ்வொரு நிமிடமும், ஏன், ஒவ்வொரு நொடியும் ஒரு பார்வையற்றவன் ஏதாவது ஒரு ஆசையுடந்தான் நடமாடிக்கொண்டிருக்கின்றான்.
ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் இயல்பாக நடக்கும் நிகழ்ச்சி கூட ஒரு பார்வையற்றவருக்கு ஏக்கத்தை விளைவிப்பதாகவே இருக்கின்றது என்பதுதான் உண்மை. அதில் முக்கியமானதொன்றாகத்தான் திருமனத்தை பார்க்கமுடிகிறது. பார்வையற்றவர்களை அங்கமாக கொண்ட எத்தனையோ வீடுகளில் உடன் பிறந்தவர்களுக்கெல்லாம் திருமனம் முடிந்து அவர்களது பிள்ளைகளுக்கு கூட காதணிவிழா முடிந்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த வீட்டில் இருக்கும் பார்வையற்றவருக்கு மட்டும் அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. அந்த பார்வையற்ற ஆணை/பெண்ணைவிட இளையவர்களுக்கெல்லாம் திருமனம் முடிந்திருக்கும். பொதுவாகவே நமது கலாச்சாரத்தில் திருமனம் ஆகாத பெண்களை சில விழாக்களில் சில சாங்கியங்களை செய்ய அணுமதிக்க மாட்டார்கள். அதிலும் அவர் பார்வையற்றவராக இருந்தால் அவ்வளவுதாண். அவ்வளவு ஏன்? திருமனத்தை கூட விட்டுவிடுங்கள். ஒரு வீட்டில் பார்வையற்றவரின் உடன்பிறந்தவருக்கு திருமனமென்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் பார்வையற்றவர் இருந்தால் அவரை மறைத்துவிடுவார்கள். எந்த அளவுக்கென்றால் அந்த திருமனத்தில் கூட அந்த பார்வையற்றவர் இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள். இப்படி அந்த பார்வையற்றவரை ஒதுக்கிவைக்கும் வேலையை செய்வது அந்த பார்வையற்றவரின் பெற்றோர்களே என்றால் நம்புவீர்களா? ஒரு சில இடங்களில் அதுதான் நடக்கிறது.
அப்படியும் மீறி பல நல்ல பெற்றோர்கள் தனது பார்வையற்ற பிள்ளைகளுக்கு வரண் தேட களத்தில் இறங்கினால் கண்டிப்பாக கண்ணீர் நிச்சையம். நான் சொல்வது ஏதோ ரயிலில் பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் பார்வையற்றவர்களைப்பற்றியல்ல. குறைந்தது முப்பதாயிரம் முதல் அருவதாயிரம்வரை மாதச்சம்பலம் வாங்குபவர்களுக்குதான் மேற்கூரிய இந்த நிலையெல்லாம்.
நம்ம பையனுக்கு ஏதாவது இருந்தா சொல்லுப்பா.” என்று என்னிடமே கேட்ட எனது நண்பர்களின் பெற்றோர்களுக்கு இன்றுவரை எந்த நல்லதையும் நான் செய்ததில்லை. எங்கு சென்று தேட?
எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவளும் உங்கள மாதிரிதான். ஏதாச்சும் இருந்தா சொள்ளுங்களேன்.” என்று ஒருசில பார்வையற்ற பெண்களின் பெற்றோர்கள் என்னிடம் வந்து கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் அதற்கான பதில்தான் என்னிடம் இல்லை. அப்படி கேட்ட சிலரின் மகள்களுக்கு திருமனமும் முடிந்திருக்கிறது. அதை நினைக்கும்போது மட்டும் அவ்வப்போது சந்தோஷப்பட்டுக்கொள்வேன். ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டும்தான். பலரின் நிலை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தெரிந்தவர் ஒருவர் வந்துரெண்டு டோட்டலி பிலைண்ட் (100% பார்வையற்றவர்) லேடிஸ் இருக்காங்க. ஒருத்தருக்கு 40 இன்னொருத்தருக்கு 41. யாராச்சும் கெடச்சா சொல்லு.” என்று சொல்லிவிட்டு சென்றார். என்னால் அந்த விஷையத்தைப் பொருத்தமட்டில் எதுவும் செய்ய இயலாது என்று அவருக்குத் தெரியும். எனக்கும் தெரியும். இருந்தாலும் வார்த்தை பரிமாற்றங்கள் நிகழத்தான் செய்தன. இரண்டு வாரம் கழித்து அதே நபரிடம் நான் ஓரளவு பார்வைத் தெரிந்த பெண் யாராவது இருந்தால் சொல்லும்படி தகவல் அனுப்பினேன். எனக்காக இல்லை என்பதையும் சேர்த்து சொன்னேன். இன்னும் பதில்வரவில்லை. இப்படி கேள்வியாக மட்டுமே பல பார்வையற்றவர்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆசை யாரைவிட்டது என்பார்கள். அது பார்வையற்றவர்களுக்கும் பொருந்தும் என்பதுதான் உண்மை. பெரும்பாலான பார்வையற்றோர்களுக்கு பார்வையுள்ள யாரையாவது திருமனம் செய்து கொள்ளவேண்டும் என்பது ஒரு ஆசை. அவர்களுக்கு இல்லையென்றாலும் அவர்களின் பெற்றோர்களுக்கு அதுவே ஆசையாக இருப்பதை காணமுடிகிறது. அதனாலேயே பாதி பேரின் வாழ்க்கையில் திருமனம் ஒரு தேடலாகவே இருக்கிறது. அதே சமையம் பார்வையற்றவர்களுக்குள்ளேயும் காதல் பிறப்பதும் உண்டு. அது எதார்த்த வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே அந்தக் காதல்களில் சில இறந்து போவதையும் பார்க்கமுடிகிறது. அதே நேரத்தில் சில காதல்கள் வெற்றி பெறுவதையும் பார்த்திருக்கிறேன்.
எதையுமே இதுதான் என்று ஊகித்து சொல்ல முடியாத அளவிற்குதான் பார்வையற்றோரின் வாழ்க்கை இருந்துகொண்டிருக்கிறது. ஒரு பார்வையற்றவர் பார்வையுள்ளவரை திருமனம் செய்து கொள்ள முயன்றால் உளவியல் ரீதியான புரிதலில் சிக்கல். தவிற பாதியில் கைவிட்டுவிட்டு சென்று விடுவாரோ என்ற பயம் வேறு. அதுவே ஒரு பார்வையற்றவர் தன்னைப்போன்ற இன்னொரு பார்வையற்றவரைத் திருமனம் செய்துகொள்ள முயன்றால் வாழ்வியல் ரீதியான சிக்கல். இது இரண்டும் இல்லாமல் இன்னும் தனக்கான துணையைத் தேடிக்கொண்டிருப்போர்களுக்கு தனது வாழ்வில் கடைசி காலத்தில் சிக்கல். இதை கொடுமையின் உச்சமாகத்தான் என்னால் உணர முடிகிறது. அரசாங்க வேலையிலோ அல்லது சுய தொழிலிலோ இருந்துவிட்டு ஓய்வு பெறும் ஒரு பார்வையற்றவருக்கு தனக்கு பின் யாருமில்லையே என்று நினைக்கும் உணர்வை ஒரு பார்வையற்றவனால்தான் உணர முடியும்.
பார்வை இருந்தால் அருவது வயதுக்குமேல் ஏதாவது செய்யலாம். சேவை செய்கிறேன் என்று கிளம்பலாம். சண்யாசியாக போகலாம். கொஞ்சம் பணமும் செல்வாக்கும் இருந்தால் கட்சியாவது தொடங்கலாம். ஆனால் திருமனம் செய்ய இயலாத பார்வையற்றோரின் வாழ்வில் கதையே வேறு. இங்கு இல்லாமையோடு இயலாமையும் சேர்ந்துகொள்கிறது. தனக்கான தலைமுறை இல்லாத ஒரு பார்வையற்றவர் தனது அருவதாவது வயதுக்கு மேல் ஆதரவற்றவராகத்தானே இருந்தாகவேண்டும்? அப்படி ஒரு நிலையில் என்னை அடிக்கடி பொருத்தி பார்த்திருக்கிறேன். சில நேரம் பயமாகவும் இருக்கும். அப்படி நினைக்கும்போதெல்லாம் எனது வாழ்வு அருவதாவது வயதில் முடிந்துவிட வேண்டும் என்று எத்தனையோமுறை எண்ணி இருக்கிறேன்.
ஆனாள் இப்போது இன்னொரு பத்து வருடம் அதாவது எழுவது வயதுவரை இருந்துவிட்டு போகலாம் என்று தோன்றுகிறது.

2 comments:

  1. மிகவும் உண்மை

    ReplyDelete
  2. உண்மை வாழ்க்கையை நினைத்தாலே ரொம்ப பயமாக இருக்கிறது

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube