31 March 2020



ஊத்துக்கோட்டையில் மருந்து வாங்குவதற்காக என் அண்ணன் தனது வண்டியை நிறுத்திவிட்டு மருந்தை வாங்கிவிட்டு வெளியெ வந்தான். அப்போது முகம் தெரியாத ஒருவர் அண்ணனை நிறுத்தி பேச்சுக் கொடுத்திருக்கிறார். அந்த முகம் தெரியாதநபர் பேசிவிட்டு சென்ற பிறகுதாண் அண்ணன் உடனே என்னைத் தொடர்புகொண்டான்.

அன்ணனை வழிமறித்த அந்த முகம் தெரியாத நபர் முதலில் நலம் விசாரித்து இருக்கிறார். இவனுக்கு யாரென்று தெரியவில்லை. பிறகு இன்னாருடைய மருமகன்தானே நீங்கள் என்று எங்களது மாமாவின் பெயரையும் சொல்லி வினவி இருக்கிறார். அண்ணனும் ஆமாம் என்று சொல்ல, அடுத்ததாய் அந்த மனிதர் சொன்னதுதான் மிகப் பெரும் அதிர்ச்சி. உங்கள் மாமநாரின் இரண்டாவது மகளை உங்கள் தம்பிக்கே கொடுக்கப் போகிறார்கலாமே! எப்போது அவர்களுக்குத் திருமணம்? என்று கேட்க அண்ணனும் அந்த நேர அதிர்ச்சியில் ஏதோ சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறான். பிறகுதாண் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு உடனே இந்த செய்தியைச் சொன்னான். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அத்தைக்கு சிறு வயதிலிருந்து என்னை தெரியுமென்பதால் அவர் எனக்கு தனது பெண்ணை கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தது நன்றாக தெரியும். ஆனால் அதற்கெல்லாம் மாமா ஒத்துக்கொள்ளமாட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதை நானே எதிர்பார்க்கவில்லை. அந்த மனிதர் என் அண்ணனிடம் தன்னை எங்களது மாமாவிற்குத் தெரிந்தவர் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்றால் விஷையம் மாமா மூலமாகத்தான் போயிருக்கவேண்டும் என்பது முதல் அதிர்ச்சி என்றால், எனது அத்தையின் ஊரான கோபாலபுரத்திற்கும் ஊத்துக்கோட்டைக்கும் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு இருக்கும். அவ்வளவு தூரத்திற்கு விஷையம் பரவி இருக்கிறது என்பது இரண்டாவது அதிர்ச்சி. அதைப் பற்றி நினைப்பதற்குள் அடுத்து மூன்றாவது அதிர்ச்சி காத்திருந்தது. அது அந்த ஊர் மக்கள். ஒருவர் பின் ஒருவராக இந்தக் கேள்வியைக் கேட்க ஆரம்பித்திருந்தனர். அத்தையின் அம்மாவும் என்னிடம் நேரடியாக கேட்டுவிட்டார். எனக்கும் அவர் பாட்டிதாண். நான் முதலில் சரிபட்டு வராது என்றுதாண் சொன்னேன். இரண்டு குடும்பங்களும் தங்களது விருப்பத்தை ஒருசேர தெரிவிக்க பிறகென்ன செய்ய? அர்ச்சனாவின் சம்மதத்திற்காக காத்திருந்தேன். அடுத்து நடந்ததுதான் உங்களுக்குத் தெரிந்த அந்த முதல் அத்தியாயம்.

அத்தையைப் பொருத்தவரையில் ஒரு விடயத்தில் மிக உறுதியாக இருந்தார். அதை என்னிடம் நேரடியாக சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தகவல் மட்டும் கிடைத்தது.
எனக்கு ஒருவேளை அர்ச்சனாமீது விருப்பம் இல்லையென்றால் நான் என் மனதிற்கு பிடித்த யாரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் நான் திருமணம் செய்யவிரும்பும் பெண் என்னைப் போன்ற பார்வைத் திறன் குறையுடைவராக இருக்க கூடாது என்பதுதான் அத்தையின் நிலைப்பாடு. தவிர என்னை எந்தப் பெண்ணாவது ஏமாற்றிவிடுவாளோ என்ற பயம்வேறு அவருக்கு. அவர்களின் மாவட்டத்தில் யாரோ ஒரு பார்வையற்றவரை ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு பிறகு அந்த பார்வையற்றவரை விட்டுவிட்டு வேறொருவனுடன் உடன்போக்கு சென்ற கதை ஒன்றும் அவரின் காதுகளை அடைந்திருந்தது. எனது தாய்வழி சொந்தம் என்னைத் தட்டிக் கழித்த வரலாறு அவருக்கு தெரியும். எனது திருமணத்திற்குப் பின் எல்லோரைப்போலவும் நானும் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பது அவரது எண்ணம். இம்மாதிரியான அத்தையை திரு கே.எஸ். ரவிக்குமாரின் வரலாறு படத்தில்தாண் கடைசியாக பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தனது மகளைக் கொடுத்தால் எனது வாழ்க்கை ஸ்திரமாக இருக்கும் என்று எனது அத்தை நம்பியதின் விளைவும், மாமாவின் விருப்பமும் அர்ச்சனாவின் சம்மதமும் எனது திருமணத்தை உறுதி செய்ததன் பலந்தான் செப்டம்பர் நான்கு இரண்டாயிரத்து பத்தொன்பதில் நடந்த நிச்சையத்திற்கும், அதன்பின் அக்டோபர் முப்பது அன்று நடந்த முகூர்த்தகாலுக்கும், அடுத்தநாள் காலை நான் கண்விழித்து பிரேஸ்ஸிலேட்டை கண்டறிந்து கையில் அணிந்து எழும்வரைக்கும் இட்டுச் சென்றது.  

அக்டோபர் முப்பத்தொன்று அன்று காலை முதல் வேலையாக அழகு நிலையம் செல்லவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். முடி திருத்தி முகத்தையும் அழகாக்கிக் கொள்ளவேண்டுமாம். முன்பெல்லாம் மணப்பெண்களை மட்டும்தாண் அழகு நிலையங்களுக்கு பெரும்பாலானோர் அனுப்புவார்கள். இப்போதெல்லாம் மணமகன்களுக்கும் இந்தநிலை வந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் பிற திருமணங்களை நன்கு உற்று நோக்கியிருந்திருக்கமாட்டேனோ என்னமொ.

எங்கள் ஊரிலேயே அதற்கான இடம் இருந்தது. முடி திருத்துவதில் இருந்து முக அலங்காரம் செய்வதுவரைக்கும் அனைத்தையும் பக்காவாக செய்கிறார்கள்.  ஆனால் கொஞ்சம் விலை அதிகம். பிற கடைகளில் முடி திருத்த நூறு ரூபாய் என்றால் அவர்களிடம் நூற்றி ஐம்பதாக இருந்தது. அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்தது. முற்றிலும் குளிரூட்டப் பட்ட அறை, வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு ஏதுவாக சோஃபா, பார்ப்பதற்கு தொலைக்காட்சி என கொஞ்சம் உயர்தரமாகத்தான் இருந்தது.

நானும் அண்ணனும் சுமார் எட்டு மணி அளவில் கடையினுள்ளே நுழைந்தோம். ஏற்கனவே அண்ணனுக்கும் அவனது திருமணத்தன்று அவர்கள்தான் முக மற்றும் சிகை அலங்காரம் செய்திருந்தார்கள். தவிர அவர்கள் எங்களுக்கு நன்கு பரிட்சையமானவர்கள் என்பதால் வேறு கடைகளின்மீது நாங்களும் கவனம் ஏதும் செலுத்தவில்லை. கடைக்குள் சென்றவுடன் இருக்கும் பேக்கெஜ்களை எல்லாம் எடுத்துரைத்தார்கள். ரூ ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் மூன்றாயிரம் என ஒவ்வொரு பேக்கேஜிக்கும் ஒவ்வொரு தொகை. எங்களுக்கு இதைப்பற்றி எல்லாம் அனுபவம் சுத்தமாக கிடையாது. ஒரு வழியாக முடி திருத்தி முக அழகு செய்ய எனக்கு ரூ இரண்டாயிரம் என்று நிருநைத்தார்கள். அதிர்ந்து போனேன். பிறகு திருமணம் முடிந்து வரவேற்பு நாளன்று விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வந்தால் சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்வதற்கு தனியாக ஒரு ஆயிரத்து ஐநூறு.
உண்மையில் முடி திருத்திக் கொள்வதைத் தவிர வேறு எதிலும் எனக்கு நாட்டம் இல்லை. ஆனால் கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும்.

கடையின் உரிமையாளந்தான் முடியைத் திருத்தி பிறகு அங்கிருந்த பணியாளனிடம் மேகொண்டு செய்யவேண்டியவற்றை சொல்லிவிட்டு சென்றான். அனைவரும் வாலிபர்கள்தாண். அங்கிருந்து சோஃபாவுக்கு கடத்தப் பட்டேன்.

அதில் என்னை படுக்கவைத்தாண் அந்த வாலிபன். தலை மட்டும் சோஃபாவிற்கு வெளியில் இருக்கவேண்டுமென்றான்.  நான் இசைந்தேன். ஏதோ குழாயை திறந்ததுபோலிருந்தது. எனது தலை அதன் அடியில் இருந்தது. தலையை நன்கு கழுவிக் கொண்டிருந்தான் அந்த உதவி பணியாளன். பிறகு எதையோ வைத்து தெய்ப்பது போல் இருந்தது. அதன் வாசம் நாசியை எட்டியபோதுதான் தெரிந்தது ஷாம்பு என்று. ஆம். க்லினிக் ஆல் க்லியர் தான். ! இவன் நம்மை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறானா? என்று ஆச்சர்யப் பட்டேன். கழுத்துக்கு கீழ் ஒரு சொட்டு நீர் படாமல் தலை குளியல் முடிந்திருந்தது. அடுத்து துண்டை எடுத்து அவனே துடைத்தான். என்னைத் தொடக் கூட விடவில்லை. பிறகு என்னை கொண்டுபோயி முடி திருத்துவதற்காகவே ப்ரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் அமரவைத்தான்.

அப்போதே நேரம் ஒன்பதறை ஆகி இருந்தது. முதலில் எனது முகத்தை ஏதோ ஒரு க்ரீம் கொண்டு நன்கு கழுவினான். பிறகு இரண்டாவதாக ஒரு ஐட்டத்தை கொண்டுவந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்து ஒரு அறை மணி நேரம் காயவேண்டும் என்றான். முகத்தோடு சேர்ந்து வயிறும் காய்ந்து கொண்டு இருந்தது. அதன் பிறகு மூன்றாவதாக ஒரு கருவியை கொண்டுவந்து முகத்திற்கு நேரே வைத்து ஸ்விச் ஆன் செய்ய அது சூடாக காற்றை வெளியேற்றிக் கொண்டிருந்தது. அதற்கு நேரே முகத்தை வைத்துக் கொள்ளவேண்டுமாம். அதன் பெயர்தாண் ஸ்டீமிங்காம். கொஞ்சநேரம் கழித்து நான்காவதாக ஒரு க்ரீம். கடைசியாக கால் மணி நேரம் கழித்து ஐந்தாவதாக ஒரு க்ரீமை முகத்தில் பூசி எப்படியோ எட்டு மணிக்கு வந்தவனை பதிநோறு மணிக்கு அனுப்பினான்.

அவன் அத்தனைக்கும் ஏதோ பெயர் சொல்லிக் கொண்டிருந்தாண். கால இடைவேளி விட்டு எழுதுவதால் எனக்குதான் மறந்து போயிருக்கிறது. எதையோ ஸ்க்ரப் என்றான். எதையோ ப்லீச் என்றான். எதையோ டோன் என்றான். ஆனாள் ஸ்டீம் மட்டும் நினைவில் இருக்கிறது. அதில் ஒன்று முகத்திலிருக்கும் எண்ணேய் பசையை நீக்கும் என்றான். ஒன்று முகத்திலிருக்கும் புள்ளிகளை நீக்கும் என்றான். இனி என் முகம் பலிச் என்று இருக்கும் என்றான். கூடிய விரைவிலேயே ஃபேஷியல் செய்ததற்கான அறிகுறி எல்லாம் முகத்தில் தெரியும் என்றான். அடுத்த ஒரு மாதத்திற்கு முகம் பளபளபளவென்று இருக்கும் என்றான். எல்லாத்தையும் முடித்தபின், அடுத்த இருவத்து நான்கு மணி நேரத்திற்கு வெந்நீரில் முகம் கழுவக் கூடாது, முகத்தில் சோப்பு போட கூடாது, குளிர்ந்த நீரைத்தான் பயண்படுத்தவேண்டும் என்று அறிவுரை சொல்லி வேறு அனுப்பிவைத்தான்.

இவர்களுக்கும் சோப்பு கம்பனிகளுக்கும் ஏதோ நிரந்தர பகை இருக்கும் போலிருக்கிறது. கொடுத்த இரண்டாயிரம் ரூ ஒருமுறை நினைவிற்கு வந்து சென்றது. நான் ஏதோ ஐநூறு ஆயிரம் ஆகும் என நினைத்தேன். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சேர்த்து நான்காயிரம் ரூ வரை வரும் என்று நினைக்கவில்லை. தெரிந்திருந்தால் முக அழகுக்கே ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். ஆனால் மற்றவர்களும் விட்டிருக்க மாட்டார்கள் என்பது தெரியும். கார் விஷையத்தில் செய்ததுபோல் வீண் விவாதம் செய்து தோற்று போய் மீண்டும் அதே அழகு நிலையத்தில்தான் வந்து அமர்ந்திருப்பேன். அந்த கார் மாதிரி இந்த பியூடி பார்லர் என்று சிம்பிலாக சேப்டரை முடித்திருப்பார்கள் குடும்பத்தினர்.

காலை பதிநோறு மணி அளவில் வீட்டிற்கு வந்து குளித்துமுடித்து சாப்பிட்டு முடித்தேன். அடுத்து தாலியை பார்க்கவேண்டியதுதாண் பாக்கி. ஏற்கனவே திட்டமிட்டபடி அப்பாவும் நானும் பூஜை அறைக்கு சென்றோம். அப்பா தாலியை எடுத்து கையில் கொடுத்தார். இதற்குமுன் எத்தனையோ முறை சாதாரன கயிறுகளை எத்தனையோ இடங்களில் கட்டி இருக்கிறேன். ஆனால் தாலி என்பது அப்படி சாதாரனமாக எடுத்துக் கொள்ளக் கூடியது அல்ல என்பது தெரியும். எப்படிக் கட்டவேண்டும் என்பதையெல்லாம் நான் இதற்குமுன் அப்பாவிடம் நேரடியாக கேட்டதில்லை. ஆனால் அவரே புரிந்துகொண்டு தாலி வாங்கிவந்த அன்றே அதைக் கற்பித்துவிடவேண்டும் என்று எண்ணி அதை என்னிடம் தெரிவித்தும் விட்டார். இதைப் படிக்கும் மற்ற வாசகர்களுக்கு வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு மேட்டரா என்று எண்ணத் தோன்றும். ஆனால் ஒரு பார்வையற்றவனுக்கு இது உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி. அதை வெட்கப் பட்டுக் கொண்டு கேட்காமல் இருப்பதில் எந்த பயணுமில்லை.

உண்மையிலேயே பார்வையற்றோர்கள் இருக்கும் இல்லங்களில் வசிக்கும் மற்ற நெருங்கிய உரவினர்களோ அல்லது  உடன் பிறந்தவர்களோ பார்வையற்றோர்களுக்கு தாலி கட்டும் விதிமுறைகளை கட்டாயம் சொல்லித் தரவேண்டும். குறிப்பாக அந்தப் பார்வையற்றோரின் பெற்றொர்கள் இதை அவர்களுக்கு கற்பித்தே ஆகவேண்டும். பார்வை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக சபையில் அவர்களை யாரும் எதுவும் பேசிவிடாதபடி அந்தந்த பார்வையற்ற ஆண்களின் பெற்றொர்கள் அவர்களை தயார்படுத்தி இருக்கவேண்டும்.

திருமணத்தின்போது  குறிப்பாக தாலி கட்டும்போது என்ன நடைமுறைகளை கையாள வேண்டும், தாலி எவ்வாறு இருக்கும், அதை எப்படி அய்யரிடம் இருந்து வாங்கவேண்டும், வாங்கியபின் எப்படி பெண்ணின் அருகில் கொண்டு செல்லவேண்டும், எப்படி கட்டவேண்டும், முடிச்சிகளை எப்படி போடவேண்டும், முடிச்சு போடும்போது எப்படி நீளத்தைக் கணக்கிடவேண்டும், முடிச்சுப் போடும்போது இயல்பாகவே பார்வையற்றோர் அந்தத் தருனத்தில் எந்தமாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், தாலி கட்டும்போது செய்யவேண்டிய மற்ற செயல்பாடுகள் என்ன, தாலியை வாங்கியவுடன் தவரியும் செய்யக் கூடாதவை என்ன, தாலி கட்டியவுடன் என்ன செய்யவேண்டும், என்பதையெல்லாம் ஓரளவிற்காவது அந்தப் பார்வையற்ற ஆணுக்கு கற்பித்திருக்கவேண்டும். அதைத்தாண் அப்பாவும். எனக்கு செய்தார். தாலியைக் கையில் ஏந்தியவுடன் அதைப் பார்த்தபோது இருபுரமும் இரண்டு இரண்டு கயிறுகளாக அது பிரிந்திருந்தது. அதைப் பார்த்து சற்றே அதிர்ந்தேன். ஆனால் மஞ்சள் பூசினால் அது ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிடும் என்றார் அப்பா. அதிலேயே முடி போட முயன்றேன். அப்படி முன்கூட்டியே செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டார். சரி என்று அதற்காகவே ப்ரத்தியேகமாக வைத்திருந்த வேறொரு கயிறை எடுத்தேன். வெரும் கயிறை ஒருமுறை முடிபோட்டேன். அப்பா அருகில் இருந்தார். அவ்வளவுதான் என்றார். பிரிலிமினரி எக்சாமில் பாஸ். இனி மெயின் எக்சாம்தாண். அங்கு ஏதேனும் தவறு செய்தால் அவர்களுக்குள்ளேயே க்ரூப் டிஸ்கஷனை ஆரம்பித்துவிடுவார்கள் உரவினர்கள்.

தாலி கட்டுவதற்கு முன் பின் செய்யவேண்டியவை என்ன என்பதையெல்லாம் ஒருமுறை சொல்லிவிட்டிருந்தார் அப்பா. நானும் அனைத்தையும் மனதில் நிலைநிறுத்திக் கொண்டேன்.  அப்பா சென்றவுடன் இன்னொருமுறை வெரும் கயிற்றில் பயிற்சி செய்து கொண்டேன்.

மூன்றாவது நலங்கு வைக்க அழைத்திருந்தார்கள். அது வெரும் சடங்குதான். சொற்ப அளவிலேயே பெண்கள் இருந்தார்கள். வைத்து முடித்தவுடன் மத்திய உணவு உண்டு முடித்தோம். எங்களோடு கோயிலுக்கு வருவதாய் சொன்னவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். முன்பே சொல்லாதவர்களும் ஒரு மூன்றுபேர் வர கார் பயணம் கொஞ்சம் கடுமையாக இருந்தது.

திருமணத்திற்கு தேவையான அனைத்தும் பேக் செய்ய பட்டிருந்ததால் மத்திய உணவு முடிந்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மூன்று மணி அளவில் புதிய உடைகளை உடுத்தி நான்காவது நலங்கிற்கு தயாரானோம். நலங்கு வைத்து முடிப்பதற்கும் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. பேச்சுலராக அந்த வீட்டின் கடைசி நிமிடங்களை நினைவில் நிறுத்திக் கோள்ள கிளம்புவதற்குமுன் சித்தியின் மகன் தம்பி சந்தோஷை விட்டு சில புகைப்படங்களை எடுக்கச் சொல்லி அதை முகநூலில் பதிவிட்டிருந்தேன். அடுத்தநாளில் இருந்து நான் பேச்சுலர் அல்ல என்ற சிந்தனை என்னை ஏதோ செய்து கொண்டிருந்தது. அன்றுவரை நான் நினைத்தபடி வாழ முடியும் என்ற வாழ்க்கைமுறை அந்த வீட்டு வாசலில் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.

காரில் ஏறினோம். கார் கிளம்பியது. அதுவரை வரண்டிருந்த வானம் பொழிய ஆரம்பித்திருந்தது. போகும் வழியில் ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு பிறகு நடுவில் லட்டுகளை வாங்கிக்கொண்டு நேராக சுருட்டப் பள்ளியை அடைந்தோம். நேரம் சுமார் ஐந்தை தொட்டிருந்தது. அங்கிருந்த உணவகத்தில் அன்றூ இரவிற்கும் அடுத்தநாள் காலைக்கும் உணவை ஆர்டர் செய்துவிட்டு நாங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த மண்டபத்தை அடைந்தோம். உரவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். நான் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்த அந்தப் பெயர் சொல்ல விரும்பாதப் பெண்ணும் அவரது அம்மாவும் கூட வந்தனர். எனது அம்மா அவர்களைவாங்கஎன்று அழைத்தார். அத்துடன் நிறுத்தி இருக்கலாம். என்னத் தாமதம் என்று கேட்க, அந்தப் பெண்ணின் அம்மாநாங்க வரலனா கல்யானம் நடக்காம போயிடுமா?’ என்று கேட்டிருக்கிறார். யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் திருமணம் நடக்கும் என்றார் என் அம்மா பதிலுக்கு.

ஆனால் எனது திருமணத்தை நிறுத்தக் கூடிய அங்கு வேறொரு சம்பவம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. எந்தந்த வழியில் எல்லாம் எனது திருமணம் தடைபடும் என்று நான் நினைத்திருந்தேனோ அத்தனையையும் கடந்துவிட்டிருந்தேன். ஆனால் இப்படி ஒரு சவாலை சந்திக்கவேண்டிவரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அந்த முயற்சி அர்ச்சனாவின் உரவினர்களால் மேற்கொள்ளப் படவில்லை. அவளின் உறுதிக்கு முன்னால் அவர்களால் எதுவும் செய்யவும் இயலவில்லை. இது நான் நம்பிய எனது உரவினர்களால் செய்யப் பட்ட முயற்சி. எதைச் சொன்னால் அர்ச்சனா என்னை ஒரு நொடியில் வேண்டாம் என்று சொல்லுவாளோ, எதைச் சொன்னால் அவள் என்னைத் திருமணம் செய்ய யோசிப்பாளோ, எதைச் சொன்னால் அவள் உறுதி நிலை குலையுமோ அதை அவளிடம் சொல்லியிருந்தார்கள்.

7 comments:

  1. அண்ணா உங்களின் அனைத்து அத்தியாயங்களையும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் இதிலிருந்து எனக்கு எழும் சில சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது ஒவ்வொரு பார்வையற்றோர்க்கு நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம் பல கேள்விகளுக்கு விடை கொடுத்துள்ளீர்கள் தொடருங்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி விஜை. மிக்க மகிழ்ச்சியாகவும் உள்ளது.

      Delete
  2. என்ன காரனத்தை சொல்லி கல்யானத்தில் குளப்பம் விளைவிக்க முயனறிருப்பார்களென்று என்னால் ஊகிக்க முடிகிறது. ஆனால், அதை நீ அடுத்த பதிவில் திரந்த மனதுடன் சொல்வாயா என்று ஐய்யுருகிரேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. நிச்சயம் திரந்த மனதுடந்தான் எழுதுவேன். ஆனால் உங்கள் மனதில் நீங்கள் ஊகித்ததையும் வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete
  3. அண்ணா நான் பால்பாண்டி இப்பொழுது தான் அனைத்தையும் படித்து கொண்டிருக்கிறேன் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் இந்த அத்தியாயத்தில் முடி திருத்துபவர் அவர்களை மரியாதைக் குறைவாக அவன் என்று குறிப்பிட்டு எழுதி இருப்பது எதை குறிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை நான் சுட்டிக் காட்டியது தவறு என்றால் மன்னித்து விடுங்கள் அல்லது ஏதாவது காரணம் உள்ளது என்றால் முடிந்தால் கூறுங்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பால் பாண்டி. படித்ததர்க்கும் பின்னூட்டம் இட்டதர்க்கும் மிக்க நன்றி. அந்த முடி திறுத்துபவனுக்கு வயது இருவது கூட இருக்காது. ஒரு வருடத்திற்கு முன்புதான் பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறான். தவிர அவர்கள் வாலிபர்கள் என்று குறிப்ஹ்பிட்டிருக்கிறேன்.

      Delete
  4. ுங்க அத்தையை நினைக்கும்போதும் அர்ச்சனாவின் உறுதிய நினைக்கும்போதும் பெருமையாக இருக்கிறது. வணங்க வேண்டியவர்கள். you are blessed.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube