07 February 2017

இணக்கி

Posted by Vinoth Subramanian | Tuesday, February 07, 2017 Categories: , ,



ஒரு சில நிகழ்வுகளை எழுதாமல் தவிற்க முடியாது. ஏனென்றால் அந்த நிகழ்வுகள் நினைவுகளோடு இணைந்துவிடும். அப்ப்அடிப் பட்ட மரக்கமுடியாதநாள்தான் இது.
அவள் பெயர் சரண்யா. சிறுவயதில் ஐந்தாம் வகுப்புவரைக்கும் ஒன்றாக படித்தவள். கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம்.
எளிதாக நடந்ததா இல்லையா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அறிதாகத்தான் நடந்தது. எதையும் திட்டமிடவில்லை.
வாழ்வின் சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் திட்டமிடப் படுவதில்லை அல்லது திட்டமிடப்பட்டவை ஆகினும் நம்மிடம் தெரிவிக்கப் படுவதில்லை.
சிறுவயதில் சரண்யாவிற்கு ஒரு பின்பம் உண்டு. அவள் பேசமாட்டாள். வகுப்பரையில் எப்போதும் பேசவெமாட்டாள். அப்படியும் பேசினால் நாவின் மொழிகள் உதடிற்கு கேட்காது... உதட்டின் மொழிகள் எவருக்கும் கேட்காது. ஆசிரியரிடம் திட்டுவாங்கும்போது மட்டும் அழுவாள். அது ஊருக்கே கேட்கும். ஏனென்று கேட்டபோது பதில் வந்ததில்லை.
ஆனால், ஒருசில பேருக்கு மட்டும் தெரியும். உணவு இடைவேளியின்போது அவள் பேசுவாள். மிகவும் சாதாரனமாகப் பேசுவாள். சத்தமாகவும் பேசுவாள். அந்த ரகசியத்தை தெரிந்தவர்களில் நானும் ஒருவன். என்னிடமும் பேசி இருக்கிறாள். ஆனால் பெரிதாக எல்லாம் ஒன்றுமில்லை.
சரண்யா விளையாட்டு மைதானத்தில் பேசுவதும், வகுப்பரையில் பேசாமலே இருப்பதும் ஆசிரியர்களின் காதுகளுக்கு சென்றது. ஏன் என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் பதில் இன்றுவரை எனக்குத் தெரியாது. அவள் சொன்னதாக யாரும் சொன்னதில்லை. ஏதோ ஒரு பயமென்று நானாக நினைத்துக்கொள்வதுண்டு.
எது எப்படியோ, விடை தெரியாமல் பள்ளியை விட்டு வெளியேறியவன் நான்.
ஐந்தாம் வகுப்பிற்குப் பின் அடையாரில் உள்ள பார்வைத் திறன் குரையுடையோருக்கானப் பள்ளியில் பயில ஆரம்பித்தேன். அங்கு சரண்யாவின்  அண்ணன் அருண் அவர்களின் நட்பு கிடைத்தது. நல்ல மனிதர். என்னைவிட ஐந்து வயது மூத்தவர். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவர் பத்தாம் வகுப்பு. ஒருபோதும் தான் சீனியர் என்று சீன் போட்டதில்லை.
நான் எட்டாம் வகுப்பு முடிக்கும்போது அருண் அண்ணா பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டுக் கிளம்பிவிட்டார்.
சகோதரனைப் பார்க்க சரண்யா பள்ளிக்கு அவ்வப்போது வருவாள். ஆனால் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டதில்லை. அவளின் அம்மாவிடம் மட்டும் பேசுவதுண்டு. பிறகு அதுவும் இல்லை.
சரி விஷயத்துக்கு வருகிறேன். சிறு வயதில் (ஐந்தாம் வகுப்புவரை) நிறைய தோழிகளைப் பெற்றிருந்தேன். சில நேரங்களில் வகுப்புத் தோழிகளிடம் வகுப்பைத் தவிர்த்து வெளியிடங்களிலும் பேசியதுண்டு.
ஐந்தாம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டு வந்ததும் நிலைமை மாறியது. எல்லோரும் வெவ்வேறு திசையில் பயனித்தோம். காலங்கள் கடந்தன.
சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு சிலர் மீண்டும் வந்து சேர்ந்தனர். ஆனால் அப்படி வந்தவள் அல்ல சரண்யா.
இரண்டாயிரத்து பதினைந்தில் வேலையில் சேர்ந்தபோது முதல் மாத சம்பலம் வரவில்லை. இரண்டாவது மாதம் சேர்த்து கொடுத்தார்கள். ஆனாலும் அதுதான் முதல் சம்பலம் என்பதால் வங்கியில் உள்ள அனைவருக்கும் மத்திய உணவு வழங்கலாம் என நினைத்தேன். வங்கிக்குப் புதிது என்பதாலும் அதிகம் பழகாததாலும் இனிப்பு காரத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்துஅப்பாவின் மூலமாக ஏற்பாடு செய்யச் சொன்னேன். ஏற்பாடு செய்யப் பட்டது.
ஆனால் அங்கு நடந்தது வேறு.
இனிப்புகளை வங்கிக்கு வாங்கிக் கொண்டுவரும்போது எதிர்பாராதவிதமாக அம்மா சரண்யாவின் அம்மாவை பார்த்திருக்கிறார்.
அம்மாவிற்கும் சரண்யாவின் அம்மாவிற்கும் நாங்கள் சிறுவயதில் ஒன்றாக படிக்கும்போது நல்ல பழக்கம். அடையாலம் கண்டுகொண்டார்கள் போலும்.
சரண்யாவும் அருண் அண்ணாவும் உடன் இருந்திருக்கிறார்கள். பிறகென்ன... அவர்களுக்குத்தான் ஃபர்ச்ட் ட்ரீட்!!! எனது அம்மா கையில் மாட்டினால் இனிப்பு காரத்தோடெல்லாம் நிற்காது.
விஷையத்தை அன்று இரவு அம்மா சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மா மேலும் சொல்லும்போதுதான் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. சரண்யாவின் அம்மா நான் வேளை செய்யும் வங்கியில்தான் கணக்கு வைத்திருந்திருக்கிறார். அடிக்கடி என்னை பார்த்திருக்கிறார். அன்றுகூட ஏதோ ஒரு காரனத்திற்கு குடும்பத்துடன் வங்கிக்கு வந்து திரும்பி இருக்கிறார்கள். அப்போதுதான் சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது.
எங்கள் ஊரில்தான் இரண்டு வருடங்களாக வசித்து இருக்கிறார்கள்.
ஆனாலும் அரியாமலேயெ இருந்திருக்கிறோம். வங்கிக்கு வரும்போதெல்லாம் சரண்யாவின் அம்மா என்னைப் பார்த்திருக்கிறார். பலவருடங்களுக்குப் பின் பார்த்ததால் என்னைச் சரியாகக் கணித்தும் குழம்பி இருக்கிறார்.
இதையெல்லாம் கேட்டதும் அம்மா அருண் அண்ணாவிடம் எனது அலைப்பேசி எண்ணைக் கொடுத்திருக்கிறார். அந்த வருடம் தீபாவளி அன்று ஒரு வாழ்த்துக் குருஞ்செய்தி வந்தது. அழைத்து பேசியபோதுதான் யாரென்று தெரிந்தது. அண்ணனும் தங்கையும்தான். பேசினோம்.
அதன் பிறகு எப்பொழுதாவது பேசுவோம். நானும் அருண் அண்ணாவும்தான் பேசுவோம். சரண்யாவின் அம்மா அதன் பிறகு அவ்வப்பொழுது வங்கிக்கு வருவார். அப்படிதான் ஒருமுறை வங்கிக்கு வந்தவர் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டதாக சொன்னார்.
ஓராண்டுக் கழித்து சரண்யா என்ற பெயரில் முகநூலில் நட்பு அழைப்பு வந்தது. யாரென்ற விவரமெல்லாம் பார்க்கவில்லை. அழைப்பை உறுதி செய்துவிட்டு வேறுவேலையைப் பார்க்கத் துவங்கினேன். திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் குருஞ்செய்தி. இதே பெயரில்தான். இப்போதாவது பார்க்கவேண்டுமல்லவா? எனக்குநிறைய சரண்யாக்களைத் தெரியும். ஆறய்ந்து பார்த்தால் இவள்தான். பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பேசினோம். முதலில் யோசித்து யோசித்து பேசியவள் பிறகு நான் யோசிக்கும்படி பேசினாள்.
ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு நடந்த கதைகள் எல்லாம் சொல்லப் பட்டது. வர்தா புயலில் எங்கள் வீட்டில் எல்லாம் துண்டிக்கப்பட்டபோது ஒருவாரம் கழித்து அழைத்தாள். அருண் அண்ணா ரீச்சார்ஜ் செய்வதால் என் அலைப்பேசிக்கு ரீச்சார்ஜ் செய்யமுடியுமா என்று கேட்டதுதான் தாமதம். செய்யப்பட்டது.
பணத்தைக் கூட ஒருவாரம் கழித்துதான் மின்னணு பரிவர்த்தனையின் மூலம் அனுப்பினேன்.
அடிக்கடி முகநூலில் தொடர்பு கொள்ள இயலவில்லை. வர்தா புயலுக்குபின் இணையம் சரியாக இயங்கவில்லை என்பதை சொல்லிவந்தேன். போனவாரம்வரை இதுதான் நிலைமை.
சென்ற புதன் கிழமை சரண்யா அவளது தோழி ஒருவரின் புதுமனைப்புகுதலுக்காக எங்கள் ஊருக்கு வருவதாக சொன்னாள்.
அப்படியே வங்கிக்கு வந்து என்னையும் பார்ப்பதாகவும் திட்டம்.
ஏற்கனவே போதுமான அலவிற்கு தினமும் பேசுவதால் நேரில் வந்ததும் என்ன பேசவேண்டுமென யோசித்துக் கொண்டிருந்தேன்.
அம்மாவுடந்தான் வந்திருந்தாள். வந்தவுடன் எதுவும் பேசவில்லை. கையில் இருந்து எதையோ நீட்டினாள். வாங்கி பார்த்ததும் குழப்பமாய் இருந்தது. விசாரித்துப் பார்த்ததும் புரிந்தது.
எங்கள் வீட்டில் இணையம் சரியாக இயங்கவில்லை என சொன்னதால் கொண்டு வந்திருக்கிறாள். அண்ணனும் தங்கையும் சேர்ந்துதான் முடிவெடுத்திருக்கிறார்கள்.
அவள் தன் வீட்டில் இன்னொன்று இருப்பதால் என்னிடம் கொடுத்து என்னைப் பயன்படுத்திக் கொள்ள சொன்னாள்.
இணையம் சரியாகிவிட்டதால் எனக்கு உபையோகப் படாது என்று சொல்லி திருப்பிக் கொடுத்துவிட்டேன். முதலில் வற்புருத்தினாள். விலக்கி சொன்னதும் புரிந்து கொண்டு திரும்பப் பெற்றுக் கொண்டாள்.
பிறகு சில நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் கிளம்பி சென்றனர். பதினாறு வருடங்கள் கழித்து சந்தித்திருக்கிறோம். மனதிற்கு அது ஒரு மகிழ்ச்சியான தருணமாகவே தோன்றியது.
நமக்கு என்ன தேவை என்பது சிலநேரங்களில் நமக்கே தெரியாது. ஆனால் நம்மைவிட நம் நன்பர்கள் விரைவாக கண்டுபிடித்துவிடுவார்கள். இதுதான் தேவை என்று கேட்கும் முன்னமே ஒரு பொருளையோ அல்லது உதவியையோ  பெறமுடியுமென்றால் அது நட்பின் வாயிலாகத் தான் இருக்கமுடியும். அவள் என்னிடம் கொடுக்கவந்த பொருளின் தமிழாக்கத்தைத் தேடினேன். விடையோடு சேர்ந்து பதிவுக்குத் தலைப்பும் கிடைத்தது.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube