11 January 2016

அவள் சொல்லிவிட்டாள்!

Posted by Vinoth Subramanian | Monday, January 11, 2016 Categories: ,



வாட்சப்பில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. திறந்து பார்த்தால் ஒன்றும் புரியவில்லை. பொருமையாகப் படித்தேன். புரிந்தது. நீண்டநாள் கழித்து அனுப்பி இருந்தாள். நீண்ட நாள் என்றால் ஒரு நான்கு நாட்கள் இருக்கும். அவளை உடனே அழைத்து பேசிவிட என்னினேன். அழைத்த உடன் அழைப்பை எடுக்கவில்லை. எடுக்கமாட்டாள் என என்னியபொது எடுத்துவிட்டாள்.

யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்றெல்லாம் குழம்பவேண்டாம். எல்லாம் வாசகர்களுக்குப் பரிட்ச்சியமானவள்தான்.
எப்டி இருக்க வினோத்?” என்றாள். என்னலத்தைச் சொல்லிவிட்டு அவளது நிலைமையை தெரிந்துக் கொள்ள விழைந்தேன்.
எப்டி இருக்க பிரிட்டா? (brita?)” என்அக் கேட்டதுதான் தாமதம். அதற்குமேல் எவ்வலவு நேரம் பேசி இருப்போம் எனத் தெரியாது. தான் வேலை செய்யும் இடத்தில் இரண்டுப் பணியிடங்கள் காளியாக இருப்பதாகத்தான் மெசேஜ் அனுப்பி இருந்தாள். இரண்டு பேருக்கு அந்த வேலைத் தேவைப் பட்டது. அதைப் பேசத் தான் உடனடியாக அழைத்திருந்தேன். பேசினோம். அவர்களிடம் அவளது அலைப்பேசி எண்ணைக் கொடுக்கச் சொல்லி இருந்தாள். கொடுத்து விடுகிறேன் என்றுக் கூறிப் பேச்சைத் தொடர்ந்தோம்.

அதிகமாகப் பேசமாட்டாள். ஆனால் நட்பு வட்டாரத்தில் மிக அதிகமாகவும் மனதில் பட்டதை வெளிப்படையாகவும் பேசக்கூடியவள். என்னிடம் அப்படித்தான். கொடுத்துவைத்திருக்கிறேன் போலும். நான் செய்யும் தவறுக்அளை தவறாமல் கண்டிப்பவள்.
பொங்கலுக்கு என்னத் திட்டம் வைத்திருக்கிறாய் என்றுக் கேட்டேன். வ்ஈட்டிற்கு சென்றே ஆகவேண்டும் என்றாள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விபத்து. ஊரில் நடந்திருக்கிறது. அவளது சித்தப்பாவும் சித்தப்பாவின் இரண்டாம் வகுப்புப் படிக்கும் மகள்உம் பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். இரு சக்கர வாகனத்தில்தான். பின்னால் வந்த கார் காரன் அடித்திருக்கிறான். சித்தப்பாவிற்கு கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குழந்தைக்குதான் பயங்கர அடி. முகம் முழுவதும் காயம்ஆகி இருக்கின்ரது போலும். புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார்கள். அதிர்ந்து போயிருக்கிறாள். ஒரு கண் மூடிய நிலையிலும், வாய் மிகவும் வீங்கிய நிலையிலும் இருந்த்அதாம். என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. குழந்தை, வளி தாங்கமாட்டாள், என்றாள். உன்மைதான். பதில் ஏதும் பெசவில்லை. பேச இயலவில்லை என்பதுதான் உன்மை. எப்படி ஆருதல் சொல்வத்எனத் தெரியாமல் அமைதியாக இருந்தேன். ஆருதலாக இரண்டு வார்த்தைகளைச் சொல்லித் தேற்றலாம் என நினைத்தேன். வார்த்தை ஏதும் சிக்கவில்லை. ஏதோ என் தங்கைக்கு நடந்த்அது போலவே இருந்த்அது. எப்படிச் செல்வதென்றும், எப்படியாவதுச் சென்றுவிடவேண்டும் என்றத் தவிப்பும் குறளில் தெரிந்த்அது. முன்பே எப்படியாவதுப் பயணச் சீட்டைப் பதிவுச் செய்யச் சொன்னேன். சரி என்றாள்.
சிறிதுநேர நிசப்தத்திற்கு பிறகு கேட்டாள்.
உன் தமிழ் ஏண்டா இப்டி இருக்கு?” என்றாள். போனவாரம் வலைப்புவில் போட்ட தமிழ் இதுகையைத் தான் கேட்கிறாள். புரிந்துக் கொண்டேன்.
தவறுகளிருக்கும் எநத் தெரியும். இருப்பினும் என்ன என்றுக் கேட்டேன்.
படிச்சிட்டு இங்லீஷ் ஓடக் கம்பெர் பன்னலாம்னு நெனச்சேன். ஆன ரொம்ப மிச்டேக் வினோத். அத படிக்கனும் அப்படிஙுர ஃபீலே வராது. எவ்வலவு நல்லா இருந்தாலும் கண்ணுக்கு மிச்டேக்தான் தெரியும்.” என்றாள். அவள் சொல்வதும் சரிதான். ஆனால் அடுத்துச் சொன்ன வார்த்தைதான் பயத்தை உருவாக்கி விட்டது.
ச்கிப் பன்னிட்டு போயிடுவாங்க வினோத்!” என்றாள்.
அதிர்ந்து போனேன். படித்துவிட்டு சிலரைப் போலத் துப்பிவிட்டுப் போனாலும் பரவாயில்லை. ஆனால் படிக்காமலேயே அவதூறு வழக்குப் போட்டுவிட்டுச்  செல்லும் சிலரைப் போலச் சென்றுவிடுவார்கள் என்று நினைக்கும்போதுதான் ஏதோ போல் இருந்தது. அந்தப் பதிவிற்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருந்தன. அனைவரும் முன்வைத்த ஒரு விமர்சனம் எழுத்துப் பிழைகள்தான்.

சிறுவயதில் பிரெயில் முறையில் பயின்று வந்தோம். அப்போதெல்லாம் எழுத்துப் பிழைகளைக் கண்டறிய முடியும். இப்போது மெண்பொருள் வாயிலாக கேட்டு வாசித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் முற்றிலும் மரந்துப் போயிருக்கிறது. ஆனாலும் திருத்திக் கொள்ளவேண்டும். அதைத்தான் பிரிட்டாவும் சொன்னாள்.
யாரச்சும் வெச்சிக் கரக்ட் பண்ணிட்டுப் போட்டிருக்கலாம்.” என்றாள். யாரிடம் கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தேன்.
வ்ஈட்ல அப்பா அன்னா யாரச்சும் கரக்ட் பன்னமாட்டாங்களா வினோத்?” எனக் கேட்டாள். அந்தக் கேல்வியில் கொஞ்சம் சுருதி இறங்கி இருந்தது. அக்கரையின் அலவு கொஞ்சம் அதிகமாக இருந்தது.
அவங்களுக்கெல்லாம் என் ப்லாக் ஒட பேர் கூடத் தெரியாது.” என்றேன்.
எதுவும் பேசவில்லை.

அப்பாவுடைய லவ் ச்டோரி எழுதினியே, அவர்க்கிட்ட பர்மிஷன் கேட்டியாட?” என்றாள். கேட்காமல் எதுவும் எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் (those fourteen days) என்ற ஆங்கிலச் சிறுகதையின் முதல் பாகத்தில் அப்பாவின் காதல் கதையை   எழுதி வைத்திருக்கிறேன். படித்திருக்கிறாள். அதனால்தான் கேட்கிறாள். எனக்கு எழுத நேரம் இருக்கிறது. எழுதுகிறேன். ஆனால் பிரிட்டாவிற்கு படிப்பதற்குக் கூட நேரமில்லை. மீண்டும் கல்லூரியைத் திறந்திருக்கிறார்கள். நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்திவிட்டார்கள். இருப்பினும் படித்துவிட்டுப் பதிவைப் பற்றிப் பேசினாள். ஒரு கதையைப் படித்துவிட்டு விமர்சனங்களைப் பதிவு செய்துவிட்டுச் செல்லும் பேர்களுக்கு நடுவில், இது போன்ற ரகசியங்களை எழுதும்போது என் தந்தையின் மனநிலையையும் குடும்பத்தின் நிலையையும் கருத்தில் வைத்துக் கேட்கிறாள் என்றுத் தோன்ரியது. அதுதான் உன்மையென்றும் நினைக்கத் தோன்றியது.
ஒருவன் வாழ வேண்டுமென்றால், புகழ ஒரு கூட்டம் தேவை. உயரவேண்டுமென்றால், நடுநிலையாக விமர்சிக்க எப்போதும் ஒரு கூட்டம் தேவை. அப்படிச் சிலரைப் பெற்றிருக்கிறேன்.   அதில் அவளும் ஒருத்தி. நான் தமிழில் செய்யும் தவறுகளைத்  திருத்த அவள் மடிக்கனிணியில் மெண்பொருள் எதையும் நிருவவில்லை. நிலமையை எடுத்துச் சொன்னாள். இல்லையென்றால் இப்போது எழுதும் பதிவு அவளிடம்தான் சென்றிருக்கும். முடியாதபோதும் எப்படி உதவவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.  காரனம், ப்ரிட்டாவிற்கு நன்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியும்.

அதிகமாகப் புகழ்ந்துப் பேசுகிறேன் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இந்தச் சம்பவத்தைப் படித்துவிட்டு நீங்களெ ஒரு முடிவிற்கு வாருங்கள். சுமார் இரண்டறை ஆண்டுகள் இருக்கும். இருவரும் இரண்டாம் ஆண்டு முதுகளைப் படித்துக்கொண்டிருந்தோம். கையில்எங்கும் வெற்றி, எதிலும் வெற்றிஎன்ற ஒரு புத்தகம் கிடைத்தது. வாசித்துக் காண்பிக்க ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தேன். புத்தகத்தை ஐப்பேடில் ஒலிப்பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முடியுமா என பிரிட்டாவிடம் கேட்டதற்கு உடனெ முடியும் என்று புத்தகத்தையும் ஐப்பேடயும் வாங்கிக் கொண்டுச் சென்றாள். ஒரு வாரத்தில் எனக்குப் பிறந்தநாள் வந்தது. யாருக்கும் தெரியக் கூடாதென்று ரகசியமாக வைத்திருக்க என்னினேன். யாரோ விஷயத்தைப் பரப்பிவிட்டார்கள். பரிசுப் பொருட்களைக் கொடுத்துக் குவித்து விட்டார்கள். எதிர்ப்பார்க்கவே இல்லை. அனைவரின் பரிசுப் பொருட்களும் வெளிப்படையாகத் தெரிந்தது. அவர்களுக்கெல்லாம் கோடிமுறை நன்றி சொன்னாலும் போதாது. நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே பிரிட்டா அலைபேசியில் அழைத்து வாழ்த்திவிட்டாள். அடுத்தநாள், அதாவது, பிறந்தநாள் அன்று வகுப்பிற்கு வந்தாள்.
ரெகார்ட் பண்ணிட்டேன் வினோத். ஃபுல் புக்கும் ஓவர்.” என்றுக் கூறி ஐப்பெடையும் புத்தகத்தையும்ஹேப்பி பர்த்துடேஎன்றுக் கையில் கொடுத்தாள்.
தேங் யூசொல்லிப் பெற்றுக்கொண்டேன். மடிக்கனிணியில் இணைத்துப் பார்த்தேன். மொத்தம் இருபத்து ஐந்து அத்தியாயங்கள். ஒலிப்பதிவுச் செய்யப் பட்ட தேதியையும் நேரத்தையும் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடங்கி முடிந்திருக்கிறது. என் பிறந்தநாலுக்கு முந்தையத் தேதியில் தொடங்கி என் பிறந்தநாள் அன்று அதிகாலைக்குள் முடிந்திருக்கிறது. விசாரித்துப் பார்த்து உன்மையை கண்டறிந்தேன். புத்தகத்தைப் பொருமையாகத்தான்  ஐப்பேடில் பதிவுச் செய்துத் தரச் சொல்லி இருந்தேன். என் பிறந்தநாளை யாரோ அவளுக்குத் தெரிவித்துவிட, கொடுத்தப் புத்தகத்தை ஒலினாடாவில் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்க என்னி இரவு முழுதும் தூங்காமல் கண்விழித்துப் படித்துப் பதிவுச் செய்திருக்கிறாள்.


2 comments:

  1. brita avunga sonnathu unmaithaan.
    better ni vittula allathu friends circle la yaroda help la aachum edit senju podu.
    even sited persons kee chinna chinna mistakes varumpothu namakku tamil rompa rompa kashttam.
    mistakes oda iruntha ennathaan solla vanthalum/ezuthinaalum wastethan.
    VI enkira adayaalathil ethanai naalthaan eluthuva sollu.
    innaikku mistakes oda nalla irukku sollum unnoda nalan virumpikal athoda antha pathivukalai padikka maatarkal.
    puthusaa vaasikka varupavarkalukku ni VI nu theriyaath.
    ni eluthurathu tharamaanatha irukkanumnaa pizaikai thiruthi ezutha paaru illaina waste.
    muzukka enathu thanipatta-ennoda anupavam.


    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube