25 April 2017

எத்திராஜ் சாலை.

Posted by Vinoth Subramanian | Tuesday, April 25, 2017 Categories: , , ,
நீண்டநாள் கழித்து நேற்று தோழி லின்சியை சந்தித்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, “நான் இப்போ போடுர போஸ்ட எல்லாம் பாக்குரியா மா?” என நான் கேட்க, அதற்கு அவள் ”இப்போவா, நீ என்னத்த போடுவ? எவனாச்சும் உன் பேன்குக்கு வந்திருப்பான். அததான் போட்டுக்கிட்டு இருப்ப” என்றாள். மரண கலாய் அது. இன்று வந்தவர் அவளை நினைவு படுத்திவிட்டார்.


பொதுவா நான்கு மணிக்கு மேல் வாடிக்கையாலர்களுக்கு எங்கள் வங்கியில் அனுமதி கிடையாது. அதையும் மீரி ஒரு சில பேர் வருவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு எல்லாம் நடந்திருக்கும். பய்யன் பணம் அனுப்பி இருப்பாண்.
பொன்னுக்கு ஃபீஸ் கட்டனும் என்பார். அடுத்தநாள் திருமனம் அரங்கேரி இருக்கும். குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கும். இதில் சில உண்மையாகவும் இருக்கும். ஆனால் மெஜாரிடி கதைதான்.
அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு எங்கள் வங்கி தலமை அலுவுலகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் நான்கு மணிக்கு மேல் வாடிக்கையாலர்களை எந்த காரனம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்று தெளிவாக குறிப்பிட பட்டிருக்கிறது.
நான் பெரும்பாலும் நான்கு பத்து அலவில் கிளம்பி விடுவேன். நான் வெளியெ செல்லும்போது யாரேனும் உள் நுழைய வேண்டும் என்பார்கள். சில நேரங்களில் சிலர் சொல்வதை கேட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள். அதற்காகவே உள்ளிருக்கும் கண்ணாடிக் கதவை அடைத்து தாழிட்டு விடுவோம். வெளியில் இருக்கும் இருந்பு கதவை வெருமனெ அடைத்துவிடுவோம்.
நான்கு மணிவரை வரும் நபர்கள் வாடிக்கையாலர்கள் போல நடந்து கொள்வார்கள். ஆனால் அதற்கு மேல் வருபவர்கள்தான் ஏதொ வங்கி உரிமையாலர் போல இல்லாத சட்டம் எல்லாம் பேசுவார்கள்.
நான் கிளம்பிவிடுவேன். அதற்காகவே ஐந்து நிமிடம் முன்பே என் கௌண்டரை மூடிவிடுவேன். இருந்தாலும் கடைசி நேரத்தில் வந்து கடுப்பேத்துவார்கள். சிலரை பார்த்தால் உண்மையிலேயே பாவமாக இருக்கும். சிலர் வேண்டுமென்றே தாமதித்து வருவார்கள். சிலர் கண்ணாடி கதவை அடைத்த பிறகும் வாசலில் வந்து நிற்பார்கள்.
அப்படிதான் இன்றும் நடந்தது. வெளிக்கதவை மூடிவிட்டு கண்ணாடி கதவை அடைத்து தாழிட்டு விட்டோம்.
அம்பேட்கர் வந்தார். அம்பேட்கர் காசோலைகளை தினமும் வந்து பெற்று செல்பவர். ”வினோத்?” என்று   வெளியில் இருந்து கத்தினார். இன்று கொஞ்சம் தாமதமாக வந்திருந்தார். எப்போது உள்ளே வரும்போதும் ”வாங்க வினோத்!” என்பார். காசோலைகளை பெற்றுவிட்டு கிளம்பும்போது “வரேன் வினோத்.” என்று சொல்லிவிட்டுதான் செல்வார். நானும் ”பாய் சார்.” என்று சொல்லிவிடுவேன்.
”என்ன விணொத் வெளில நிக்க வெச்சிட்டீங்க?” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார். ”நீங்க லேட்டு சார்.” என்றோம். காசோலைகளை வாங்கிக்கொண்டு சிரித்தபடி சென்றார்.
சுஜா மேம் உள்ளே இருந்ததால் நானே கண்ணாடி கதவை அடைத்தேன். எப்போதும் சுமார் மூன்று ஐம்பது அளவில் நான் அப்பாவிற்கு மிச்ட் கால் கொடுத்துவிடுவேன். அவர் வந்தவுடன் எனக்கு திரும்ப மிச்ட் கால் கொடுப்பார். உடனே நான் கீழே இறங்கி செல்லவேண்டும். இதுதான் எப்போதும் நடக்கும். மிச்ட் கால் ஏதும் வராததால் உள்ளே நடந்தேன். யாரோ ஒருவர் வந்து நின்றிருக்கிறார்கள்.
 ”வினோத், மருபடியும் யாரொ வெளில நிக்குராங்க.” என்றார் கேஷியர். திரும்பினேன். திறந்தால் தேவையில்லாமல் பேசவேண்டும். அவர்களே கொஞ்சநேரம் நின்றுவிட்டு சென்றுவிடுவார் என நினைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டேன்.
அப்பாவிடமிருந்து மிச்ட் கால் வந்துவிட்டது. எப்படியும் வெளியில் செல்லவேண்டும். ”இன்னும் போகல.” என்று சொல்லிக்கொண்டிருந்தார் கேஷியர். ”மேலா ஃபீமேலா மேம்?” என்று அனிதா மேமிடம் கேட்டேன். அவருக்கு கேட்கவில்லை. ”அப்பிடியே டீல் பண்ணி அப்பிடியே அனுப்பிடனும்.” என்றார்கள் அனைவரும்.
”அப்படியே ஆகட்டும். நான் ஸ்டாப் பண்ணிட்டு வெளில போயிடுவேன். ஆனா திரும்ப உள்ளவந்தா என்ன செய்ரது?” என்று கேட்டு கொண்டே நடந்தேன்.
சில ஏடாகூட பேருவழிகள் இருக்கிறது. நாம் என்னதான் சொன்னாலும் ”மேனேஜர பாத்துட்டு போயிடுரேன்” நு சொல்லி உள்ள போயி மொக்கை வாங்கிவிட்டு வருவார்கள்.
தாழை திறக்க கையை உயர்த்திவிட்டேன். அப்போதும் எதிர் புரத்தில் இருந்து எந்த சத்தமும் இல்லை. ”செந்தில் சார், நான் போனதும் வந்து க்லோஸ் பண்ணிடுங்க.” என்று சொல்லி கதவைத் திறந்து வாசலில் காலை வைத்தாயிற்று.
வெளிக்கதவிற்கு பின்னால் அந்த நபர் நிற்பார் என நானாகவே ஒரு கணக்கு போட்டுக்கொண்டு கையை நீட்ட உடையுடன் சேர்ந்து உடலிலும் விரல் பட,
“ஐயோ லேடிஸ்!” என மனதிற்குள் மணி அடிப்பதற்குள்
”எக்ஸ் கியூஸ் மீ சார்,” எனத் தொடங்கினார் அந்த பெண். நாந்தான் எக்ஸ் கியூஸ் கேட்டிருக்கவேண்டுமெனத் தோன்றியது. வெளிக்கதவிற்கும் கண்ணாடிக்கதவிற்கும் இடைப்பட்ட இடைவேளியில் ஒரு ஓரமாக நின்று கொண்டு இருந்திருக்கிறார். எந்த சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்திருக்கிறார்.
நான் சொல்லவந்த “சாரியை” அவலது ”எக்ஸ் கியூஸ்” குழப்பிவிட்டது.
”யெஸ் மேடம்?” என சொல்லி நான் இரண்டு அடி வலது புரமாக நகர்ந்து கொண்டேன்.
”அக்கௌண்ட் ரீ ஆக்டிவேட் பண்ணனும். என்னுடையது எத்திராஜ் சாலை ப்ரேன்ச். இங்க லெட்டர் குடுத்தா பண்ண முடியுமா?”
”யூஸ் பண்ணாம விட்டுட்டீங்களா மேடம்?” என கேட்டதுக்கு.
”ஆமாம் சார், அதனால டோர்மெண்ட் ஆயிடிச்சுனு சொன்னாங்க. சோ, இங்க ஆக்டிவேட் பண்ணி குடுப்பீங்களா?”
”இல்ல மேடம், இங்க இல்ல, எங்கயுமே ஆக்டிவேட் பண்ணமுடியாது. நீங்க உங்க ப்ரேன்ச் கு தான் போகனும். எங்க உங்களுக்கு அக்கௌண்ட் இருக்கோ அங்கதான் ஆக்டிவேட் பண்ணுவாங்க.”
”அப்போ ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கலாம்ல?”
”அதுக்கு கூட நீங்க அங்கதான் போகனும் மேடம். அங்கதான் லெட்டர் குடுக்கனும். அவங்கதான் இங்க அனுப்புவாங்க.”
”ப்ச். ஓகே சார்.”
உச்சிக்கொட்டியது உச்சந்தலையில் இறங்கியது.
”இதுக்குதான் இவ்வலவு நேரம் வெளில நின்னுட்டு இருந்தீங்களா மேடம்?”
”ஆமாங் சார்.”
”ஸாரி மேடம்.” என்றேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
செந்தில் சார் வெளியே வந்தார்.
”ஏன்னாச்சு?”
”சொல்லியாச்சு. அக்கௌண்ட் ரீ ஆக்டிவேட் பண்ணனுமாம்.”
”டோர்மெண்ட்.” என்றார் அந்த பெண். டோர்மெண்ட் என்ற வார்த்தை எல்லாம் இந்த பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.
”எந்த ப்ரேன்ச்?”
”எத்திராஜ் சாலை.” என இருவரும் சொன்னோம்.
”அங்கதான் போகனும்.” என ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டார்.
நானும் அதையே திரும்ப சொல்ல, “தேன்க் யூ சார்.” என சொல்லி கிளம்பினாற் அந்த பெண்.
நான் ஒரு சில நொடிகள் அங்கேயெ நின்று கொண்டிருந்தேன். சுஜா மேமாக இருந்தால் ”போயிட்டாங்க வினோத். நீ போகலாம்.” என சொல்லி இருப்பார். வந்த நாளிலிருந்தே சுஜா மேமிற்கு என் உடல்மொழி கொஞ்சம் புரிந்திருந்தது. நான் எதற்கு நிற்பேன், எதற்கு யோசிப்பேன் என்றெல்லாம் அனுமானித்து விடுவார்.
அந்த எத்திராஜ் சாலை என்னை முழுதாக கடந்துவிட வேண்டுமென என்னினேன்.
”வினோத் சார், நீங்க போரிங்களா இல்ல நிக்க போரிங்களா?” என செந்தில் சார் கேட்க, ”எத்திராஜ் சாலை கன்ஃபார்மா போயிடிச்சு” என நினைத்துக்கொண்டு, ”நான் ஏன் சார் நிக்க போரேன்” என சொல்லி கிளம்பிவிட்டேன்.
கீழே அப்பா காத்துக்கொண்டிருந்தார். இரு சக்கர வாகனம் சிரிது தூரம் சென்றதும்தான் நினைவுக்கு வந்தது.
”ஐயையோ!”
”என்னப்பா ஆச்சு?” என அப்பா கேட்க,
”இன்னைக்கு மேனேஜர் கிட்ட கிளம்புரேநு சொல்லாமயெ வந்துட்டேன்!”

1 comment:

  1. super post it reveals the indepth struggle and pain of humanism.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube